Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 17

Advertisement

இந்த அக்கா அக்கரை சக்கரையில்
சொன்னது என்ன ஆகுமோ
இவ கூட வேற இருந்துட்டு எப்பவும்
இப்படி சொல்லிக்கொண்டே இருந்தா
வெளங்கிறும்
ரூபிணி ஆர்வகோளாறு
 
S
பகுதி – 17

விஜய் சென்றதும் வீட்டிற்குள் வந்த லீனா “விஜய் எப்ப வந்தாங்க? அவங்க வர்றதுக்குள்ள சீக்கிரம் வந்திடனும்ன்னு நினைச்சுதான் போனோம் லேட் ஆகிடுச்சு. குடிக்க எதாவது குடுத்தியா...” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க...

ஜெனி எல்லாவற்றிற்கும் “ம்ம்.. ம்ம்...” என்று முனங்கினாளே தவிர ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை... அவளுக்கு விஜயோடு இருந்த நேரங்களைத் திரும்ப நினைக்க மனம் விரும்பியது.

லீனா அவளைப் பார்க்க... “கொஞ்ச நேரம் தூங்கிறேன் மா...” என்றவள் விட்டால் போதும் என்று அவள் அறைக்குள் வந்துவிட்டாள்.

கட்டிலில் விஜய் வாங்கி வந்திருந்த பரிசு பொருட்களைப் பார்த்தவள், ஒவ்வொன்றாக எடுத்து வருட ஆரம்பித்தாள். புடவையைக் கையில் எடுத்தவளால் அவன் தேர்வை வியக்காமல் இருக்க முடியவில்லை...

ஜெனி எப்போதுமே அடிக்கும் நிறத்திலோ... அதே சமயம் அழுது வடியும் நிறத்திலும் இல்லாமல்... இதமான நிறங்களையே தேர்ந்தெடுப்பாள்... அவள் ரசனைக்கு ஏற்ற மாதிரியே விஜய் லாவண்டர் நிறத்தில் எளிமையான அதே சமயம் அழகான டிசைனர் புடவையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.

இதுவரை தான் அவனுக்கு ஒரு பரிசு கூடக் கொடுத்தது இல்லை என்று நினைத்தவள் லீனாவை தேடி சென்றாள். லீனா சமையல் அறையை ஒதுங்க வைத்துக்கொண்டு இருந்தார்.

ஜெனி எப்படி ஆரம்பிப்பது என்பது போல் தயங்கி நிற்க... அவளைப் பார்த்த லீனா “என்ன தூங்கலையா?” என்றார்.

“தூக்கம் வரலைமா...” என்றாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு தானே தூக்கம் வருது என்றாள். அதற்குள் என்ன ஆனது? முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் மகளை லீனா புரியாமல் பார்க்க...



ஜெனி லீனாவை கைப்பிடித்து அங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்ல... “எங்க இழுத்திட்டு போற ஜெனி... விடு என்னை...” லீனா சொல்வதைக் காதில் வாங்காமல் ஜெனி அவள் அறைக்கு வந்தவள், விஜய் வாங்கிக் கொடுத்திருந்த பரிசுகளைக் காட்டினாள்.

லீனா ஒவ்வொன்றையும் ஆர்வமாகப் பார்த்தவர், கடைசியாக நகை டப்பாவை திறக்க... முத்தும் கற்களும் பதித்த நெக்லஸ், வளையல் மற்றும் தோடு இருந்தது. லீனா அழகான அதன் வேலைப்பாட்டை ரசிக்க...

“பாருங்கம்மா எவ்வளவு வாங்கி இருக்காங்கன்னு.... நான் இதுவரை அவங்களுக்கு எதுவுமே வாங்கலை...” ஜெனி வருத்தமாகச் சொல்ல.... லீனா அவளைப் பார்த்து புன்னகைத்தார்.

“இன்னைக்குச் சாயங்காலம் ஷாப்பிங் போய் விஜய்க்குக் கிபிட் வாங்குவோமா...” ஜெனி ஆர்வமாகக் கேட்க... ஜெனிக்கு விஜயை பிடித்திருப்பதால் தானே பரிசு வாங்க நினைக்கிறாள் என்று புரிந்துகொண்ட லீனா சம்மதமாகத் தலையசைத்தார்.

ஜெனிக்கு ஒரே சந்தோஷம். அவள் துள்ளலுடன் மெத்தையில் இருந்த பொருட்களைப் பத்திரமாக எடுத்துவைத்தாள்.

