Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 8

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 8

அஷ்டலக்ஷ்மி கோவிலில் அன்று மிகவும் கூட்டமாக இருந்தது. சாஹித்யாவும் நளினாவும் அஷ்டலக்ஷ்மிகளையும் சேவித்து விட்டு அமர்ந்திருந்தார்கள்.

'சஹி, இன்னிக்கு எப்படி இன்டர்வியூ பண்ணினடி? ஜாப் கிடைச்சுடுச்சுன்னு மட்டும் தான் சொன்ன ... இப்போ சொல்லுடி என்ன மாதிரி கொசின்ஸ் எல்லாம் கேட்டாங்க?'


சஹிக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ... இன்டர்வ்யூ அட்டென்ட் பண்ண உன் ஆளு விட்டா தான என்று மனதில் நினைத்த வாறே.. 'நளின் ,எனக்கு ஜாப் கிடைச்சுடுச்சுடி மிதியை நான் நாளைக்கு சொல்றேனே ப்ளீஸ் டி ' என்றாள் போய் சொல்ல விருப்பம் இல்லாமல்.

சஹியின் முகத்தை கவனித்து கொண்டே , 'சரிடி ,பட் என்னமோ என் கிட்ட மறைக்கிற மாதிரி இருக்குடி ... கண்டிப்பா அதை நாளைக்கு சொல்லணும் டி

'சஹி தன் மனதில் 'நாளைக்கு என்ன... இன்னும் கொஞ்ச நேரத்தில உனக்கு தெரிஞ்சுடும்' என்று நினைத்துக்கொண்டாள்.


'சஹி சஹிஹி !' என்ற நளினாவின் அலறலில் திரும்பி பார்த்த சஹியிடம் , 'சஹி இன்னிக்கு நீ சரியில்லை ... கிளம்பு வீட்டுக்கு போகலாம் ' என்றாள் நளினா.

'இல்லடி இன்னும் கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருக்கலாம்டி ப்ளீஸ்' என்று நளினா விடம் சொல்லிவிட்டு ,தலையில் கைவைத்தபடியே 'இன்னும் பரத் வரலியே...
டென் மினிட்ஸ் பார்க்கலாம் இல்லன்னா இவக்கிட்ட உண்மையை சொல்லிவிட்டு நல்லா வாங்கிக்கட்டிக்கலாம்' என்று நினைத்த படியே திரும்பினாள் ...அங்கே பரத் வந்துக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

'நளினா , இங்கயே வெயிட் பண்ணு ஒன் மினிட் நான் உள்ள போயிட்டு வரேன்' என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு அகல முயன்றாள்.

சஹியின் கைகளை பிடித்து நிறுத்தி, 'ஹே சஹி நில்லுடி, எங்க போற'?


'ஒன் மினிட் நளின் உள்ள போயிட்டு வந்துடறேன் ' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே 'ஹாய் நளின் ...ஹாய் சாஹித்யா '... என்று சொல்லியபடியே பரத் அருகில் வந்தான்.

'ஹாய் சார் எனக்கு உள்ள வேலை இருக்கு நீங்க நளின் கூட பேசிட்டு இருங்க' என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் சாஹித்யா.

தன்னை தனியே இவனிடம் மாட்டிவிட்டு சென்ற சஹியை மனதினுள் திட்டியபடியே .. பரத்தை பார்த்து முறைத்தாள் நளினா.

'நளின் ப்ளீஸ் முறைக்காத ... எனக்கு ஒரு ட்வென்டி மினிட்ஸ் டைம் கொடும்மா.. நான் உன்கிட்ட பேசிட்டு கிளம்பிடறேன் ப்ளீஸ் ' என்றான் பரத்.

'சரி என்ன விஷயம் ' என்றாள் வேண்டாவெறுப்பாக.


'இங்க வேண்டாமே பீச்க்கு போகலாமா'?

'என்ன நீங்க எ.பி.சிஸ்டம்ஸ்லே வொர்க் பண்றீங்களா? இதை பத்தி தான பேசணும் .. அதை இங்கயே பேசுங்க ..உன் கூட எங்கயும் வரலை '


'எ.பி.சிஸ்டம்ஸ் பத்தி உனக்கு எப்படி தெரியும்?'


