Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 14

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 14

நாட்கள் வாரங்களாக ஓடிச் செல்ல, ஜீவாவிற்கு அலுவக பணிகள் அவனின் நேரத்தில் பெறும் அளவை களவாடின! அன்பரசியும் அவளின் ஆசிரம வேலைகளை முழு வேகத்துடன் ஈடுபட முயன்றாள்.

புதிதாக அவளும் வினோத்தும் ஜெயந்தியின் “பசுமை தென்றல்” என்னும் தொண்டு நிறுவனத்தில்(ட்ரஸ்டில்) சேர்ந்திருந்தனர். அதனால், வார விடுமுறை தினத்தில் அவளால் வீட்டில் காலை நேரங்களில் இருக்க முடியாமல் போயிற்று.

காலையில் சென்றால் திரும்ப வீடு திரும்ப பிற்பகல் அல்லது மாலை ஆகிவிடும். முதலில் ஒன்றும் சொல்லாத ஜீவாவும், இரண்டு வாரங்களில் முனுமுனுக்க ஆரம்பித்தான். அன்பரசி அவனிடம் பொறுமையாக எடுத்துக் கூறினாள்.

“ஜீவா எனக்கு மனசு திருப்பியாகுற விஷயம் இது! இல்லனா, நான் உங்க கூட இல்லாம போவனா சொல்லுங்க? வேணும்னா நீங்களும் கூட வாங்க. ரெண்டு பேரும் போலாம். ஹ்ம்ம் என்ன போலாமா??”

ஆர்வம் கொப்பளிக்கும் கண்களுடன் அன்பரசி கேட்கவும், ஜீவா மறுக்காமல் அடுத்த நாள் அவளுடன் வருவதாக கூறினான். அன்பும் மகிழ்ச்சியுடன் கிளம்பினாள். திருமணமாகி இந்த மூன்று மாதங்களில் இருவரும் வெளியே கோவில், பீச், ஹோட்டல் என சுற்றியிருக்கின்றனர்.

ஆனால், ஆசிரமம் செல்வது இதுவே முதல் முறை! காலையிலேயே எழுந்து ஜீவாவுடன் கிளம்பிவிட்டாள் அன்பரசி. வினோத் அங்கே நேராக வருவதாக கூற, இருவரும் பைக்கில் சென்றனர்.

போகும் வழியாவும் ஜீவா திருமணம் முன் நடந்தது எல்லாம் நினைவு கூற, அன்பரசி சிரிப்பாலும், சில பல அடிகளாலும் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

ஆசிரமத்தின் வாசலில் அவர்களை வரவேற்றது சாட்சாத் வினோத்தே தான்!

“என்ன ஜீ, கடைசியில உங்களையும் ஆசிரமம் சோஷியல் சேர்விஸ்னு இறக்கிட்டா பார்த்தீங்களா? அங்க நிக்கறா லவ்ஸ்…” வினோத்தின் தோளில் கை போட்டபடி ஜீவா சிரிக்க, அன்பரசி முறைத்து “நான் இங்க தான்டா இருக்கேன்! உள்ள போ முதல்ல” என பதில் கூறினாள்.

வழக்கம் போல் குழந்தைகளின் பிரிவுக்கு சென்று விட்டான் ஜீவா. அவனை பார்த்து, முறுவல் பூத்திட அலுவக அறையினுள் நுழைந்து வேலையை தொடங்கினாள் அன்பு. வினோத் சிஸ்டரிடம் பேச சென்றுவிட்டான்.

சிறிது நேரத்திலேயே ஒரு கைக் குழந்தையை தூக்கியபடி, ஜீவா அவளிடம் விரைந்தான். “ராணி இந்த பாப்பாவ எப்போ இங்க கொண்டு வந்தாங்க?” அவன் கைகளில் துயில் கொண்டிருந்த பாலகனை பார்த்துவிட்டு, பெருமூச்சேறிந்தாள் அன்பு.

“இவன் வந்து ஒரு மாசமாச்சு ஜீவா. இவனோட அப்பா அம்மா ரெண்டு பேரும் வீட்டுல காஸ் சிலின்டர் லீக்காகி.… செத்துட்டாங்க. இவன் அப்போ பக்கத்து வீட்டுல இருந்திருக்கான். அப்பா அம்மா ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.

அதனால தொந்தக்காரங்க யாருமே இல்லைனு, அவங்க தான் இங்க வந்து சேர்த்து விட்டாங்க. பையனுக்கு நாலு மாசம் தான் ஆகுது. நீங்க ஏன் கேக்கறீங்க திடீர்னு?”

