Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 15

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 15

நளினா தன் அறையை விட்டு வெளியே வந்தாள். புது உடை அவளுக்கு ஏற்றார் போல் இருந்தது. நேராக சென்று பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள்.


“ஹாப்பி பர்த்டே நளின்” என்றபடியே அங்கு வந்தனர் அவளுடைய அக்காவும் ,மாமாவும்.


“தேங்க்ஸ் மாமா, அக்கா என்ன விஷ் மட்டும் தானா? எங்க கிப்ட்?”என்றாள் நளினா.


“உன்னோட கிப்ட் உன் பெட்ரூம்லே இருக்கு எடுத்துக்கோ”, என்ற புவனா(நளினாவின் அக்கா) தன் அப்பாவிடம் திரும்பி “என்னப்பா கேட்டிங்களா?” என்றாள்.


“இல்லை புவனா இனிமேல் தான் பேசணும்.”


அங்கே வந்த விசாலாக்ஷி (நளினாவின் அம்மா)”நளின் பூஜை ரூம்லே விளக்கேத்திட்டு சாமிய கும்பிட்டுக்கோ.”


அம்மா சொன்னதை செய்துவிட்டு வந்த நளினா “என்னப்பா என் கிட்ட என்ன பேசணும்?” என்றாள்.


“நீ மாப்பிள்ளைக்கு கால் செஞ்சியா?மாப்பிள்ளை சம்பந்தி கிட்ட பேசிட்டாரா? அதை பத்தி எதாவது தெரியுமா?இப்போ நான் சம்பந்திக்கு கால் பண்ணலாமா?”


அவரை பார்த்தபடியே இருந்த நளினா, “அப்பா, பரத் பேசறேன்னு சொல்லிட்டார் ..கண்டிப்பா பேசியிருப்பார் ..சோ நீங்க அவங்க கிட்ட தாராளமா பேசலாம்.”


“அது எப்படிமா கன்பார்மா தெரியாம நான் கால் செய்ய முடியும் ,என்னை அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும் இல்ல.”


“அப்பா பரத் பத்தி எனக்கு தெரியும்பா அவர் பேசியிருப்பார்..நீங்க தைரியமா பேசுங்க ...அப்பா இப்பவே பேச போய்டாதீங்க இப்போ அவங்களுக்கு நைட் ...இன்னும் த்ரீ ஹார்ஸ் கழிச்சு பண்ணுங்க.”


“குட்டிமா உங்க அப்பாவும் படிச்சவன் தான் மா ...இப்போ அங்க நைட்ன்னு தெரியும்.”என்றார் சிரித்துக்கொண்டே.


வாசலில் கார் சத்தம் கேட்டு வெளியே வந்த நளினா பரத்தை பார்த்ததும் அப்படியே நின்றாள்.


“ஹே! பர்த்டேபேபி இந்த டிரஸ்ல சூப்பரா இருக்க .”


“......................”


“நளின் என்னடா அப்டியே நின்னுட்டு இருக்க?”


அவள் அப்பொழுதும் மௌனமாக அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


“பட்டாசு , உனக்கு இந்த மௌனம் நல்லாவே இல்லைடா .”


“..............................”


“பரத் ஒன்றும் புரியாமல் நளினாவை பார்த்தான் ..சிறிது நேரம் கழித்து அவளின் மௌனம் புரிந்தார் போல் “ஹே!பட்டாசு இப்போ என்ன எனக்கு ரிடர்ன் கிப்ட் கொடுக்க தயக்கமா இருக்கா உனக்கு? விடுடா இப்போ நான் கொடுக்கிற கிப்ட மட்டும் வாங்கிக்கோ... கல்யாணத்துக்கு அப்புறம் வட்டியும் முதலுமா நான் வாங்கிக்கறேன்...இப்போவாவது பேசுடா.”


“உள்ள வாங்க பரத்.”


“நளின் நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ..அதுக்கு ரெண்டு ரீசன்ஸ் இருக்கு... பர்ஸ்ட் ரீசன் நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்டுல சரின்னு சொல்லிடாங்க, செகண்ட் ரீசன் அவ்யுக்த் என் கிட்ட சொன்ன விஷயம்... அதை பத்தி அவனே உன்கிட்ட சொல்லுவான் .. இப்போ வா நாம மாமா கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்.”


