Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 7

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 7

அன்று இன்டர்வியூ க்கு எ.பி.சிஸ்டம்ஸ் கம்பெனியின் எம்.டி. வரப்போவதாக ப்ரின்சிபால் அனோன்ஸ் செய்தார்.

“எப்போதுமே கம்பெனியின் எம்.டி. இந்த மாதிரி இன்டர்வியூக்கு எல்லாம் வர மாட்டாங்களே... ஏதாவது பிராப்ளமா.. என்ன ஆச்சு?” என்று சஹி யோசித்துக்கொண்டிருந்தாள்.

“திஸ் இஸ் பரத் .. எ.பி.சிஸ்டம்ஸ் எம்.டி” என்று ப்ரின்சி அறிமுகப்படுத்தினார்.

“இவனா!” என்று அதிர்ந்த சஹி அந்த இடத்தை விட்டு சற்று உள்ளே தள்ளி நின்றுக்கொண்டாள்.

“நல்ல வேளை இன்று நளின் வரலே ... இல்லன்னா இவன் பாடு படு திண்டாட்டமா போயிருக்கும்.” என்று நினைத்துக்கொண்டாள் சஹி.

பரத் ப்ரின்சியுடனே அவரது அறைக்கு சென்றான் .. செல்லும் போது சற்று உள்ளே தள்ளி நின்றிருந்த சஹியை பார்த்துவிட்டான்.

“அட நம்ம பட்டாசு பிரண்டு, இவங்க கூட எப்படியாவது பேசணுமே என்ன பண்ணலாம்?” என்று யோசித்தான்.

“மேடம் அங்க எல்லோ சுடிதார் போட்ட பொண்ணு” என்று ஆரம்பித்தான் .
பிரின்சிபால் அவனை ஏற இறங்க பார்த்தார். ‘அட இந்த அம்மா இப்போ எதுக்கு இப்படி பார்த்து வைக்குது... அந்த பொண்ணோட பேர் தெரிஞ்சிக்க தான கேட்டேன்’ என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்க்குது, டேய் பரத், ரூட்ட மாத்து’ என்று தன் மனதோடு பேசிக்கொண்டான்.

“அவங்க நளினோட பிரண்டு தானன்னு கேக்கவந்தேன்.. நளின் என் அத்தை பொண்ணு அதான் கேட்டேன்.” என்றான்.

“ஓ! சாரி சாஹித்யாவ உங்களுக்கு தெரியுமா?”

“எஸ் நல்லா தெரியும்.. இப்போ நான் அவங்க கூட பேசலாமா?”
“ஷ்யூர், நீங்க ரூம்லே வெயிட் பண்ணுங்க அவளை வர சொல்றேன்.”

“தன்க் யு மேம்” என்று சொல்லியபடியே அவரது அறையினுள் சென்றான்.
அறையின் உள்ளே வந்த சஹி, “இப்போ எதுக்கு சார் என்னை கூப்டிங்க?” என்றாள்.

“ஹலோ சாஹித்யா, ஐ அம் பரத்.”

“சொல்லுங்க சார் என்ன விஷயமா என்னை கூப்டிங்க?”

“உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன் கண்டிப்பா நளின் உங்க கிட்ட ஷர் பண்ணி இருப்பா.”
“சார், இப்போ எதுக்கு என்னை கால் பண்ணிங்க அதை சொல்லுங்க?”

“பட்டாசு பிரண்டுன்னு ப்ருவ் பண்றிங்க.”
சலிப்படைந்த சஹி, “சார் ஐ ஹவ் இன்டர்வ்யூ” என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே , “என் கம்பெனில உங்களுக்கு வேலை உண்டு.” என்றான் பரத்.

சஹி அதை மறுத்து ஏதோ சொல்ல வந்தாள், “வெயிட் சாஹித்யா இப்படி வேலைக்கொடுக்கிறதால் உங்கள் திறமையை குறைத்து சொல்லவில்லை... உங்க ப்ரின்சி என் கிட்ட இப்போ தான் உங்களை பத்தி சொன்னாங்க.. நீங்க தான் காலேஜ் பர்ஸ்ட் ன்னு சொன்னாங்க உங்க திறமை தான் என் கம்பனிக்கு தேவை .. ப்ளீஸ் நீங்க ஜாயின் பண்ணனும்.” என்று சொல்லிவிட்டு சஹிக்கு முதுகு காட்டி திரும்பி நின்றுக்கொண்டான்.

