Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 26

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 26

அன்பரசி வாயடைத்துப் போக காரணம், வீட்டில் ஹால் முழுக்க வண்ண ஜாலங்களால் நிரம்பியிருக்க, அதன் நடுவே ஒரு பெரிய பெட்டி கிப்ட் பேக் பண்ணியிருந்தது. வண்ண அலங்காரங்களின் நடுநடுவே ‘சாரி ராணிமா’, ‘லவ் யூ மை க்யூயின்’, ‘ஹேப்பி பேர்த்டே மை லவ்’, ‘ராணிமா மிஸ் யூ’ என பல நிறங்களில் வகை வகையாக எழுதி, சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தது. இதையெல்லாம் பார்த்து, ஏதோ கனவில் நடப்பவள் போல அவள் உள்ளே மேலும் அடியெடுத்து வைத்தாள்.

திடீரென்று பின்னால் இருந்து சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள். ஜீவா தான் மர்மமான ஒரு புன்னகையுடன், உள்ளே வந்து கதவை பூட்டினான். கண்கள் அன்பரசியை ஊடுறுவி பார்த்தது, வாயோ வாழ்த்துகளை உச்சரித்தது, மென்மையாக.

“என்னோட ராணிமாக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்….” ஜீவாவின் குரலில் தேன்னோழுக, அவனின் ராணிமாவின் மனமோ பாகாக உருகியது. நெஞ்சில் எதுவொ ஒன்று நிறைவதை போன்ற உணர்வுடன், ஜீவா தன் அருகில் வருவதை கண்கொட்டாமல் பார்த்தாள் அன்பு.

பரிசு பொருள் அடங்கிய பெட்டியை எடுத்து அன்பரசியிடம் நீட்டியபடி, “என்னோட சின்ன பரிசு, உனக்கு!” என அவன் வினவவும், பரிசை தூக்கி சோபாவில் போட்டுவிட்டு ஜீவாவின் கைகளில் தஞ்சம் புகுந்தாள், சந்தோஷமாக. ஜீவாவும் நிம்மதியாக, மிகவும் நிம்மதியாக உணர்ந்தான்.

தன்னிடம் இருந்து தொலைந்து போன உயிர், மீண்டும் தன்னிடமே தஞ்சம் புகுந்ததில் பேரானந்தம் அடைந்தான். “இனிமேலும் உங்களையும், என்னையும் ஏமாத்த நான் தயராயில்லை ஜீவா. முதல்ல எப்படியோ, இப்போ நீங்க இல்லாம என்னால வாழ முடியும்னு தோனல!!! என்னை உங்க கூடவே கூட்டிட்டு போயிடுங்க… நான் இனிமே தனியா இருக்க மாட்டேன்!!”

“உன்னை இதுக்கப்புறமும் தனியா விடுவேன்னு நினைச்சியா? நெவர்… உன்னோட திங்க்ஸ் எல்லாம் கூட பேக் பண்ணியாச்சு. நீ கிளம்பறது தான் பாக்கி…”

“எப்போ பேக் பண்ணீங்க? இந்த டெக்கரேஷன் எல்லாம் எப்போ நடந்துச்சு??”

“இப்போவாவது கேட்டியே…” என பழிப்பு காட்டிவிட்டு தொடர்ந்தான் ஜீவா, “இன்னிக்கு விடியகாத்தால எழுந்து வந்து செஞ்சேன்.”

தனக்காக எவ்வளவு செய்திருக்கிறான்?? அவன் ஒழுங்காக வாழ்த்து கூறவில்லை என நான் மருகிக் கொண்டிருந்தேனே! கோபமாக அவன் தோளில் அடிக்க ஆரம்பித்தவளை, கைகளை பற்றி தடுத்தபடி, “எதுக்குடி அடிக்கற??” என பதறினான்.

“நேத்து நைட்லந்து என்னை எப்படியெல்லாம் அலகழிச்சீங்க?? ஜஸ்ட் ஒரு ‘ஹேப்பி பேர்த்டே’ மட்டும் சொல்லிட்டு கேக்கை நல்ல மொக்குனீங்கள??”