[(பரத் அவனோட பரன்ட்ஸ் கூட பேசினது பிறகு வரும்)]


சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தவர்களை கண்ட விசாலாக்ஷி ,”வாங்க வாங்க மாப்பிள்ளை.”


“நாங்க கிளம்பறோம் அத்தை ,மாமா எங்க?”


“கொஞ்சம் இருங்க ஸ்வீட் மட்டும் எடுத்து வரேன்” என்றபடியே கிட்சனுக்குள் சென்றார்.


இருவரும் ஸ்வீட் காபி எல்லாம் சாப்பிட்ட உடன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வெளியே கிளம்பினர்.

அவ்யுக்த் மிகுந்த உற்சாகமாக இருந்தான்.இன்று தியாவிடம் பேசிவிடவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க கிளம்பிகொண்டு இருந்தான்.


“இன்னிக்கு நீ வீட்டுல இருப்பேன்னு நினைச்சேன் உன்னை கூட்டிட்டு நம்ம புது வீட்டுக்கு போய் சில பெயிண்ட்டிங்ஸ் எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன்டா...சீக்கிரமா வாடா நாம போய் எடுத்துட்டு வருவோம்.” என்றாள் கௌசி.


“சரி ம்மா “ என்றவன் மனதினுள் “என் காதலை மட்டும் அவள் ஏத்துகட்டும்மா ...பெய்ண்டிங்ஸ் என்ன அது வரைஞ்சவளையே கூட்டிட்டு வரேன்மா” என்று சொல்லிக்கொண்டான்.


“அவ்யுக்த் என்னடா மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்க.”


“ஹா..ஹா...ஹா..ஹா..! பாய் மாம், ஈவ்னிங் எல்லாமே சொல்றேன்.”


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வேணுகோபால், “கௌசி, எனக்கு என்னமோ சீக்கிரம் நம்ம வீட்டுல கெட்டிமேள சத்தம் கேட்பதற்கான அறிகுறி தெரியுதுமா.”


“அப்படி மட்டும் நடந்தா நல்லா தான் இருக்கும்ங்க.”


“பார்க்கலாம் இன்னிக்கு ஈவ்னிங் என்ன சொல்றான்னு?”

இருவரும் பேசிக்கொண்டே வீட்டு மருமகளை பற்றி கனவு காண தொடங்கினர்.


அவ்யுக்த் செல்லும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தான்.நேற்றே பரத்திடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் .

(பரத்திடம் பேசிய விவரம் பிறகு பார்க்கலாம்)
ஏனென்றால் தியாவிடம் பேச அவனுக்கு தனிமை தேவை அப்பொழுது இந்த பரத் எதுவும் தொல்லை செய்ய கூடாதே என்று தான் எல்லாவற்றையும் அவனிடம் சொல்லிவிட்டான்.


“இப்பொழுது எனக்கு பேச தனிமை கிடைக்கும், ஆனால் வார்த்தை தான் கிடைக்குமான்னு தெரியலை.”என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

“தியா, என்னை புரிந்து ஏற்றுக்கொள் பெண்ணே!!! என்று சொல்லியவாறே ஹோட்டல் வந்து சேர்ந்தான்.


சாஹித்யா கிளம்பிக்கொண்டிருந்தாள். வெள்ளை நிற அனார்கலி மாடல் சுடிதார் அணிந்திருந்தாள். நிறைய வேலைப்பாடு உள்ள அந்த சுடி அவளை மேலும் மெருகேற்றின.


“அம்மா நான் கிளம்பறேன்...ஈவ்னிங் தான் வருவேன்.”


“சரி சஹி , நளினாவுக்கு நானும் அப்பாவும் விஷ் பண்ணினோம்னு சொல்லிடு ..நான் அவளுக்கு கால் பண்றேன்.”


“ம்ம்ம்ம், அப்பா எங்க?”


“உங்க அப்பா உள்ள தான் இருக்கார்...இன்னும் என் பேரை எப்படி கொலை செய்யலாம்னு யோசிச்சுட்டு இருக்கார்.”


“ஹே! பான்” என்றபடியே அங்கே வந்தார் ராகவன்.


(ஆங்கிலத்தில் பங்கஜத்தின் பெயரில் உள்ள முதல் மூன்று எழுத்துக்களை தான் பா இப்போ இவரு பேரா வச்சு இருக்கார்.pangajam)


“அய்யோ!!! ஏங்க இது என்ன பேருங்க புதுசா?”


