Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 8.2

Advertisement

Admin

Admin
Member

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க. ஜெனி நாம சொன்னா கேட்பா... சொல்லு ஜெனி அப்பா சொல்றதை கேட்கிறேன்னு சொல்லு...” லீனா வற்புறுத்த... ஜெனி சரி என்று தலையசைத்தாள்.

தன் குடும்பமா அல்லது தன் காதலா என்று வரும் போது... ராஜேஷ் பின்னுக்குச் செல்லப்பட்டான். ஜெனியை தன் வழிக்குக் கொண்டு வந்த ஸ்டீபன் அடுத்து ராஜேஷை பார்க்க சென்றார்.

ஸ்டீபன் அவர் மட்டும் செல்லவில்லை. ராஜேஷ் ஜெனியை பற்றி அவரிடம் சொன்ன கல்லூரி பேராசிரியர் ஆல்பர்டையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

ஸ்டீபன் அங்கே செல்லும் போது... மாலை நேரம். ராஜேஷ் அப்போது வீட்டில் இல்லை. பெர்னாண்டஸ்க்கு உடம்பு சரி இல்லை... நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு, இன்று தான் அவர் வீட்டுக்கு திரும்பி இருந்தார்.

ஸ்டீபனையும் ஆல்பர்ட்டையும் பார்த்துப் பெர்னாண்டஸ் உடன் பனி புரிவோர் என்று நினைத்து சோபியா அவர்களைத் தன் கணவரிடம் அழைத்துச் சென்றார்.

பெர்னாண்டஸ் அவர்கள் யார் என்று தெரியாமல் திகைப்பதை பார்த்து சோபியாவும் கேள்வியாகப் பார்க்க... முதலில் தயங்கிய ஆல்பர்ட் பின் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ராஜேஷ் ஜெனி பற்றிச் சொல்ல... அதைக் கேட்ட ராஜேஷின் பெற்றோருக்கும் அதிர்ச்சிதான்.

சோபியா ராஜேஷை செல்லில் அழைத்து உடனே வீட்டிற்கு வர சொன்னார். இப்போதுதான் தன் தந்தை மருத்துவமனையில் இருந்து திரும்பி இருப்பதால்... அவருக்குத் தான் உடம்பிற்கு எதோ என்று பதறி ராஜேஷ் அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.

ஆல்பர்ட் மற்றும் ஜெனியின் தந்தையை அங்கே பார்த்ததும், ராஜேஷ்க்கு விஷயம் புரிந்து விட்டது. ஜெனி எதை நினைத்து பயந்தாளோ... அந்த நேரம் வந்தே விட்டது என்பதை உணர்ந்தான்.

அவன் தைரியமாகத்தான் ஸ்டீபன்னை எதிர்கொண்டான். தன் அன்னையைப் பார்த்து “அம்மா அவங்களுக்குக் குடிக்க எதாவது கொடுத்தீங்களா....” என்றான் சாதாரணமாக....

அவன் இயல்பாக இருப்பதைப் பார்த்து ஸ்டீபனுக்கு உள்ளுக்குள் குளிர் பரவியது. இவனை ஜெனியின் வாழ்க்கையில் இருந்து விளக்குவது எளிதான ஒன்றல்ல என்பதை உணர்ந்தார்.

“ராஜேஷ் அவங்க வீட்ல உங்க காதலை விரும்பலை... அவங்க ஜெனிகிட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. அவளும் சரின்னு சொல்லிட்டா... நீயும் இனி அவ லைப்ல வராத.” என்றார் ஆல்பர்ட்.

“என்னை ஏன் வேண்டாம்ன்னு சொல்றாங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா...”

“அவங்க ஸ்டேடஸ்க்கு உங்களோட ஒத்து வராது ராஜேஷ் புரிஞ்சிக்கோ... அவங்க மூத்த பொண்ணைப் பெரிய இடத்தில செஞ்சிருக்காங்க.” ஆல்பர்ட் எடுத்து சொல்ல...

“நீங்க ஏன் சார் இவன்கிட்ட இறங்கி போய்ப் பேசுறீங்க. இங்க பாருங்க பெர்னாண்டஸ் என் பெண்ணை நான் விரும்புற இடத்திலதான் கல்யாணம் பண்ணுவேன். நீங்க உங்க பையனுக்குச் சொல்லி வைங்க.” ஸ்டீபன் கடுமையாகப் பேச....

