Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 13

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 13

“தியா” என்ற எழுத்தை தடவி பார்த்துக்கொண்ட அவ்யுக்த் மனதினுள் “எனக்கு என்ன ஆச்சு?நான் சாஹித்யாவை விரும்பிகிறேனா?அது எப்படி பார்க்காமலே விரும்ப முடியும்?,பெய்ன்டிங்ஸ் பார்த்து மட்டுமே காதல் வருமா?, இது முதல்ல காதல் தானா? எனக்கு சாஹித்யாவை பற்றி என்ன தெரியும்?” என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

“டேய் அவ்யுக்த், இன்னும் என்னடா பண்ற ஆபீஸ் கிளம்பல?” என்றாள் கௌசி.

“இதோ அம்மா கிளம்பிட்டேன்,இன்னிக்கு என்னென்ன மீட்டிங்ஸ் இருக்குன்னு பார்த்துட்டு இருந்தேன் மா, இப்போ கிளம்பறேன் பாய் மா.” என்று சொல்லியவாறே காரை நோக்கி சென்றான் அவ்யுக்த்.

காரின் உள்ளே உட்கார்ந்த பிறகும் அவனுக்கு சாஹித்யாவின் நினைவு வந்தது. அவனக்கு எப்போதுமே டிரைவ் பண்ணும் போது எதையும் சிந்திக்க பிடிக்காது ,சாலை விதிமுறைகளை மிகவும் மதிப்பவன், கவனம் இல்லாமல் டிரைவ் செய்வது தனக்கு மட்டுமின்றி அடுத்தவர்களுக்கும் அது ஆபத்தாக முடியும் என்று மிக கவனமாக இருப்பவன். இன்று புதிதாய் மனம் சஞ்சலபடுவதை விரும்பாமல், கண்களை இருக்க மூடிக்கொண்டான். ஒரு பெருமூச்சு விட்டு மனதை ஒருநிலை படுத்த முயற்சி செய்தான். தினமும் அவன் செய்யும் தியானமும், உடற்பயிற்சியும் அவனுக்கு இப்பொழுது கைகொடுத்தன. சில நிமிடங்களிலேயே தன் மனதை ஒரு நிலை படுத்தினான். காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றான்.

ஆபீசில் தன் அறைக்குள் நுழைந்த அவ்யுக்த், தனது பிஏ வை அழைத்து இன்னும் ஒருமணி நேரத்திற்கு தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ,அவனுடைய அறைக்குள்ளேயே இருந்த ஓய்வறைக்கு சென்றான்.

காரில் வரும்போது ஒருநிலை பட்டிருந்த அவன் மனது ,இப்பொழுது மீண்டும் சஞ்சல பட துவங்கியது. அதனால் சிந்திக்க அவனுக்கு அவகாசம் தேவை பட்டது.
“முதலில் இது என்ன மாதிரி உணர்ச்சி என்று புரிந்துக்கொள்ளவேண்டும்,இது காதலாக இருந்தால் தியாவிடம் பேசி முடிவு எடுக்கவேண்டும்.ஒருவேளை அவள் வேற யாரையாவது விரும்பினால் நம் மனதில் வீணாக ஆசையை வளர்த்துக்கொள்ள கூடாது, இப்படி நினைக்கும் போது மனதில் வெறுமை படர்வதை போல் உணர்ந்தான்.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தபடியே இருந்த அவ்யுக்த் டைம் ஆவதை மறந்தான் அவனுடைய பி.ஏ. வந்து கதவை தட்டியதும் எரிந்து விழுந்தான்.

“என்ன ஜனா, நான் தான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு சொன்னேனே,?”

“சார், இல்லை நீங்க சொல்லி டூ ஹார்ஸ் ஆச்சு ,இப்போ ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு ,அதான் சார் “ என்றான் பயந்தபடியே.

தன்னுடைய தவறு புரிந்த அவ்யுக்த், “சாரி ஜனா, டென் மினிட்ஸ் லே ரெப்ரெஷ் ஆயிட்டு வரேன் ..மீட்டிங்க்கு தேவையானதை எடுத்து வைங்க “ என்றான்.

பி.ஏ. அறையை விட்டு சென்றதும் கண்களை இருக்க மூடி , “நம் மனதில் ஒரு தெளிவான முடிவு எடுக்கறவரைக்கும் தியாவை மீட் பண்ண கூடாது” என்று மனதில் உறுதியான முடிவு எடுத்து விட்டு தன்னுடைய ப்ளாக்பெரியை எடுத்து ரிமைன்டரை டெலிட் செய்தான் அவ்யுக்த்.


