Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 11

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 11

ஜீவாவின் சிந்தனையெல்லாம் ‘அன்பரசியை எப்படி சம்மதிக்க வைப்பது?’ என்றதிலேயே தேங்கியது. அவளிடம் சீக்கரமாக இதை பற்றி பேசியே ஆக வேண்டும் என முடிவு செய்து, அடுத்த நாளே ஆசிரமத்துக்கு சென்றான். வினோத் ஏற்கனவே தாங்கள் ஆசிரமத்தில் தான் இருக்கிறோம் என குறுஞ்செய்தி அனுப்பியது உதவியது.

வழக்கம் போல் இவனை பார்த்ததும் புன்னகை சிந்திவிட்டு, அவளின் வேலையை தொடர்ந்தாள். சிறிது நேரம் கழித்து, வினோத்துக்கு சைகை காட்டி அன்புவிடம் வர வைத்தான் ஜீவா. “ஹே, நீங்க ரெண்டு பேரும் இன்னிக்கு ஈவ்னிங் ஃப்ரியா?”

மொட்டையாக ஜீவா கேட்க, அன்பு முழித்தபடி “எதுக்கு கேக்கறீங்க??” என வினவினாள். “இல்ல சும்மா அப்படியே பீச்சுக்கு ஒரு டிரைவ் போலாம்னு… கூட நீங்க ரெண்டு பேரும் வந்தா, நல்ல கம்பெனியா இருக்கும்…”

அன்பரசி இதை கேட்டு தயங்க, வினோத் உடனே மண்டையை நன்றாக ஆட்டி, “ஹோ… சூப்பர் போலாமே! நான் ரெடி…” என பதிலளித்தான். அவனுக்கு ஜீவாவின் மையின்ட் வாய்ஸ் ஓரளவு புரியவே இப்படி கூறினான்.

ஆனால் இது தெரியாத அன்புவோ வினோத்தை கண்களால் கழுவி ஊற்றி, ஜீவாவிடம் மறுத்தாள். “இல்ல.. நீங்க ரெண்டு பேர் வேணும்னா போயிட்டு வாங்க… நான் வரல!”

“சுத்தம்… விளங்குச்சு போ” வினோவின் முனகல் அன்பு மற்றும் ஜீவாவின் காதுகளை நன்றாகவே எட்டியது… ஒன்றும் புரியாமல் அவள் முழிக்க, வினோத்தோ அவளை வற்புறுத்த ஆரம்பித்தான். “ஹே… அதான் எந்த ப்ரோகிராமும் நமக்கு இல்லைல… வா போலாம்… பீச்சுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு…”

ஜீவாவும் அவளின் முகத்தை கெஞ்சலாகவும் ஆவலாகவும் நோக்க, மேலும் பிகு பண்ணாமல் சரி என ஒத்துக் கொண்டாள். நாலாம் பக்கமும் தலையை அன்பு உருட்ட, அவளை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது ஜீவாவிற்கு. ‘இரு மகனே… மெயின் மேட்டர் இனிமே தான் இருக்கு… சாய்ந்தரம் நீ பேசும் போது அவ ரியாக்ஷனை கொஞ்சம் யோசி!’ மனசாட்சி நேரம் காலம் அறியாமல், அட்டென்டன்ஸ் போட்டது, ஜீவாவிற்கு…

****************************************************************************************************
மாலை ஐந்தரை மணிக்கு மெரினா பீச்சில் மூவரும் இறங்கினர். மூவரும் அலைகளில் சிறிது நேரம் கால்களை நனைத்துவிட்டு, கரையில் உட்கார்ந்தனர். வினோத் அன்பரசிக்கு தெரியாமல் ஜீவாவிற்கு கண் சமிஞ்சை செய்து, போனை எடுத்து பார்த்துவிட்டு, ஆபீசில் யாருடனோ அவசரமாக பேச வேண்டும் என்றான்.

“நீ பேசிட்டு வா வினோ… நாங்க இங்கயே வெயிட்டு பண்றோம். என்ன அன்பு உங்களுக்கு ஓகே தான?” ஜீவாவின் கேள்விக்கு அன்பு பதில் அளிப்பதற்குள், முந்திரி கொட்டை முந்திக் கொண்டது.

