Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 13

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 13

ஆயிற்று… அடுத்த வாரம் திருமணம் என்ற நிலையில், ஏனோ அன்பரசியின் மனதில் சிறிது உறுத்தல் தோன்றியது. என்னவென்று அவளால் வகையறுக்க முடியவில்லை! ஆனால், அவளின் யோசனை படிந்த முகத்தை பார்த்து, அவளிடம் விசாரித்தான் வினோத்.

“ஒண்ணுமில்லடா…. என்னவோ எல்லாமே ரொம்ப ஃபாஸ்டா நடக்கற மாதிரி இருக்கு. அதான்….”

“ஃபாஸ்டா என்ன நடக்குது, நல்லது தான?? அப்புறம் எதுக்கு ஃபீல் பண்ற… நல்லது நடந்தா, அனுபவிக்கனும் ஆராய கூடாது!” வினோத்தின் வார்த்தைகள் மனதில் இருந்த உறுத்தலை கழுவி விட, அவளின் சிந்தனை செயல் அனைத்தையும் அவளின் கண்ணாளனே மீண்டும் ஆக்கிரமித்தான்.

கல்யாணப் பெண்ணிற்கே உரிய பத்துப் பொருத்தமும் வந்து ஒட்டிக் கொள்ள, வாரம் ஒன்று ஓடியதே அன்பிற்கு தெரியவில்லை. மயில் வண்ண பட்டு உடுத்தி, ஜீவாவின் அருகில் மணவரையில் அவள் உட்கார்ந்த அந்த நிமிடம், இன்றளவும் மனதை விட்டு அகலவில்லை!

அது வரை பெண் அனாதையாமே என புறம் பேசிய வாய்களும், பெண்ணின் அழகை பார்த்து அடைந்து போயின. இவர்களே இப்படி என்றால் ஜீவாவின் நிலையை என்னவென்று சொல்ல! கண்கள் அவளை விட்டு அகலாமல் அடம் பிடிக்க, வினோத் தான் அவனை திசை திருப்பினான்.

“ஜீ இனிமே உங்க கூட இருப்பா. அப்புறமா சைட் அடிச்சுக்கலாம். இப்போ முதல்ல மந்திரத்த சொல்லி, தாலி கட்டுற வேலையை பாரு!”

அவனின் நக்கலை கிடப்பில் போட்டு, தன் வேலையை தொடர்ந்தான் ஜீவா. அன்பரசிக்கு தான் சங்கடமாக போயிற்று. ஒரு வழியாக ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க, முக்கோடி முத்தேவர்களின் ஆசிர்வாதத்துடன், அன்பரசியை கரம் பிடித்தான் ஜீவா.

பொட்டு வைக்கும் போதும், மெட்டி அணிந்த போதும் தன்னுள் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைவதை அன்பரசியால் உணர முடிந்தது. அந்த சிலிர்ப்பும் சிவந்த முகமும் ஜீவாவை கட்டி இழுக்க, அப்போதிருந்து அவளுடனே ஒட்டி திரிந்துக் கொண்டிருந்தான்.

சில நேரம் அமைதியாக இருந்த அன்பு, பல நேரம் விலகி நின்றாள். அதுவே ஜீவாவின் கோபத்தை திரி போட்டு ஏற்றியது. இதில் நேரம் காலம் தெரியாமல், வினோத் வேறு இருவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

எல்லா சடங்கும் முடிந்து வீடு திரும்பிய போது, காரில் ஜீவா அவள் தோளின் மேல் கைகளை போட, அன்பரசி லட்சுமியம்மாவை கண்களால் சுட்டிக் காட்டி கைகளை எடுக்கச் சொன்னாள். அதற்க்கெல்லாம் மசியாமல், மீண்டும் கைகளை அழுந்த படியவிட்டான் ஜீவா.

ஓர் அளவிற்க்கு மேல் பொறுக்க இயலாமல், அன்பரசி அவனின் கைகளை தட்டி விட, அவ்வளவு தான்!! அதன் மேல் ஜீவா நாள் முழுவதும் அவளின் பக்கம் திரும்பவே இல்லை! இவளும் சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டாள்.

