Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 10

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 10

அன்பரசியையே ஆவலுடனும், ஒரு குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா. அவளோ அவனின் நண்பர்களை முறைப்பதிலேயே குறியாக இருந்தாள்! சிறிது நேரம் கழித்து திட்டவும் செய்தாள். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, உங்க மனசுல? இந்த மாதிரி கடத்திட்டு வரற்து தான் உங்க ஸர்ப்ரைஸா?

அவரோட வீட்டுல எல்லாரும் எவ்வளோ டென்ஷன் ஆகிருப்பாங்க? எப்படி தான் உங்களுக்கு இந்த மாதிரி மொக்க ஐடியா எல்லாம் தோணுதோ!” இதற்குள் ஜீவா மறுபடியும் நடுவே புகுந்து சமாதானக் கொடியை பறக்கவிட்டான். “என்னோட பேரன்ட்ஸ் கிட்ட இவங்க இதை பத்தி முன்னாடியே சொல்லிட்டாங்க. ப்ளீஸ், நீங்க டென்ஷன் ஆகாதீங்க”

“பாஸ், நீங்க என்ன இவங்களுக்கு சப்போட்டா பழம் மாதிரி சப்போர்ட் பண்றீங்க? அவ டென்ஷனா இருக்கா. பேசாம இருங்க!” வினோத்தின் நக்கலில், கண்களில் கோபம் கொந்தளிக்க, சிறிது திமிருடன் அன்பு வினோத்தை பார்க்கவும், அவள் முகத்திலிருந்து பார்வையை அகற்ற முடியாமல் அவளையே நோக்கினான் ஜீவா.

அதற்குள் ஜீவாவின் நண்பன் ஒருவன் பேச ஆரம்பித்தான். “இல்ல சிஸ்டர், இவன் தான் எங்களுக்கு எல்லாமே! ரொம்ப ஸ்பெஷல்… அவன் சொல்றத தான் எப்போவும் கேப்போம். இப்போ கொஞ்சம் மாத்தி பண்ணலாம்னு யோசிச்சோம். அது சொதப்பிருச்சு!”

தலையை தடவியபடி அவன் சொல்லவும், அன்பரசியின் கோபம் தனிந்தது. சிறிது புன்னகைக்கவும் செய்தாள்! அது கொடுத்த தெம்பில், மேலும் ஜீவாவை ஓட்டினான் வினோத். “பாஸ், அப்போ நீங்க தான் இங்க டான்னா?? சொல்லவே இல்லையே நீங்க?”

“ஹே அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல…” ஜீவா ஒருபக்கம் மறுக்க, அதற்குள் கடிகாரம் பன்னிரெண்டை தொட, ஜீவாவின் நண்பர்கள், “ஹாப்பி பேர்த்டேடா, ஹாப்பி பேர்த்டே மச்சி” என சந்தோஷமாக கோஷம் எழுப்பினர். ரிசப்ஷனிஸ்டும், காவலாளியும் வேறு ஒரு வேலையாக சென்றுவிட, அன்பரசி வினோத்துடன் இருந்தாள்.

கேக் கொண்டு வருவதற்குள் வினோத்தும், அன்பரசியும் தங்களுடைய வாழ்த்துக்களை ஜீவாவிடம் கூறினர். ஜீவா எவ்வளவு முயன்றும் அன்புவிடம் இருந்து அவனுடைய மனதின் ஓட்டத்தை மாற்ற முடியவில்லை. வாழ்த்து கூறும் போது கொடுத்த கையை விடவும் மனசு இடம் தரவில்லை!

கேக் கட்டிங் எல்லாம் முடிந்து, அவளும் வினோத்தும் செல்லும் போது வெளியே சென்று வழி அனுப்பினான். அன்பரசியை பற்றி மட்டுமே அடுத்து வந்த நாட்களில் சிந்திக்களானான்.

ஆனால், இரண்டு நாட்கள் கூட பொறுக்க முடியாமல், அன்பரசியை மனம் தேட துவங்கியப் போது தான், அவனுக்கே அவனின் காதல் புரிந்தது. எப்படி அவளை தேடுவது, என்பதற்கு விடையாய் அவன் போனில் பளிச்சிட்டது அவள் தொலைப்பேசி எண்!