“ஆமா, என்ன ஜீ நீ இவளை போய் ‘வாங்க, போங்க’னு மரியாதை எல்லாம் குடுத்து பேசற? அவ என்னை விட பெரியவ… சும்மா ‘வா போ’னே சொல்லுபா…” ஜீவா வினோத்தின் அறிவை மனதில் மெச்ச, அன்பரசிக்கு சந்தேகம் சிறிதாக துளிர் விட்டது.

‘என்னை பேச விடாம இவன் எதுக்கு பேசிட்டு இருக்கான்? லூசு, என்ன பேசறான்னு தெரிஞ்சு தான் பேசறானா?’ அவள் யோசித்து முடிப்பதற்குள், வினோத் வெகு தொலைவுக்கு சென்றேவிட்டான்.

“எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க?” தன் காதுகளையே நம்ப முடியாமல், அன்பரசி ஜீவாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பெண்ணிடம் பேச்சை எத்தனையோ விதத்தில் ஆரம்பிக்கலாம்! இவன் என்னடா, நேரடியாக கல்யாணம் பத்தி பேசுகிறான்?!

அன்பை ஒரு நிமிடம் மவுனம் சூழ்ந்துக் கொண்டாலும், உடனேயே அதை உடைத்தேரிந்தாள். “அதுக்கெல்லாம் இன்னும் நிறைய நாள் இருக்கு. வாங்குன லோனுக்கே இன்னும் வட்டி தான் கட்டிட்டு இருக்கேன்… அதுக்குள்ள கல்யாணமா??? ஆமா, நீங்க எதுக்கு திடீர்னு கேக்கறீங்க?” விழிகள் அதன் ஆராயும் வேலையை செவ்வனே தொடங்க, அதில் ஜீவாவின் ஆர்வமான முகம் தப்பிக்கும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டது.

மேலும் அவளிடம் மறைப்பது நல்லதில்லை என தோன்றியது ஜீவாவுக்கு. “ஏன்னா… எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… எப்போனு தெரிஞ்சா கல்யாணம் பண்ணிக்கலாம்ல… அதுக்கு தான் கேட்டேன்!” ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் கொடுத்த அழுத்தமும், உறுதித் தன்மையும், அன்பரசியை வியப்பின் விளிம்பில் தள்ளியது.

ஓரளவிற்கு அவளும் எதிர்பார்த்தது தான்… என்றாலும் முதன்முதலாக கேட்கும் போது, நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. ஆம், முதன்முதலாக அவளிடம் காதலை கூறியது ஜீவாவே! அதற்கு ஒரு முக்கிய காரணம், சிறு வயது முதல் அவள் வினோத்துடன் இருந்தது.

பார்ப்பவர்கள் ஜோடியாக சுற்றுவதாக கருதியதால், யாரும் இவளிடம் காதல் கூற முன் வரவில்லை… ஆனால், அதற்காக எல்லாம், இவனை ஏற்றுக் கொள்ள முடியாது! “சாரி சார்… எனக்கு இந்த லவ்வு எல்லாம் பிடிக்காது… இது சரி வராது! நீங்க இந்த விஷயத்துல என்னை டிஸ்டேர்ப் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும்…”

சொல்லிவிட்டு அவள் எழுந்து நடக்க ஆரம்பிக்கவும், பின் தொடர்ந்தபடியே அவளிடம் வாதாடினான் ஜீவா. “ஏன் சரி வராது?? ஏன் லவ்னா உனக்கு பிடிக்கல?”

நின்று அவனை திரும்பி பார்த்து, ஒரு முடிவான குரலில், “எனக்கு பெருசா லவ்வுல நம்பிக்கை இல்லை. அவ்வளவு தான். பட், உங்கள வேணாம்னு சொல்றதுக்கு நிறைய ரீசன் இருக்கு. அதுல ஃபர்ஸ்ட், உங்க ஸ்டேட்டஸ்! கண்டிப்பா இது சரி வராது… ஐ ஆம் சுவர்” என்றாள்.

