Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 07

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 07

"ராம், என் மொபைல் எங்கடா? " சத்தமாக மைதிலி உள்ளிருந்து அழைக்க,

"எனக்கு தெரியாது மையு... " என அவசரமாக குரல் கொடுத்தான் ராம்.

அவனை நோக்கிச்சென்றவள், "ஹேய்! மொபைலை கொடு " என படிகட்டுகளின் துவக்கத்தில் நின்று, முதுகுகாட்டி அமர்ந்திருந்ததவனுக்கு குரல் கொடுத்தாள்.

வயிற்றோடு கைகளை கட்டிக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்தவன் தலையை மட்டும் திருப்பி, "எனக்கு தெரியாது மையு! " என்றான் மீண்டும்.

"இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம்... நைட்டு டேபிள் மேல வச்ச போன் இப்ப காணோம்.... எங்க போயிருக்கும்.... சொல்லு???"

"எனக்கெப்படி தெரியும்? "

"விளையாடாத ராம்... முக்கியமான கால் பண்ணணும்.... நீதானே வச்சுருக்க மொபைல!!? குடு! " சற்றே அவள் மிரட்ட,

"நான்தான் இல்லைனு சொல்லுறேன்ல!!?" பிடிவாதமாய் சொன்னான் ராம்.

'ஒருவேளை நான்தான் வேறெங்கயோ வச்சுட்டேனா?? ' என நினைத்தவள், "சரி வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு!! மொபைல காணோம்! தேடலாம்..." என்று அழைக்க

"நான் மாட்டேன்.... நீ தேடிக்கோ!!!!" என்றான் உடனே.

"ரொம்ப பண்ணுறடா " என சொன்னபடி உள்ளே சென்றவளை எங்கிருந்தோ வந்த அவள் மொபைலின் ரிங்டோன் நிறுத்தியது....

"ரிங் ஆகுதே!!! சத்தம் வெளியில கேக்குது!? " மீண்டும் வெளியே வந்தவள், சத்தம் ராமினருகே கேட்பதை உணர்ந்தாள்.

வயிற்றோடு கைகளை மேலும் இறுக்கமாய் அழுத்தியபடி கால்முட்டி மீது முகம் பதியும்படி அமர்ந்திருந்தான் ராம்.

"டேய்! சவுண்டு உன்கிட்டதான் வருது.. ஒழுங்கா குடுத்துடு....." சொல்லிக்கொண்டே படிகட்டுகளில் இறங்கினாள் மைதிலி.

அவள் அருகில் வருவது தெரிந்ததும், எழுந்து ஓட எத்தனித்த ராமை, வேகமாய் வந்து பிடித்துக்கொண்டாள்.

"மாட்டுனியா? மரியாதையா என்கிட்ட குடுத்துடு..... எங்கடா வச்சுருக்க??? "

"இங்க பாரு! என் கையில இல்ல...." காலியான கைகளை விரித்துக்காட்டினான் ராம். அதுவரை நின்றுபோயிருந்த அழைப்பு, மீண்டும் வரவே, ராம் வகையாக மாட்டிக்கொண்டான்.

பனியனுக்குள் பதுக்கிவைத்திருந்த மைதிலியின் மொபைலை வேறு வழியின்றி எடுத்துக்கொடுத்தான் ராம்.

"ஏண்டா ஒழிய வைச்ச? விளையாட்டா??? " என அவன் தலை கலைத்து விட்டு, வந்த அழைப்பை ஏற்றாள் மைதிலி.

அவளை சந்தோஷிடம் பேசவிடாமல் செய்வதற்காக அவன் செய்த முயற்சி பலனளிக்காததால், காலை உதைத்துக்கொண்டு அவளுடனே வீட்டிற்குள் சென்று அறையில் புகுந்துக்கொண்டான் ராம்.

"ஹலோ சந்தோஷ்!! நானே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. நீங்களே பண்ணிட்டீங்க!!!! "

"அப்படியா மைதிலி? என்ன விஷயம்?? "

"அதற்குமுன்னாடி, நீங்க எதுக்கு கால் பண்ணீங்க?? எதாவது இன்பர்மேஷனா!? "

"பெருசா ஒன்னும் கிடைக்கல மைதிலி... இப்பக்கூட டீ பிரேக்ல வெளியே வந்த ஆட்கள் கிட்ட விசாரிச்சேன்... நமக்கு தெரிஞ்ச அதே தகவலைதான் சொல்லுறாங்க.... நெக்ஸ்ட் எங்க மூவ் பண்ணுறதுனு தெரியல.... அவங்க வீட்டுக்குள்ள போய் விசாரிச்சா மே பி, எதுவும் கிடைக்கலாம்...."