“கேக் நல்ல இருந்துச்சுமா அதான்…” என கூறி மேலும் சில மொத்துகளை மகிழ்ச்சியுடனே வாங்கிக் கொண்டான் ஜீவா. சிறிது நேரத்திலேயே, அவளை சோபாவில் தன் மடியில் அமர்த்திக் கொண்டு, அவள் காது மடல்களை வருடியபடியே பேச ஆரம்பித்தான்.

“நமக்கு எல்லார் முன்னாடியும் விஷ் பண்றது எல்லாம் சரிவராது! நமக்கே நமக்குனு தனியா விஷ் பண்ற மாதிரி வருமா சொல்லு…”

“ஆமா டைலாக் எல்லாம் நல்லா பேசுங்க… சொல்லியா குடுக்கனும் உங்களுக்கு?”

“இப்போ என்னடி விதவிதமா விஷ் பண்றேன் பார்த்துக்கோ.” முதலில் தமிழில், பின் ஆங்கிலத்தில், அதன்பின் ஹிந்தியில், என அவன் வாழ்த்துக்களை கூற, அன்பரசி மொத்தமாக ஜீவாவிடமே அடைக்கலாம் ஆகினாள்.

ஒவ்வொரு வாழ்த்துக்கும் அவளிடம் நன்றி முத்தம் வாங்கவும் மறக்கவில்லை அந்த கள்வன். “என்ன விஷ் பண்ணது போதுமா?” என ஜீவா சிறிது நேரம் கழித்து நிமிர, அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்துக் கொண்ட அன்பரசியின் மனதில் பல கேள்விகள்.

“ஏன் திடீர்னு அன்னிக்கு கிளம்பி போயிட்டிங்க??” அமைதியாக ஆனால் அழுகை கூடிய குரலில் அன்பு வினவ, அவளின் கண்களில் தென்பட்ட வேதனையை பார்த்து ஜீவாவின் மனதும் வேதனைக் கொண்டது.

“நீ பெங்களூருக்கு போகனும்னு முடிவு பண்ணதும், எனக்கு என் மேலயே கோவமா வந்துச்சு. உன் கூடவே இருந்தும் நீ இப்படி ஃபீல் பண்றதை கவனிக்கலயேனு எனக்கு கஷ்டமா போச்சுடா. அதுமட்டுமில்ல, சேர்ந்து கொஞ்ச நாள் இருந்துட்டு, பிரிஞ்சு இருந்தா தான் உனக்கே உன்னோட மனசு புரியும்னு விட்டுட்டேன். அதான், உடனே கிளம்பிப் போனேன். பட், நான் நினைச்ச மாதிரியே வொர்க் கவுட் ஆயிடுச்சு தான?”

சட்டையின் காலரை தூக்கிவிட்டு கொண்டு, பெருமை பேசியவனை காதலாக பார்த்தாள் அன்பு. “ஒரு வகையில நீங்க சொல்றது கரக்ட் தான்… நீங்க போனதுக்கப்புறம் எனக்கு எதுவுமே பிடிக்கல. வெறுத்து போச்சு எல்லாமே!! திரும்பவும் தனியாகிட்ட மாதிரி ஃபீல் பண்ணேன். அப்போ தான் குழந்தைகளையும் மீறி, உங்களை எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

நிலுக்குட்டி திரும்ப என்கிட்ட வந்தப்போ, நீங்க என்னோட போட்டோவ வச்சு பார்த்துட்டு இருப்பீங்களாமே. சொன்னான் என்கிட்ட. அப்போ தான் முடிவு பண்ணேன். கல்யாணம் முடிஞ்சதும் உங்ககிட்ட பேசனும்னு.”