‘ஆமா, பெரிய சீன பெருஞ்சுவர்!! இவள வச்சிட்டு!!’ மனதிற்குள் திட்டிக் கொண்டே அவளுடன் நடந்தபடி, வினோத்திடம் ‘வசதி’ பற்றிக் கூறிய அதே வரிகளை இவளிடமும் ஒப்பித்தான். அப்போதும், நம் நாயகி ஒத்துக் கொள்ளவில்லை…

அவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது. வினோத்தும் ஜீவாவும் கூட்டு களவாணிகள் என நடந்ததையெல்லாம் நினைவு கூர்ந்து தானாகவே புரிந்துக் கொண்டாள்.

இப்படி சண்டை போட்டபடியே, வினோத் இருந்த இடத்திற்க்கு வந்திருந்தனர். அவனோ, இன்னும் யாருடனோ பேசுவது போல, நடித்துக் கொண்டிருந்தான். ஓங்கி அவன் நடு முதுகில் அடித்துவிட்டு, அனல் அடிக்கும் குரலில் கத்த ஆரம்பித்தாள். “போதும்டா, என்ன ஆஸ்கர் அவார்டா குடுக்கறாங்க? ஓவரா நடிக்கற?”

‘அம்மாமா’ என முதுகை தேய்த்துக் கொண்டே, “ஹே, எருமை! எதுக்குடி இப்படி அடிக்கற? என்னாச்சு??” என்றான் வினோத். கண்கள் ஜீவாவையும் அவளையும் மாறி மாறி அளவெடுத்தது. “ஹ்ம்ம்ம்… மன்னாங்கட்டியாச்சு! எதாவது திட்டிற போறேன்… உனக்கு ஒண்ணுமே தெரியாதுப் பாரு…! நீ இப்போ கிளம்புறீயா இல்லையா??”

அன்புவின் திட்டை வைத்து அவர்கள் என்ன பேசியிருப்பர் என்பதை யூகித்த வினோத் அமைதியாக, ஜீவா அவனின் அரணாக மாறினான். “இல்ல அன்பு. நான் தான் அவன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்…”

“சார் ப்ளீஸ்… நான் இவன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். வினோ, நான் வீட்டுக்கு கிளம்பறேன் நீ வரியா இல்லையா?” வினோத்தின் மேல் இருந்த கோபம், ஜீவாவின் மேல் பாய, ஒன்றும் சொல்லாமல் அதையும் ரசித்தான் அவளின் கண்ணாளன்.

மேலும் வாதாடாமல் வினோத் அன்புவுடன் நடக்க ஆரம்பிக்க, போகும் அவர்களையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா. அன்புவோ மிகுந்த கோபத்தில் இருந்ததால், வினோத்திடம் பேசவே இல்லை… தன்னிடம் அவன் ஒரு விஷயத்தை மறைத்துவிட்டான், என்றதிலேயே அவள் மனம் உழன்றது.

வினோத்தோ எப்படியும் திட்ட போகிறாள், யாருமில்லாத இடமாக பார்த்து வாங்குவோம் என முடிவு செய்து, பார்க்கிற்கு அவளை அழைத்துச் சென்றான். “என்ன திட்டனுமோ இப்ப திட்டுமா… ஸ்டார்ட் மியூசிக் அன்பு மேடம்…”

வலி மிகுந்த கண்களுடன், கைகளை கட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்த அன்பரசியை பார்த்ததும், அவனின் கார்டூன் கேரக்டர் பின்னுக்கு சென்று, சீரியல் அண்ணன் முந்திக் கொண்டு வந்தான்.

“ஹே என்ன ரொம்ப கோவமா இருக்க போல… ஜீ தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னான்… அதனால தான், இப்படி செஞ்சேன்! திட்டிட்டு நாங்க சொல்றதையும் கொஞ்சம் கேளு. ஹ்ம்ம்ம் என்ன? ஓகே வா??”