"ஹோ!!! Ok, சந்தோஷ்? நான் இப்போ சில விஷயம் சொல்லுறேன்... கேளுங்க.... அப்புறமா மேற்கொண்டு பண்ண வேண்டியதை யோசிக்கலாம்.."

ராமை பார்த்ததிலிருந்து, தான் எதற்காக டிடெக்டிவ்வை தொடர்புக்கொண்டோம், தன்னுடைய குழப்பங்கள், என அனைத்தையும் சொன்னவள், தன்னுடைய காதலையும் மறைக்காமல் சொல்லிவிட்டாள்.

"ஆரம்பத்துல நான் ராம் சொல்லுற விஷயங்களை வச்சு, அவர் வீட்டுல எதோ சரியில்லைனு தோணவும்தான் டிடெக்டிவ் ராஜேஷை கான்டெக்ட் பண்ணேன்.. அவர் வீட்டாளுங்க நல்லவங்களா இருக்குறபட்சத்துல, ராமை கூட்டிட்டு போய் அவங்ககிட்ட விடலாம்னு.... பட் இப்போ??? I don't think, i Could send him there! "

மறுமுனையில் கனத்த அமைதி நிலவியது...

"சந்தோஷ்? Are you there? " அவள் அழைத்ததும் தன் குரலை சீர் செய்து பேச தொடங்கினான் சந்தோஷ்.

"ம்ம்ம்... எப்படி மைதிலி பார்த்த கொஞ்சநாளுலயே காதல்.....? நீங்க என்ன காலேஜ் பொண்ணா? Are you not matured?" அவனையும் மீறி குரலில் சிறு ஆதங்கம் எட்டிப்பார்த்தது.

"நான் காலேஜ் பொண்ணு இல்லை... And I'm matured enough! So, காதல்ன்னா என்னனு எனக்கு நல்லாவே தெரியும்...." இலகுத்தன்மை கரைய தொடங்கியது.

பெருமூச்சொன்றை வெளியிட்ட சந்தோஷ், "Well, that's your personal... but நீங்க சொன்னதை வச்சு பார்க்குறப்போ, ராம் மனநிலை பாதிக்கப்பட்டுறுக்க வாய்ப்பில்லை... ஏன்னா? கம்பெனியில இருக்குற சீனியர் ஸ்டாஃப்க்கு கூட விஷயம் தெரியாம இருந்துருக்காது... Infact நான் கேட்ட வரைக்கும் ராமை பற்றி யாரும் நல்ல விதமா சொல்லல... கம்பெனில ஆர்வம் இல்லாம அவர் போக்குல இருந்ததால யார்க்கிட்டயும் ஒரு Good impression இல்ல... அவர் எப்போ எங்கே இருப்பாருனு யாருக்குமே தெரியாதாம்... "

"இப்போ என்ன சொல்ல வரீங்க சந்தோஷ்? " ராமை பற்றி அவன் சொல்வதை கேட்க பொறுமையற்றவளாய் வினவினாள் மைதிலி.

"எனக்கு என்னவோ ராம் மனநிலை சரியில்லாதாமாறி நடிக்குறாருனு தோணுது.... "

"நோ வே !!! உளராதீங்க சந்தோஷ்!!! " கத்தியே விட்டாள்.

"I'm not blabbering.... I'm just sharing my view .... " அவளுக்கு குறையாமல் பேசினான் சந்தோஷ்.

"சந்தேக கண்ணோட பார்க்காதீங்க சந்தோஷ்...! "

"நீங்களும் காதல் கண்ணோட பார்க்காதீங்க மைதிலி..."

மொபைலை இறுகப்பற்றியபடி தன் பொறுமையை சற்று நீட்டியவள், மனதை அமைதிபடுத்த முயன்றாள்.

"காதலுக்கு தான் கண்ணு இல்லையே!!! அப்புறம் எப்படி உங்களுக்கு கண்ணு தெரியும்..." இளக்காரமான சந்தோஷின் குரலில் மைதிலியின் பொறுமை தன் வலுவிழந்தது.