'இப்போ அது தான் ரொம்ப தேவையா? இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கோங்க.. சஹி என்கிட்ட வந்ததுலேர்ந்தே இன்டர்வ்யூ பத்தி பேசல ...இப்போ நீங்க இங்க வந்தவுடன் .. என்னை தனியே விட்டுட்டு உள்ள போய்ட்டா.. சோ ஒண்ணும் ஒண்ணும் மூணுன்னு நானா கணக்கு போட்டுட்டேன் போதுமா விளக்கம் ... இப்போவாவது சிக்கிரம் நீங்க வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பறீங்களா?'


தன் காதலியின் அறிவு கூர்மையை ரசித்துக்கொண்டே ,'இல்ல நளினா நீ சொன்னதுல கொஞ்சமே கொஞ்சம் தப்பு இருக்கு 'என்றான்


'யோவ்! எப்பவுமே நீ இப்படி தானா? இல்ல இப்படி தான் எப்பவுமேவா?' ஸ்டெர்யிட்டாவே பேச தெரியாதா உனக்கு'? என்றாள் கோபமாக.

அவளின் கோபத்தை ரசித்து, 'எ.பி.சிஸ்டம்ஸ்ல வேலை பார்க்கலை ... என்று நிறுத்தி சிறிது இடைவேளை விட்டு 'அந்த கம்பெனியே என்னோடது தான் ...என்னோட பேரு பரத் ' என்றான்.


அவள் பிரமித்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

'நளின் இன்னிக்கு உன்னை தேடி தான் அந்த காலேஜ் க்கு போனேன் டியர் அப்போ தான் சஹியை பார்த்து எல்லாம் சொல்லி உன் கிட்ட பேசணும்னு சொன்னேன் ...நீ இன்னிக்கு அவங்களோட இங்க வரப்போறதா சொன்னாங்க...அதனால் தான் இங்க வந்தேன் போதுமா விளக்கம்' என்றான் பரத்.


'நான் அந்த காலேஜ் தான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?'


'நளின் ,உன்னை பத்தி ஒண்ணும் தெரியாது.. பட் நீதான் எனக்கு வேணும்னு மனசு சொல்லிடுச்சு... எப்படியாவது உன்னை கண்டுபிடிக்கணும் .. அதுக்கு என் ரூம்லேயே உட்கார்ந்திட்டு இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு தான் ... உங்க காலேஜ்க்கு கிளம்பி வந்தேன் அங்க சாஹித்யாவை பார்த்தேன் இங்க வந்தேன் அவ்ளோ தான்'.

'இந்த காலேஜ்லே உன்னை கண்டுபிடிக்க முடியாம போயிருந்தாலும் இன்னும் ஒன் வீக்லே உன்னை கண்டுபிச்சிருப்பேன் என் காதல் மேலே எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது .. இப்பவும் இருக்கு .. இனி எப்பவுமே இருக்கும்' என்றான் உருக்கத்துடன்.


'க்கும் போதுமே உங்க வீர ப்ராதாபம் ' என்றாள் பொய்யான கோபத்துடன்.

அவள் கண்களில் தெரிந்த பொய் கோபத்தை கவனித்த பரத் சற்று துணிந்து அவளருகே சென்று.. 'நளின் இப்போவாவது உன் காதலை என் கிட்ட சொல்லலாமே' என்றான்.

அவன் அவளை நெருங்கி நின்றதை அப்பொழுதுதான் கவனித்து ஓரடி பின்னால் சற்று தள்ளி நின்றுகொண்டு, “இங்க பாருங்க எனக்கு உங்களைப்பார்த்தவுடன் ஒரு எண்ணமும் தோணலை.. அப்புறம் பப்ளிக்ல நீங்க நடந்துக்கிட்டது எனக்கு பிடிக்கலை.. நீங்க செஞ்சதுக்கு என் கிட்ட சாரி சொன்னது பிடிச்சிருந்தது தென் இதை பத்தி சஹிக்கிட்ட நான் புலம்பிட்டு இருந்தேன்.. உங்களை தினமும் திட்டி திட்டியே எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு.. இது எல்லாத்துக்கும் பேர் தான் காதல்னா.. எஸ் நான் உங்களை காதலிக்கிறேன் ' என்றாள் கெத்தாக.

'ஹே பட்டாசு , இப்போ தான் நீ என் பட்டாசு .. என் மேல் கூட ஒரு உரிமை கலந்து கோபப்பட ஆள் வந்தாச்சு ' என்றான்.

