Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 16

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 16

அன்பரசியின் சம்மதத்தில் தொடங்கிய மகிழ்ச்சி வினோத்தை அடுத்தடுத்து துரத்தியது. கணேசனை சந்தித்த மூன்று நாட்களிலேயே மலர்விழியுடன் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கச் சென்றான்.

மோதிரம் வாங்கியதும் அப்படியே வீட்டிற்க்கு போகாமல், ஒரு பிரபல மாலுக்கு அவளை அழைத்துச் சென்று நேரம் செலவழித்தான். அவனுடன் பேச ஆரம்பித்த போது, மலர் கேட்ட முதல் கேள்வி, “அன்பு அக்கா என்கிட்ட நிக்கித்தா பொறந்தப்போ நடந்தது வரைக்கும் தான் சொன்னாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு?? ஏன் பிரிஞ்சாங்க??” என்பது தான்.

“ஏன்டி எவ்வளோ ஆசையா உன்கிட்ட பேசலாம்னு உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்? எடுத்தவுடனே இதான் கிடைச்சுதா பேச?” வினோத்தின் சலிப்பான குரலைக் கண்டு மலர் மாறவில்லை.

“பரவாயில்ல சொல்லுங்க… எனக்கு தெரிஞ்சிக்கனும்!!” இவள் ஒரு முடிவோடு தான் இருக்கிறாள் போல என எண்ணியவன், அன்பரசியின் வாழ்க்கையில் நிக்கித்தா பிறந்தது முதல் அவர்கள் டைவோர்ஸ் ஆனது வரை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

வினோத் பேசப் பேச அவன் கூறியதை உள்வாங்கிய மலர்விழி, அவனின் முகபாவனைகளை கொண்டே அவனின் மன உணர்வுகளையும் அறிந்துக் கொண்டாள்.

தன் தோழியின் குழந்தையை முதன் முதலில் பார்த்த போது உண்டான பூரிப்பு, அவள் வெளியே சென்று சமூக வேலைகள் பார்த்த போது அவளை பாதுகாத்த பொறுப்புணர்ச்சி, அவளின் கணவனுடன் சண்டையிட்ட போது அவளுக்கு அறிவுறுத்திய சகோதரத்தன்மை, அவளின் தவறால் வாழ்க்கையையே தொலைத்து நின்ற போது அவளிற்க்கு தோள் கொடுத்த நட்புணர்ச்சி என அனைத்து பாவனைகளும் அவனின் முகத்தில் தாண்டவம் ஆடியது!

அப்பேச்சில் தன் சிந்தனையை இழந்த மலர், வினோத்தின் கை சொடுக்கில் இவ்வுலகிற்க்கு மீண்டு வந்தாள். அதன்பின், நிறைய பேசினர். தங்களின் வாழ்க்கை, அன்பரசியின் எதிர்காலம், குழந்தைகள் இருவரின் படிப்பு என்று அவர்களுக்கு பேசுவதற்க்கு இருந்தது.

பார்க்கிங்கிலிருந்து கிளம்பும் சமயம் காரில் தன் அருகே உட்கார்ந்திருந்த மலர்விழியின் கைகளை பற்றி, உருகோ உருகேன உருகினான் அவளின் காதலன். “எனக்காக இவ்வளவு பார்க்குற மலர் குட்டி.

நீ கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்டா….” அவனின் கைகளை தட்டிக் கொடுத்து, “அப்போ நான் ஒண்ணு சொன்னா செய்வீங்களா??” என பொடி வைத்தாள் மலர்விழி.

“என்னடா? என்ன செய்யனும்! சொல்லு மாமா பண்றேன்…”

“நாளைக்கு என்னோட ஆபீஸுக்கு ஈவ்னிங் என்னை கூட்டிட்டு போக வரனும். ஓகே வா??”

சிறிது நேரம் அவளின் முகத்தையே உற்று நோக்கிய வினோத், பின்பு என்ன நினைத்தானோ! “நீ எதுக்கு வரச் சொல்லுற? எனக்கு புரியல… இருந்தாலும் வரேன்மா.”

