Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 10

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 10

"அண்ணா இப்போ lunch முடிச்சுட்டு கிளம்புன்னா ட்ரைன்க்கு நேரம் சரியா இருக்கும்தானே?" மந்திர்ரை விட்டு வெளியில் நடந்து வந்தபடி கேட்டாள் மைதிலி.

"ஆமா மைதிலி.... ரெயில்வே ஸ்டேஷன் போய்ட்டு அங்க பக்கத்துல சாப்பிட்டுகலாம்..." என சொல்லிவிட்டு டாக்ஸியில் முன்பக்கம் சென்று அமர்ந்தான் கௌதம்..

வண்டியில் ஏறுவதற்காக கதவை திறந்து முன்னேறியவள், முடியாமல் நின்றாள். திரும்பி ராம்மை பார்க்க, அவன் இன்னும் அவள் கையை விடாமல் இறுக பற்றியபடி, சேர்ந்திருக்கும் அவர்கள் கைகளையே புன்னகையோடு பார்த்துக்கொண்டு நின்றான்.

"ஹேய் என்னடா? வா !!!" என அவனுடன் காரில் அமர்ந்தாள் மைதிலி.

காரில் நிறைந்த அமைதியை கலைத்தது கௌதமின் குரல்.

"இவ்ளோ அவசரம் இல்லாம கல்யாணம் பண்ணிருக்கலாம் மைதிலி....." கட்டுப்படுத்தியும் முடியாமல் அவன் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டது.

"நான்தான் காரணம் சொன்னேனே அண்ணா! இன்னும் அதையே சொல்லிட்டு இருக்கீங்களே?"

"அது உண்மையான காரணம் மாறி தெரிலம்மா.... எனக்காக சொன்ன சமாதானம் மாறிதான் தோனுது... காரணத்த என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு" அவளை சரியாய் கணித்திருந்தான் கெளதம்.

"சொல்ல கூடாதுனு ஏதும் இல்ல அண்ணா.... என்னோட கார்டியன் கேசவன் அங்கிள்க்கு நான் எங்க இருக்கேன்னு தெரியும்... இந்நேரத்துக்கு அவர் ராம்ம பற்றியும் தெரிஞ்சுவச்சுருப்பாரு.." என நிறுத்தியவள்,

"நான் ராம்ம கல்யாணம் செஞ்சுக்க அவர் சம்மதிக்க மாட்டாரு..." என்றாள் திடமாய்.

"ஆனா நீ எங்கே இருக்கானு அவர் ட்ரேஸ் பண்ண கூடாதுனு சொல்லிருக்கதானே? அப்புறம் எப்டி நீ ஜெய்பூர் காட்டேஜ்ல இருந்தான்னு அவருக்கு தெரியபோது?"

"அவர் நான் சொன்னதுக்காக என்னை கண்டுபுடிக்க ஏதும் பண்ணாம தான் இருந்தாரு.. பட் லாஸ்ட் வீக் நானும் ராமும் ஷாப்பிங் போனப்போ எங்க ஆஃபீஸ் ஸ்டாப் ஒருத்தர் பார்த்துட்டாரு..... அவர் கண்டிப்பா அங்கிள்ட்ட சொல்லுருப்பாரு..." காணாததை போல கண்டிருக்கிறாள் மைதிலி.

"ஹோ!"

"அவர் கிளம்பி வரதுக்குள்ள சிட்ரஹூட் போய்டனும்னுதான் உடனே கிளம்பினேன்... அவர் என்னை பார்த்துட்டா அவரோடவே கூட்டிட்டு போய்டுவாரு. அதனால தான் ராமை அவசரமா கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு... எந்த காரணத்துக்காகவும் அவரை நான் பிரியுறத விரும்பல அண்ணா!!!"

"அப்போ நான் சொல்லலானாலும் நீங்க வேர இடத்துக்கு போக ரெடியா இருந்திங்களா???"