இது போதுமே! அவனின் நண்பன் ஒருவனை அணுகி, அடுத்த நாளே அவளின் ஹாஸ்டல் முகவரியை கண்டுக் கொண்டான். அந்த வார சனிக்கிழமை சரியாக காலை எழு மணிக்கு அவள் ஹாஸ்டலின் வெளியே காருடன் வந்து நின்றான்.

அவன் வந்துவிட்டான், ஆனால் அன்பு தான் வெளியே வரவில்லை! அவனின் பொறுமையை மிகவும் சோதித்து, பத்து மணியளவில் வினோத் வந்து நிற்க, இவள் அவனுடன் பைக்கில் ஏறி செல்லவும், பெருமூச்சுடன் ஜீவாவும் தொடர்ந்தான் அவர்களை…

அவர்கள் சென்று நின்ற இடம் - அன்பு வளர்ந்த ஆசிரமம். உள்ளே நுழைந்ததும் வழக்கம் போல் வினோத்தும் அன்புவும் வேலையை தொடர, ஜீவா எப்படி உள்ளே செல்லலாம், என யோசித்தான்.

சரி ஏதாவது, டொனேஷன் குடுப்பது போல போகலாம் என முடிவு செய்து உள்ளே சென்றும் விட்டான். முதலில் அவனை கண்டது வினோத் தான். “ஹலோ டான்… எப்படி இருக்கீங்க? எங்க உங்க கடத்தல் கூட்டத்த காணோம்?”

“ஹே சும்மா டான் டான்னு கலாய்காதீங்க வினோத். என்னை ஜீவானே கூப்பிடுங்க.”

தோளில் கைப் போட்டு ஜீவா கேட்கவும், வினோத்தும் தலையசைத்தான். “ட்ரை பண்றேன்! ஆமா, நீங்க இங்க என்ன பண்றீங்க?”

“நான் டொனேஷன் கொஞ்சம் குடுக்கலாம்னு வந்தேன்.” இதை கேட்டவுடன் வினோத்தின் முகம் நூறு வாட்ஸ் பல்ப் போல மின்னியது. “தாங்கஸ் பாஸ்… ரொம்ப சந்தோஷம். நீங்க உள்ள போய், முதல்ல இருக்குற டோர் ஓப்பன் பண்ணீங்கனா அங்க தான் லவ்ஸ் இருப்பா.

சாரி சாரி, அன்பரசி இருப்பா. அவகிட்ட சொன்னா போதும். அவ பார்த்துப்பா. எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. அப்புறமா பார்க்கலாம்… பை பாஸ்” வினோத் மடமடவென்று எல்லாவற்றையும் கூறிவிட்டு செல்லவும், ஜீவாவும் ஆவலுடன் அவன் கைகாட்டிய அறைக்குள் சென்றான்.

அங்கே அன்பு உட்கார்ந்து சிஸ்டர் சவீதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் புன்னகைத்து வரவேற்றாள். இதில் சிஸ்டரிடம் நமுட்டு சிரிப்புடன் அறிமுகம் வேறு. “சிஸ்டர் அந்த கடத்தல், போன் கால், பேர்த்டே பாய் இவங்க தான்.”

சவீதா வரவேற்கவும் அவருக்கு போன் கால் வரவும் சரியாக இருந்தது. அவர் பேசிக் கொண்டு வெளியே செல்லவும், அன்பு யோசனையுடன் ஜீவாவின் முகத்தை நோக்கினாள். “நான் டொனேஷன் குடுக்கனும். வினோத் உங்களை பார்க்க சொன்னாரு.”

வினோத்திடம் தோன்றிய அதே ரியாக்ஷன் அன்புவிடமும் தோன்றியது. “ஹோ சூப்பர் சார், கொஞ்சம் இருங்க. ரெசிப்ட் புக் எடுத்துட்டு வரேன்.” கூறியபடி அவள் எடுத்து வந்ததும் எவ்வளவு டொனேஷன் என கேட்டாள் அன்பு. “இங்க எத்தனை பசங்க இருக்காங்க?”

“இங்க பாய்ஸ் 258 பேர். பொண்ணுங்க மட்டும் 225 பேர் இருக்காங்க.”