வீடு வந்ததும் வினோத்தை, ராகவனும் லட்சுமியும் தங்களுடனே இருக்க வற்புறுத்த, வினோத் அறவே மறுத்தான். “அம்மா நான் அவன்கிட்ட ஒரு மாசமா கேட்டு கேட்டு வெறுத்துப் போயிட்டேன். விடுங்க… அவன் பிடிவாதமா இருக்கான்.” ஜீவாவின் சலிப்புற்ற குரல், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அன்பரசிக்கு இது புதிய தகவல்! வினோத் சிரித்தபடியே, “பக்கத்துல தானமா இருக்கேன். அடிக்கடி வரேன்… எந்த பிராப்ளமும் இல்ல. பார்த்துக்கலாம்!” என்று சமாளித்தான்.

அன்பரசி எதுவும் சொல்லவில்லை. அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தாள். ஏன்னென்றால், வினோத் முடிவு செய்தால் எளிதாக மாற்றிக் கொள்ள மாட்டான் என தெரியும் அவளுக்கு.

இரவு உணவு முடிந்து, அடுத்த நாள் காலை வருவதாக கூறி வினோத் விடை பெற, அன்பரசியை லட்சுமி அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தினார். இரவு அலங்கரிக்கப் பட்ட அறையில் அன்பரசியை நுழைய, அவள் கண்களில் பட்டதெல்லாம் உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த ஜீவா மட்டுமே.

பார்த்த நிமிடம் சிரிப்பலைகள் அவள் முகத்தில் அடித்துச் செல்ல, அவன் அருகே சென்று நின்றாள். அப்போதும் ஜீவா அவளை கண்டுக் கொள்ளவில்லை. அவனின் முகத்தை நிமிர்த்தி, “என்ன கோவமா சாருக்கு??” என்று கொஞ்சும் குரலில் வினவினாள்.

அவளை முறைத்துவிட்டு, கைகளை தட்டிவிட்டான் ஜீவா. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவனை இடித்துக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்தாள் அன்பு. ஜீவா திரும்பி முறைக்கவும், “என்ன ஓவரா முறைக்கிறீங்க??” என மீண்டும் வம்புக்கு இழுத்தாள்.

“ஹே நானா முறைக்கிறேன்?? நீ தான் காலையிலந்து எதுக்கெடுத்தாலும் முறைச்சிட்டே இருக்க! தள்ளி தள்ளி போற... இப்போ வந்து கொஞ்சு! ஒண்ணும் வேணாம் போ!” ஜீவாவின் வார்த்தைகளை கேட்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே, அவன் முற்றிலும் எதிர்பார்க்காத பதிலை கூறினாள்.

“சரி ஓகே! அப்போ குட் நைட்.” படுக்கையில் நன்றாக இடைவெளி விட்டு, படுத்தும் விட்டாள்! அடிப்பாவி என அலறிக் கொண்டே அவளை தன் பக்கமாக திருப்பினான் ஜீவா.

“ஹே ஒரு பேச்சுக்கு சொன்னா, நிம்மதியா போய் படுக்குற?? என்ன நினைச்சுட்டு இருக்க?”

“உங்கள தான்! இது என்ன கேள்வி? அதனால தான், நீங்க சொன்ன மாதிரி போயிட்டேன்.”

குறும்பான பார்வையை படரவிட்ட படி அன்பு கூறவும், ஜீவாவின் பார்வையும் மாற்றம் கொண்டது. “அப்போ நான் என்ன சொன்னாலும் செய்வ?” அவனின் கண்களை நேராக நோக்க முடியாமல் செய்தது இக்கேள்வி.

அதுவரை இருந்த குறும்புத்தனம் பறந்துவிட தன் பெண்மையை உணர ஆரம்பித்தாள் அன்பு. ஜீவா மேலும் நெருங்கி அணைத்துக் கொண்டு கேள்வியை எழுப்ப, அவனிற்கு பதில் அளிக்கும் வழி தெரியாமல், அவனின் நெஞ்சை தன் மஞ்சமாக்கி கொண்டாள் அவனின் மனையாள்.

வாழ்க்கை பாடத்தில் அரிச்சுவடியை கடந்து பல விஷயங்களை ஜீவா அவளுக்கு கற்றுக் கொடுக்க, அவனை மேலும் மேலும் நேசிக்க தொடங்கினாள் அன்பரசி. நேசித்ததை வாய்விட்டு கூறி இருந்தால், பின் வருபவற்றை தடுத்து இருக்கலாமோ??

****************************************************************************************************

திருமணம் முடிந்து அடுத்த நாள் அனைவரும் ஜீவாவின் குல தெய்வ கோவிலுக்கு சென்று வர, அதற்கு அடுத்த நாளே மனைவியை கூட்டிக் கொண்டு தேன்நிலவுக்கு மொரிஷியஸ் பறந்தான் ஜீவா.