“சார் கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் அவன்கிட்ட பேசுறேன்.” என்றார் பெர்னாண்டஸ் தணிவாகவே...

“எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க சார்... நானும் முன்னேறி காட்றேன்.” ராஜேஷ் ஸ்டீபனை பார்த்து கேட்க...

“எப்ப? என் பொண்ணுக்கு கல்யாண வயசு எல்லாம் தாண்டின பிறகா... வெறும் B.B.A., படிச்சிருக்க நீ... இந்த வீடு கூட முழுசா உங்க சொந்தம் இல்லை... இன்னும் வீட்டுக்கு லோன் கட்டிட்டு இருக்கீங்க. உனக்கு ஒரு அக்கா வேற இருக்கு.”

“உனக்கு உங்க அக்காவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற நினைப்பு இருக்கா... இல்லைனா உங்க அக்காவுக்கும் உன்னை மாதிரி பெரிய இடமா பார்த்து லவ் பண்ணா... ஈஸியா செட்டில் ஆகிடலாம்ன்னு நினைப்பா......” என்று ஸ்டீபன் சரியாக அவர்கள் தன்மானத்தில் அடிக்க...

அவர் பேச்சை கேட்டுப் பெர்னாண்டஸ் ராஜேஷ் இருவருமே சிலிர்த்து எழுந்தனர்.

“சார் கொஞ்சம் மரியாதையா பேசுங்க... இப்ப என்ன உங்களுக்கு என் பையன் உங்க பெண்ணை லவ் பண்ண கூடாது அவ்வளவு தான... இனி அவன் உங்க பெண்ணைத் தேடி வர மாட்டான். அப்படி அவன் வந்தா அவன் என் பிள்ளை இல்லை போதுமா...” என்று பெர்னாண்டஸ் உணர்ச்சி வசப்பட...

ஏற்கனவே நெஞ்சு வலியில் ஆஸ்பத்தரியில் இருந்தவர்... அவருக்கு எதாவது ஆகி விடுமோ என்று சோபியா பதற...

“நான் தான் உங்க பெண்ணை லவ் பண்ணேன். நீங்க என்னைப் பத்தி மட்டும் பேசுங்க. என் குடும்பத்தைப் பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்லை...” ராஜேஷும் கடுமையாகப் பதில் பேச....

“உனக்கு உன் குடும்பத்தைப் பத்தி நான் பேசினதே கோபம் வருதே... நீ அமைதியா இருந்த என் குடும்பத்துக்குள்ள நுழைஞ்சு பிரச்சனை பன்றியே அப்ப எனக்கு எப்படி இருக்கும்.”

“நான் மட்டும் உங்க பெண்ணை விரும்பலை சார்... உங்க பெண்ணும்தான் என்னை விரும்புறா...”

“நீ வந்து என் பெண்ணை விரும்புறேன்னு சொல்லி இருக்களைன்னா... கண்டிப்பா அவளா வந்து சொல்லி இருக்க மாட்டா...” ஸ்டீபன் சொல்வது உண்மை என்பதால் ராஜேஷ் அமைதியாக நின்றான். ஸ்டீபன் மேலும் தொடர்ந்தார்...

“அவளுக்கே தான் செஞ்சது தப்புன்னு புரிஞ்சிடுச்சு... இனி அவளைத் தொந்தரவு செய்யாத... நீ படிச்சு முடிச்சு நல்ல வேலையில சேர்ந்து உன் குடும்பத்தைக் காப்பாத்த பாரு...” ஸ்டீபன் பேசப் பேச ராஜேஷின் கண்களில் வலி தெரிந்தது.

“உனக்கு ஜெனியை எவ்வளவு நாளா தெரியும். மூன்னு மாசமா இல்லை ஆறு மாசமாவோதான். அதுக்கே உனக்கு அவளை விட்டு பிரியனும்ன்னு நினைக்கும் போதே கஷ்ட்டமா இருக்கே... நான் என் பொண்ணுங்களை எப்படிப் பார்த்துப் பார்த்து வளர்த்திருப்பேன். அவங்க எப்படியெல்லாம் வாழணும்ன்னு கனவு கண்டிருப்பேன்.”