மாலை ஸ்டீபன்னே அவர்களை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் சென்றார். ஸ்டீபன் பார்க்கும் உடைகளை எல்லாம் “நல்லா இருக்கு இல்ல… எடுத்திடுவோமா..” என்றால்.... ஜெனி பதில் சொல்லாமல் வேறு எங்கோ பார்ப்பாள். லீனாவிற்குக் கணவனையும் மகளையும் பார்க்க சிரிப்பாக இருந்தது. அவர் புன்னகையை அடக்கியபடி நின்றிருந்தார்.

ஜெனி பதில் சொல்லவில்லை என்றதும், ஸ்டீபன் லீனாவை பரிதாபமாகப் பார்க்க “விடுங்க அவளே எடுக்கட்டும்.” லீனா கணவரை சமாதானம் செய்ய....

“சரி நீங்க எடுங்க...நான் பக்கத்து கடைகளைப் பார்த்திட்டு வரேன்.” ஸ்டீபன் அங்கிருந்து செல்ல... ஜெனி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ஜெனிக்கே என்ன எடுப்பது என்று தெரியவில்லை?...விஜய்க்கு எந்த நிறம் பிடிக்கும்? அவனின் உடையின் அளவு...எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை... ஜெனி முழிப்பதை பார்த்த லீனா “விஜய்கிட்டயே போன் பண்ணிக் கேள்..” என்றதற்கு...



“அவங்களுக்குச் சர்ப்ரைஸா இருக்கட்டும் மா...” என்றவள் செல்வராணியைச் செல்லில் அழைத்து விவரம் கேட்டாள்.

மருமகள் மகனுக்கு உடைகள் எடுக்கிறாள் என்றதும் மகிழ்ந்த செல்வராணி அவள் கேட்ட விவரங்களைச் சொன்னார்.

ஜெனி விஜய்க்கு உடைகள் எடுத்ததும் அடுத்து அவனுக்கு ஒரு கைகடிகாரம் வாங்கலாம் என்றதற்கு, இல்ல... தங்கத்தில ப்ரேஸ்லெட் பார்ப்போம் என்றார் ஸ்டீபன்.

ஜெனிக்கும் அவர் சொன்ன யோசனை பிடித்ததால்... மூவரும் அதே மாலில் இருந்த தங்கநகைகள் விற்கும் கடைக்குச் சென்றனர். ஜெனி அலசி ஆராய்ந்து கொண்டு இருக்க... ஸ்டீபன்னும் லீனாவும் ஜெனிக்கு நகைகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இந்த நெக்லஸ் எப்படி இருக்கு கா?...” சிறிது நேரம் சென்றும் பதில் வராததால்.... தன் கழுத்தில் இருந்த நகையைக் கழட்டிவிட்டு திரும்பி பார்த்த ரூபிணி, ரோஸியின் கவனம் இங்கு இல்லை என்பதை உணர்ந்தவள்.. அவள் பார்வை சென்ற பக்கம் பார்க்க... அங்கே ஜெனி நின்று ப்ரேஸ்லெட் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜெனியை பார்த்த ரூபிணிக்கு அவளின் அழகை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை...

“யாரு கா அவங்க? உங்களுக்குத் தெரிஞ்சவங்களா.....” ரூபிணியின் ஆர்வமான கேள்வியில் ஜெனியிடம் இருந்து பார்வையைத் திருப்பிய ரோஸி இல்லை என்று தலையசைத்தவள் “போகலாமா ரொம்ப நேரம் ஆச்சு ...” என்றதும், ரூபிணியும் அவளோடு வெளியே சென்றாள். இருவரும் அந்த மாலுக்கு விண்டோ ஷாப்பிங் செய்ய வந்திருந்தனர்.

அப்போது ஸ்டீபன் ஜெனி என்று அழைத்ததும், தான் தேர்ந்தெடுத்த ப்ரேஸ்லெட்டை எடுத்துக்கொண்டு ஜெனி அங்கிருந்து செல்ல... ரோஸி ஒருமுறை அவளைத் திரும்பி பார்த்தாள்.