"ஆமா அண்ணா... எங்க போறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.... "

பேச்சினூடே உணவகம் வந்துவிட பேசியபடியே மதியஉணவை முடித்துக்கொண்டு ட்ரைனில் ஏறி அமர்ந்தனர்.

இத்தனை நேரமும் ஒரு வார்த்தை பேசாமல், தான் அங்கு இருப்பதை கூட உணர்த்தாமல், மைதிலியை கண்டு பளிவரிசை தெரிய சிரித்துக்கொண்டே இருந்தான் ராம். இனி அவன் மையு அவனை விட்டு போகமாட்டாள் என்ற நிம்மதில்!
"என்னடா மூஞ்சில 1000வாட்ஸ் பல்ப் எரியுது!!!! நானும் ரொம்ப நேரமா பார்க்குறேன்...ஈஈஈனு பல்ல பல்ல காட்ற??? சப்புடுறப்போ கூட மைதிலி கையவிடவே மாட்டேங்குற?" ராமை சீண்டினான் கெளதம்.

"அட சும்மா இருங்களேன் அண்ணா,,, நெளியுராரு பாருங்க" தன்னருகே வெட்கத்தில் நெளிந்துகொண்டு அமர்ந்திருக்கும் ராம்மை கௌதமிற்கு சுட்டிக்காட்டினாள் மைதிலி.

"ஹாஹா!!! வாழ்கைடா உனக்கு!!" இன்பமாய் அலுத்துக்கொண்டான் கெளதம்.

"அண்ணா? சிம்கார்ட் ஒன்னு கேட்ருந்தேன்ல?" மைதிலி கௌதமிடம் நியாபகப்படுத்த,

"வாங்கிட்டேன் மைதிலி.... இதோ!!" புது சிம்கார்டை அவளிடம் கொடுத்தான் கௌதம்.

"கொஞ்சநாள்க்கு இந்த நம்பர் யூஸ் பன்றேன்.... எங்களை யாரும் தொல்லை பண்ணாம இருப்பாங்க....."

நிமிடங்கள் குதிரையாய் ஓட மைதிலி மடியில் தன் இரவு உறக்கத்தை தொடர்ந்தான் ராம்.

பொழுது புலர்ந்த நேரத்தில்.....!

சிட்ரஹூட் ரயில் நிலையத்தில் இறங்கியவர்கள் சில மணிநேரத்தில் அவர்கள் போக வேண்டிய மலைவாழ் மக்கள் கிராமத்தை அடைந்தனர்.

அங்கு புகையென கொட்டிக்கொண்டிருந்த நீர்வீழ்ச்சியாய் கண்டு பிரமித்து போன ராம், "மையு.....எவ்ளோ பெரியயயய வாட்டர் பால்ஸ் பாரேன்!..... நம்மளே உள்ள போய்டுவோம் போல.... நீ அது பக்கம் போகாத... சரியா???" என பொறுப்பாய் கண்டித்தான்.

"ஆமாடா,,, அவ சின்ன பாப்பா... அவளுக்கு தெரியாது பாரு ... பெருசா சொல்ல வந்துட்டான்..." ராமை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான் கௌதம்.

"நீ வாய மூடு.... அவ என்னோட wife... அவல இனிமே நான்தான் பாத்துக்கணும்.... சரிதானே மையு?" பெரிய மனுஷன் போல அவன் கேட்க,

"நீ சொன்ன சரிதான் ராம்.... இனி நீ்தான் என்ன பாத்துக்கணும்..." ராமின் கைகளுக்குள் தன் கையை நுழைத்தபடி சிரிப்போடு நின்றாள் மைதிலி.

"நம்ம தான் கரேக்ட் ப்ளேஸ்கு வந்துட்டோம்ல? இன்னும் இவன் என்ன பண்றான் இங்க.... போக சொல்லு மையு.... சும்மா தொல்லை பண்ணிட்டு இருக்கான்...." கௌதமை முறைத்தபடி ராம் மையுவிடம் அவனை துரத்திவிட வழி சொன்னான்.

