Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 3

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 3

பரத் அப்படி சொன்னதும் அதிர்ந்த அவ்யுக்த், “ஏண்டா மடையா இன்னும் நீ
மாறலியா? காலேஜ் படிக்கும் போது தான் இப்படி விளையாட்டுதனமா
இருந்த... இப்பவும் இப்படியா பீகேவ் பண்ணனும்?” என்று கோபத்துடன்
கேட்டான் அவ்யுத்.

“இது என்னோட கூட பிறந்த குணம்ன்னு நீயே சொல்லியிருக்கியே டா.. அப்புறம் என்ன?” என்றான் பரத்.

“அதுக்காக இப்போ தான் பார்த்த பொண்ண செல்லம் கொஞ்சனுமா? இதுல
எனக்கு வேற ஜோடி சேக்கற.. ஏண்டா ஒரு கம்பெனி ஓனர் மாதிரியா பீகேவ்
பண்ற?”

“சரி விடுடா இப்போ வேற என்ன விஷயம் சொல்லுடா?”

“பரதா, அந்த விமென்ஸ் காலேஜ் இன்டர்வியூக்கு பர்ஸ்ட் எங்க கம்பெனி தான்
போக போகுது டா.”

“தெரியும்டா, டேய் ஏண்டா என் பேரை பரதான்னு சொல்ற?” என்று பரத் அவ்யுக்திடம் கேட்டாலும் அதில் கோபமோ, வருத்தமோ இல்லை..

பரத்தும் அவ்யுக்தும் நல்ல நண்பர்கள்.இருவரும் ஒரே துறையில் வேறு வேறு கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்கள். பரத்தின் கம்பெனி பெயர் A.B SYSTEMS. அவர்களுக்குள் எப்போதும் போட்டி இருக்கும், ஆனால் பொறாமை இருக்காது.

“டேய் பரத் இப்போ நான் என்ன கேட்டேன், நீ என்ன சொல்ற?”

“அவ்யுக்த் இப்போ என்ன உங்க கம்பெனி இன்டர்வியூக்கு போகுது அவ்ளோ தான அதே காலேஜ்க்கு நாங்களும் போறோம் டா. உன் கம்பெனி பர்ஸ்ட் போறதால எனக்கு பிரச்சினை எதுவும் இல்லடா.. போதுமா?” என்றான் பரத்.

“தேங்க்ஸ் டா மச்சான்.” என்றான் பரத்.

“டேய், இப்போ நல்லா உதை வாங்க போற, இப்போ எனக்கு தேங்க்ஸ் சொல்றத விட்டுட்டு போய் உன்னோட லைப் பார்ட்னரை தேடு.”

“ஆமா நான் எங்க போய் தேடறது?”

“இந்த இன்டர்வ்யூவ சாக்கா வச்சு அங்க போடா, ஒரு வேளை கிடைச்சாலும் கிடைக்கும்.” என்றான் பரத்.

“டேய் இந்த பேச்சை நிறுத்தறியா, எனக்கு அம்மாவை சமாளிக்கறது கூட பிரச்சினையாவே தெரியல, ஊருல ஏகப்பட்ட பிரண்டு வச்சிருக்கவனெல்லாம் நல்லா இருக்கான்... உன்னை மாதிரி பிரண்டை வச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே அய்யய்யோ !. என்றான் சிரித்துக்கொண்டே.

“டேய் நிறுத்துடா, கம்பெனி எம்.டி. ன்னு சொல்லிட்டு மூடின கதவுக்குள்ள உட்கார்ந்திட்டு இருந்தா, த்ரீ மந்த்ஸ் என்ன, த்ரீஹன்றட் மந்த்ஸ் ஆனாலும் மனசுக்கு பிடிச்சவளை பார்க்க முடியாது.” என்றான் பரத்.

“அதுக்காக காலேஜ் காலேஜா போய் தேட முடியும்மா? எனக்குன்னு பிறந்தவ என்னை தேடி வருவா டா, இப்போ எனக்கு மீட்டிங் இருக்கு. பை டா.” என்றான் அவ்யுக்த்.

“பை டா அவ்யுக்த், நான் நெக்ஸ்ட் வீகென்ட் வீட்டுக்கு வரேன் டா , அம்மாவை பார்த்தே ரொம்ப நாளாச்சு.” என்று சொல்லிவிட்டு தன் செல்போனை அணைத்தான் பரத்.

பரத் தன் கம்பெனியை நோக்கி செல்லும்போது மனதினுள் நளினாவின் அழுத தோற்றம் வரவே புன்னகைத்துக்கொண்டே காரை செலுத்தினான்.

“ஹே பங்க், என்ன பண்ற?” என்று கேட்டவாறே வீட்டினுள் நுழைந்தார் ராகவன்.

இதை கேட்ட பங்கஜத்திற்கு கோபம் வந்தது.கோபத்துடனே, “ஏங்க இன்னிக்கு வேலை பெட்ரோல் பங்க்லயா?” என்றாள்.

அவளை பற்றி அறிந்திருந்த ராகவன், “இல்ல காஜு எப்பவும் போல ஆபீஸ்ல தான்.” என்றார் சிரித்துக்கொண்டே.