வினோத்தின் சம்மதத்தில் எல்லையற்ற நிம்மதி அடைந்த மலர், சந்தோஷமாக வீடு திரும்பினாள். அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என திட்டமிடலுடன்!

****************************************************************************************************

அதே நாளின் முடிவில் நிலேஷும் நிக்கித்தாவும் அருகில் உறங்கிக் கொண்டிருக்க, நித்திரா தேவியின் கைகளில் பிடிபடாமல் ஜீவா, தன் ஆழ் மனச் சிந்தனைக்கு தீனி போட்டுக் கொண்டிருந்தான்.

தன் தந்தை தன்னிடம் வந்து பேசியதில் இருந்தே குழம்பிய குட்டையாக சுற்றி திரிந்தான் ஜீவா. அவர் வந்து பேசியதற்க்கு சில நாட்கள் முன் தான், நண்பன் ஒருவனின் வற்புறுத்தலின் பெயரில் ‘வாழ்க வளமுடன்’ என்ற யோகா மற்றும் மனவளக்கலை மன்றம் ஒன்றில் சேர்ந்தான்.

அதில் சேர்ந்த பின் தான் வாழ்க்கையின் அர்த்தங்கள் அவனுக்கு பிடிப்பட்டன. ஒரு பக்குவத்தன்மை அவனுக்குள் குடி புகுந்தது. “எதிரியையும் மன்னிக்கும் மனப்பான்மை வேண்டும்” என்ற கருத்தை கேட்டு, முதலில் உள்ளுக்குள் நகைத்தான்.

பின் தூக்கமற்ற இரவு நேரத்தில் யோசித்துப் பார்த்தப் போது தான், எதிரியை மன்னிப்பதற்க்கும் பெரிய மனது வேண்டும் என புரிந்தது! அதையோற்றி சிந்தனை தவழ்ந்த சமயத்தில் தான் அன்பரசி அவன் மனக் கண்ணில் வந்தாள்.

என்ன தான் அன்பரசியை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளை எதிரி என்ற நிலையில் வைத்துப் பார்க்க கூட முடியவில்லை ஜீவாவால். மூன்று வருடம் முன் எப்படியோ?!

இப்போது அவனால் முடியவில்லை என்பதே உண்மை! எதிரியையே மன்னிக்கும் போது, இன்னமும் தன் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அன்பரசியை பற்றி என்ன முடிவு செய்ய?

ராணி! அவனின் இதயராணி… முதல் முதறையாக அவளின் பக்கத்திலிருந்து தங்களின் வாழ்க்கையை பார்வையிட்டான். அவள் என்ன தான் தவறு செய்திருந்தாலும், விவாகரத்து என்பது பெரிய தண்டனை தானோ?? இக்காலத்தில் டைவோர்ஸ் என்பது சகஜம் ஆனதால் தனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லையோ??

இவளை பற்றியே இவ்வளவு குழப்பம் என்றால், தான் வினோத்தை பற்றி மலர்விழியிடம் எச்சரித்தது சின்ன புள்ளை தனமாக தோண்றியது!! தன்னுடைய வாழ்க்கையே இங்கே அந்தரத்தில் தொங்கும் போது, அவன் யார் மலருக்கு அறிவுரை கூற??

இப்படி பல விடையறியா குழப்பங்களும் கேள்விகளும் அவனுள்ளே! அனைத்திற்கும் பதிலாக அடுத்த நாள் மலர்விழி அவனை சந்தித்தாள்.

அன்றைய பொழுதும் எப்போதும் போல சொல்ல, மாலை ஐந்தரை மணிக்கு ஜீவாவின் ஆபீஸ் வாசலில் கரக்டாக ஆஜர் ஆனான் வினோத். காதலனுக்கே உண்டான பரபரப்புடன் அவன் மலருக்கு கால் செய்ய, அவளோ அவனை உள்ளே வரச் சொன்னாள்.