"அடேய்... நான் என்ன உனக்கு கூகிள் மேப்பா? வேல முடிஞ்சதும் கலட்டிவிடுற??" என சத்தமாக சொன்ன கௌதமை பார்த்து, "விடுங்க அண்ணா... நீங்க இங்க இருக்கவர்கிட்ட பேசிடுங்க அண்ணா!!! நேரமாச்சு,,, இவருக்கு பசிக்கும்..." என்று பேச்சை மாற்றினாள் மைதிலி..

கௌதம் அந்தப்பக்கம் நகர்த்தும்,"மையு மையு!!! நம்ம இனி இங்கதான் இருக்க போறோமா?" என்றான் ராம்.

"ஆமா ராம்... இங்கதான் இனி கொஞ்சநாளைக்கு இருப்போம்... இந்த இடம் பிடிச்சிருக்கா உனக்கு??"

"ம்ம்ம்... சூப்பரா இருக்கு மையு... அங்க இருக்கமாறி நம்மக்கும் வீடு இருக்கா??" கூடாரங்கள் போன்ற அமைப்பில் இருந்த வீடுகளை காட்டி கேட்டான் ராம்.

"கௌதம் அண்ணா வந்ததும் சொல்லுவாங்க ராம்...."அவள் சொல்வதற்குள் அங்கு வந்தான் கௌதம்.

"மைதிலி எல்லாம் பேசிட்டேன்... அவங்க பார்த்துபாங்க...! இன்னைக்கு நீங்க இந்த இடத்த சுத்தி பாக்கலாம்... உங்களுக்குன்னு ஒரு வீடு ரெடி,, நாளைக்கு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் ஆகும்...." என்றவனை இடைமரித்த ராம், " ட்ரீட்மெண்ட்டா? உனக்கு தானே??? சீக்கிரமா டாக்டர்ர பாரு...."என அவனிடம் சொல்லிவிட்டு, மெல்லிய குரலில் சொல்வதாக எண்ணிக்கொண்டு மைதிலியிடம்," இவனுக்கு உடம்பு சரி இல்லயா? பாவம்.... நான்கூட இவன லூசுன்னு நெனச்சுட்டேன்!!" என்றான்.

"உஸ்ஸ்!!! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது!" என மையு கண்டிப்பதற்குள், "சொல்லுவடா நீ!!! ஏன் சொல்லமாட்டா? நல்லா இருக்க எனக்கு ஒரு பொண்ணு கூட கிடைக்கல.... உனக்கு எல்லாம் நேரம்டா!!! ஆமா?? தெரியாமதான் கேக்குறேன்?!! உனக்கு என்ன இங்க ஹனிமூன் வந்துருக்கோம்னு நெனப்பா???" என்றான் கௌதம்.

"ஹனிமூணா???"-ராம்

"அண்ணா ,, கொஞ்சம் சும்மா இருங்க... நம்மக்கு வீடு எது குடுத்துருக்காங்க???"

"அதோ!!! அதுல முதல் வீடு....!!"

அவன் காட்டிய பக்கம் பார்த்தவள், கதவு வைத்த குகை போன்ற அமைப்பில் இருவர் மட்டுமே தாங்கும் அளவில் இருந்த வீட்டை காட்டி, "ரொம்ப வித்தியாசமா இருக்கு அண்ணா!!" என்றாள்.

"இங்க அப்படிதான் மைதிலி...இன்னைக்கு இங்க சாப்பிட்டுக்கலாம்.. நாளைல இருந்து நீதான் சமைச்சுக்கனும்... இங்க சமையலுக்கு வேண்டியது கிடைக்கும்... உனக்கு எல்லாம் ரெடி செஞ்சு குடுத்துட்டு நான் போறேன்..."