“என் பொண்ணு உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்படுறதை நான் எப்படிப் பார்த்திட்டு இருக்க முடியும்? நீயே சொல்லு...” என்று ராஜேஷிடமே ஸ்டீபன் நியாயம் கேட்க... ஒரு தகப்பனாகத் தன் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி அவர் கவலைப்படுவதை யாரும் தவறென்று சொல்ல முடியவில்லை.

“நான் இவ்வளவு சொல்லியும் உன்னால ஜெனியை மறக்க முடியாதுன்னா... நீ இப்பவே என்னோட வா.. நான் உன்னைச் செலவு செஞ்சு படிக்க வைக்கிறேன். உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்து... என் பொண்ணுக்கு உன்னை நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனா உன் வீட்டோட உனக்கு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது...” என்று ஸ்டீபன் சொன்ன போது... எல்லோருமே அதிர்ச்சியில் உறைய... ராஜேஷின் ரத்தம் கொதித்தது.

“நீங்க யாரு சார் என்னை எங்க அம்மா அப்பாவை விட்டு வரணும்ன்னு சொல்றதுக்கு... நான் வேணா எங்க அப்பா பேச்சை கேட்காதவனா இருக்கலாம். ஆனா அதே சமயம் என் அப்பாவுக்கு ஒரு பிரச்சைன்னா நான் பார்த்திட்டும் இருக்க மாட்டேன். அதோட என் குடும்பத்தை உதறிட்டு போற அளவுக்கு நான் சுயநலவாதியும் இல்ல...”

“உங்க பொண்ணுக்காக என் குடும்பத்தை விட்டுட்டு நான் வரணும்ன்னா எனக்கு உங்க பெண்ணே தேவையில்லை....” என்றான் ராஜேஷ் ரோஷமாக...

ராஜேஷின் சுயமரியாதையைத் தூண்டி விட்டு தான் நினைத்தை சாதித்தார் ஸ்டீபன். ஆல்பர்ட் ஏற்கனவே ராஜேஷின் குணநலன்கள் பற்றி ஸ்டீபனிடம் சொல்லி இருந்தார்.

ராஜேஷும் ஜெனியும் தங்கள் குடும்பத்திற்காகத் தங்கள் காதலை விட்டு கொடுக்கும் படியானது.

பேச்சு வார்த்தை முடிந்தும் ஸ்டீபன் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்த பெர்னாண்டஸ் அவரைக் கேள்வியாகப் பார்க்க... “உங்க பையன் செல்ல இருந்து என் பெண்ணோட போட்டோவை அழிக்கச் சொல்லுங்க சார். அவங்க ரெண்டு பேரும் காலேஜ்ல வச்சு நிறையப் போட்டோஸ் எடுத்திருக்காங்க.” என்றார்.

இவர் என்னையே இந்தப் பாடு படுத்துறாரே... ஜெனியை என்ன பாடு படுத்தி இருப்பாரோ என்று ராஜேஷால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. மனம் வலிக்க வலிக்கத் தானும் ஜெனியும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அழித்தான். ஆல்பர்ட் அவனிடமிருந்து செல்லை வாங்கி எல்லாவற்றையும் அழித்து விட்டானா என்று சரி பார்த்து விட்டு கொடுத்தார்.

“உங்க குடும்பத்தைப் பத்தி நல்ல விதமா கேள்வி பட்டதுனாலதான் நானும் ஆல்பர்ட்டும் வந்தோம். இனி என் பொண்ணு பின்னாடி வர்றதோ... அவ மனசை கலைக்கிற மாதிரியோ உங்க பையன் நடந்துக்கக் கூடாது. அப்படி எதாவது நான் கேள்விபட்டா... நீங்க அதுக்கான பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதா இருக்கும் பார்த்துக்கோங்க.” ஸ்டீபன் ராஜேஷ் குடும்பத்தை எச்சரித்து விட்டே சென்றார்.

“பையன் நல்லவன். அதனாலதான் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சது. இல்லைன்னா பெரிய சிக்கல் ஆகி இருக்கும்.”ஆல்பர்ட் பேசிக்கொண்டே படி இறங்க... ஸ்டீபன் ஆமாம் என்று தலை அசைத்தார்.