“காஜு வா ? அப்படின்னா என்னங்க? புதுசு புதுசா பேர் வைக்கறதை நிறுத்தறீங்களா?”
“காஜு தெரியாதா, ஹப்பா இது தான் இனிமே உன்னோட பேரு நானும் ஏதாவது பேர் சொல்லிட்டே இருக்கேன் பட் நீ கிண்டல் பண்ணிட்டே இருக்க.. இனிமே உன்னால கிண்டல் பண்ண முடியாது காஜு.”

“அப்பா, காஜு கத்லி எனக்குப்பா.” என்று சொல்லியவாறே உள்ளே வந்தாள் சஹி.
உள்ளே நுழைந்ததும் சஹி அப்பாவின் முகத்தை பார்க்க.. அவர் அந்தோ பரிதாபமாக நிற்க,

“என்னங்க ஸ்வீட் கடைல இன்னிக்கு பொட்டலம் போட்டிங்களா?” என்றாள் பங்கஜம்.

ராகவன் பேச்சை மாற்றும் விதமாக, “சஹி, இன்னிக்கு காலேஜ்ல என்ன ஸ்பெஷல்?”
என்று கேட்டார்.

“நெக்ஸ்ட் வீக் எங்க காலேஜ்ல கம்பஸ் இன்டர்வ்யூ பா, பர்ஸ்ட் கம்பெனியே நல்ல கம்பெனி வர போகுதுன்னு சொன்னாங்க பா.”



“என்னடி சஹி, நெக்ஸ்ட் வீக் நீ அட்டென்ட் பண்ண முடியாதுடி.” என்றாள் பங்கஜம்.

“அம்மா என்னமா இப்படி சொல்றிங்க?”

“சஹி என்னமா மறந்துபோச்சா?” என்றார் ராகவன்.

சஹிக்கு ஒண்ணும் புரியாமல் முழித்தாள்.

“உன் மாமா பொண்ணுக்கு கல்யாணம் அடுத்தவாரம் நாம இந்த வீகென்ட் கிளம்பி டூ வீக்ஸ் கழிச்சு தான வரோம் அதை மறந்துட்டியா? எப்பவும் உன் அப்பாவுக்கு தான் என் குடும்பத்தை பத்தி நினைவு இருக்காது... நீயும் அவர் கூட சேர்ந்துட்டியா?” என்றாள் பங்கஜம் மிகுந்த கோபத்துடன்.

நினைவு வந்தவளாக தலையில் அடித்துக்கொண்டாள். அப்பாவிடம் கண்களால் சாரி சொல்லிக்கொண்டே, “அம்மா, நான் அவர் கூட சேருவேனா?, கம்பஸ் இன்டர்வியூ என்றதும் கொஞ்சமே கொஞ்சம் மறந்துவிட்டதுமா, ப்ளீஸ் மா.” என்று தன் அம்மாவிடம் செல்லம் கொஞ்சிவிட்டு, கண்களாலேயே தன் அப்பாவிடம், “எதையாவது சொல்லி சமாளிங்க” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

தன்னறைக்கு வந்ததும் செல்போனில் தன் தோழி நளினாவை அழைத்தாள், “நளின், நெக்ஸ்ட் வீக் கம்பஸ் இன்டர்வ்யூ என்னால அட்டென்ட் பண்ண முடியாதுடி, உன் கிட்ட ஏற்கனவே சொன்னேனே என் மாமா பொண்ணு கல்யாணம்..” என்று சஹி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஆமாம்டி, மார்னிங் நீ உங்க வீட்டுல நடந்தத பத்தி சொன்னதிலேயும், ஈவ்நிங் அந்த புன்னகை மன்னன் கிட்ட மாட்டினதுனாலேயும் நான் சுத்தமா மறந்திட்டேன்டி.” என்றாள் நளினா.

“ம்ம் நானும் மறந்துட்டு இப்போ தான் அம்மா கிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கிட்டேன் கூடவே அப்பாக்கும் நல்ல திட்டு.”

“சரி நீ என்ன பண்ண போற?” என்றாள் நளினா.

“வேற கம்பெனி என்ன வருதுடி?”

“அடுத்ததா எ.பி.சிஸ்டம்ஸ் வருதுன்னு சொல்றாங்கடி, பட் எனக்கு கரெக்ட் டேட் தெரியல.”

“ஓகே ,நளின் நான் எ.பி.சிஸ்டம்ஸ் இன்டர்வ்யூவே அட்டென்ட் பண்ணிக்கிறேன். நீ என்னடி பண்ண போற?” என்றாள் சஹி.

“நான் பர்ஸ்ட் அவ்யுக்த் சொல்யுசன்ஸ் இன்டர்வ்யூவ அட்டென்ட் பண்றேன்டி. கிடைக்கலன்னா நெக்ஸ்ட் கம்பெனி வரேன்டி. “

“ஓகே நளின் ஆல் தி பெஸ்ட்.” என்றாள். சஹி.

“என்னடி சஹி, குரலே டல்லா இருக்கு?”

“இல்லடி, உன் கூட என்னால இன்டர்வ்யூ அட்டென்ட் பண்ண முடியல இல்ல அதான்டி, ரெண்டு பேரும் அட்டென்ட் பண்ணினா நாம ரெண்டு பேரும் ஒரே கம்பனில வேலை பார்க்கலாம்.” என்றாள் வருத்ததுடனே.
 
அச்சச்சோ இந்த 3rd அப்டேட்
இரண்டு தடவை போஸ்ட்
ஆகியிருக்கு, சத்யா டியர்
 
Top