அவன் கண்களில் தெரிந்த வலியை உணர்ந்த நளினா , 'பரத் என்னாச்சு?'

'ம் நளினா சொல்றேன் டா பட் இங்க வேண்டாம் பீச்க்கு போலாம் டா '

'சரி இருங்க நான் சஹிக்கிட்ட சொல்லிட்டு வரேன்' என்று சொல்லிவிட்டு தன்னுடைய செல்போனை ..எடுக்கும் போதே பரத்தின் செல்போன் அடித்தது.

'சொல்லுடா அவ்யுக்த் வந்துட்டியா? எங்க இருக்க நாங்க கோயில் வாசல்லையே நின்னுட்டு இருக்கோம் வா டா' என்றான்.

அவனையே பார்த்து நின்றுக்கொண்டிருந்தவளிடம் 'நளின் என் பிரண்டு வரான் .. அவன் பேரு அவ்யுக்த் .. அவ்யுக்த் சொல்யுசன்ஸ் எம்.டி... அவன் கிட்ட உன்னை இன்ட்ரோடியூஸ் பண்ணிவச்சிட்டு நாம பீச்க்கு போலாம்மா '


'என்னது அவ்யுக்த் உங்க பிரண்டா?'

'எதுக்கு இப்படி ஒரு ஷாக்?'

'எனக்கு அங்க தான் வேலை கிடைச்சிருக்கு'

'ஹே நளின் நிஜமாவா? இன்னிக்கு பார்க்கலைன்னாலும் எப்படியும் உன்னை பார்த்திருப்பேன் நளின். ' சாஹித்யாவ நம்ம கம்பெனிலேயும்.. இல்ல உன்னை அவ்யுக்த் கம்பெனிலேயும் கண்டிப்பா பார்த்திருப்பேன் டியர் ' என் காதல் மேல எனக்கிருந்த நம்பிக்கை கூடிக்கிட்டே போறது டா.

சிறிது வெட்கம் கலந்த புன்னகையை அவனுக்கு பரிசளித்தாள் நளினா.

'நளின் நானே சமத்தா இருக்க ட்ரை பண்றேன்.. அப்படி இருக்கும் போது நீ இந்த மாதிரி ரொமாண்டிக் லுக் விட்டின்னா என்னால கன்ட்ரோல் பண்ண முடியாது. அப்புறம் என்னை குறை சொல்ல கூடாது டியர் சரியா?' என்றான் மனதில் பொங்கும் ஆசையுடன்.

'பரத் நோ கோ பக் 'என்று ஒற்றை விரலை நீட்டி அவனை மிரட்டியவாறே செல்போனில் சஹிக்கு கால் செய்தாள் நளினா.

“சஹி இது எல்லாம் உன் வேலை தானா? உனக்கு நாளைக்கு காலேஜில் இருக்கு.”

“ஹே போடி , சும்மா சொல்லாத இப்போ தான் பார்த்தேன் மேடம் சரியான ரொமாண்டிக் மூட்ல இருந்திங்க' என்றாள் சிரித்துக்கொண்டே.

'ஹே சஹி எங்க இருக்க? இங்க வாடி '

'ஸ்டாப் ஸ்டாப் .. நான் இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டேன்டி .. அப்பா இப்ப தான் கால் பண்ணினாங்க.. வீடு பார்க்க யாரோ வராங்களாம் நீயும் வான்னு கூப்பிட்டாங்க அதான் கிளம்பிட்டேன்.. நீ அவரோட ரொமான்ஸ் எல்லாம் முடிச்சிட்டு கிளம்பு பாய் நளின் '

'சஹி நீ என்னோட தான வண்டில வந்த.. இப்போ எப்படி போக போற?' என்றாள் அக்கறையுடன்.

“ம்ம்ம் எப்படி போகலாம்? "பொடி நடையா" ன்னு பாடிட்டே நடந்தே போகட்டுமாடி.., ஆள பாரு எல்லாம் நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்.. நீ போய் உன் ரொமான்ஸ கவனிடி பை” என்று சொல்லிவிட்டு ஆட்டோ பிடிக்க சென்றாள்.

அதே நேரத்தில் அவ்யுக்த் கோயிலின் உள்ளே சென்றான்.

 
Top