ராஜேஷ் தன் பெற்றவர்களுக்காக இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டான். இரவு ராஜேஷிடம் வந்த ரோசி “அவர் உன்னைத் தூண்டி விட்டுக் காரியம் சாதிச்சுட்டார். அவருக்கு உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. நீ இன்னும் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம்.” என்றாள்.

“ம்ம்... ஸ்ட்ராங்கா இருக்கப் படிப்போ வேலையோ இல்லை... இதுக்குத்தான் ஜெனி அவங்க வீட்ல இப்ப தெரியக் கூடாதுன்னு நினைச்சா... அவ பயந்த மாதிரியே ஆகிடுச்சு.”

“அவளைப் பிரிஞ்சது உனக்கு வருத்தமா இல்லையா....”

“எப்படி இல்லாம இருக்கும். ஜெனி ஒரு தேவதை தெரியுமா... யாரையும் ஹர்ட் பன்னக் கூடாதுன்னு நினைப்பா... எப்பவும் ஒரு புன்னகை முகத்தில இருக்கும். அவ எனக்குக் கிடைக்க நான் கொடுத்து வைக்கலையோ என்னவோ...”

“உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா... உனக்கு அவ மேல கோபம் வரலையா....”

“அதைச் சொல்ல அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான்னு எனக்குத் தெரியும். நானா அவ குடும்பமான்னு வரும் போது... அவ குடும்பம்தான் அவளுக்கு முக்கியம். இதுல எனக்கு ஒன்னும் தப்பா தெரியலை...”

“ஆனா நிறையப் பேரு... காதலை மறுத்திட்ட கோபத்தில பொண்ணுங்க மேல ஆசிட் ஊத்துறாங்க.” ரோசி சொல்ல....

“நாம உண்மையா விரும்பியிருந்தா... பிரிஞ்சா கூட அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னுதான் நினைப்போம். அவங்க கஷ்டப் படுறதை நம்மால பார்க்க முடியுதுன்னா... அது உண்மையான காதலே இல்லை.”

“நீயும் படிச்சு நல்ல வேலையில சேர்ந்து... ஜெனியையே கல்யாணம் பண்ணனும் ராஜேஷ். என்னைப் பத்தி கவலைப்படாதே... நானே என் கல்யாணத்துக்குத் தேவையானதை சம்பாதிச்சுப்பேன்.” ரோசி தன் தம்பியின் மேல் உள்ள அக்கரையில் பேச... அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த ராஜேஷ்

“முதல் காதல் வரும் போது காதலிக்கத் தகுதி இருப்பதில்லை...
தகுதி வரும் போது முதல் காதல் இருப்பதில்லை.... கொஞ்ச நாள் முன்னாடி FB ல படிச்சேன். ஜெனியை அவங்க அப்பா அதுவரை விட்டு வைப்பார்ன்னு நினைக்கிறியா...” என்றான்.

“இனி நீ என்ன செய்யப்போற ராஜேஷ்? எனக்கு உன்னை நினைச்சா கவலையா இருக்கு...”

“பயப்படாத..... காதல் மட்டுமே வாழ்க்கைன்னு இதோட ஒய்ஞ்சு போய்ட மாட்டேன். நம்ம குடும்பத்தைக் கேவலமா பேசினவர் முன்னாடி உயர்ந்து காட்றேன்.”

“நான் M.B.A., கரெஸ்லதான் படிக்கப்போறேன். நாளையில இருந்து நான் வேலைக்குப் போறேன். அப்பாவோட உடல் நிலைக்கு இன்னும் அவரால எவ்வளவு நாள் வேலைக்குப் போக முடியும்னு தெரியலை...படிப்பறிவை விட அனுபவ அறிவுதான் வேணும்.”

ராஜேஷ் பேசப் பேச அவனை ஆச்சரியமாகப் பார்த்த ரோசி, தன் தம்பி வாழ்க்கையில் உயர்ந்து நல்ல நிலைக்கு வருவான். என்று உறுதியாக நம்பினாள்.
 
:love: :love: :love:

அப்போ ஜெனி உனக்கு தானா ராஜேஷ்???
உன்னோட points ரைட்.........
உன்னை திரும்பி பார்க்க வைக்கணும்.....

பொண்ணை மிரட்டுறது உங்க பொண்ணு ஓகே........
பையனையும் போய் மிரட்டுறது அதுவும் ரொம்ப ஓவரா.......
 
Last edited:

Top