Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

My views

Advertisement

Rubyjosy

Active member
Member
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி ஷோபா

பெற்றோர் கவனிப்பு இல்லாது வளர்த்தொரும் இல்லாது, கவனிப்பார் அற்று, பேச கூட ஆள் இல்லாத, தந்தை இருந்தும் சிறிய தாயின் வரவால் ஒதுக்கப்பட்ட பதின் வயது பெண் வளர்த்த தாத்தா பாட்டியை இழந்து, சித்தியின் வெறுப்பில், தம்பி தங்கையின் ஒதுக்கத்தில் பாசமும் அன்பும் கிடைக்கும் இடத்தில் அதை உண்மை என்று நம்பி படி தாண்டினால் ஏற்படும் அவலங்கள் எப்படி எல்லாம் அவள் வாழ்வை சிதைக்கும் என இந்த கதை தெளிவா சொல்லுது...

கோமல் அழகு பதுமை, தாயில்லா தளிர், தாத்தா பாட்டியின் இளவரசி, அழகான இவளின் நாட்கள் தாத்தா பாட்டியின் காலத்தோடு முடிவுக்கு வந்து சோதனை ஆரம்பிக்குது...

இவளை பார்த்துக்கவே கல்யாணம் செய்த சித்தி இவளை ஒதுக்க அன்பு கிடைத்த இடத்தில் அடைக்கலம் ஆகும் மொட்டு, அன்பு என்றவன் நஞ்சை கலந்து, மொட்டை கசக்கி மலரும் முன் அவளை காகித பூப்போல மாற்றி விடும் பண வெறி பிடித்த வேடனால் பலரால் வேட்டையாடப்பட்டு மொத்தமாக சூறையாடும் நேரம் காக்க படுகிறாள்...

மூர்த்தி இளமையான அழகான கணக்கு வாத்தியார், அவளின் மன புனிதத்தை போல அவளுக்கு துளசி என பெயரிட்டு அவனின் துளசியை அவ்வளவு துன்பத்தில் இருந்தும் காத்து வர்றான்... அவளுக்கு படிப்பை கொடுத்து, வாழ்வின் நிதர்சனம் புரிய வைத்து, கழுகுகளிடம் இருந்து காக்கும் தாய் போல அரவணைத்து, காதலில் குளிப்பாட்டி என அவள் பயன்கள் வேதனைகள் கலக்கங்கள் காயங்கள் எல்லாம் அவன் அன்பு கொண்டு கலைந்து அவளை காக்கும் அவனின் பிடியில் இருந்து அவளை சொத்துக்காக மீண்டும் அவளின் சித்தி அவளை சிறைபிடிக்க முயல அவளை அங்கும் காக்கும் அவன் குடும்பத்தில் அவளை ஒருத்தியாக மாற்றி கைபிடிக்கிரான்..

அதன் பின்னான அவர்கள் வாழ்வு, அவளின் கடந்த கால நிகழ்வை அறிந்த அந்த குடுமந்தில் தனித்து நிற்கும் ஒருவனால் ஆபத்து வர அவனே காக்கும் கேடயம் ஆகிறான்.. அவர்களை மூர்த்தி சார் எப்படி களையெடுத்தர் என்பது மீதி கதை.. அதுவும் எப்போது வேண்டுமானாலும் உயிர் போகும் என்ற நிலையில் தன் கருவை சுமக்கும் துளசியை கூட காணாது வேட்டையாட போகும் அவன் திரும்பி வரும்பொழுது அவனுக்காக காத்து இருந்தது அவளா இல்லை அதுவா???

மூர்த்தி அண்ட் துளசி காதல் ரொம்ப அழகு... இவங்களை ஒருவருக்கு ஒருவர் எப்படி தெரியும் என்பது அழகான நிகழ்வுகள்... அவள் அவள் நிலை கண்டு மறுக்க அவன் அவளை அதை விட்டு வெளியேறி கைபிடித்து காதலை கொட்ட துடிக்க இடையில் இருவருக்குமான அந்த பந்தம் ரொம்ப அழகா இருக்கு... பல நேரம் தாயாக சில நேரம் காதலனாக நம்ம மனசுளையும் இடம் பிடிக்கிறார் மூர்த்தி சார்...

அவளின் தோழமைகள் எல்லாம் சூப்பர்..

பானு இவர் மூர்த்தியின் தமக்கையான தாய்... துளசியின் உண்மை தெரிந்தும் ஏற்று கொள்பவர்.. மகன் தீயது செய்கிறான் என அறிந்து எதிர்ப்பவர்.. மகளின் ஆசையையும் மீறி துளசியை தம்பியின் ஆசையை நிறைவேற்றும் பாசம் மிகு அக்கா... தவறான புரிதல்கள் தவறி போன மணி...

அண்ணியை தோழியாக அவளோடு அவளை காக்கும் அரணாக, சேட்டைகள் செய்தும் தோழனாக செல்வம், இவனின் இணையாக நந்து.. குட்டியா எல்லாரையும் வசீகரிக்கும் தங்கம் மூர்த்தி சாரின் தங்கம்... அண்ணன்கள் அண்ணிகள் பிள்ளைகள் என அழகான கூட்டு குடும்பம்...

சோகம் இருந்தாலும் அதையும் மீறி துளசியின் மகிழ்வில் நம்மக்கும் புன்னகை வரும்.. அவளின் சேட்டைகளில் கண்கட்டும்...

Congratulations mam
 
நல்ல விமர்சனம்.

Thank you dear for ur wonder review ??????????
CLASS REVIEW, SUPER SUPPER

நன்றி அனைவருக்கும்... ரொம்ப தாமதமான பதில்... Sorry all... நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன்
 
Top