சாஹித்யாவும் கிட்ட தட்ட இதே மாதிரி முடிவில் தான் இருந்தாள். “முதலில் இது என்ன உணர்ச்சி ?அது சரியா ? தப்பா? “என்று முடிவு செய்து கொள்ளவேண்டும்.
அவ்யுக்திடம் பேசியதில் அவனுக்கு தன்னை பற்றி எதுவுமே தெரியவில்லை.. என்பது தன் மனதை கஷ்டப்படுத்தியது ஏனென்று புரியவில்லை ,அந்த கனவு எதுக்கு வந்தது புரியவில்லை அதுவும் விடிகாலை கண்ட கனவு பலிக்கும் என்ற எண்ணம் எதற்கு உடனே வரவேண்டும் ,என்று நினைத்து பார்த்து கொண்டிருந்த சஹி தலையை தன் இரு கையால் பிடித்துக்கொண்டாள். “ஐயோ! எனக்கு என்ன ஆச்சு ,நான் நல்லா தான இருந்தேன், பர்ஸ்ட் நாம மனதில் உறுதி படுத்திக்கொண்டு அவனிடம் சென்று பேசுவோம் .” என்று அவளுடைய எண்ணத்திருக்கு தடையிட்டாள்.


“சஹி, என்னமா ரெடியா?” என்றபடியே வந்தாள் பங்கஜம்.
அம்மா அழைத்ததையே கவனிக்காத சஹியை ராகவன் திரும்பி பார்த்தார். “சஹி!! என்னடா அப்டியே நின்னுட்டே இருக்கியே?வீட்டை விட்டு போக மனசில்லையாடா?”

அவள் மௌனமாகவே இருப்பதை கவனித்த பங்கஜம் “ஏங்க இவ எதுக்கு இப்படி நிக்கறா?” என்றாள் சிறிது வருத்தத்துடன்.

பங்கஜத்தின் குரலில் வருத்தத்தை உணர்ந்த ராகவன், “பங்கஜ், அவளுக்கு வீட்டை பிரிய போகிற ஏக்கம் போல இருக்கு அதான் இப்படி நிக்கறா”.

“ஏங்க என் பேரை கொலை செய்யறதை இந்த வீட்டோட நிறுத்திக்கணும்.இல்லனா நான் அந்த புது வீட்டுக்கே வர மாட்டேன்.”

“சரி சரி விடும்மா ,இதை அங்க போய் முடிவு பண்ணலாம்..இப்போ சஹியை கவனிக்கலாம்”. என்றார்.

எப்போதுமே ராகவனின் பேச்சை கேட்காத பங்கஜம் ,”ம்ம் சரிங்க அவளை கவனிக்கலாம்.” என்றார்.

ராகவன் மனதில் பொங்கிய ஆச்சர்யத்துடன் ,”சஹி, என்னமா இந்த வீட்ட விட்டுட்டு வர கஷ்டமா இருக்கா? என்றார்.

அவள் கவனிக்காததை உணர்ந்த ராகவன், அவள் தோளை தொட்டு திருப்பி ,அதே கேள்வியை திருப்பி கேட்டார்.

அந்த கேள்வியில் அதிர்ந்த சஹி மனதில்,”இந்த எண்ணம் எனக்கு வரவே இல்லையே ,எப்பவும் இந்த வீடு “நம் வீடு” என்று தான் எண்ணம் வந்ததே இதுவும் அவனால் தானா ? “ஐயோ!” என்றபடியே தலையை பிடித்துக்கொண்டாள்.

“என்ன சஹி என்னாச்சு?எதுக்கு அய்யோ ன்னு சொல்ற?” என்று கேட்டார் ராகவன்.

வாய் விட்டே அலறியிருப்பதை தந்தை கேட்டவுடன் தான் உணர்ந்தாள் சஹி, “ஒண்ணும் இல்லைப்பா, தலைவலி தான் பா அதான் கத்திட்டேன் “ என்றாள்.

“ஒ,சஹி நீ வேணும்னா ரெஸ்ட் எடுத்துக்கோடா நானும் அம்மாவும் போய் அவங்க கிட்ட கீ கொடுத்துட்டு வரோம்”.

இந்த மனநிலையில் அங்கே செல்ல விருப்பமில்லாமல் இருந்த சஹி தந்தையிடம் ,”ம்ம் சரிப்பா, நீங்களே போயிட்டு வந்துடுங்க ,நான் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்றாள்.

“பங்கஜ், வீட்டுல எல்லாம் எடுத்தாச்சா போய் பாரு.. லாக் பண்ணிட்டு கிளம்பலாம்.”