தலையை குனிந்து அவளை கெஞ்சலாக நோக்கவும், அன்பரசி அப்போதும் மௌனைத்தையே துணையாக்கிக் கொண்டாள். “ஹே என்ன லவ்ஸ்? எதுக்கு இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருக்க? என்ன தான் வேணும் உனக்கு?” அவனின் அதட்டலுக்கு பதிலாய் சிறு முனகலுடன், தேம்பல் ஓலியே கேட்டது.

அவ்வளவு தான் வினோத் டோட்டல் சரண்டர்!! “ஹே லவ்ஸ் சாரி சாரி… இனிமே இப்படி பண்ண மாட்டேன்.. பிராமிஸ்! நான் ஒரே ஒரு வாட்டி தான் ஜீவாவை மீட் பண்ணேன்…” அவளை தேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்குடன், அவர்கள் சந்தித்த போது நடந்தது அனைத்தையும் மறைக்காமல் கூறினான்.

கவனிக்காதது போல காட்டிக் கொண்டாலும், அன்புவின் மனது அவன் சொன்னதை நன்றாகவே குறித்துக் கொண்டது… அவன் முடித்ததும், அன்பு கண்களை கூர் வாளாக தீட்டி, அவனை எதிர்கொண்டாள். “எனக்கு தெரியாம எதுக்கு மறச்ச இந்த விஷயத்த? அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு…”

“ஹய்யோ.. எத்தனை வாட்டி சொல்றது?? ஜீ தான் சொல்ல வேண்டாம்னு சொன்னான். அதனால தான் சொல்லல.. தப்பு தான்மா… சாரி!! இதுக்கு மேல நீ என்ன முடிவெடுக்கிறியோ, அதுல தான் இருக்கு எல்லாமே. யோசிச்சு அப்புறமா…”

“இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல. நான் தான் முடியாதுனு அவருக்கிட்ட சொல்லிட்டேன்ல? அதுக்கப்புறம் எதுக்கு அத பத்தி பேசிட்டே இருக்க?? லீவ் இட். இனிமே அவர பத்தி பேச வேணாம்.”

முகத்தில் ரூத்தரதாண்டவம் ஆட அன்பு ஆர்டர் போட, வினோத் அதன் மேற்கொண்டு அவளிடம் வாதாட விரும்பவில்லை. ‘ஓவரா பொங்கறாளே?? கொஞ்ச நாள் கழிச்சு, திரும்ப பத்த வைப்போம்’ என முடிவு செய்து, அப்போதைக்கு அமைதி காத்தான்.

எல்லாம் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது... ஜீவாவும் வினோத்தும் போனில் சாட் செய்தனர். அடுத்த வாரம், ஜீவா வழக்கம் போல ஆசிரமம் வரவும் அன்பரசியால் தாங்க முடியாது போயிற்று!

அந்த வாரம் முழுவதும் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், அடிக்கடி அவன் ஞாபக அலைகள் அவளை அடித்தது மட்டுமல்லாமல் அவளை இழுத்தும் செல்ல, இதற்கொரு முற்று புள்ளி வைக்க எண்ணி நேராக அவனிடம் விரைந்தாள்.

“நான் தான் என்னை டிஸ்டெர்ப் பண்ணாதீங்கனு சொன்னேன்ல? அப்புறம் எதுக்கு திருப்பி இங்க வந்திருக்கீங்க? நீங்க எத்தனை வாட்டி கேட்டாலும் என்னோட பதில் மாறாது! தெரிஞ்சுக்…”

அன்பரசியின் பேச்சை நிப்பாட்டியது ஜீவாவின் செய்கை! வலது கையை ‘நிறுத்து’ என்பது போல அவன் காட்டவும், அவளால் நிறுத்தாமல் இருக்க முடியவில்லை…. “ஹல்லோ ஹல்லோ… கொஞ்சம் நான் பேசலாமா? அப்புறம் பொறுமையா திட்டுமா.”

கைகளை மடக்கிக் கொண்டு முகத்தை அசாதாரணமாக அன்பு வைக்க, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஜீவா பேசினான். “முதல்ல ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ! ஃபர்ஸ்ட் டைம், நான் உன்னை பார்க்க தான் வந்தேன் இங்க. ஆனா, அதுக்கப்புறம் வந்தது எல்லாமே குழந்தைகளுக்காக தான்.