அந்த குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டு, “தெரியலடா… ஆனா, இவன இறக்கிவிட மனசே இல்ல. நான் தூக்குன அப்புறம் தான் அழுகையே நிறுத்தினான். பையனை பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கு.”

சொல்லிவிட்டு அவன் வெளியேற வியப்பாக அவனையே பார்த்தாள் அன்பு. மீண்டும் அவள் பணிகளை தொடங்க, தலையை சுற்றுவது போல் இருந்தது. ஆனாலும் நிறுத்தாமல் ‘கடமை கண்ணாத்தா’வாக வேலை பார்த்தாள். நேரம் ஆக ஆக, இன்னும் சுற்றுவது போல் இருந்ததில் ஜீவாவை அழைத்து கூறினாள்.

அவன் உடனே வீட்டுக்கு அவளை கூட்டி வந்துவிட்டான், வினோத்தின் புத்தம் புதிய காரில்.

வீட்டிற்கு திரும்பியும் அதே போல் இருந்ததில், லட்சுமிக்கு சந்தேகம் முளைத்ததால், அன்பரசியிடம் தனியாக விசாரித்து தான் பாட்டி ஆகப் போகும் விஷயத்தை கண்டறிந்தார்.

வெளியே வந்து ஜீவாவிடம் கூற, சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றவன், அதே நேரம் மனைவியை காண உள்ளேயும் விரைந்தான். அன்பரசிக்கு கண்களில் இருந்து சந்தோஷ அருவி பொழிந்த வண்ணம் இருந்தது.

அனாதையாக பிறந்து வளர்ந்த தனக்கு, இப்போது ஒரு தொப்புள் கொடி உறவு கிடைக்கப்பெற்றதை பெறும் வரமாகவே கருதினாள். ஜீவா அவளின் கண்ணீரை துடைத்தபடி, “ராணிம்மா எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?? நமக்கே நமக்குனு பாப்பா வரப் போகுது! ஐ ஆம் சோ சோ எக்ஸைட்டட்!!!” என்று உணர்ச்சி ததும்பிய குரலில் துள்ளி குதித்தான்.

“எனக்கு இதைவிட சந்தோஷமா ஒரு விஷயம் இருக்க முடியுமானு, தெரியல ஜீவா! அனாதையா பொறந்தேன்… முதல்ல யமுனாமா, வினோத் கிடைச்சாங்க. அதுக்கப்புறம் நீங்க, அம்மா, அப்பா… இப்போ நமக்கு பாப்பா பிறக்கப் போகுது! என்னை ‘அம்மா’னு கூப்பிட ஒரு குழந்தை! நான் ரொம்ப குடுத்து வைச்சவ…”

வயிற்றை தடவிக் கொண்டு அன்பு கூறியதை கேட்டதும், ஜீவாவும் கண்களில் நீர் கொண்டான். அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு, தன் உயிரை சுமக்கும் தன்னுடைய இன்னோரு உயிரின் பிறை நெற்றியில் இதழ் பதித்தான். கண்களை மூடி இத்தருணத்தை ரசித்தபடி, ஆழ்ந்த மௌனத்தின் பிடியில் இருந்தனர் இருவரும்.

பூஜை வேளையில் டைனோசரஸ் போல, கதவை தட்டினான் வினோத்!! சில நிமிடங்களில் உள்ளேயும் வந்துவிட்டான். “என்னடா நானும் வெளிய வருவாங்கனு வருவாங்கனு பார்த்தா, குழந்தை பொறக்கற வரைக்கும் இங்கயே இருந்திருவீங்க போல??

ஒரு சின்ன பையன் எவ்வளவு நேரம் வெயிட் பண்றது??” வந்தவுடன் பித்தலை கடையில் யானை நுழைந்தது போல, கலகலக்கும் சத்தத்துடன் வந்தான்.

“யாரு நீ சின்ன பையனா??” ஜீவாவின் தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டு, ஏறிய புருவங்களுடன் கேட்டாள் அன்பு.

“பின்ன கல்யாணம் ஆகி, இப்போ பாப்பாவும் பொறக்க போற நீயா?? நான் தான் சின்ன பையன். இனிமே நீ ஆன்டி தான்!”

இவர்களின் கேலியில் சிரித்துக் கொண்டிருந்த ஜீவாவின் அருகில் உட்கார்ந்தான் வினோத். “ஜீ நான் இப்போ ரொம்ப ரொம்ம்ம்ம்ப ஹாப்பியா இருக்கேன்!! அன்புக்கு ஒரு பாப்பா பொறக்க போது… நினைக்கறப்பவே ஜிவ்வுனு இருக்கு. கண்டிப்பா எங்கம்மா மேல இருந்து பார்த்து விஷ் பண்ணுவாங்க…”

வினோத்தின் நெகிழ்ந்த குரலைக் கேட்டு, ஜீவா அவன் தோளில் கைப் போட்டு தட்டிக் கொடுக்க, அன்பரசி அவனை வம்புக்கு இழுத்தாள். “ஹே கண்ணை தொட, கண்ணை தொட!!