பங்கஜம் வீட்டினுள் சென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தவுடன் எல்லோரும் அந்த வீட்டை விட்டு கிளம்பினர்.

“வாங்க பங்கஜம், வாங்க ராகவன் சார் எங்க சஹி வரலியா?” என்றாள் கௌசி.
“இல்லங்க கௌசல்யா, அவளுக்கு கொஞ்சம் தலைவலி அதான் வரலை” என்றாள் பங்கஜம்.

“ஓ! சரி இன்னொரு தடவை இங்க வர சொல்லுங்க” என்றபடியே அவர்களுக்கு காபி எடுத்து வர உள்ளே சென்றார்.

வீட்டு தொலைபேசி அடித்தது கௌசல்யா வந்து எடுத்தார்.”ம்ம் சொல்லு டா அவங்க எல்லாம் கீ கொடுக்க வந்து இருக்காங்கடா ,ராகவன் சார் கிட்ட கொடுக்கவா?”

“சரிம்மா, கொடு” என்றான் அவ்யுக்த்.

அவ்யுக்த் போன் பண்ணியதே அங்கு தியா வந்து இருக்காளா? அவள் ஏதாவது தன்னை பற்றி அம்மாவிடம் கேட்ப்பாள் என்று நினைத்து தான் பண்ணினான். இப்பொழுது அவனுக்கு அவரிடம் பேசும் மனநிலை இல்லை இருந்தாலும் தியாவை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டி அவரிடம் பேச தொடங்கினான்.

“தம்பி கீ அம்மா கிட்ட கொடுத்துட்டேன் ,நீங்க எப்போ ப்ரீயா இருக்கீங்களோ வீட்டுக்கு வாங்க தம்பி.”

“சார்,கண்டிப்பா வரேன் உங்க புதுவீடு எப்போ ரெடி ஆகுது சார்? அப்புறம் உங்க பிஸ்னெஸ் எந்த அளவுல இருக்கு?”

“வீடு ரெடியாக இன்னும் சிக்ஸ் மந்த்ஸ் ஆகும்னு சொல்லி இருக்காங்க, பிஸ்னெஸ் ஸ்டெப்ஸ் இனிமே தான் தம்பி ஆரம்பிக்கணும்.”

“நீங்க அதே ஷாப்பிங்மால் ஐடியால தான் இருக்கீங்களா சார்?” அதை பத்தி கொஞ்சம் பேசணுமே நீங்க எப்போ பிரீயோ அப்போ பேசலாமா?”

“ம்ம் கண்டிப்பா பேசலாம்தம்பி , இன்னும் அந்த ஐடியால தான் இருக்கேன் ,நானே உங்களுக்கு போன் செய்யறேன் நீங்க வீட்டுக்கு வாங்க தம்பி அங்க பேசலாம்.”

“ம்ம் சரி சார்.”

அவனிடம் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு கௌசல்யாவிடம் போனை கொடுத்தார் ராகவன்.

அம்மாவிடமும் பேசிவிட்டு போனை துண்டித்த அவ்யுக்த் நிமிர்ந்தான் அங்கே நளினா நின்று கொண்டிருந்தாள்.

“என்ன நளினா, இன்னும் வீட்டுக்கு கிளம்பலியா?”

“இனிமே தான் கிளம்பணும் அண்ணா.”

“சொல்லும்மா,என்ன விஷயம்?”

“நாளைக்கு எனக்கு பர்த்டேன்ணா ,நான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்க போறேன்.லஞ்ச்க்கு வெளில போறோம்.அதை சொல்லதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், எந்த இடம், என்ன டைம் இதெல்லாம் பரத் உங்களுக்கு போன் பண்ணி சொல்லுவார்.”

அவனுக்கு நாளை தியா வருவாளா? என்று அறிய வேண்டி இருந்தது ஆனால் இதை நளினாவிடம் கேட்க அவன் மனது இடம் கொடுக்கவில்லை.

இதையெல்லாம் அறிந்தவள் போல் சஹி நளினாவிற்கு கால் செய்தாள்.

“ஹே! சஹி சொல்லுடி நீ நாளைக்கு வரணும் சரியா?இப்போ தான் அண்ணாவை இன்வைட் செய்தேன் ,டைம் பிளேஸ் எல்லாம் மெசேஜ் அனுப்பறேன்டி.”

இவற்றை கேட்டுக்கொண்டிருந்த அவ்யுக்த் நாளை தியாவை சந்தித்து பேசலாம் என்று முடிவு செய்துக்கொண்டான்.
 
Top