அன்பரசி கூறியதை கேட்டு புருவம் உயர்ந்திட, ஐம்பதாயிரம் என்றான் ஜீவா. இப்போது வாயை பிளப்பது அன்பரசி முறையாயிற்று. அங்கு நன்கொடை அளிப்பவர்கள் தோராயமாக ரெண்டாயிரம் அல்லது ஐந்தாயிரம் தான் அளிப்பர். மேக்சிமம் பத்தாயிரம்!

ஆனால், இவனோ அசால்ட்டாக ஐம்பதாயிரம் என்கிறான்? அவனை பார்த்தால், வசதியான வீட்டு பையன் போல் தோன்றினாலும், இவ்வளவு பெரிய நன்கொடையை அன்பு சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்துடன் அவள் அவனின் செக்கை வாங்கவும், ஜீவாவின் கேள்வி அவளை திசை திருப்பியது.

“எனக்கு குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும். அதான், இவ்வளவு… உங்களுக்கும் குழந்தைங்கனா ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி இங்க வருவீங்களா??”

அவனின் கேள்வியை கேட்டு ஒர் வெற்று புன்னகையுடன், ஆழமான குரலில் பதிலளித்தாள் அன்பு. “நான் இங்க தான் வளர்ந்தேன்” அடேங்கப்பா… ஒரு வரியில் எத்தனை அர்த்தங்கள்… எத்தனை வலிகள்… எத்தனை பதில்கள்!!!

அவளுக்கு சிறு வயதில் கிடைக்காத அன்பு மொத்ததையும் நாம் அளிக்க வேண்டும் என மனதில் உறுதி மொழி எடுத்தான். ஜீவாவின் முன் கைகளை ஆட்டி அவனை நினைவுலகிற்கு கொண்டு வந்தாள் அன்பரசி.

“குழந்தைங்கனா பிடிக்கும்னு சொன்னீங்க.. வாங்க அவங்ககிட்ட போலாம்.” அவளுடன் செலவிட்ட நேரங்களில், ஜீவாவின் மனதில் அன்பிற்கான இடம் ஆழமாக வேரூன்றிப் போனது.

அங்கே இருந்த குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட போதும், கண்கள் அன்பையே சுற்றிக் கொண்டிருந்தது. அதை தெரிந்தோ தெரியாமலோ, சவீதா சிஸ்டர் அவனிடம் வந்தார். “நீங்க கொடுத்த டொனேஷன் எங்க பசங்களுக்கு ரொம்ப ஹெல்புல்லா இருக்கும். ரொம்ப தாங்க்ஸ் தம்பி.”

“அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சிஸ்டர். உங்கள மாதிரி குழந்தைங்கள ஒழுங்கா பார்த்துக்கறது தான் கஷ்டம்!” ஜீவா அன்பரசியும் காண்பித்து சொல்லவும், அவளின் சிறு வயது வாழ்க்கையை பற்றி சிஸ்டர் அவனிடம் கூறினார். கேட்டு மலைத்து போனான் ஜீவா.

அந்த நிமிடம் முடிவு செய்தான், அன்பரசி தனக்கேயுரியவள் என. அன்றிலிருந்து யாருக்கும் தெரியாமல், சொல்லாமல் அன்பரசியை பின் தொடர ஆரம்பித்தான் ஜீவா.

அன்பு காலையில் வேலைக்கு செல்லும் போது பார்ப்பான். பிறகு, வார இறுதி நாட்களில் அவள் அடிக்கடி செல்லும் இடத்திற்கேல்லாம் இவனும் அட்டென்டன்ஸ் போட ஆரம்பித்தான். இயல்பாகவே அவனுக்கு குழந்தைகள் பிடிக்கும் என்பதால், ஆசிரமம் மட்டும் ஸ்பெஷல் ஆனது.

இப்படியே இரண்டு வாரங்கள் கழிய, அன்பரசி இதையெல்லாம் கவனித்தாகவே காணோம்… பேசாமல் நேரடியாக ப்ரோப்போஸ் பண்ணிடுவோமா என்று ஜீவா யோசித்த வேளையில் தான், அவனை வினோத் தொலைப்பேசியில் அழைத்தான்.