மாமா ஆகப் போறதுக்கு ஓவர் ஃபீலிங்க்ஸா இருக்குடா. நீ சீரியஸா பேசுனா கூட எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது..” வினோத் அவளை முறைத்துப் பார்க்க, தன் மனைவியை மேலும் இருக்கிக் கொண்டு மேலும் நகைத்தான் ஜீவா.

அன்றைய பொழுது சந்தோஷமாக செல்ல, அடுத்த நாள் அன்பரசி வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்தாள். ஆனால், அவளே எதிர்பார்க்காத விதமாக ஜீவா ஆசிரமம் செல்வதாக கூறி கிளம்பினான்.

அடுத்து வந்த சனிக்கிழமையும் அவன் அதையே பின்பற்ற, ஜீவாவை நிறுத்தி என்ன விஷயம் என்று வினவினாள் அன்பு. ஒரு ஏக்கமாக பாவனையுடன், “எனக்கு அந்த பையனை ரொம்ப பிடிச்சிருக்கு ராணி. எப்படி சொல்றதுனு தெரியல… பட், அவனை பார்க்கனும் போல இருக்கு, எப்போவும்!” என்றான் ஜீவா.

அன்பரசி புன்னகைத்து சென்றுவிட, அன்றே இரவு படுக்கச் செல்லும் முன் மீண்டும் அக்குழந்தையை பற்றிய பேச்சை எடுத்தான்.

“ராணிமா உன்கிட்ட கொஞ்சம் பேசனும். இப்படி உக்காரு.” பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, கைவளைவில் அன்பரசியை கொண்டு வந்தான்.

‘என்ன’ என்ற கேள்வியுடன் அவள் அவனின் முகத்தையே உற்று நோக்க, சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தை போட்டுடைத்தான், அவள் கணவன். “நம்ம அந்த பையனை தத்து எடுத்துக்கலாமா??”

ஜீவா கூறியதை கேட்டதும் அன்பின் முகம் ஆச்சரியத்தை காட்டியது. ஆச்சரியம் தத்து எடுப்பதை ஒற்றி இருந்ததே ஒழிய, எந்த பையன் என்ற கேள்வி அவள் மனதில் தோன்றவேயில்லை.

அவனின் முகத்தையே பார்த்து, “நீங்க சீரியஸா தான் சொல்றீங்களா?? ஆர் யூ சுவர்?” என்று பதில் கேள்வியும் கேட்டாள். அவளின் நிலை உணர்ந்து தன் பக்க விளக்கத்தை கொடுத்தான் ஜீவா.

“எனக்கு புரியுதுடா… தத்து எடுக்கறது ஈசி இல்ல. ஆனா, என்னால அந்த பையனை அப்படியே விட்டுட்டு இருக்க முடியல. நம்மக்குனே அவன் பொறந்த மாதிரி தோனுது. எனக்கு குழந்தைங்க பிடிக்கும் தான்! பட், இந்த பையன் ரொம்ப ஸ்பெஷலா இருக்கான். எப்படி சொல்றதுனு தெரியல…”

“எனக்கு புரியுதுபா. பட், நான் எதுக்கு யோசிக்கிறேன்னா, நமக்கு தனியா ஒரு குழந்தை ஒண்ணு வரப் போகுது. இப்போ நம்ம இன்னோரு குழந்தை தத்து எடுத்தோம்னா, அந்த பாப்பாவையும் நல்லா பார்த்துக்கனும்! எந்த வித்தியாசமும் பார்க்க கூடாது, ரெண்டு பேருக்கும். அப்புறம், இது நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லப்பா… அப்பா அம்மாவையும் நாம கேக்கனும். நாளைக்கு அவங்ககிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணலாம். எனக்கு டபுள் ஓகே தான். அம்மானு ஒரு பாப்பா கூப்பிட்டா கேக்க, கசக்குதா என்ன??”

அவளின் நெடிய பதிலை கேட்டு அன்பரசியை கட்டிக் கொண்டு, நிம்மதியாக உறங்கினான் ஜீவா. அடுத்த நாள், தன் பெற்றோர்களிடம் இதை பற்றி பேசினான்.