"Enough சந்தோஷ்.... உங்க அனுமானத்து எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது...."

"என்னோடது வெறும் அனுமானம்னு எதை வச்சு சொல்லுறீங்க? " ஏனோ சந்தோஷின் பொறுமை கொஞ்சகொஞ்சமாய் பறக்க தொடங்கியது.

"அ..து? அ.....து?? எனக்கு என் ராம்ம பற்றி தெரியும்...." அவள் குரலில் சுருதி குறைந்தது.

"ஓஹோ!! எவ்வளவு தெரியும் மைதிலி? சொல்லுங்களேன்.. தெரிஞ்சுக்குறேன்.... "நக்கலுடன் கேட்டான் சந்தோஷ்.
"அவன் ஒரு டாக்டர்னே நான் சொல்லிதானே மேடம்க்கு தெரியும்..."

அவன் சொன்னது உண்மையென்றாலும், தன்னுடைய ராமை 'அவன் இவன்' என சந்தோஷ் பேசுவது பிடிக்காமல், "சந்தோஷ், ராமை மரியாதை இல்லாம பேசாதீங்க! எனக்கு புடிக்கல!! " என்றாள்.

"Let it be! Mr. ராம் பற்றி உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு எனக்கு தெரியாது தான்.. I agree"

சாதாரண டிடெக்டிவிற்க்கு இவ்வளவு அக்கறை எதற்க்கு? என்பதை மைதிலி யோசிக்கவில்லை. எப்படி யோசிப்பாள்? அவள் புத்தியைதான் காதல் மறைத்துக்கொண்டு நிட்கிறதே!

இதே வேறொருவராய் இருந்தால், இவ்வளவு பொறுமையாய் இருப்பாளா? என்பதும் சந்தேகமே!! 'போடா நீயும் உன் துப்பு துலக்கும் வேலையும் ' என சொல்லிவிட்டு வேறொரு ஆளை பார்த்திருப்பாள், இல்லையேல் 'நான் சொன்னதை மட்டும் செய் ' என அதிகாரம் காட்டியிருப்பாள்.

"ஸீ சந்தோஷ்! எனக்கு ராம் பற்றி எதுவும் தெரியாது. ஆனா நான் அவரோட இருக்கப்போ சந்தோஷமா இருக்கேன், பாதுகாப்பா இருக்கேன்... I feel safe,, secure,, and protective... அதுபோதும் எனக்கு!!! " தான் பேசுவது தனக்கே அபத்தமாய் தோன்றியதோ! என்னவோ? அவள் வார்த்தைகளில் இரூந்த உறுதி, குரலில் இல்லை.

"Oh! What do you mean by SAFE, SECURE, & PROTECTIVE மைதிலி? " ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கேட்டான் சந்தோஷ்.

"நடுகாட்டுல, யாரும் இல்லாத சூழல்ல, முன்னபின்ன தெரியாத!! அதுவும் நீ சொல்லுறமாறி ஒரு பைத்தியகாரனோட எந்தமாதிரியான SAFE, SECURE, PROTECTIVEவ நீ உணர்ந்த? I'm so curious, just let me know!!! " சந்தோஷ் பேசுவது போனிற்கு வெளியே கூட தெள்ளத்தெளிவாய் கேட்டது. அத்தனை கோவம் அவன் குரலில்!

பன்மை பேச்சு ஒருமைக்கு தாவியதை கூட மைதிலி கருத்தில் கொள்ளவில்லை. "அவரை பைத்தியம்னு சொல்லாத!"

"பைத்தியம் அவன் இல்லை... நீ தான்... You fool!!! பிசினஸ்ல லட்சம் பேரை முதல் பார்வையில எடை போட தெரிஞ்ச உனக்கு, உன் கண்ணு முன்னாடி இருக்குறவன புரிஞ்சுக்க தெரியலா?"

"I'm sure.. he's not acting!! "

"இருந்துட்டு போட்டுமே! நீ சொல்லுறமாறி அவன் நடிக்கலனு வச்சுப்போம்... ஒரு பைத்தியத்தை கட்டிக்கிட்டு நீ வாழ போறியா??? Are you joking? இதென்ன படமா? வாழ்க்கை மைதிலி!!! அவசரபடாத!" ஆத்திரம் குறைத்து அனுசரணையாய் சொன்னான் சந்தோஷ்.