நகைகடையில் இருந்து வெளியில் வந்ததும் “எதாவது சாப்பிட்டிட்டு போவோம்.” ரூபிணி அங்கிருந்த உணவகத்திற்குள் செல்ல... ரோஸியும் அவளோடு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

“அந்தப் பொண்ணு ரொம்ப அழகு இல்ல...” ரூபிணி ஜெனியைத்தான் சொல்கிறாள் என்று புரிந்துகொண்ட ரோஸி “வேற எதாவது பேசு...” என்றாள் வெறுப்பாக...

“ஏன் ரோஸி அப்படிச் சொல்றீங்க? உங்களுக்கு அந்தப் பெண்ணைத் தெரியும் தானே....” ரூபிணி விடாமல் கேட்க... ரோசிக்கும் இவளிடம் சொல்வதால் ஒன்றுமில்லை என்று தோன்ற... அவள் ராஜேஷ் ஜெனி இருவரின் காதலையும் பிரிவையும் பற்றிச் சொன்னாள்.

ரூபிணிக்கு ராஜேஷ் இந்தப் பெண்ணையா விரும்பினான். எவ்வளவு அழகு? இன்னும் இவளையே நினைச்சிட்டு இருக்கானோ என்று எண்ணிய போது... ஜெனியின் மீது சிறிது பொறாமையும் ஏற்பட்டது.
ரோஸி வீட்டிற்கு வந்ததும் ரூபிணியிடம் ஒரு செய்தித்தாளை கொண்டு வந்து கொடுக்க... அதில் விஜயும் ஜெனியும் ஜோடியாக இருந்தனர். ரூபிணிக்கு அதைப் பார்த்ததும் ராஜேஷ் பாவம் என்று தோன்றியது.

விஜய் விளையாட்டாக அவனும் ஜெனியும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜெப்ரியை வெறுப்பேற்றும் எண்ணத்தில் அவனுக்கு அனுப்பி வைக்க... அதை அவன் ப்ரித்விக்கு அனுப்பிவிட்டான்.

அவர்கள் அண்ணன் தம்பி மூவருக்கும் இடையே கேலி கிண்டல் என்பது சகஜமான ஒன்று.... விஜயின் மடியில் ஜெனி இருந்த புகைப்படத்தை அவர்கள் விளையாட்டாக எடுத்துக்கொண்டனர். ஆனால் அதைப் பார்த்த புனிதா டென்ஷன் ஆகிவிட்டாள்.

அவளுக்கு இதைத் தன் மாமனாரோ, மாமியாரோ பார்த்தால்... தன் தங்கையைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயம். ஆனால் விஜய் அந்தப் புகைப்படத்தைத் தன் பெற்றோரிடம் தான் முதலில் காட்டினான்.

அதோடு லின்சியை விட்டு அவர்கள் ஜெனியை விஜய்க்கு தேர்ந்தெடுத்து இருந்தனர்... இந்த நிலையில் ஜெனி இப்படி நடந்து கொண்டது புனிதாவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை....அவள் அந்தக் கோபத்தை ஜெனியிடம் காட்டினாள்.

தன் தந்தை வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு அழைத்த புனிதா... சிறிது நேரம் லீனாவிடம் பேசிவிட்டு ஜெனியிடம் போன்னை கொடுக்கச் சொன்னாள். தன் அக்காவிடம் ஆர்வமாகப் பேச போன்னை வாங்கிய ஜெனிக்கு புனிதாவின் பேச்சு... அவள் மனதில் விஜயின் மீதிருந்த காதலை உள்ளேயே புதைக்கும்படி செய்தது.



“ஜெனி உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா... கல்யாணத்துக்கு முன்னாடியே விஜயோட இப்படிப் போட்டோ எடுத்திருக்க... உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையா... இப்படியா மடியில உட்காருவ....” புனிதா எடுத்ததும் இப்படிப் பேச... ஜெனியின் முகம் மாறியது. அவளாகவா சென்று விஜயின் மடியில் உட்கார்ந்தாள். இதைப் புனிதாவிடம் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.

“இந்தப் போட்டோவை வேற யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க? ப்ரின்சி உன்னைப் பத்தி என்ன நினைப்பா? அவள் தங்கையை விட்டு உன்னை விஜய்க்கு பேசியிருக்காங்க.”



தன் தங்கையை பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்று நினைத்தாள். ஆனால் பிரின்சிக்கு விஜய்யை பற்றி நன்றாகவே தெரியும். அவன் நினைத்ததை முடிப்பவன். அவனை யாரும் கட்டுபடுத்த முடியாது என்பதும் அவளுக்குத் தெரியும். சிறு வயதிலிருந்து சேர்ந்து வளந்தவர்கள் தானே....