அன்பரசிக்கு பீச் மிகவும் பிடிக்கும் என்று முன்பே தெரிந்ததால், அவன் அந்த இடத்தை கூறியதும் அன்புக்கு இன்ப அதிர்ச்சியாக போயிற்று. மொரிஷியஸில் ஒரு மாலை பொழுதில் இருவரும் பீச் மணலில் இளைப்பாற, அன்பை அவன் கைவளைவில் கொண்டு வந்து, “ஐ லவ் யூ டி ராணிமா” என ஆழ்ந்த குரலில் கூறினான் ஜீவா.

அதை கேட்டு ஒரு ஆத்மார்த்தனமான புன்னைகையுடன் அன்பரசி அவனிடம் ஒண்டிக் கொள்ள, “என்னடி நீ ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற? நீயும் சொல்லு…” என சிணுங்கலுடன் கேட்டான் ஜீவா.

“அதேல்லாம் தானா வரனும்… கேட்டு வரக் கூடாது!” அன்பு கூறியதை கேட்டு, முதல் முள் தையித்தது ஜீவாவின் மனதில், அவளை அறியாமல்!

கல்யாணத்திற்கு பின்பு காதலை, அன்பை வெளிப்படுத்துவதில் எப்போதுமே பெண்கள் தான் முதலில் இருப்பர். ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருந்தது. அன்பரசி எப்போதுமே ‘ஐ லவ் யூ’ என வாய்விட்டு ஜீவாவிடம் கூறியது இல்லை.

ஜீவா நேர் எதிர்! அவளுக்கும் சேர்த்து அவனே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது கூறுவான். அப்படி கூறும் போது, அவள் பதில் அளிக்காமல் போவது அவனை மனதை எப்போதும் நெருடும்!

இரண்டு வாரம் தேன்நிலவு முடிந்து வீடு திரும்பிய போதும், இதே நிலைமை தான் நீடித்தது. இதை தவிர்த்து எதுவும் பெரிதாக பிரச்சனை முளைக்கவில்லை அவர்களுக்குள்.

சென்னை வந்ததும், ஆபீஸ் போக ஆரம்பித்த ஜீவா தினமும் சில மணி நேரமாவது வினோத்திடம் நேரிலோ அல்லது ஃபோனிலோ பேசுவான். அன்பரசி பற்றி சொல்லவே வேண்டாம்!

போனில் மேசேஜ் செய்தபடியே தான் இருந்தாள், திருமணத்திற்கு முன் போலவே. அப்படி ஒரு நாள் காலையில் ஆபீஸிற்க்கு கிளம்பு முன், அன்பரசியை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தபடி வினவினான்.

“நாளைக்கு ஈவ்னிங் வெளிய போறோம். எங்க போறோம்னு எல்லாம் கேக்காத… ஹ்ம்ம்ம் என்ன சொல்ற?” என்று அவளின் கன்னத்தில் தன் முகத்தை தேய்த்தபடியே கேட்க, அன்பரசியால் எதுவும் சொல்ல முடியவில்லை, தலை ஆட்டுவதை தவிர.

அவன் கூறியதை ஞாபகத்தில் வைத்து இருந்தாலும், அடுத்த நாள் காலையில் லட்சுமி வந்து பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அபிஷேகத்துக்கு சொல்லி இருப்பதாக கூற, அவளுக்கு தர்ம சங்கடமாக போயிற்று.

என்ன செய்வது என சிறிது நேரம் யோசித்த அன்பு, ஜீவாவுடன் இன்னொரு நாள் வெளியே செல்வது என முடிவு செய்து, லட்சுமியிடம் வருவதாக கூறினாள்.

ஆனால், இதை அவள் ஜீவாவிடம் ஃபோனில் சொன்ன போது அவனின் கோவத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. எதுவுமே பதிலளிக்காமல் ஜீவா ஃபோனை வைத்து விட, மீண்டும் அன்பரசி அழைத்தாலும் அவன் எடுத்தபாடில்லை!

இவளும் கடுப்பாகி மாலையில் தன் மாமியாருடன் கோவிலுக்கு சென்று விட்டாள். எல்லா கடுப்பும் கோபமும் கோவில் செல்லும் முன் தான்!