‘எதுக்கு இப்போ நம்மள உள்ள வரச் சொல்லுறா?’ என்ற கேள்வியுடனே அவன் மலரை நெருங்க, அவள் யாரிடமோ “ஓகே சார். இதோ வரேன் சார்” என்று கூறிக் கொண்டிருந்தாள் தொலைப்பேசியில்.

இவனை பார்த்ததும் “என் கூட வாங்க.” என்று தீவிரமான குரலில் ஆணையிட்டுவிட்டு, ஜீவாவின் அறையை நோக்கி சீரும் அம்பாக பாய்ந்தாள். ‘என்ன ரொமான்ஸ் மூட்ல இருப்பானு பார்த்தா, கோவில்பட்டி வீரலட்சுமி ரேன்ஜுக்கு ஆக்ஷன் மோட்ல இருக்கா!?? சரியில்லையே…’

மனதினுள் ஆயிரம் கேள்விகள் வெடித்தாலும், மலரை பின்பற்றி நடக்கத் தொடங்கினான் வினோத். கல்யாணத்துக்கு பின் செய்வதை இப்போதே ரிகேர்சல் எடுக்கிறான் போல! அதற்க்குள் ஜீவாவின் அறை கதவை தட்டி மலர்விழி வினோத்துடன் உள்ளே நுழைந்தும் விட்டாள்.

இவர்களை பார்த்ததும், ஜீவாவின் கண்களில் ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம் மின்னலாக வெட்டியது. பின் எதுவும் நடக்காதது போல, இருவரையும் உள்ளே அழைத்து உட்காரச் சொன்னான்.

இங்கே வினோத்தின் நிலை தான் அந்தோ பரிதாபம் ஆகியது! மனதினுள்ளே தன் இனியவளை வசைப்பாடினான். ‘அடிப்பாவி! இவ பின்னாடியே எங்கப் போறானு கூட பார்க்காம வந்தா, கடைசியில இவனோட ரூம்முக்கு கூட்டிட்டு வந்துட்டா!!’

“சார் எனக்கும் வினோத்துக்கும் அடுத்த சண்டே நிச்சயதார்த்தம்.” மலர் கூறிவிட்டு அமைதியாக ஜீவாவை நோக்க, வினோத்தோ ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தான். இன்னமும், அவனுக்கு ஜீவா அவனை வேண்டாம் என்று கூறியது எல்லாம் தெரியாது!

அது தெரிந்தால் என்ன ஆட்டம் ஆடுவானோ?? ஆனால், மலர் கூறியதை கேட்டு ஜீவா தான் திகைத்துப் போனான். சில நொடிகளில் தன்னை மீட்டேடுத்தவன், சிரித்த முகமாக இருவருக்கும் தன் வாழ்த்துகளை பகிர்ந்தான்.

“அப்படியா?? ரொம்ப சந்தோஷம் மலர். கங்கிராட்ஸ் டூ போத் ஆப் யூ…” இவன் இப்படி வாழ்த்துவான் என இருவருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது மலர்விழி அதற்காக மட்டும் ஜீவாவிடம் வரவில்லையே! கேட்ட வேண்டியது நிறைய இருந்ததால் அவளும் ஜீவாவின் முகத்தை தைரியமாக நோக்கினாள்.

வினோத்துக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை… அதனால், பேசாமல் அமைதியாக இருந்தான். “உங்களோட மேரேஜ் லைப்ஃ பத்தி கொஞ்ச வாரம் முன்னாடி தான் தெரிஞ்சுக்கிட்டேன் சார்.” மலர்விழி கூறிவிட்டுஅழுத்தமான பார்வையை ஜீவாவின் முகத்தில் படர விட்டாள்.

நிச்சயம் அந்த முகத்தில் அதிர்ச்சி கலந்த குழப்பம் தெரிந்தது! அதனை மேலும் கூட்ட சரமாரியாக கேள்விகள் பறந்தன மலர்விழியிடமிருந்து!!