"எப்போ போவ?" என இடையில் கேட்ட ராமை முறைத்தான் கௌதம். பின்பு, " சாயங்காலம் ராம்மை வைத்தியர்ட்ட காட்டிடலாம்... தினமும் 5 மணிநேரம் வைத்தியர் குடில்ல ராம் இருக்கணும்... மூலிகை வைத்தியம் தான்... பயப்படவேணாம்... காலைல சாப்பிட்டுட்டு அங்க அனுப்பிடு... ஈவினிங் அவங்களே கொண்டுவந்து விட்டுடுவாங்க... கொஞ்ச தூரம் தான் இங்க இருந்து!!" கெளதம் சொன்னதற்கு சரி என தலையசைத்தாள் மைதிலி.

காலை உணவின் பின்னர் மூவருமாய் சேர்ந்து அவர்களின் புது வீட்டை சீர் செய்தனர். அருகில் உள்ள இடங்களை சுற்றி காட்டியபடி, அவர்களுக்கு தேவையான பொருட்களை அங்கே ஏற்பாடு செய்து கொடுத்தான் கௌதம்.

மாலை கதிர்கள் படர தொடங்கிய போது, ராமை வைத்தியரிடம் அழைத்து சென்றான் கௌதம்.

ராமை சில நொடிகள் பார்த்தவர்,, பின்பு அவனிடம் ஏதோ சொன்னார்... அரைமணிநேரம் சென்று வீடு வந்தவர்களை, "என்னாச்சு அண்ணா? அதுக்குள்ள வந்துட்டிங்க?? வைத்தியர் என்ன சொன்னாரு???" என வினவினாள்.

"இவன் மூஞ்சியை உத்துப்பாத்தாரு... அப்புறம் மனுஷன் என்ன நெனச்சாரோ தெரியல.... நாளைக்கு அனுப்புங்கனு சொல்லிட்டாரு...." விளையாட்டு போல கெளதம் சொல்ல,

"என்ன அண்ணா இப்படி சொல்றீங்க?? ராம்மை சரி பண்ணிடலாம் தானே??" என்று கவலையாய் கேட்டாள் மைதிலி.

"எனக்கு என்ன மையு?? நான் நல்லா தானே இருக்கேன்?" என ராம் கேட்கவும், அவனை அருகே வைத்துக்கொண்டு பேசிய தன் முட்டாள்த்தனத்தை உள்ளுக்குள்ளே திட்டிக்கொண்டு, "இல்ல ராம்... உனக்கு ஒன்னும் இல்ல...." என்று சொன்னாள் மைதிலி.

"பின்ன? அப்புறம் எதுக்கு நான் அங்க டெய்லி போனும்?" விடாது கேட்டான் அவன்.

என்ன சொல்லி சமாளிப்பது என மைதிலி யோசிப்பதற்குள், "ஹான்! நீ புது மாப்பிள்ளை ஆகிட்டல்ல மச்சான்.... அதான் கொஞ்ச நாளைக்கு அங்க, உனக்கு கோச்சிங் கிளாஸ் நடத்துவாங்க..." என்றான் கௌதம் நக்களோடு.

"அண்ணணாா........ ! நீங்க பாட்டுக்கு எதாவது சொல்லிட்டு போகாதிங்க அண்ணா.... அவரை பற்றி உங்களுக்கு சரியா தெரியாது!!!!" என இறைஞ்சலோடு சொன்னாள் மையு.

"ஆமா ஆமா... புருஷன் பொண்டாடிக்குள்ள நெறய இருக்கும்.... நான் எதுக்கும்மா நடுவுல நந்தி மாறி... நான் டெய்லி போன் பன்றேன்.... சரியா மைதிலி... இப்போ கெளம்புனா நாளைக்கு காலைல போயிடுவேன்... கிளம்புறேன்ம்மா" கெளதம் விடைபெற,

"ஹான்!!! சரி சரி போய்ட்டு வா!" என்றான் ராம் முந்திக்கொண்டு..

அவனை முறைத்தவன், "டேய்.... ரொம்ப பண்ணுறடா நீ!!!" என்றான்.

"நீங்க கோச்சுக்காதிங்க அண்ணா.... பார்த்து போய்ட்டு வாங்க!!!"