அவன் அவ்வளவு பேசியதில் குழம்பியவள், " What do you want me to do now santhosh? " என இறங்கிவந்தாள்.

"Good, நேரே போய் ஒரு Psychiatristகிட்ட ராமை காட்டு... அவர் ரிப்போர்ட்ட வாங்கிட்டு என்கிட்ட சொல்லு...."

"Ok!!! ஆனா, என் வாழ்கை, என் ராம் கூடதான்... There is no change in that!" என சொல்லிவிட்டு கட் செய்தாள். சந்தோஷ் அவளை ஒருமையில் விளிக்க தொடங்கியதுகூட மனதில் பதியவில்லை அவளுக்கு.

அதுவரை தொலைவில் நின்று பேசுபவளையே பார்த்தபடி படுத்திருந்த ராமிற்க்கு, உரையாடல் கேட்காவிட்டாலும், முகபாவங்களை வைத்து அவனாக ஒரு முடிவுக்கு வந்தான்.

தன்னருகே வந்த மைதிலியிடம்
"சண்டையா? இனிமே பேசாத அவன்கிட்ட.. காய் விட்டுடு.. சரியா? "என கேட்டான்.

எதோ யோசனையில் அவளும் தலையாட்டிவிட குஷியாகிவிட்டது ராமிற்க்கு.

பின்னே? அவன் பிரச்சனை அவனுக்கு...!!

சந்தோஷிடம் பேசிய பிறகு, சிறிது நேரத்திற்க்கு மைதிலி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

'சந்தோஷ் சொன்னதுக்காக நம்ம ராமை டாக்டர்கிட்ட அழைச்சுட்டு போனா, அது நான் ராமை சந்தேகப்படுறமாறி ஆகாதா!? ' என யோசித்த மையு, பின்பு அரைமணிநேரத்தில் வெளியில் போவதற்க்கு ஏதுவாக கிளம்பி வந்தாள்.

"ஹை!! மையு புது ட்ரெஸ் போட்டுறுக்க? "

"ஆமா, நீயும் வேற ட்ரெஸ் போட்டுட்டு வா! வெளிய போறோம்"

"ஜாலிலிலி! எங்க போறோம் மையு....?"

"கிளம்பி வா! போறப்போ சொல்லுறேன்.." தனது போனில் யாரையோ தொடர்புக்கொண்டாள்.

இருவரும் கிளம்பி நகரின் மத்தியில் ஒரு பரபரப்பான இடத்திற்க்குள் சென்றனர். அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் அவர்களின் வண்டி ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது.

வண்டியிலிருந்து இறங்கிய ராம், "இது யாரு வீடு மையு? " என சுற்றிலும் பார்வையை படரவிட்டபடி கேட்டான்.

"என் பிரண்டு வீடு... வா உள்ள போலாம்...."என அழைத்துச்சென்றாள்.

காலிங்பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தவர்களை அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து வரவேற்றார்.

"வாங்க மிஸ் மைதிலி, வெல்கம் யங்மேன்! " அவர்களை சோபாவில் அமரச்சொல்லிவிட்டு வேலையாளிடம் ஜுஸ் கொண்டு வர சொல்லி பணிந்தார்.

"யாரு மையு இவரு!!" என அவர் அந்தபக்கம் திரும்பிய நேரம் மைதிலியிடம் சத்தமில்லாமல் விசாரித்தான் ராம்.

"உஸ்ஸ்! " என அவனிடம் சொல்லிவிட்டு அவள் திரும்பவும், அவர், "என்ன சொல்றாரு மைதிலி? " என கேட்டார்.

"அது....? வீடு நல்லா இருக்குனு சொன்னாரு"

"அப்படியா? அப்போ வீட்டை சுத்தி பாருங்க.... வெளியில பெரிய கார்டன் கூட இருக்கு...." என்றார் அவர் இன்முகமாய்.

"போலாம்.. போலாம்...." என ராம் சொல்லவும், அவனுடன் எழுந்தவளை, "மைதிலி நீ உக்காரு.... சார் போய் பார்த்துட்டு வரட்டும்...." என கூறினார்.

அவள் தயங்கவும்.... கண்ணசைவால் அவளை அமரவைத்தார்.

"ராம்!! நீ போய் பார்த்துட்டு வா! நான் இங்கயே இருக்கேன்.... ப்ளீஸ்....."