“நீங்க எந்த ரீசன்காக அன்பு அக்காவ டிவோர்ஸ் பண்ணீங்க?? கோர்ட்ல சொன்ன அதே ரீசனை என்கிட்டயும் சொல்லாதீங்க சார், ப்ளீஸ்… ஒரு குடும்பம்னா சண்டை எல்லாம் வரத்தான் செய்யும்!

சரி அவங்க மேலயே எல்லா தப்பும் இருக்கட்டும். அதுக்காக அவங்கள டிவோர்ஸ் பண்ணிடுவீங்களா?? அப்படி பண்ணா ஊருல யாருமே குடும்பமா வாழ முடியாது!! கொஞ்சம் அவங்க இடத்துலந்தும் யோசிச்சு பாருங்க. அப்போ புரியும் அவங்க நிலைமை.

நீங்க அவங்கள மாதிரி தப்பு பண்ணிருந்தீங்கனா அவங்க உங்கள விட்டு போயிருப்பாங்களா?? இத மட்டும் யோசிங்க போதும்!”

மூச்சு விடாமல் மலர்விழி ஜீவாவை கழுவி கழுவி ஊற்ற, வினோத்தின் இடைபுகுதல்கள் வீணாகப் போயின. மீண்டும் தன் அர்ச்சனையை ஆரம்பித்தாள்! “அது எப்படி சார், கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க எல்லாருக்கும் உதவி செய்யறது பிடிச்சிருக்கு.

ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் பிடிக்கல!! ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க சார். அவங்கள நீங்க பார்த்ததே அந்த மாதிரி ஹெல்ப் பண்ணப்போ தான்!” மலர் தான் பேசி முடித்தாயிற்று என்பது போல எழுந்து நிற்க, வினோத்தோ அவளுக்கு ஒத்து ஊதினான்.

“இப்போ எதுக்கு இத பத்தி பேசுற மலர்? அவங்க கல்யாணம் விவாகரத்து வாங்கி, செத்துப் போய் மூணு வருஷம் ஆச்சு! செத்த பாம்ப அடிக்கறதுல எதுவும் ஆகப் போறதில்ல!

அது மட்டும் இல்லாம இப்போ அன்புக்கு இன்னோரு கல்யாணம் வேற ஏற்பாடு பண்றோம்! அதனால இத பத்தியெல்லாம் பேச வேண்டாம்…”

இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவதை ஒரு இறுக்கமான முகத்துடன் கேட்டு கொண்டிருந்த ஜீவா, இப்போது ஏளனமாக இதழ்களை வளைத்தான். அவனின் நக்கலான சிரிப்பை பார்த்து, வினோத் அன்பரசி இரண்டாம் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததை கூறினான்.

“அவ உனக்காக வேற வழி இல்லாம சொல்லிருப்பா. அவளால என்னை மறக்கவும் முடியாது! இன்னோரு கல்யாணம் செஞ்சுக்கவும் முடியாது!” ஜீவாவின் உறுதியான குரலுக்கு பதிலாய், வினோத்தின் வீராவேசமான குரலும் மலர் கேட்டாள்.

“ரொம்ப கனவு காணாத! கூடிய சீக்கிரமே அன்புக்கு கல்யாணம் பண்ணி காட்டறேன்!”

கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் வினோத் கதவை நோக்கி நடக்க, மலர்விழி ஜீவாவிடம் தலையசைத்து விடைபெற்றாள். அவர்கள் போனதும் ஜீவா ஒரு முடிவுக்கு வந்தான். அன்பரசியை விரைவாக சந்திக்க வேண்டும் என்பதே அது!!!

வெளியே வந்தவுடன் வினோத் எதுவும் கேட்கும் முன்னரே, மலர் எல்லாவற்றையும் விளக்கினாள். தன்னிடம் ஜீவா வினோத்தை திருமணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதை பற்றி கூறினாள். அவனை திட்டிவிட்டு வந்ததாலோ என்னவோ வினோத்திற்க்கு பெரிதாக கோபம் வரவில்லை!