திரும்பி நின்ற பரத் ஒரு பெரு மூச்சு விட்டுக்கொண்டே, ‘டேய் பரதா! உனக்கு கூட இவ்ளோ நல்லா பேச தெரியுமா டா... கலக்கறடா மச்சான் நீ.‘ என்று கண் முடிய படியே மெதுவாக சொல்லிக்கொண்டான்.

மெதுவாக கண்ணை திறந்தால் அங்கே நமட்டு சிரிப்புடன் சாஹித்யா நின்று கொண்டிருந்தாள்.

அவளை அங்கே எதிர்ப்பார்க்காத பரத், “அது வந்து ஒண்ணுமில்லை சும்மா” என்று அசடு வழிந்தான் பரத்.

“சார், நீங்க என் பிரண்டு கிட்ட சொன்னது நிஜமா?”

“இப்போ எதுக்கு நான் இங்க வந்திருக்கேன்னு நினைக்கிறிங்க?, என் பட்டாச கண்டுபிடிக்கத்தான்.” என்றான் பரத்.

“பட்டாசா? ஓ ! நளின்க்கு பேர் எல்லாம் வச்சாச்சா?”

“எனக்கு அவ புல் நேம் வேணுமே ப்ளீஸ் சிஸ்டர்.”

“ஹலோ பிரதர், அவ பேரு நளினா இந்த காலேஜ் லே தான் எம்.சி.எ பைனல் இயர்... அம்மா, அப்பா இருக்காங்க ஒரு அக்கா அவங்களுக்கு கல்யாணம் ஆச்சு.... இந்த டிடைல்ஸ் போதுமா பிரதர்?”

“போதாதே சிஸ்டர் இப்போ அவளை பார்க்கணுமே?”

“இன்னிக்கு அவ காலேஜ் வரல... ஈவ்னிங் நாங்க பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயில் போறதா பிளான் பண்ணி இருக்கோம்.. நீங்க அங்க வாங்க.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பரத்தின் செல்போன் ஒலித்தது.
“அவ்யுக்த் ஒன் மினிட் லைன்லே இருடா.” என்று சொல்லிவிட்டு, “சாஹித்யா நான் இன்னிக்கு ஈவ்னிங் அங்க வரேன் மா.” என்றான்.

“ஒகே பிரதர், நீங்க வாங்க பட் உங்க டிடைல்ஸ் இன்னும் ஒண்ணும் சொல்லலியே ... நான் அவ கிட்ட என்னன்னு சொல்றது?”

“ப்ளீஸ் சிஸ்டர், நான் அவளை ஏமாத்த நினைக்கலை, இதை மட்டும் நீங்க தெரிஞ்சிகிட்டா போதும்னு நினைக்கிறன்.. நீங்க என் பேர் கூட பட்டாசு கிட்ட சொல்ல வேண்டாம்... அவ கிட்ட நானே எல்லாமே சொல்லிக்கிறேன். அவ யாரு என்னன்னு தெரியாமலே என் மனசில சொல்ல தெரியாத ஒரு உணர்வு வந்துச்சு, அது மாதிரி வராட்டாலும் அட்லிஸ்ட் தெரிஞ்சவன்கிற உணர்வாவது அவ கண்ணுல நான் பார்க்கிறேனே, ப்ளீஸ் நீங்க நான் வரத பத்தி அவ கிட்ட சொல்லவேண்டாம்.

‘சரி நான் எதுவும் சொல்லலை, நீங்க வாங்க, பட் அங்கயும் வந்து இந்த மாதிரி உளறிட்டு இருந்திங்கன்னா, உங்களை அவக்கிட்டேயிருந்து அந்த மகாலக்ஷ்மியால கூட காப்பாத்த முடியாது... அதனால யோசிச்சே பேசுங்க... பை பிரதர்.” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் சாஹித்யா.

சட்டென்று நினைவு வந்தவனாக, “சாரி டா அவ்யுக்த், எதுக்கு கால் பண்ணின? என்றான் பரத்.

“சும்மா தான் டா ஈவ்னிங் உன் பிளான் என்ன?”

“ஈவ்னிங் பெசன்ட் நகர் கோவிலுக்கு என் பட்டாச பார்க்க போறேன் டா’ என்று தன் நண்பனிடம் சொல்லிவிட்டு .... சாஹித்யாவிடம் பேசிய விவரம் அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டான்.

“நீயும் என் கூட வாடா அவ்யுக்த்.”

“சரிடா நான் கண்டிப்பா வரேன் டா. அது முடிச்சுட்டு நாம அப்படியே நேத்து சொன்னேனே... அந்த வீட்டை பார்க்க போகலாம் டா.” என்றான் அவ்யுக்த்.
 
Top