"சரிம்மா... பார்த்துக்கோ!! இங்க ஒன்னும் பயம் இல்ல... சரியா?! வரேன்!"

கௌதம் சென்றதும், அந்த சிறிய வீட்டின் கூடத்தில் படுக்கையை விரித்தாள் மையு.

"மையு!!!" மெல்லமாய் அழைத்தான் ராம்.

"சொல்லு ராம்!!!"

"இன்னைக்கு அது பேசவே இல்லை..."

"எது?"

"அதுதான்"

"ம்ப்ச்!! அதுதான்னா? எது ராம்?"

"அவன்தான்... அந்த சந்தோஷ்"

ராம் சொன்னதும் தான், சந்தோஷ் தன்னை தொடர்பு கொள்ளாதது நினைவு வந்தது மைதிலிக்கு.

'சந்தோஷ் ஏன் பேசவே இல்லை??? ராம் வீட்ல மாட்டிக்கிட்டாரா??? கால் பண்ணாதனு வேற சொல்லிருக்காரே?!!' என்று யோசித்தவளுக்கு, தான் பழைய எண்ணை மாற்றிவிட்டது நினைவிலேயே இல்லை. சிந்தனையோடு ராமின் மறுபுறம் முதுகுகாட்டி படுத்திருந்தவளின் காதோரம் சூடான மூச்சுக்காற்று பட,, சட்டென திரும்பினாள்.

"என்ன ராம்???"

"ஒன்னும் இல்லையே!!"

"ம்ம்ம்" மீண்டும் பழைய நிலையில் படுத்துக்கொண்டாள் மையு.

"மையு!!!!?" மீண்டும் அழைத்தான்.

திரும்பாமலேயே "என்ன ராம்??!" என்றாள்.

"நம்ம ரெண்டு பேரும் இப்போ husband and wife தானே?" என இழுத்தான் ராம்.

"மையு!!! நம்ம ரெண்டு பேரும் இப்போ husband அண்ட் wife தானே??" என ராம் கேட்டகவும் திடுக்கிட்டு திரும்பினாள் மைதிலி.

"ஏன் அப்படி கேக்குற ராம்???"

"ஒன்னும் இல்ல" என்றுவிட்டு போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுத்தான் ராம்.

முகத்திலிருந்து போர்வையை எடுத்த மைதிலி,,"எதுக்கு அப்படி கேட்டன்னு சொல்லு...." என்றாள்..

"இல்லை.. நான் சொன்னா நீ என்னை அடிப்ப!!!! நான் சொல்லமாட்டேன்....." என மீண்டும் முகத்தை மூடிக்கொண்டான்.

"நீ சொல்லலானாலும் அடிவிழும்.... ஒழுங்கா சொல்லிடு...."

"அதுவா.....!!!! அன்னைக்கு நான் உன்ன இங்க கிஸ் பண்ணிட்டேன்னு என்னை அடிச்சல்ல? நான் கூட அழுதேனே???!" என அவள் உதட்டை சுட்டிக்காட்டியபடி வினவினான் ராம்.

"ம்ம்ம்... ஆமா அதுக்கு என்னடா???"

"இனிமே நான் அப்படி செஞ்ஜா நீ என்ன அடிக்கமாட்டல்ல? அதான் கேட்டுகிட்டேன்"

"என்னது?? இனிமே செய்வியா???" என அவனை முறைத்தாள் மைதிலி.

"Husband அண்ட் wife ஆகிட்டா பண்ணலாம்ன்னு சொன்னியே மையு??!"

"ம்ம்ம்.... ஆமா... ஆனா உனக்கு இங்க வேற வேலை இருக்கு... டெய்லி அந்த தாத்தாவை போய் நீ பாரக்கணும்...."

"எதுக்கு???"

"எதுக்குன்னா??? " என அவள் இழுக்கவும்,,,

"ஓ!!! அந்த லூசு சொல்லுச்சே ? கோச்சிங் கிளாஸ் போகணும்னு.... அதுக்கா???" என அவனே வினவினான்.