ராகவன் லட்சுமியின் முகத்தை நோக்கிவிட்டு அறிவுரை கூறும் விதமாக தன் சம்மதத்தை தெரிவித்தார் தன் பிள்ளையிடம். “எனக்கு தத்து எடுத்துக்கறதுல பிரச்சனை இல்ல ஜீவா. ஆனா, குழந்தையை நல்லா பார்த்துக்கனும், உங்களுக்குனு ஒரு குழந்தை இல்லை எத்தனை குழந்தை வந்தாலும்!! அது தான் முக்கியம்.”

“எனக்கு அதே தான்டா யோசனையா இருக்கு. பின்னாடி எந்தவித பிரச்சனையும் வராம இருந்தா சரி தான்! உங்க ரெண்டு பேருக்கும், ஓகேனா எனக்கும் சரி தான்டா.” லட்சுமியும் கணவன் வழியே வாய்மொழிய, ஜீவா சந்தோஷமாக தத்து எடுக்கும் வேலைகளை காணச் சென்றான்.

வினோத்தும் இந்த தத்தெடுப்பதை மிகவும் வரவேற்றான்…! ஒரு மாதம் முழு மூச்சுடன் ஜீவா வேலை செய்ததில், நிலேஷ் அவர்களின் வீட்டை மகிழ்ச்சியால் நிரப்பினான்! ‘நிலேஷ்’ என்ற பெயரை அன்பு தான் தேர்ந்தேடுத்தாள். அதை ஒட்டியே தங்களின் குழந்தைக்கும் பெயர் வைப்பது என முடிவும் செய்தனர்.

எல்லாம் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது! அன்பரசிக்கு மசக்கை எல்லாம் முடிந்தவுடன் ஐந்து மாதம் ஆகிய நிலையில், மீண்டும் ஆசிரமம் செல்லத் துவங்க, பூகம்பம் வெடித்தது ஜீவாவின் மனதில்.

தங்களுக்கென்று பிள்ளைகள் வந்தவுடன் அவள் இதை எல்லாம் குறைத்துக் கொள்வாள், என அவன் நினைக்க, நடந்ததோ முற்றிலும் வேறாக இருந்தது.

வார நாட்களில் நிலேஷை பார்த்துக் கொள்ளும் அன்பரசி, வார இறுதி நாட்களில் தன் வேலைகளை துவங்க, ஜீவா வெளிப்படையாகவே தன் மனப்போக்கை அவளுக்கு கூறினான்.

“ராணி இங்க பாரு. குழந்தை பொறக்கற வரைக்கும் நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கனும். நீ இன்னும் ஆசிரமம், என்.ஜி.ஓ., பசுமைத் தென்றல்னு போயிட்டு இருந்தேனா எப்படி பாப்பாவ பார்த்துக்க முடியும்?

அதனால, குழந்தை பொறந்துட்ட அப்புறம் இத எல்லாம் பார்த்துக்கலாம்… ஓகே வா??”

அவனின் அக்கரை புரிந்தாலும், தன்னுடைய மனதில் இருப்பதையும் கொடிட்டு காட்டினாள் அன்பரசி. “எல்லாம் ஓகே தான். குழந்தை பொறந்துட்ட அப்புறம் தான் நான் வீட்டுல ரொம்ப இருக்கனும்!

அப்போ என்னால பால் குடிக்குற குழந்தையை விட்டுட்டு போக முடியுமா? அப்போ நான் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கறேன். பட், இப்போ எதுவும் சொல்லாதீங்க. ப்ளீஸ்!” தான் கூறியதை அவள் மதிக்காதது ஜீவாவின் மனதை ஆழமாக பதம் பார்த்தது!

இதனால், அவர்களுக்குள் இருந்த மன ஒற்றுமையிலும், பாசப் பிணைப்பிலும் விரிசல் சிறிதாக விட துவங்கியது! ஈகோ றெக்கை கட்டி பறக்க அவர்களுக்குள் பிளவு விரிவடைந்தது.

கர்ப காலத்தில் எல்லா மனைவியும் வேண்டும் கணவனின் அன்பும் அக்கரையும் அன்பரசிக்கு முழுமையாக கிடைக்காமல் போக, அது அவளின் கோவத்தை மூட்டை மூட்டையாக அவன் மேல் கட்டியது!!!

அவளுக்கென்று அவன் செய்யும் சிறு உதவியும், குழந்தைக்காக தான் செய்கிறானோ என எண்ணவும் வைத்தது. முடிவில்லா ஒரு வன பாதையில் போவது போல உணர்ந்தாள் அன்பரசி, தனியாக!!! குழந்தை பிறந்தப் பின்னோ நிலைமை இன்னும் மோசமாகிற்று!!!




 
Top