இது தெரியாத புனிதா “இனியாவது கவனமா இரு... எதாவது அசடு மாதிரி நடந்துக்காத... ஏற்கனவே உன்னால நம்ம வீட்ல நடந்த பிரச்சனை போதாதா...” பேச்சு வாக்கில் ஜெனியின் கடந்தகாலத்தைப் பற்றி அவள் நினைவுபடுத்த... ஜெனியின் முகம் சுண்ணாம்பாக வெளுத்தது.

ஜெனி போன்னை லீனாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள். ஜெனி இப்போதுதான் விஜயை தன்னுடையவன் என்று உணர ஆரம்பித்து இருந்தாள். புனிதாவின் பேச்சு எல்லாவற்றையும் மாற்றியது. எனக்கு விஜயோட பேசி பழகத் தகுதி இல்லையா... இதைத் தானே புனிதா சொல்கிறாள் என்று நினைத்த ஜெனி தனக்குள்ளே மீண்டும் இறுக ஆரம்பித்தாள்.

புனிதாவிடம் பேசிவிட்டு வந்த லீனா “இந்த வாரம் விஜய் வீட்டுக்கு போவோமா...நீ வாங்கின கிபிட் எல்லாம் கொடுத்திட்டு வரலாம்.” என்றதற்கு,

“திங்கள் எனக்குப் பரீட்சை இருக்கு. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.” மறுத்துவிட்டு அவள் அறைக்குச் சென்ற ஜெனி, சிறுது நேரம் மனவிட்டு அழுதாள்.

ரூபிணி ராஜேஷின் வீட்டினரிடம் மிகவும் நெருங்கி விட்டாள். ஊரில் இருந்து திரும்பி வந்த பெற்றோரை... எப்போதும் போல் அவள் கண்டுகொள்ளவே இல்லை.

ராஜேஷை இன்னும் ஊன்றி கவனிக்க ஆரம்பித்தாள். இவ்வளவு அழகான பெண்ணை விரும்பிவிட்டு.... அவளை வேண்டாம் என்று விட்டு விலகவும் பெரிய மனது இருக்க வேண்டும் என்று நினைத்தவள், அவன் மனதிலும் வலி இருக்கத்தானே செய்யும். அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான் என்றும் நினைத்தாள்.

நாளடைவில் ரூபிணிக்கு ராஜேஷின் மீது காதல் ஏற்பட்டது. அதை அவளால் அவனிடம் சொல்ல முடியவில்லை... ஏனென்றால் அவனுக்கு அவளின் குடும்பத்தைப் பற்றியும் தெரியும்... அவளின் கடந்த காலத்தைப் பற்றியும் தெரியும். எந்த முகத்தை வைத்துக்கொண்டு காதல் சொல்வது. அதோடு அவனுக்கு அவளிடம் எந்த அதிகபடியான விருப்பமும் இல்லை... அவன் சாதாரணமாகத்தான் பழகுகிறான் என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தன் விருப்பத்தைத் தன்னோடு வைத்துக்கொண்டாள்.

ரூபிணியின் விடுமுறை முடிந்து அவள் சிங்கப்பூர் கிளம்பும் நாளும் நெருங்கிக்கொண்டு இருந்தது. ஊருக்குச் செல்வதற்கு முன் தன் பள்ளி கால நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்றாள். அது விஜயின் ஹோட்டல் என்பது அவளுக்குத் தெரியாது.

தன் அறையிலிருந்து வெளியே வந்த விஜயை பார்த்த ரூபிணிக்கு ரோஸி காண்பித்த செய்திதாளில் விஜயை ஜெனியுடன் பார்த்தது நினைவு இருந்தது. அதனால் அவள் அவனை ஆர்வமாகப் பார்க்க... முதலில் அவளைக் கவனிக்காத விஜய்... அவளைப் பார்த்ததும், அதுவும் ஆண் நண்பர்களோடு பார்த்ததும், இதெல்லாம் திருந்தவே திருந்தது என்று நினைத்தவன், அவளைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல...

விஜய் அவளைப் பார்த்து முறைத்து முகம் திருப்பிச் சென்றதும், ரூபிணிக்குக் கோபம் வந்தது. ஏன் இவனுக்கு என் முகத்தை எல்லாம் பார்க்க சகிக்கலையா?... ஓ...அழகான பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு திமிரு என்று மனதிற்குள் பொருமினாள். அவனால்தான் இன்று நல்ல நிலையில் தான் இருக்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை.