ஜீவாவை சிறிது நேரம் தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறவும், லேசாக சந்தேகம் வர, சரி என்றான் ஜீவா. ஒரு காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்று கூறிவைத்த நிமிடம் அவன் மனதில் தோன்றியது எல்லாம் இதுவே – ‘வினோத்துக்கு நம்ம மேல டவுட் வந்துடுச்சா? சரி சமாளிப்போம். எப்படி இருந்தாலும் சொல்லி தான் ஆகனும்!’

அவனின் சந்தேகம் சரியாகவே இருந்தது. காபி ஷாப்பில் இருவரும் ஆர்டர் செய்ததும், வினோத் நேரடியாக கேட்டே விட்டான். “பாஸ் உங்களுக்கு அன்பை பிடிச்சிருக்கா?”

அவனை ஆச்சரியமாக ஜீவா நோக்கவும், விளக்கினான் அந்த உத்தம நண்பன். “நீங்க லவ்ஸை ஃபாளோ பண்றது எனக்கு நல்லாவே தெரியும். அவ போற இடத்துக்கெல்லாம் நானும் தான கூடப் போறேன்? அந்த லூசு உங்கள கவனிச்ச மாதிரியே தெரியல… நான் தான் டவுட் பட்டு, உங்கள பத்தி விசாரிச்சேன். உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா??”

“டேய் பயங்கறமான ஆளா இருக்கியே? கேளு கேளு என்ன கேக்கனுமோ கேளு…”

இலகுவான குரலில் ஜீவா பதிலளிக்கவும் தைரியம் வரப் பெற்று, கேட்டான் வினோத். “நீங்க அன்பை பார்க்கறப்போ எல்லாம் நானும் அவ கூட இருந்துருக்கேன். நீங்க எதுவும் இன்செக்யூர்ட்டா ஃபீல் பண்ணலையா?”

இக்கேள்வியை கேட்டு நன்றாக சிரிக்க ஆரம்பித்தான் ஜீவா. ஆனால், இந்த கேள்வி எப்போதும் வினோத்தின் மனதிலும், அன்புவின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒன்று தான்!

தங்களை திருமணம் செய்துக் கொள்பவர்கள், அவர்களின் நட்பின் மேல் சந்தேகம் கொள்ளாமல், அவர்களின் உறவை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும்! அப்படி இருந்தால் தான், அவர்கள் ‘பாஸ்’ இல்லையென்றால் ‘ஃபெயில்’ என அடிக்கடி வினோத் அன்பரசியிடம் கூறுவான்.

அதனாலேயே இந்த கேள்வியை அவன் ஜீவாவின் முன்வைத்தது. சிரித்து முடித்ததும், ஒரு அறிந்த பார்வையுடன் பேசினான் ஜீவா. “இதெல்லாம் ஒரு கொஸ்டின், அத வேற நீ கேக்கற? இருந்தாலும் ஆன்சர் பண்றேன், கேட்டுக்கோ.

எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தா நல்ல பிரண்ட்ஸ் மாதிரி தான் தோணுச்சு, முதல்ல. அதுக்கப்புறம், சவீதா சிஸ்டர் சொன்னது, உங்க ரெண்டு பேரையும் பார்த்ததுலாம் வெச்சு எனக்கு ஒண்ணு தான் தோணுச்சு.

நீ அன்புக்கு ஒரு அண்ணா ஸ்தானத்துல இருக்க… இல்ல இல்ல, அதுக்கும் மேல ஒரு ஃபாதர் பிகர்ல இருக்க! உங்கள பார்த்து எனக்கு இன்செக்யூர்ட் பீலிங்கா? நல்ல காமெடி!”

அவ்வளவு தான் வினோத்தின் மனதில் மேலே மேலே, சென்றான் ஜீவா. ஆனால், அவனையும் யோசனைக்குள்ளாக்கியது ஜீவாவின் அந்தஸ்த்து. ஒரு மலர்ந்த முகத்துடன், “எனக்கு என்ன சொல்றதுனே தெரியல பாஸ். எனக்கு உங்கள பிடிச்சிருக்கு. உங்கள பத்தி கொஞ்சம் விசாரிச்சேன்.