"ஹ்ம்ம்.. அதே!! அதே!!!! அந்த கிளாஸ் முடியுற வரைக்கும் நீ ஏதும் பண்ணக்கூடாது... பண்ணுனா அடிப்பேன்"

"ஓஓ!!!!! அந்த கிளாஸ் எப்போ முடியும் மையு?"

"அதுவா??? தெரியலையே?!!!"

"ம்ம்ம்.... சரி மையு... தூங்கலாம்...." அவன் கண்களில் தூக்கம் தெரியவும் போர்வையை அவனுக்கு ஏதுவாய் போர்த்திவிட்டு மறுபக்கம் படுத்துக்கொண்டாள் மைதிலி.

மனதிற்குள், " நீ சரி ஆகுடா,,, அப்புறம் இருக்கு உனக்கு.... இந்த நிலைமையில் இருக்க உன்னை, எதுவும் சொல்ல முடியல என்னால..... ஒரு நாள் மாட்டுவ!!!" என எண்ணிக்கொண்டு உறங்கத்தொடங்கினாள்.

சூரியனின் கதிர்கள் அவர்களின் வீட்டினுள் அனுமதியின்றி நுழைய, கண்களை மெல்லத்திறந்தாள் மைதிலி.

தன்னுடைய முந்தைய வாழ்க்கை நிலையை ஒரு நொடி நினைத்தவள்,,' ஏசி ரூம்ல,, பஞ்சு மெத்தையில தூங்கி எழுந்தபோ கூட கிடைக்காத நிம்மதி,, புத்துணர்ச்சி,, சந்தோசம்,,, இயற்க்கையோட ஒண்ணா இருக்கப்போ அளவுக்கு மீறி கிடைக்கிது... இவ்ளோ நாள் இதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்... ' என தன்னக்கு தானே சொல்லிக்கொண்டு, தன் அருகில் கைவைத்து தடவினாள்.

அவ்விடம் வெற்றிடமாக தோன்ற,, திரும்பி அங்கே பார்வை பதித்தவள்,, ராமை காணாது விழித்தாள்.

'இவ்ளோ காலைல எங்க போய்ட்டான்???'

வாசல் அருகே ராம் இருப்பதை கண்டு அவனைநோக்கி சென்றாள் மைதிலி. தலையில் கைவைத்தபடி குனிந்து அமர்ந்திருந்தான் ராம். அருகில் சென்று அவன் தோள் தொட்டு, "ராம்....." என அவள் குரல் கொடுக்கவும்,, அவளை நிமிர்ந்து நோக்கினான் ராம்.

கருமணியை சுற்றி இருக்கும் வெண்ணிற பகுதி, முழுக்க சிவந்து,, கண்கள் கலங்க,, கலைந்த தலையுடன் இருந்தான் ராம்.

அவன் தோற்றத்தில் அதிர்த்தவள்,,"ராம்!!!! என்னடா ஆச்சு....??? கண்ணெல்லாம் செவந்துருக்கு!!!!" என அருகில் அமர்ந்து கேட்டாள்.

அவளுக்கு பதில் சொல்லாது,, அவள் மடியில் படுத்து இடையோடு அணைத்துக்கொண்டான் ராம். அவனாக பேசட்டும் என ஒன்றும் சொல்லாது அவன் சிகை கோதியபடி இருந்தாள் மையு.

அவன் அசைவது தெரிந்ததும் அவன் முகம் நிமிர்த்தி பார்த்தவள்,, 'என்ன?' என்பது போல கண்களால் வினவினாள்.

"கனவு"

"என்ன கனவு?"

"யாரோ என்னை அடிச்சாங்க... நான் அழுதேன்...."

"கனவு தானே டா!? அதுக்கு ஏன் இப்படி இருக்க நீ? தூங்கவே இல்லயா?"

"ம்ஹும்ம்....பயத்துல வெளில ஓடி வந்துட்டேன்.... தலை வலிக்குது.."