ஆனாலும், அவன் முகம் யோசனையாக இருந்ததை பார்த்து மலர்விழி என்னவென்று வினவ, “எப்போவுமே நம்மள குத்திக் காட்ற மாதிரி இல்லனா, திட்டுற மாதிரி ஏதாவது பேசுவான். இன்னிக்கு நம்ம அவனை அசிங்கப் படுத்தி பேசினோம்! அப்போவும் அமைதியா இருக்கான்.

அதான் யோசிக்கிறேன்…” என்றான் வினோத் தலையை கோதிக் கொண்டு. மூளையை பிழிந்துக் கொண்டே வீடு போய் சேர்ந்தனர் இருவரும்.

மலர்விழியிடம் பேசியதிலிருந்து தன் வாழ்க்கை பயணத்தை இன்னோரு முறை வாழ்ந்து பார்த்தது போல் உணர்ந்தாள் அன்பு. கடந்த மூன்று வருஷமாக அவள் மறந்து விட்ட பலதை அது நினைவு படுத்தியது.

அப்படி நினைவு வந்த ஒரு விஷயம் அவள் மனதை நெருட, அதற்கு விடை காணும் வழியை வகுத்தாள் மனதில். ஒரு சரியான வழி உருவம் பெற அவ்வழியில் பயணிக்கவும் செய்தாள். வினோத்திடம் உதவியும் கேட்டாள்.

இவள் எதற்காக கேட்கிறாள் என உண்மை காரணம் தெரியாமல், அவனும் உதவினான்! எல்லாம் சரி… ஜீவாவை சந்திக்க வேண்டுமே?? அப்போது தானே அவள் நினைத்தது நடக்கும்?

வினோத் – மலர் நிச்சயதார்த்தம் நடக்க இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில், பெரும் மன போராட்டத்துக்கு பின், ஜீவாவை தொலைப்பேசியில் அழைத்தாள்.

“ஹலோ யாரு?” ஜீவாவின் குரலை அடுத்து, மிடுக்கான குரலில் அன்பரசியும் பேசினாள். “நான் அன்பரசி பேசறேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா இப்போ?”

அன்பரசியை சந்திக்க எப்படி அவளை அழைப்பது என்று யோசித்த நேரத்தில் அவளே அழைக்கவும், ஜீவா அகமகிழ்ந்து போனான்! லெக் பீஸ் தானாக வந்து சாப்பிடும் பிரியாணியில் விழுந்தது போல அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில்!

“ஹோ பேசலாமே, சொல்லு என்ன விஷயம்?”

உற்சாகத்தை மறைக்க பெரும் முயற்சி மேற்கொண்டான் ஜீவா. “உங்கள கொஞ்சம் தனியா மீட் பண்ண முடியுமா? ஒரு கால் மணி நேரம் தான்!”

அன்பரசி கூறியதை கேட்டு ஜீவாவுக்கு பேச்சே வரவில்லை… அதான் அவன் கேட்ட வேண்டியதை எல்லாம் இவளே கேட்கிறாளே?? ‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையாயாயா??’ என்ற ரேஞ்சில் இருந்தான் அவன்.

சில நிமிடங்களிலேயே பதிலும் கூறினான். “ஓகே நாளைக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு பீச்ல மீட் பண்ணலாம்… ஓகே தான??”

“ஹ்ம்ம்ம் சரி. வந்துடறேன்!”

மொபைல் ஃபோனை வைத்த பிறகு, அவளிடம் நாளைக்கு எப்படி பேச வேண்டும் என மனதிற்க்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தான் ஜீவா. ஆனால், அடுத்த நாள் அவன் ஒத்திகை எல்லாம் அரங்கேறாமல், வேறு ஒரு நாடகம் அரங்கேறியது!

நாடகத்தின் முடிவில் அன்பரசியின் வலது கை ஜீவாவின் கன்னத்தில் ஓர் அறையை பதிவு செய்தது!!!

Malar so sweet. Jeevava think Panna vachachu . Ippo anbu en Jeevava adicha .. enna pesarathuku vantha nice epi sis
 
[/Q

Super sis
 
Top