சஹி சிரித்துக்கொண்டே “அப்பா உங்க இல்லாத மூளைய வச்சு ரொம்ப யோசிச்சிருக்கீங்க... கிரேட் பா நீங்க” என்றாள் சிரிப்பை அடக்கும் வழி தெரியாமல்.


“சஹி என்னமா நீயே இப்படி சொன்னா எப்படிடா? உங்க அம்மா என்னை ஒரு வழி பண்ணிடுவாடா.”


“அப்பா இந்த விளையாட்டுக்கு நான் வரல நீங்களாச்சு அம்மாவாச்சு என்னை ஆளை விடுங்க ... நான் கிளம்பறேன்” என்றபடியே கிளம்பினாள் சஹி.


“பான், எனக்கு ஒரு கப் காபி வேணும் மா தரியா?”


“ஒழுங்கா என்னை பங்கஜம்னு கூப்பிட்டா தான் இனிமேல் உங்களுக்கு காபி , இல்லன்னா ஒண்ணுமே கிடையாது உங்களுக்கு.”


“பான், உன் பெயரை வச்சே நான் ரிசர்ச் பண்ணி பி.ஹெச்.டி பண்ணலாம்னு இருக்கேன் ... இந்த காபிய என்னாலேயே கலந்துக்க முடியும் ..உன் பெயரை அடுத்து என்ன கூப்பிடலாம்னு யோசிக்க தான் காபி கேட்டேன் .. இப்போ நானே போய் கலந்துக்கறேன்” என்றபடியே கிட்சன் உள்ளே சென்றார் ராகவன்.


பங்கஜம் தலையில் அடித்துக்கொண்டே, “உங்கள திருத்தவே முடியாது .. என்னமோ பண்ணி தொலைங்க ...நான் இனிமே உங்க முன்னாடி காதை இருக்க மூடிட்டு தான் இருக்க போறேன்” என்றபடியே அவரும் உள்ளே சென்றார்.


பரத்தும் நளினாவும் காரில் சென்றுக்கொண்டிருந்தார்கள். பரத் அருகில் அமர்ந்திருந்த நளினாவை அவ்வபோது ரசித்துக்கொண்டே காரை ஓட்டினான்.


“பரத் ரோட்டை பார்த்து ஓட்டுங்க .”


“அது நளின், இந்த பக்கம் பார்த்தா தான் எனக்கு கார் ஓட்டவே வருதுடா.”


பரத் சொன்னதைக்கேட்டு வெட்கத்துடன் தலை குனிந்தாள் நளினா.


“பரத் அவ்யுக்த் அண்ணா என்ன சொன்னார்?”


“அதைதான் அவ்யுக்த் சொல்லுவான்னு சொன்னேனே.”


“அவர் சொல்லும்போது சொல்லட்டும் இப்போ நீங்க சொல்லுங்க.”

“அது சஸ்பென்ஸ் அவனே சொல்லுவான் ...அப்போ உனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும் ...அந்த சந்தோஷத்திலே நான் கேட்ட கிப்ட் மட்டும் இல்ல, கேட்காத கிப்டும் நீ கொடுத்துடுவ ..அதுக்கு தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”


“கேட்காத கிப்ட் தான கொடுத்துட்டா போச்சு” என்றபடியே பரத்தின் தோளில் ஒரு அடி வைத்தாள் நளினா.


“நளின் உனக்கு கிப்ட் கொடுக்க தெரியலன்னா என் கிட்ட கேளு நான் சொல்லி தரேன்.”


“இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் போதும்.”


“டேய் பரத், உன் பாடு திண்டாட்டம் தான் டா” என்று தன்னை தானே கைகாட்டி சொல்லிக்கொண்டான்.


அவனின் செய்கையை பார்த்து சிரித்தாள் நளினா.அப்பொழுது பரத்தின் செல் அழைத்தது.


செல்லை எடுத்த பரத் அதில் அவ்யுக்தின் நம்பரை பார்த்து “சொல்லுடா அவ்யுக்த்” என்றான்.


“டேய் பரதா, நான் இங்க வந்து தேர்ட்டி மினிட்ஸ் ஆச்சுடா.. நீ எங்க இருக்க? இன்னும் யாருமே வரலியே?”