எல்லாமே நல்லவிதமா தான் இருந்துச்சு. ஆனா… நீங்க ஒரு பிக் ஷாட். வேற லெவல் உங்க குடும்பம். அது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.” என்றான் நெகிழ்ந்து.

ஒரு பெருமூச்சுடன் அவன் கைகளை பற்றி பேச்சை தொடர்ந்தான் ஜீவா. “எனக்கு உன்னோட யோசனை நல்லாவே புரியுது. இந்த விஷயத்துல என்னால எதுவும் பண்ண முடியாது, வினோ. நம்பிக்கை தானா வரனும்… ஆனா, என்னோட குடும்பத்த பத்தி கவலை வேண்டாம். என்னோட பேரன்ட்ஸ் சொத்து, பணம் இதெல்லாம் பெருசா பார்க்குற ஆளுங்க இல்ல. எனக்கு கூட பொறந்தவங்களும் யாரும் இல்ல. அதனால, நீ யோசிச்சுட்டு முடிவு சொல்லு. நோ பிராப்ளம். பட், அவகிட்ட இதை பத்தியெல்லாம் சொல்லாத.

நானே அவகிட்ட பேசிக்கறேன். ஓகே வா?” ஜீவாவின் அழுத்தமான குரல், உயிருக்குள் ஊடுறுவது போல் இருந்தது வினோத்திற்க்கு. “அன்பை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?” இதை கேட்டுவிட்டு, வினோத் ஜீவாவின் முகத்தை ஆவலுடன் பார்க்கலானான்.

“ஹ்ம்ம்ம்… எனக்கே ஆச்சரியமா இருக்கு. இப்படி நானும் லவ் பண்ணுவேன்னானு… அவள கடைசி வரைக்கும் சந்தோஷமா வச்சுக்கனும். அவளுக்கு சின்ன வயசுல கிடைக்காத அன்பையெல்லாம் அவளுக்கு குடுக்கனும். அவள வேற ஆளா பார்க்கவே முடியல என்னால… என்னோட ராணி அவ! ராணி மாதிரி அவள நான் பார்த்துக்கனும்! அதுமட்டும் தான் நான் நினைக்கிறேன் இப்போ.”

ஜீவாவின் இந்த பதிலை கேட்ட பிறகு, வினோத்திற்கு மேலே யோசிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தோன்றவில்லை. ஜீவாவின் கண்களில் பொய் தெரியவில்லை. முக்கியமாக சினிமா வசனம் போல் தோன்றவில்லை. மனதில் இருப்பதை அப்படியே படம் பிடித்து ஜீவா காட்டயது போல் இருக்க, இவனும் தன் சம்மதத்தை தெரிவித்தான்.

“ப்பாபாபா… என்னமா லவ் பண்றீங்க?? எனக்கு டபுள் ஓகே பாஸ். கரக்டான ரூட்ல போறீங்க… அப்படியே போங்க!” இதை கேட்டு சந்தோஷத்தில் அவனுக்கு ஹை-பை குடுத்தான் ஜீவா. “இன்னும் என்ன பாஸ் பாஸ்னு?? ஜீவானே கூப்பிடு. அப்புறம் தாங்க்ஸ்… போற ரூட்ல எந்த ஸ்பீட் பிரேக்கும் இல்லாம இருந்தா சரி!”

“ரைட்டு ஜீ! இனிமே நீ எனக்கு ஜீ தான்… வழியில ஸ்பீட் பிரேக்கா?? நீ வேறபா… உன்னோட ஆளு செக் போஸ்ட் எல்லாம் வச்சுருப்பா. அத எப்படி கிராஸ் பண்றதுனு யோசி”

வினோத் சொன்னதை கேட்டு சிந்தனையில் ஆழ்ந்தான் ஜீவா. எப்படி அவளை சம்மதிக்க வைப்பது? இப்படியே ஒரு நாள் முழுக்க யோசித்து, அடுத்த நாள் மாலையில் அவளிடம் தன் காதலை சொல்லியே விட்டான் அந்த கலாபக் காதலன்! இதை சற்றும் எதிர்பார்க்காத அன்பரசியின் நிலை தான் பரிதாபமாகியது….

Super ziz

[/QUOTE
Super sis
 
நானும் வந்துட்டேன்,
சிந்துலக்ஷ்மி டியர்
 
Last edited:
Top