“பார்ரா… பையன் இதெல்லாம் நோட் பண்ணிருக்கானா? தெரியாம போச்சே! இனிமே அவங்க முன்னாடி கவனமா இருக்கனும்…”

“சரி பேசிட்டே இருந்தா டைம் ஆகிடும். வீடு ஏறகட்டனும். விடுங்க வேலையிருக்கு.”

“ஹே வேலை எல்லாம் அப்புறமா பார்க்கலாம். முதல்ல என்னோட கிப்ட திறந்து பாரு!”

அவன் கூறிய பிறகே கிப்டை அவசர அவசரமாக திறந்தாள் அன்பு. உள்ளே இருந்த மெரூன் வண்ண பட்டு புடவை அவளை பார்த்து சிரித்தது. சந்தோஷத்துடன் அதை தடவியபடி, ஆனந்த கண்ணீர் வடித்தவளை, இறுக அணைத்து, “லூசு, இப்போ எதுக்கு அழற? வேலை எல்லாம் முடிச்சிட்டு ஒன் ஹவர்ல இந்த புடவையை கட்டிட்டு ரெடியா இருக்கனும். சொல்லிட்டேன்!” என்று கட்டளையிட்டான்.

“இப்போ எதுக்கு இந்த புடவையை கட்டனும்? நாளைக்கு வேணும்னா கட்டிக்கறேனே?”

“ராணிமா, ரெண்டு நாளைக்கு எந்த கேள்வியும் கேக்காம சொல்றத மட்டும் செய்! நிறைய வேலை, நிறைய பேர் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.”

ஜீவா எதோ உள் நோக்கத்தோடு இதை சொல்வதை போன்று தோன்ற, அவனை ஆராயிச்சிக் கண்ணுடன் பார்த்தாள். “இப்படியெல்லாம் பார்க்க கூடாது ராணிமா… உனக்கு நிறைய ஸர்ப்ரைஸ் இருக்கு, ஓகே வா?”

அவன் மேல் முழு நம்பிக்கை வந்ததால், சிரித்தபடியே வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு, அந்த மெரூன் கலர் வண்ண பட்டில் ரெடியாகினாள். அவள் வெளியே வரவும், மயங்கி விழுவதை போன்று ஜீவா பாவனை செய்ய, அவன் தோளில் அடித்து குறைப்பட்டாள்.

“இந்த ரியாக்ஷன் எல்லாம் தேவையில்லை. நேத்து, உங்க பொண்ண மட்டும் அப்படி கொஞ்சுனீங்கள! என்னை ‘நல்லாயிருக்கு’னு ஒரு வார்த்தை சொன்னீங்களா?? இதுல செல்பி வேற!!! என்னை மட்டும் விட்டுட்டு எடுத்திருந்திங்க… ஃபோனை தூக்கி போட்டு உடைச்சிருப்பேன்.”

அதிர்ச்சியாக அவளை பார்த்து, “அடிப்பாவி! ஒரு செல்பி உன்னை விட்டுட்டு எடுத்தோம்னா, என்னோட ஐ-போனை போட்டு உடைப்பியா??” என்றான்.

“ஆமா… இனிமே ஞாபகம் வெச்சுக்கோங்க.” சிரித்துக் கூறிய அன்பரசியை பார்க்கும் போது, இதயத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி ஊற்றாக பெறுக்கெடுத்தது ஜீவாவுக்கு. இறுதியில் ஒரு வழியாக அவளின் மூட்டை முடிச்சுடன் கிளம்பி, ஜீவாவின் வீட்டில் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு, ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து சேர்ந்தனர் ஜோடியாக.

வினோத் மற்றும் மலர்விழியின் திருமணத்தை பதிவு செய்யவே அனைவரும் அங்கே கூடினர். மற்றவர்கள் எல்லாம் மலரின் வீட்டிலிருந்து நேராக அங்கே வந்திருந்தனர். மதியம் இரண்டு மணியாகி இருக்க, ஜீவாவின் காரில் இருந்து இறங்கிய அன்பரசியை பார்த்ததும் அனைவருக்கும் பேச்சே வரவில்லை.