“டேய்! உன்னை யாருடா இவ்ளோ சீக்கிரம் வர சொன்னது.. நான் வரசொன்ன டைம்க்கே இன்னும் தேர்ட்டி மினிட்ஸ் இருக்கு.. அவ்யுக்த் உன்னை என்னமோன்னு நினைச்சேன்டா... பரவாயில்லை நீ தேறிட்ட.. எங்க இருக்கிற நிலைமையில உனக்கு டியூஷன் எடுக்கனுமோன்னு நினைச்சேன்... பட் நீ லேட் பிக்அப்ன்னாலும் நல்லாவே தேறிட்டடா .”


“எப்போ வருவாடா?” என்று தன்னை அறியாமலே கேட்டுவிட்டு பின் நிறுத்தி பரத்திடம், “எப்போ வருவ டா நீ?” என்றான்.


எல்லாவற்றையும் நன்கு கேட்ட பரத் சிரித்துக்கொண்டே, “நாங்க இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்போம் ... அப்புறம் சஹியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா டா.. வெயிட் பண்ணு பாய் டா” என்றான்.


“தியா கிட்ட பேசி முடிச்சவுடனே உன்னை தாண்டா ஸ்பெஷலா கவனிக்க போறேன், பாய் டா சீக்கிரமா வந்து சேர்“ என்றான் அவ்யுக்த் அந்த “ஸ்பெஷல்” என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தபடி.


பரத் பேசி முடித்தவுடன், “அண்ணாக்கு எதுக்கு டியூஷன் வைக்கணும்?”


“அந்த விஷயம் கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன், அவனே சொல்லுவான்... என்று சொல்லிவிட்டு “அண்ணாக்கு மட்டும் இல்ல தங்கைக்கும் டியூஷன் எடுக்கணும் போலிருக்கு” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான்.


“சொல்றத சத்தம்மா சொல்லுங்க” என்றாள் சிறிது கோபமாக.


“சரி சரி எல்லாம் அப்புறம் சொல்றேன், இப்போ கோபப்படாம வா.”


இருவரும் சிரித்து பேசிக்கொண்டு ஹோட்டல் வந்து சேர்ந்தனர். அங்கு இருந்த அவ்யுக்தை நோக்கி கை காட்டியபடியே ஹோட்டலின் உள்ளே சென்றனர்.


“ஹாய் நளினா, ஹாப்பி பர்த்டே மா “ என்றபடியே கையிலிருந்த கிப்ட் பக்கை கொடுத்தான் அவ்யுக்த்.


“தேங்க்ஸ் அண்ணா.”


“இன்னும் உன் பிரண்டு வரலை மா, நாம இங்கயே வெயிட் பண்ணலாமா இல்லை உள்ள போலாமா?”
“ஒரு நிமிஷம் இருங்க கேட்கறேன்” என்றபடியே தன்னுடைய போனில் சஹிக்கு அழைத்தாள்.


“சஹி, நாங்க ஹோட்டல்க்கு வந்துட்டோம்.. நீ எங்க இருக்க?”


“நளின் நான் அப்போவே வந்துட்டேன் பின்னாடி ஸ்விம்மிங்பூல் கிட்ட இருக்கிற லான்லே இருக்கேன்.. நீங்க இங்க வரீங்களா? இல்ல நான் உள்ளே வரட்டுமா?”


“சஹி நீ அங்கேயே இரு நாங்களே அங்க வரோம்.” என்று போனை கட் செய்தாள்.


“சஹி உள்ள தான் இருக்கா.. வாங்க உள்ள போகலாம் .”


அவள் உள்ளே இருப்பதை அறிந்ததும் அவ்யுக்தின் கால்கள் வேகமான எட்டு வைக்க இதை எதேச்சையாக கவனித்த நளினா பரத்திடம் கண்களாலே பேசினாள்.


அவனும் கண்களாலேயே “ஆமாம்” என்பது போல் பதிலளித்தான்.


மிகவும் சந்தோஷமடைந்த நளினா பரத்தின் கைகளை பிடித்துக்கொண்டு அவ்யுக்த்துடன் உள்ளே நுழைந்தாள்.
 
மிகவும் அருமையான பதிவு,
சத்யாஸ்ரீராம் டியர்
 
Last edited:
ஹா ஹா ஹா
பங்கஜத்தை பான் ஆக்கிட்டாரே,
ராகவன்
என்ன பான் ஸார்?
பிரெஸ்ஷர் பானா?
இல்லை பெட் பானா?
 
Top