வீட்டை சுற்றிப்பார்க்கும் ஆவலில் அவனும்'சரி ' என நகர்ந்துவிட்டான்.

"இப்ப சொல்லுமா!! Mr. ராம் க்கு என்ன ப்ராபிளம்??? " நேரே அவர் விஷயத்திற்கு வர,

"டாக்டர்? உங்களுக்கு எப்டி தெரியும்..?" என வியந்தவளை கண்டு சன்னமாய் சிரித்தார் அவர்.
தன் தோழி ஒருத்தியின் சித்தப்பா ஜெய்பூரில் மனோதத்துவ நிபுணராக இருப்பது நினைவு வரவே, அவள்மூலம் இவரை தேடி வந்தவள், எதற்காக வந்திருக்கோம் என்பதை சொல்வதற்குள்ளாகவே,, அதை அவர் சரியாக கணித்தது அவளை ஆச்சரியபட வைத்தது.

"இதுல என்னம்மா இருக்கு? இத்தனை வருஷ அனுபவத்துல ஏதோ பார்த்ததும் கண்டுபுடிக்குற அளவுக்கு கொஞ்சூண்டு திறமை இருக்கு...." என சொல்லிவிட்டு சிரித்தார்.

"ஹா ஹா... சரியான இடத்துக்குதான் வந்துருக்கேன்...." என சொல்லிவிட்டு, வந்ததற்கான காரணத்தை, ஒன்றுவிடாமல், எதையும் மறைக்காமல் சொன்னாள் மைதிலி.

"ம்ம்ம்... சோ ராம் நடிக்குறாரா இல்லை உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டுக்கானு தெரிஞ்சுக்க வந்துருக்கீங்க? ரைட்? "

"எனக்கு அவர் நடிக்குறாருனு துளியும் சந்தேகம் இல்லை... ஆனா மற்றவங்களுக்கு புரியவைக்க வேண்டிய சூழ்நிலை..."

"சரிம்மா, நீங்க ராமை கூப்பிடுங்க... Within 10 minsல நான் சொல்லிடுவேன்... இட்ஸ் வெரி சிம்பிள்...."

ராமை அழைத்துக்கொண்டு தனியே சென்றவர், அவனிடம் பேச்சுக்கொடுத்தார்.... சில நிமிடங்களில் வீட்டிற்க்குள் ராமை அழைத்துவந்தவர், "ராம், மாடியில கிளி காட்டினேன்ல? அதுக்கு இந்த Seeds குடுத்துட்டு வரியா?" என அவனை மாடிக்கு அனுப்பினார்.

"டாக்டர்! என்னாச்சு?? "

"As you said, he's not acting, உண்மையிலேயே அவர் மனநிலை பாதிக்கப்பட்டுறுக்கு.. ஆனா, அவர் சமீபத்துலதான் எதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டுறுக்காரு.....
ராம் ரொம்ப பிரில்லியண்ட் மைதிலி....பறவைகளை பற்றி நிறைய விஷயங்கள் சொன்னாரு... எப்படி இதெல்லாம் தெரியும்னு கேட்டா, தெரியலையேனு சொல்லுறாரு..."

"ம்ம்ம்... அவருக்கு எதனால இப்படி ஆச்சுனு தெரிஞ்சுக்க முடியுமா டாக்டர்? Hypnosis மாறி எதோ ஒரு Methodல? "

"பண்ணலாம் மைதிலி... நல்ல மெதடு தான் அது... ஆனா அது நார்மல்லா இருக்கவங்களுக்கு.... But, he's not normal... இவருக்கு Hypnosis பண்ணுறது நல்லதுனு நான் Personally suggest பண்ணமாட்டேன்.... 50% தான் பாசிடிவ் ரிசல்ட்ஸ்க்கு கேரண்டி தர முடியும்... இட் மே கோ ராங், ரிஸ்க் எடுக்குறதுன்னா ஓகே "

"அய்யோ!! அப்படின்னா வேணாம் டாக்டர்..."

"Next weekendல என் பையன் இந்தியா வரான்... அவன்கிட்ட ராமை காட்டுங்க... கண்டிப்பா ராமை பழையபடி மாத்திடலாம்... ஆனா, ராம்க்கு எதனால இப்படி ஆச்சுனு தெரிஞ்சா ட்ரீட்மெண்டுக்கு ஈசியா இருக்கும்..."