"என்னை எழுப்பிருக்கலாம்ல ராம்?? புது இடம் தானே இது... அதான் தூக்கம் வரல உனக்கு... கொஞ்ச நேரம் இப்போ தூங்கு, சரியா போய்டும்டா"

அவனை தூங்க சொல்லிவிட்டு ஒரு மணி நேரத்தில் காலை உணவுடன் அவனை எழுப்பினாள் மையு. சப்பாத்தியை வாயில் வைத்துக்கொண்டே," மையுயுயு..... நான் அங்க போனுமா???" என தட்டில் கோலம் போட்டான் ராம்.

"ஹ்ம்ம்... போய்தான் ஆகணும்..." அதற்குமேல் அவனை பேச விடாது வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தாள் மைதிலி.

அங்கிருந்த சிறு சிறு வேலைகளை முடித்தவளுக்கு சந்தோஷின் நினைவு வந்தது.

"அச்சோ!! சந்தோஷட்ட பேசனும்னு நெனச்சேன்ல....! என் பழைய நம்பர்க்கு ட்ரை பண்ணிட்டே இருபாங்களோ என்னவோ! " என சொல்லிக்கொண்டே அவனுக்கு அழைத்தாள்.

"ஹலோ சந்தோஷ்?"

"நைட்ல இருந்து உன்கிட்ட பேச ட்ரை பண்ணிட்டு இருக்கேன்... என்னாச்சு உனக்கு? இது யாரோட நம்பர்...?" என எடுத்ததும் பொரியத்தொடங்கினான் சந்தோஷ்...

"என்னோட புது நம்பர் சந்தோஷ்..."

"புதுசா? உன்னோட பழைய நம்பர் என்னாச்சு???"

"அது யூஸ் பண்ணல... நான் இப்போ சிட்ரஹூட்ல இருக்கேன்...ஒரு மலைவாழ் கிராமம்.... ராம்க்கு ட்ரீட்மெண்ட்காக...."

"என்கிட்ட சொல்லவே இல்ல... எதுக்கு நீ அவனை கூட்டிகிட்டு சுத்துற மைதிலி..." அவன் குரலில் கோவம் தெறித்தது...

"பிகாஸ் ஹி இஸ் மை ஹஸ்பன்ட்"

"வாட்? Husband ah???என்ன உளறிட்டு இருக்க?? லவ் பண்ணற,, அதானே?? அதுக்குள்ள husbandஆ??? அது நடக்குறப்போ பார்த்துக்கலாம்.."

"நடந்தாச்சு சந்தோஷ்... நேற்று தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு!!!?"

"ஹே லூஸா நீ??? கல்யாணமா??? உண்மையா தான் சொல்றியா நீ???" சந்தோஷின் பேச்சில் பதற்றம் இருந்ததாய் தோன்றியது மைத்திலிக்கு.

"உண்மையா தான் சொல்றேன்... நான் ராமை கல்யாணம் பண்ணிட்டேன்!!!!"

"ஹோ ச்ச்சா..... *****, ஆர் யூ மேட் மைதிலி? ஹவ் குட் யூ டூ திஸ்?”

"சந்தோஷ் ?? நான் ராமை கல்யாணம் செஞ்சுகிட்டது என்னோட பெர்சினல்... நீங்க ஒரு டீடெக்டிவ்... அதை அடிக்கடி மறந்து போய்டுரிங்க... நான் உங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் செஞ்சுட்டு, அது தொடர்பா பேசுரதா இருந்தா மட்டும் என்ன காண்டக்ட் பண்ணுங்க... புரிஞ்சுதா???" என அவனுக்கு உத்தரவிட்டவள், அழைப்பை துண்டித்துவிட்டு அமர்ந்தாள்.

'சந்தோஷ் எதுக்காக என்கிட்ட இவ்ளோ உரிமை எடுத்துகிறாரு.. நான் கொடுத்த இடம் தான் எல்லாம்... ஆரம்பத்துலயே கட் பண்ணிருக்கணும்... ச்சே....'

தன்னையே நொந்துகொண்டு இதர வேலைகளை தொடர்ந்தால் மையு.