கோவிலில் தனக்கு கிடைத்த வாழ்க்கைக்கும், தன்னை சுற்றி உள்ள அன்பானவர்களுக்காகவும் சேர்த்து நன்றி கூறிவிட்டு, அமைதியான மனதுடன் ஜீவாவை காண வீடு திரும்பினாள். தங்களுடைய அறையில் ஜீவா அதுவரை அவள் பார்த்திராத தோற்றத்துடன் இருக்கக் கண்டு திகைத்து நின்றாள்.

ரூம்மில் இருந்த சோபாவில் கண்களை மூடி, முகத்தில் எரிச்சலும் கோபமும் சம அளவில் மிதக்க ஜீவா அமர்ந்திருக்கக் கண்டாள். என்ன இப்படி இருக்கிறான் என சிந்தனைகள் ஓட, அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அவள் அமர்ந்த நிமிடம் அவன் எழுந்து சென்றுவிட, முகத்தில் வெந்நீரை ஊற்றியது போலுணர்ந்தாள் அன்பு.

தினமும் அலுவகத்திலிருந்து வந்ததும் அவன் செய்யும் வேலைகள் நினைவுற்க்கு வர, கஷ்டப்பட்டு பொங்கும் அழுகையை அடக்கி, அவனிடம் மீண்டும் சென்று சன்னக் குரலில், “எப்போ வந்தீங்க ஜீவா?” என சாதரணமாக பேச ஆரம்பித்தாள்.

அதுவே அவனின் ஆத்திரத்தை கூட்ட போதுமானதாக இருந்தது! “நான் எப்போ வந்தா உனக்கேன்ன? அதான் என் கூட வர முடியாதுனு சொல்லிட்டல??? எதுக்கு கேக்கற… அப்புறம், கோவில்ல அபிஷேகம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” ஜீவாவால் இவ்வளவு எகத்தாளமாக பேச முடியுமா?

“நாம நாளைக்கு கூட போலாம்பா. அம்மா ஆல்ரெடி கோவில்ல சொல்லிட்டாங்க. அதனால தான் நான்…”

“போதும்!!! எனக்கு செம டென்ஷனா இருக்கு. நீ என்ன சொன்னாலும் ஒண்ணும் ஆகப் போறதில்ல! சோ, ப்ளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடு…”

கல்யாணம் ஆகி முதன் முதலில் இவ்வார்த்தைகளை அவனிடம் இருந்து கேட்டதும், அன்பரசியால் தாங்க முடியாது போயிற்று.

உடனே ஓடிச் சென்று பாத்ரூம்மிற்குள் புகுந்து, மனம் வலிக்க அழுது தீர்த்தாள். செல்லும் அவளையே பார்த்த ஜீவாவுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. இருந்தாலும் தன்னை ஒதுக்கி தன் அம்மாவாகினும், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு கால் மணி நேரம் அமைதியாக அறையினுள் நடை பயின்று கொண்டிருந்த ஜீவா, அவள் அப்போதும் வெளியே வராததை கண்டு பாத்ரூம் கதவை தட்டினான். அவன் தட்டும் சத்தத்தில் சுய நினைவை அடைந்த அன்பு, முகத்தில் தண்ணீர் தெளித்து கதவை திறந்தாள்.

திறந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்த ஜீவா, அழுது சிவந்த அவளின் முகத்தை கண்ட நொடியில் கண்ணாடி சிதறல்களாய் அவனின் மனமும் சிதறியது! வெளியே போக முயன்ற அவளை தடுத்து நிறுத்தி, கட்டிக் கொண்டான்.

அன்பரசிக்கு ஒன்றுமே புரியவில்லை… ஆனாலும் அவளுக்கு அந்த அணைப்பு அப்போது அவசியமாக இருக்க, அவளும் ஒன்றும் பேசாமல் மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

அன்பின் முகத்தை கைகளில் ஏந்தி, முத்தம் என்னும் மழையை அவளின் மேல் சாரல்களாய் பொழியத் தொடங்கினான். அன்பரசியால் வெறும் “சாரி.. சாரி ஜீவா” என கூற மட்டுமே முடிந்தது, அவனின் முகத்தை விலக்கி!

“ராணியம்மாவ நான் என்ன மன்னிக்கறது?? நீங்க தான் எனக்கு ஏதாவது பார்த்து செய்யனும்…” ஜீவாவின் குரலில் தெரிந்த குறும்புதனத்தில், அன்பரசியின் அழுகையும் ஆனந்த கண்னீராக மாறியது.

இந்த விட்டுக்கொடுக்கும் தன்மையும், மன்னிக்கும் மனப்பான்மையும் பிறகு அவர்களுக்குள் இல்லாமல் போனது ஏனோ??
 
Top