அன்பரசியின் பட்டு புடவையே அவர்களுக்கு ஆயிரம் கதைகள் சொல்லியது.

லட்சுமியும் ராகவனும் அன்புவின் தலை மேல் கை வைத்து ஆசிர்வதித்தால், மலர்விழியோ அன்பரசியை கட்டிக் கொண்டு தன் சந்தோஷத்தை பகிர்ந்தாள். நிக்கித்தாவும் நிலேஷும் துள்ளி குதித்ததிலேயே அவர்கள் நிலை புரிந்தது. ராகவன் அவர்களிடம், “இனிமே நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கப் போறோம்.” என கூறியிருந்தார்.

இதையெல்லாம் கண்ணில் ஆனந்த கண்ணீருடன் பார்த்து ஓரமாக நின்றுக் கொண்டிருந்தான் வினோத். அவனுக்கு பேச்சே வரவில்லை. எல்லாரையும் தாண்டி அவனிடம் வந்தனர் ஜீவாவும் அன்பரசியும். அவசரமாக கண்ணீரை அவன் துடைக்க முயல, அன்பரசி ஆர்பரித்தாள்.

“அடப்பாவி!! அழறியா?? மலர் நல்லா பார்த்துக்கோ… இந்த மாதிரி ஆனந்த கண்ணீர் மட்டும் தான் இவன் கண்ணுலந்து நாங்க பார்க்கனும். சரியா? அழாதடா குட்டி… நிக்கு குட்டி உனக்கு சாக்கி வாங்கி தருவா… ஓகே வா நிக்கி? மாமாக்கு சாக்கி குடுக்கலாமா?”

நிக்கித்தா ‘ஓகேமா’ என கூற, அன்பரசியின் முதுகில் ஒரு அடியை அவளுக்கு பரிசாக கொடுத்துவிட்டு, ஜீவாவை ஆறத் தழுவினான் வினோத். அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்… ஜீவாவும் அதை உணர்ந்தே இருந்ததால், அவனை தேற்றினான்.

சிறிது நேரத்தில், அவர்களை உள்ளே அழைக்க முறையாக வினோத்தின் திருமணத்தை பதிவு செய்தனர். சாட்சி கையெழுத்து, வினோத்துக்கு அன்பரசியும் லட்சுமியும் போட, மலர்விழிக்கு அவளின் அப்பாவும் ஜீவாவும் போட்டனர்.

எல்லாம் முடிந்து கிளம்பலாம் என்ற நிலையில், ஜீவா பொதுவாக, “ஒரு நிமிஷம்… எல்லாரும் வெயிட் பண்ணுங்க.” என கூறி, வெளியே சென்றான். சிறிது நேரத்திலேயே, திரும்பி வந்தவன் கைகளில் இரண்டு மாலைகள் இருக்க, அனைவரின் ஆச்சரியமாக பார்வைக்கு பதிலளித்தான்.

“நிலு, நிக்கி! நீங்க ரெண்டு பேரும் அப்பா அம்மா கல்யாணத்தை பார்க்கவே இல்லைனு சொன்னீங்கல?? அப்பாவும், அம்மாவும் இப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.”

“எல்லாருக்கும் ஒரு சின்ன ஸர்ப்ரைஸ்!! இது நானும் வினோத்தும் போட்ட பிளான்.” பேச்சு பேச்சாக இருக்க, கண்கள் அன்பரசியிடமே நிலைத்தது.

அன்பரசிக்கு மூச்சே அடைத்தது. எல்லோர் முகத்திலும் நிம்மதியும் சந்தோஷமும் தாண்டவமாட, ரிஜிஸ்டாரிடம் எதையோ பேசியபடி திரும்பினான் ஜீவா. தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கண்ணடித்து, ஒரு மாலையை அவளிடம் கொடுத்தான்.