நீ போற மத்த இடத்துக்கெல்லாம் வர தெரியாதா எனக்கு? இங்கயும் ஸ்கூல்லையும் மட்டும் எதுக்கு பார்க்கனும்?? அப்புறம் ரெண்டாவது… உன் பின்னாடி சுத்தறது மட்டுமே எனக்கு வேலை இல்லை!! எனக்கு நிறைய வேலை இருக்கு… தென், அன்னிக்கு அம்பதாயிரம் குடுத்தது கூட எனக்கு பசங்களுக்காக குடுக்கனும் போல தோணுச்சு!

அதனால தான் குடுத்தேன்.... போதுமா?? இப்போ மேடம் கொஞ்சம் போனீங்கனா நான் குழந்தைகளோட விளையாடுவேன். ஹ்ம்ம் என்ன சொல்ற?”

அவன் பேசப் பேச தனக்குள் எதுவோ உடைவது போல உணர்ந்தாள் அன்பு. பேசிவிட்டு அவன் பாட்டுக்கு சென்றுவிட்டான், குழந்தைகளிடம். இவள் தான் முட்டிக் கொண்டு வந்த அழுகையை அடக்க முடியாமல், உள் அறைக்குள் சென்று மனம்விட்டு அழுதாள்.

அப்படி கண்ணீர் சிந்திய நேரத்தில் அவளுக்கே சந்தேகம் வந்தது… எதற்காக தான் அழுகிறோம்? தன் மனம் ஏன் வருந்துகிறது? கிடைத்த விடை ஆச்சரியத்தை கொடுத்த நேரத்தில், அவளை தேடி வந்த வினோத் இவள் அழுவதை பார்த்து திகைத்து நின்றான்.

“ஹே லூசு.. எதுக்கு இங்க வந்து அழுதுட்டு இருக்க? என்னாச்சு உனக்கு?”

“வினோ… வினோ.. அவன் என்னை பார்த்து எப்படி பேசிட்டான் தெரியுமா?”

யார் என்று சத்தியமாக வினோத்துக்கு புரியவில்லை. “இங்க பாரு, முதல்ல இப்படி ஊஊனு அழறதை நிறுத்திட்டு, ஒழுங்கா என்னாச்சு சொல்லு!” கண்களை துடைத்துக் கொண்டு, ஒரு அப்பாவித்தனமான லுக்குடன், அன்பரசி நடந்ததை அவனிடம் கூறினாள். சினுங்கலுடன் தான்!

முடிக்கும் தருவாயில், “அவன் தானடா உன்னை பிடிச்சிருக்குனு சொன்னான்? இப்போ வந்து, ‘உன்னை பார்க்க வரல. உன் பின்னாடி சுத்தறது மட்டுமே எனக்கு வேலை இல்லை’னு என்னமோ உளறிட்டு போறான்! எனக்கு வந்த கோவத்துக்கு..” என்று அன்பு ஆத்திரத்தில் வார்த்தை கிடைக்காமல் நிறுத்த, அதை தன் பாணியில் நிறப்பினான் அவள் நண்பன்.

“வந்த கோவத்துக்கு நேரா இங்க வந்து அழ ஆரம்பிச்சிட்டியாக்கும்??” அவனை ஓரக் கண்ணால் முறைத்துவிட்டு அன்பு மௌனிக்க, வினோத் மேலும் அவளை ஓட்டினான்.

“ஆமா, உனக்கு என்ன தான் பிரச்சனை? ஜீ லவ் சொன்னப்பவும் திட்டுன. இப்போ அவன் உன்னை கண்டுக்கலனு கோவப்படுற! அதுக்கும் சேர்த்து வேற அவனை திட்டுற? என்ன தான்டி பண்ணுவான் அவனும்?”

“போடா எருமை! உன்கிட்ட போய் எல்லாத்தையும் சொன்னே பாரு. என்னை சொல்லனும்…” அன்பரசியின் சலிப்பான குரலில், மேலும் குதூகலமடைந்தது வினோத்தின் முகம்.