மாலை நேரம் நெருங்கவே ராமின் வரவுக்காக வாசலில் அமர்ந்தபடி காத்திருந்தவள் கண்களில் ,, அந்த மலைவாழ் மக்களின் பிரத்தியேகமான ஜீப்புகள் இரண்டு வருவது பட்டது. யாரோ புதிதாக வருவதாய் எண்ணி அங்கு பார்வையை ஓட்டிவளுக்கு, பார்வை விரிந்தது.

அதிர்ச்சியில் அவள் எழுந்து நிற்க, " என்னமா?! என்னை யாருன்னு நியாபகம் இருக்கா?? இல்ல மறந்து போச்சா???" என கேட்டபடி அவள் வீட்டை நோட்டமிட்டது அந்த புதிய உருவம்.

"இதான் உன் வீடு? இல்ல? ம்ம்ம்.... ரெண்டு வாரத்துல ஆளே மாறிட்டியே? வகிட்டுல குங்குமம், கழுத்துல புது கயிறு... " என கோபம் கலந்த குற்றம் சாட்டும் பார்வையை அவள் மீது செலுத்தினார் மைத்திலியின் கார்டியன் 'கேசவன்'.

"அங்கிள்...... அது....... அது வந்து....... நான்......"

யாருக்கு தெரியக்கூடாது என எண்ணி புது இடத்திற்கு,, அவசர கல்யாணம் செய்து கொண்டு வந்தளோ! அவரே இவளை தேடி வந்தாயிற்று.

ஆனால்,, அவருக்கு எப்படி இவ்விடம் தெரிந்தது என்ற கேள்வி அவளுள் ஓடாமல் இல்லை.

அவள் வார்த்தைகளை கோர்க்க தடுமாறிய சமயம், "எங்க உன் பைத்தியக்கார புருஷன்???" என்றான் கேசவன் அடக்கப்பட்ட குரலில்.

ராமை பற்றி கூறியதும் கோவம் தலைக்கேற , "அங்கிள்!!!! அவரை பத்தி குறைவா பேசாதிங்க!!!! எனக்கு கோவம் வரும்.... " என மூச்சு வாங்க கூறினாள்.

"உண்மையா சொன்னா கோவம் தானே வரும் மைதிலி.... "

"எது உண்மை??? அவர் ஒன்னும் பிறப்புலயே மூளை சரி இல்லாம இல்லை... அப்படியே இருந்தாலும் அது என்னோட பிரச்சனை.... நீங்க எங்களை விட்டுடுங்க அங்கிள்....."

"ஓ!!!! நீ ஒரு விசயத்துக்கு பிடிவாதம் பிடிச்சு இப்போதான் பாக்குறேன் மைதிலி ...." அவர் கண்கள் அவள் மாற்றங்களை அளவிட்டது.

கோவம் சற்று குறைய, " என்ன பாலோ பண்ண கூடாதுனு சொல்லிருந்தேன் தானே அங்கிள்... அப்புறம் எதுக்காக என்ன பின்தொடர்ந்து வந்தேங்க???" என்றாள்.

"நான் எந்த முயர்ச்சியும் எடுக்கல மைதிலி.... தகவல் தானா வந்துச்சு... அதான் கிளம்பி வந்தேன்.... "

"தகவல் எங்க இருந்து வந்துச்சு??"

"அது எதுக்கும்மா???"

"சொல்லுங்க...."

அவள் குரலில் பிடிவாதத்தை கண்டவர் ஆழ மூச்செடுத்து ,"சந்தோஷ் தான் சொன்னான்...." என்றார்.

"என்ன?? சந்தோஷா?" மைதிலிக்கு கேசவன் சொன்னதை நம்ப இயலவில்லை.

-தொடரும்...

super sis
 
ராம் பற்றி சந்தோஷ் எதும் விவகாரமா கண்டுபிடிச்சிட்டானோ....என்னபா இப்படி யோசிக்க வச்சிட்டீங்க....
 
Top