மறுநாள் ரூபிணி ராஜேஷிடம் சென்று ஜெனி பற்றிக் கேட்க... இன்னொருத்தருக்கு நிச்சயம் ஆன பெண்ணைப் பற்றிப் பேசக்கூடாது என்ற எண்ணத்தில் அவன் அந்தப் பேச்சை தட்டிக்கழிக்க....
அவன் ஜெனியை இன்னும் மறக்கவில்லை... அவளை நினைத்து இன்னும் கஷ்ட்டபடுவதாக நினைத்த ரூபிணி, அதோடு விஜய் மீது இருந்த கோபத்தாலும் .... ராஜேஷுக்கு நல்லது செய்வதாக நினைத்து விஜய்க்கு ஒரு மொட்டை கடிதாசி எழுதினாள்.

திரு. விஜய் அவர்களுக்கு. உங்களுக்குப் பார்த்திருக்கும் பெண் உங்களை விரும்பி மணக்கிறாள் என்று எண்ணமா... அவள் வேறுவழியில்லாமல் உங்களை மணக்கிறாள்.
இதை மட்டும் தபாலில் எழுதி... விஜயின் ஹோட்டல் முகவரிக்கு ரூபிணி அனுப்பிவிட்டாள். அவளுக்கு ராஜேஷை பற்றி எழுத துணிவு இல்லை... அதோடு ராஜேஷ் மாட்டிக்கொள்வானோ என்ற பயத்தில் மொட்டையாக ஒரு கடிதம் எழுதினாள்.

இந்தத் திருமணம் நின்றுவிட்டால்... ராஜேஷ் ஜெனியோடு சேர்ந்து விடுவான். தனக்குத்தான் விரும்பியவனைச் சேரும் அதிர்ஷ்ட்டம் இல்லை... ராஜேஷாவது விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்யட்டும் என்று இவளாகவே கற்பனை செய்துக்கொண்டாள்.

இவ்வளவு அழகான ராஜேஷை விட்டு ஜெனிக்கு கருப்பாக இருக்கும் விஜய்யை பிடிக்காது என்று தன் செயலுக்கு ரூபிணி அவளாகவே ஒரு காரணம் கண்டுபிடித்துக்கொண்டாள்.

கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டு ராஜேஷின் வீட்டிற்கு வந்தவள், ரோஸியிடம் மட்டும் அவள் செய்ததைச் சொல்ல... ரோசிக்கு பயங்கர அதிர்ச்சி. தான் தேவையில்லாமல் இவளிடம் உளறப்போய்த் தானே இப்படியாகிவிட்டது என்று கவலைப்பட்டாள்.

ரோஸிக்குப் பதட்டத்தில் யோசிக்கவே வரவில்லை... அப்போது வீட்டிற்கு வந்த ராஜேஷ் தன் சகோதிரியின் முகத்தைப் பார்த்தே எதோ சரியில்லை என்று உணர்ந்தவன், காரணம் கேட்க...

ரோஸியும் ரூபிணி விஜய்க்கு மொட்டை கடிதாசி போட்டதைச் சொல்லிவிட... அவள் சொன்னதைக் கேட்ட ராஜேஷ் கோபத்தைக் கட்டுபடுத்த முடியாமல் ரூபிணிக்கு விட்ட அறையில் ... அவள் தள்ளி சென்று தரையில் விழுந்தாள்.



படிக்கும் வயதில் ஜெனியின் மனதை காதல் என்ற பெயரில் கஷ்ட்டப்படுத்தி... பிறகு இப்போது அவள் திருமணத்திலும் தன்னால் பிரச்சனை வந்திடுமோ என்ற கவலையில்.... ராஜேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டான்.

ரோஸிதான் முதலில் சுதாரித்தாள். ராஜேஷின் கவலையான முகத்தைப் பார்த்த ரோஸி... “லெட்டர்ல என்ன எழுதின? சொல்லு....” என்று ரூபிணியை அதட்ட....

அவள் என்ன எழுதினாள் என்று சொன்னதும், ஹப்பா.... பெரிசா ஒன்னும் எழுதலை... என்று நினைத்தவள் “ஹே உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை....” என்றாள்.