"ரியலி டாக்டர்? ராம் நல்லாகிடுவாரா? அவரை குணப்படுத்திடலாமா?" இன்பமான ஓர் அதிர்வு அவளுள்.

"சரிபண்ண முடியாததுனு எதுவுமே இல்லைமா....! நம்பிக்கையோட இரு...."

அவருக்கு 'நன்றி ' சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டனர்... செல்லும் வழியில் ராம், "இப்ப எங்க போறோம் மையு???" என்று கேட்க, சந்தோசமான மனநிலையில் இருந்தவள், "ம்ம்ம்... எங்க போலாம்... நீயே சொல்லு..." என்றாள்.

"எங்கயாச்சு போலாமா? நான் வெளியில வந்ததே இல்ல இப்படி!!" அவன் சிணுங்கலாய் கேட்க, உடனே சரி என்றாள்.

"ஷாப்பிங் மால் போலாம்.. கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு, லன்ச் முடிச்சுட்டு ஈவினிங் போல வீட்டுக்கு போலாம்... ஓகே? "

"சூப்பர் மையு... ஓகே"

ஷாப்பிங் மாலில் மகிழ்ச்சியாக உலா வந்தனர்.
"ராம்? நீ அந்த அங்கிள்கிட்ட நெறைய பறவைகள் பற்றின விஷயங்கள் சொன்னியாமே!? " என பேச்சு கொடுத்தாள் மைதிலி.

"ஆமா மையு, birds பார்த்ததும் திடீர்னு தோணுச்சு அதெல்லாம்... எப்படி அதெல்லாம் தெரிஞ்சுதுனு எனக்கே தெரியல "

"ஓ! இதெல்லாம் தெரிஞ்ச உனக்கு,,, அன்னைக்கு அந்த பறவைக்கு தாய்குருவி இரையூட்டுனது மட்டும் தெரியலையா? கிஸ் பண்ணுதுனு சொல்லீ காட்டுன என்கிட்ட!! " ஒரு புருவம் உயர்த்தி அவள் கேட்டதில் அசடு வழிந்தான் ராம்.

"அதுவா!?? எனக்கு தெரியும், உனக்கும் தெரியுமானு செக் பண்ணேன்..." என்று சிரிக்க,

"அப்போ நீ வேணூணேதான் அப்படி சொன்னியா? " என விழி விரித்தாள் மைதிலி.

"ஹி ஹி"

"சிரிக்காதடா!! Fraudu " என பொய்யாய் அவனை அடித்தவளுக்கும் சிரிப்புதான் வந்தது.

அப்போது மைதிலிக்கு சந்தோஷிடமிருந்து அழைப்பு வரவே,

"ஹலோ! நான் இன்னைக்கு டாக்டர் கிட்ட ராமை அழைச்சுட்டு போனேன்... ராம் நடிக்கலனு அவரே கிளியரா சொல்லிட்டாரு" அழைப்பை ஏற்றதும் அவனை பேசவிடாமல் இவளே சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாள்.

"அப்படியா? பைன்...!" எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் அவசரகதியில் பதிலளித்தான் சந்தோஷ்.

பின்னே, "நான் சொல்லுறதை மட்டும் கேளு... வெளியில இருந்து விசாரிச்சு ஒரு தகவலும் உருபடியா கிடைக்கல... அதனால நான் இன்னைக்கு காலையில ராம் வீட்டுல வேலைக்கு சேர்ந்துட்டேன், ரிஷிகேஷோட டிரைவரா... " அவன் சொல்லிமுடித்ததும்,

"ஹே! என்ன சொல்லுற? நீ யோசிச்சுதான் பண்ணுறியா சந்தோஷ்?? " என்று குரல் உயர்த்தினாள் மைதிலி.

"எல்லாம் யோசிச்சுட்டேன்... வீட்டுக்குள்ள குடைஞ்சாதான் எதாவது கிடைக்கும்.. யாரும் இல்லாத சமயமா பார்த்து நானே உனக்கு போன் செஞ்சு,, கிடைக்குற தகவல்களை சொல்லுறேன்.. நீ போன் பண்ணாத! சரியா?? ஹால்ல ரிஷிகேஷ் போட்டோ இருந்துச்சு... உனக்கு அனுப்பிருக்கேன்.. Whatsapp பாரு... ரிஷி வரான்.. I call you later! Bye"

"ஹலோ சந்தோஷ்! ஹலோ??? " அதற்க்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மொபைலை பார்த்துக்கொண்டே அவள் நிற்க,

"சண்டை போட்டுட்டு ஏன் அவன்கிட்ட பேசுற நீ? " என்ற ராமின் குரலில் திரும்பினாள்.