“ரொம்ப சலிச்சுக்காத லவ்ஸ்! உன்னை போய் லவ் பண்றான்ல? ஜீ தான் அந்த வேலையை பார்க்கனும்!”

“ஏன்டா அவன் சலிச்சுக்கனும்? நான் என்ன அவ்ளோ மோசமா?”

“பின்ன இல்லையா??? ஊருல பையாலஜி, பிசிக்ஸ் ஏன் பி.டி. டீச்சர் கூட நல்லா கெமிஸ்ட்ரி பண்றாங்க!!! நீயும் இருக்கியே? பேரு தான் பெருசா கெமிஸ்ஸ்ஸ்ட்ரி டீச்சர்… லவ் சொன்ன பையன பிடிச்சிருந்தும் திட்டிட்டு இருக்க! கஷ்டம் கஷ்டம், உன்னை வைச்சிட்டு ஜீக்கு தான் ரொம்ப கஷ்டம்…”

நன்றாக முதுகில் நான்கு வாங்கிய பிறகே, வினோத்தின் வாய் அடங்கியது. அப்போது சிரித்து மறந்தாலும், ஜீவாவின் நினைவலைகள் அன்பரசியை அன்று முழுமையாக ஆக்கிரமித்தன. அடுத்த நாள் பள்ளி வாசலில் வினோத்தின் பைக்கியிலிருந்து இறங்கும் போது, கண்கள் அனைத்து திசையிலும் அலைந்தது அவனை தேடி!

ஜீவா காதல் சொன்ன நாளிலிருந்து அவன் தன்னை தொடர்வதை அன்பரசியும் அறிந்துக் கொண்டாள். ஏன்னென்றால், ஜீவா முன் போல் மறைந்திருந்து பார்க்கவில்லை. நேராக இவர்களிடம் வந்து ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு, வந்த வேகத்திலேயே சென்றுவிடுவான்.

ஆனால், இன்று ஆளை காணோமே! நேற்று வீராப்பாக பேசிவிட்டதால், முன்பு வராமல் ஒளிந்திருக்கிறானா? “யார தேடற? ஜீவாவ தான?” வினோத்தின் நக்கலில், அவசரமாக மறுத்தாள் அன்பு. “இல்ல இல்ல… எனக்கு வேற வேலை இல்ல பாரு... பை!” விடுவிடுவென சென்ற அவளை பார்த்து வினோத் சிரித்த வேளையில், அவன் தோளில் ஒரு கை விழுந்தது.

வேற யார், நம் ஹீரோ தான்! “ஹே, கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்க கூடாது? உன் ஆளு உன்னை ரொம்ப தேடுனா தெரியுமா?”

ஒரு சந்தோஷ முறுவலுடன், ‘ஹ்ம்ம்ம்’ என கூறி பேசலானான் ஜீவா. “நான் ஃபர்ஸ்டே வந்துட்டேன்டா. அவ தேடுனத எல்லாம் பார்த்துட்டு தான் இருந்தேன்! கொஞ்ச நாள் கண்ணுல படாம இருக்கேன். அப்போ தான் மேடமுக்கு நம்ம பீளிங்க்ஸ் புரியும்.

அதனால தான், நேத்துக் கூட அப்படி பேசினேன்! நீ எதுவும் கண்டுக்காத….”

“எப்பா சாமி! நீயாச்சு அவளாச்சு! என்னை ஆள விடுங்க… அன்னிக்கு நான் வாங்குனதே போதும்!” இதை கேட்டு ஜீவா வாய்விட்டு சிரிக்க, பைக்கை கிளப்பி வினோத் விடைப்பெற்றான். வினோத்திடம் இப்படி கூறினானே தவிர, ஜீவா மனதிற்குள் வேறு ஒரு திட்டம் தீட்டினான்.

ஆனால், அவன் எதிர்ப்பார்க்காத இடத்திலிருந்து திட்டத்தில் ஓர் மாறுதல் வந்தது… அந்த மாறுதல் நன்மையை விளைவிக்குமா?
 
நானும் வந்துட்டேன்,
சிந்துலக்ஷ்மி டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Super sis
 
Top