வினோத் போட்டோ எடுக்க, ஜீவாவும் அன்பரசியும் மாலை மாற்றிக் கொண்டனர். நிக்கித்தாவையும் நிலேஷையும் கைகளில் பிடிக்க முடியவில்லை. சாட்சி கையெழுத்தாக, வினோத்தும் மலரும் தம்பதியாக அன்புக்கு போட, ஜீவாவிற்கு அவன் பெற்றோர்கள் கையொப்பமிட்டனர்.

அன்பரசி கண்களில் அருவி வழிந்தது வழிந்தபடியே இருந்தது. யார் என்ன கூறியும் நிற்கவில்லை!! காரில் வினோத்தின் வீட்டிற்கு செல்லும் போது ஜீவாவின் தோளிலேயே தஞ்சம் புகுந்தாள்.

வினோத்தை அவன் வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் வீடு வந்து சேர, இரவாகியது. வரும் வழிலேயே ஜீவா கூறியிருந்தான். “ராணிமா நாளைக்கு தான் உண்மையான ஸர்ப்ரைஸ் இருக்கு. வெயிட் ஆன் சி”

“இன்னிக்கு குடுத்ததே தாங்கல… நாளைக்கு வேறயா? ஆமா, ஒரு வேளை நான் திரும்பவும் உங்ககிட்ட வரேன்னு ஒத்துக்கலனா என்ன பண்ணிருப்பீங்க? சொல்லுங்க…”

“நான் நெகடிவா யோசிக்கவேயில்லை… நீ கண்டிப்பா என்கிட்ட வந்துருவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. வினோத் கூட பயந்தான்… பெருசா பிளான் பண்றோம், நடக்கலனா என்ன பண்றதுனு. நான் தான் அவனை சரிக்கட்டினேன்.”

மெச்சுதலும் காதலும் கலந்து ஒரு பார்வையுடன் அவனை பார்த்தாள். “இப்படியேல்லாம் பார்க்காத ராணிமா. நான் கார் ஒழுங்கா ஓட்ட மாட்டேன் அப்புறம்.”

சிரிப்பும் சந்தோஷமாக வீடு வந்தால், லட்சுமி ஆர்த்தி தட்டுடன் ரெடியாக இருந்தார். ஆர்த்தி கரைத்து, திருஷ்டி சுத்தியே அன்பரசியை மேலே அவர்களின் அறைக்கு போக விட்டார். பெரிதாக இந்த மூன்று ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்ல…

வீட்டிலும் சரி, அவனின் அறையிலும் சரி. நிலேஷுக்கு உடை மாற்றும் போது, நாளைய ஸர்ப்ரைஸ் பற்றி இவனுக்கு எதாவது தெரியுமோ?? நிலுக்குட்டியிடம் வார்த்தையாடினாள்.

“குட்டி, அப்பா அம்மாக்கிட்ட சொல்லாதனு எதாவது சொன்னாரா? அம்மாக்கு ஸர்ப்ரைஸ் பிளான் பண்ணிருக்கேன்னு சொன்னாரா?”

“ஹே அந்த ஸர்ப்ரைஸ் எனக்கு மட்டும் தான்டி தெரியும்! வேற யாருக்கும் தெரியாது…”

பின்னால இருந்து கேட்ட குரலில், நாக்கை கடித்துக் கொண்டாள் அன்பு. “சரி போங்க! நான் நாளைக்கே பார்த்துக்கறேன்.”

“சரி பார்த்துக்கோ” என்றான் அவனும். நிக்கி உடை மாற்றியதும் கட்டிலில் குதிக்க ஆரம்பிப்பதை பார்த்து, நிலேஷும் குதித்தான். “ஹே அம்மா வந்துட்டாங்க… ஜாலி ஜாலி!” என கூறியபடி குதிக்க, இத்தனை நாள் தங்களுக்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறார்கள் என நெஞ்சம் உருகியது அவர்கள் பெற்றோர்களுக்கு.

நால்வரும் ஒருவரை கட்டிக் கொண்டு படுத்ததில், ரொம்ப வருடம் கழித்து ஜீவாவுக்கும் அன்பரசிக்கும் இரவு நிம்மதியான உறக்கம் தழுவியது.