"சண்டையா??? எப்போ?? "

"போ லூசு! "என தலையிலடித்துக்கொண்டு அருகே வேடிக்கை பார்க்க நகர்ந்தான் ராம்.

அங்கிருந்த விளையாட்டு பகுதி அவன் கண்ணில் பட்டதும், "மையு!!!! Fun zone!!! போலாம்! போலாம்! போலாம்!!!! " என பரபரத்தான் ராம்.

"அங்கயா?? சரி Fun card வாங்கிட்டு போலாம்..."

"நானே வாங்குறேன்! " அவளது பர்ஸை வாங்கிக்கொண்டு கவுண்டரை நோக்கி விரைந்தான் ராம்.

அவன் பின்னூடே சென்றவள், Whatsappல் சந்தோஷ அனுப்பிய புகைப்படத்தை பார்த்தாள்...

"ஓ! இதான் ரிஷிகேஷ் ஆ?? " அவள் பார்த்துக்கொண்டிருக்க,

யாரோ 'ஸ்ரீராம் ' என அழைப்பதை கேட்டு தன்னியல்பாய் நிமிர்ந்து பார்த்தவள்,, கவுண்டரில் நிற்க்கும் ஸ்ரீராமை நோக்கி அவர் வருவதை போல் தோன்றியது.

ராமின் அருகில் வந்த அவர், "டேய் ராம்? எப்படிடா இருக்க?? அய்யோ சாரிடா! உனக்குதான் ராம்னு கூப்பிட்டா பிடிக்காதே!!! தெரியாம சொல்லிட்டேன்..." என சிரித்தான் புதியவன்.

பதிலளிக்காமல் நின்றவனை, "என்னடா? ஒன்னுமே சொல்லமாட்டுற? இங்க என்ன பண்ணுற நீ?? எதும் conference அட்டென்ட் பண்ண வந்தியா? " என கேட்டான்.

அதற்க்கும் அசையாமல் நின்ற ராமை விநோதமாக பார்த்தான் அவன்.

அதுவரை தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த மையு இடைபுகுந்து, "ஹலோ சார்! நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா?? " எனக்கேட்டாள்.

அவளை அற்பமென பார்த்தவன், மீண்டும் ராமிடம், "பேசுடா!! " என கேட்டான்.

மைதிலி, "ராம்! உனக்கு இவரை தெரியுமா?"

"யாருனுனே தெரியல மையு.. எதோ உளறிட்டு இருக்கான்...!" fun கார்ட் வாங்க போகும் ஆர்வத்தில் நின்றிருந்தான் ராம்.

"டேய் நான் கௌதம் டா!! Edinburghல ரெண்டு வருஷம் ஒரே ரூம்ல குப்பை கொட்டிருக்கோம்!!! விளையாடாதடா!!! " இறைஞ்சினான் கௌதம்.

"அய்யோ நான் விளையாடுவேன், போ! நீ இங்கயே இரு மையு, விளையாடிட்டு வரேன் "என ஓடிவிட்டான்.

"டேய் டேய் "என கௌதம் கூவியது காற்றிற்கே சொந்தம்.

'Edinburgh தோழன்' என தெரிந்ததும் ராமை பற்றி இவனிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாமே!! என்ற பேராவலில் கௌதமினருகே சென்றாள் மைதிலி.

"ஹலோ Mr. கௌதம்.. நான் மைதிலி... ராமோட பிரண்டு.."

தருவிக்கப்பட்ட எரிச்சலை முகத்தில் காட்டி,, குரலில் நக்கலுடன், "ஓஹோ! எத்தனை நாளைக்கு?? "என்றான் கௌதம். மேலும், "அவனுக்குனே எங்கிருந்துதான் வரீங்களோ?? ச்சை!! " என அருவெருப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அதைக்கேட்ட மைதிலி தன் உடல் முழுதும் அமிலம் கொட்டியதை போல துடித்துப்போனாள்.

-தொடரும்...
 
Top