Prahathi - Self introduction :-)

Advertisement

prahathi

Member
Member
ஹாய் மக்களே,

நான் பிரஹதி! விவரம் தெரிந்த நாள் முதற்கொண்டு வாசித்துகொண்டிருக்கிறேன். கோகுலம் தொடங்கி காமிக்ஸ் வரை ரமணிசந்திரன், சுஜாதா முதல் இப்பொழுது எழுதும் சிலர் வரை என எதையும்(யாரையும்) விட்டு வைத்ததில்லை. முதலில் அம்மாவிற்கு தெரியாமல்.. பின்பு அம்மாவுடன் கதை விவாதம் செய்யும் ஆளவு என இப்பொழுது கொஞ்சம் முன்னேறி இருக்கிறேன். வெகு நாட்களாக எழுதும் ஆர்வம் இருந்தும் இந்த ழ ள், ல் ர், ற் ண், ன் பிரட்சனையினால் தயக்கம் ! பிழை இன்றி எழுதுவதற்கு வெகு நேரம் ஆவதினால் தள்ளி போட்டுக்கொண்டே கிட்டதட்ட 7 வருடம் கடத்தியிருக்கிறேன். இப்பொழுது வேலையில் இருந்து 'maternity' விடுப்பு எப்பொழுதையும் விட கொஞ்சமே கொஞ்சம் extra நேரம் கிடைப்பதினால், இப்பொழுது பழகலாம் என்று பிள்ளியார் சுளி போட்டாயிற்று. பழகும் வரை வாரத்திரற்கு ஒரு update, பழகியதும் வாரத்திற்கு இரண்டு என்று கொடுக்கலாம் என்று இருக்கிறேன். உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிகையோடு இதோ எனது முதல் கதை :-) எதேனும் தவறு இருந்தால் தயங்காமல் சுட்டி காட்டுங்க.
 

Advertisement

Advertisement

Back
Top