அடுத்த நாள், காலையே அனைவரையும் விரட்ட ஆரம்பித்தான் ஜீவா. பத்து மணி அளவில், மேற்கூறிய முகவரிக்கு வருமாரு வினோத்துக்கும் மேசேஜை தட்டிவிட்டான். ஒன்பது மணியளவில் வீட்டிலிருந்து அனைவரும் கிளம்ப, போகும் வழிலேயே வினோத்தின் காரையும் பார்த்தனர்.

இரு கார்களும் ஒன்றாக சேர்ந்து நின்ற இடம் யாரும் இதற்கு முன்பு வந்திராத இடம். ஜீவா மட்டுமே வந்திருக்கிறான்.

நிக்கித்தாவின் கையை பற்றியபடி, காரிலிருந்து இறங்கி எதிரே இருந்த கட்டிடத்தை பார்த்த அன்பரசி உடனடியாக ஜீவாவின் முகத்தை பார்த்தாள். ‘ஆம்’ எனும் வகையில் அவனிடமிருந்து வந்த செய்கையில் மேலும் திகைத்துப் போனாள்.

எல்லோரையும் அந்த காம்பவுன்டின் கேட்டை தான்டி உள்ளே அழைத்து வந்த ஜீவாவின் முகத்தில் பெருமிதமும், அன்பும் போட்டிப் போட்டன. அந்த கட்டிடத்தில் இருந்த பலகையில், “ராணிமா ட்ரஸ்ட்” என்று போட்டிருந்தது.

“ராணிமா இது உனக்காக… இனிமே நீ தான் இந்த டிரஸ்டுக்கு பொறுப்பு. முதல் கட்ட நடவடிக்கையா, தென் மாவட்டங்கள்ல இருக்குற குழந்தை தொழிலாளார்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கோம். எழுபத்தி ஐந்து குழந்தைகள் இருக்காங்க. இனிமே, அவங்களுக்கேல்லாம் நீ தான் அம்மா. மேல, நீ என்ன பண்றதா இருந்தாலும், நான் எப்போவும் கூட இருப்பேன்.”

அவளிடம் பேசிமுடித்து, பக்கத்தில் இருந்த வீட்டை காண்பித்து, வினோத்திடம் திரும்பினான். “வினோ மலர்… இந்த பக்கத்து வீடு என்னோட கிப்ட்! உங்களோட கல்யாணத்துக்கு.” என்று அழகாக புன்னகைத்தான். அதன் சாவியை தன் பெற்றோர்களிடம் குடுத்து வழங்கச் சொல்ல, முதலில் தயங்கிய வினோத்தையும் மலரையும் லட்சுமி அம்மா சம்மதிக்க வைத்தார்.

அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, வீட்டின் சாவியை வாங்கினர் புதுமண ஜோடி. இதையெல்லாம் அன்பரசியின் காதுகளில் எட்டவேயில்லை என்பது அவள் கற்சிலையாக நிற்பதிலேயெ தெரிந்தது. அருகில் சென்று ஜீவா அவளின் தோளை தொட, கனவில் இருந்து விடுபட்டாள். சற்றும் யோசிக்காமல், தாவி ஜீவாவை இறுக கட்டியணைத்துக் கொண்டாள்.

“ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச்…” அன்பரசியின் குரலில் இருந்த ஆனந்தம், ஜீவாவின் இதயத்தை நிரப்பியது. “ஹே அம்மா அப்பா கட்டி புடிச்சிட்டாங்க…” நிலேஷின் குதூகல குரலில் அனைவரும் சிரித்தனர்.

தான் அழிந்தாலும் பரவாயில்லையென உருகி வெளிச்சம் தரும் மெழுகுப் பூவாய் மனைவி மின்னுவதற்கு, திரியென்னும் ஊன்று கோளாய் கணவன் அங்கே மாறிவிட, இல்லறம் சந்தோஷத்திலும் வெளிச்சத்திலும் மின்னியது!!!
 
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Top