“நீங்க ரெண்டு பேரும் இதை என் பெரிசு பண்றீங்க. ஜெனிக்கும் இது பிடிக்காத கல்யாணம் தான....” ரூபிணி சொல்ல... ராஜேஷ் அவளை மீண்டும் அடிக்கும் எண்ணத்தில் எழ... அவனைத் தடுத்த ரோஸி “உனக்கு ரொம்பத் தெரியும் பாரு... அன்னைக்கு நகை கடையில ஜெனி நான் பார்க்கும் போது… VJ அப்படின்னு அந்தப் பிரேஸ்லெட்ல போட்டு தரச் சொல்லி கேட்டுட்டு இருந்தா.... பிடிக்காம கல்யாணம் பண்றவதான் அப்படிச் செய்வாளா...” என்றதும் ரூபிணி குழம்பிப்போய்ப் பார்க்க....

“ஹே அன்னைக்கு உன்னைக் காப்பாத்தினது நான் இல்லை.... அந்த விஜய்தான்... அவன் மட்டும் அன்னைக்கு ரிஸ்க் எடுக்கலைன்னா..... நீ இன்னைக்கு இப்படி நின்னுட்டு இருக்க மாட்ட.... ஜெனி லைப்ல எதுவும் பிரச்சனை வரக் கூடாதுன்னுதான், நான் அதை மறைச்சேன்... ஆனா இப்படி ஆகும்ன்னு நினைக்கலை.....இப்ப நான் என்ன செய்வேன்?” ராஜேஷ் புலம்ப...

“கூல் ராஜேஷ்.... இந்த மாதிரி ஒரு மொட்டை கடிதாசிக்கு எல்லாம் விஜய் மதிப்பு தரமாட்டான். நீ எதாவது செய்யப்போனாதான் பிரச்சனை ஆகும். கண்டுக்காம விடு...” என்ற ரோஸி “அம்மா தாயே ! திரும்பவும் மன்னிப்பு கேட்க போறேன்னு எதாவது புதுப் பிரச்சனையைக் கொண்டு வராத.... இப்படியே விட்டுடு.....” என்றாள்.

நல்லவேளை ரோஸி எச்சரித்தாள். ஏனென்றால் அப்படியொரு எண்ணத்தில்தான் ரூபிணி இருந்தாள். அன்று தன்னைக் காப்பாற்றியது விஜயா.... அதனால்தான் தன்னைப் பார்த்தும் கோப்பட்டானா... அன்றுதான் இருந்த நிலையில்... அவன் கோபம் நியாயமானது தானே.... யார் என்று தெரியாத போதும்.... தன்னை அவன் காப்பாற்றி இருக்கானே.... அவனிடம் சென்று கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

ரூபிணியின் குழப்பமான முகத்தைப் பார்த்த ராஜேஷ், இவளுக்கு நன்றாக உறைக்கும்படி சொல்லவேண்டும். இல்லையென்றால் திரும்ப எதாவது செய்வாள் என்று நினைத்தவன் “நானும் ஜெனியும் லவ் பண்ணோம் உண்மை. ஆனா... எங்க காதல் வீட்டுக்குப் பிடிக்கலைன்னதும் விலகிட்டோம். ஜெனிக்கு நல்ல அம்மா அப்பா இருக்காங்க. உன்னோட பெற்றோர் போல இல்லை... அவங்களுக்காக அவள் என்னைப் பிரிஞ்சதுக்கு அவளைக் குற்றமே சொல்ல முடியாது.”

“இனி ஜெனி வாழ்க்கை வேற என்னோட வாழ்க்கை வேற.... யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவள் சந்தோஷமா இருக்கணும். எனக்கு அதுதான் வேண்டும். ப்ளீஸ்... நீ விஜயும் ஜெனியையும் மறந்திடு....” ராஜேஷ் வேண்டுதலாக ரூபிணியைப் பார்க்க....

ராஜேஷ் அவள் பெற்றோரை பற்றிச் சொன்னது உண்மை என்றாலும், ரூபிணிக்கு அவன் சொல்லியமுறை மனதில் வலியை ஏற்படுத்தியது. “சாரி... இனி யார் வாழ்க்கையிலும் நான் குறுக்கிட மாட்டேன்.” கண்கலங்க சொன்னவள், வேகமாக அந்த வீட்டிலிருந்து வெளியே சென்றாள்.

Super sis
 
Top