Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 06

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் ஆறு :

போனில் சந்தோஷ், ஸ்ரீராம் ஒரு டாக்டர் என சொன்னதும், ஒரு நிமிடம் மூளை ஸ்தம்பித்தது மைதிலிக்கு.

பின்பு சுதாரித்தவள், எதிரில் தொப்பலாய் நனைந்தபடி நின்ற ராமை தான் அமர்ந்திருந்த கல்லில் அமர வைத்துவிட்டு, தன் கைகளில் இருந்த துவாலையால் அவன் தலையை துவட்டத்தொடங்கினாள். அவள் மனமோ பல வழிகளில் சிந்தித்துக்கொண்டிருந்தது.

அதற்குள் சந்தோஷ், அலைபேசியில் பத்து முறைக்கு மேல் 'ஹலோ ' வென கூவிவிட்டான்.

சிந்தனை மாறாமல் கை அதன்போக்கில் ராமின் தலையை துவட்டிக்கொண்டிருக்க, திடீரென தன் கையிலிருந்த அலைபேசியின் நினைவு வந்தது அவளுக்கு.

"ஹலோ சந்தோஷ்... சோ சாரி... சாரி.... நான் எதோ நினைப்புல!!!!! சாரி.... என்னை சொல்லிட்டு இருந்தீங்க...?" சிறிது பதட்டத்துடனே பேச்சு தொடர்ந்தது.

தன் காதுகள் தான் சொற்களை தவறாக உள்வாங்கிக்கொண்டதோ என்ற நப்பாசையில் மீண்டும் வினவினாள் மைதிலி.

"இட்ஸ் ஒகே மேம்.... ஸ்ரீராம் சார் பெங்களூருல டாக்டரா இருக்காருனு சொல்லிட்டு இருந்தேன் மேம்...."

"ஹே சந்தோஷ்! ஜஸ்ட் ஸ்டாப் கிட்டிங்(Kidding)...சான்ஸே இல்ல...." அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, தன் தலை மீதிருந்த துவாலையை விலக்கிவிட்டபடி மைதிலியை பார்த்தான் ராம்.

அவனிடம் கண்களாலேயே 'என்ன? ' என விசாரித்தாள்.

சந்தோஷ், " ஏன் மேம் அப்படி சொல்லுறீங்க? "

"இல்லை சந்தோஷ்,, நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவரு டாக்டர் இல்லை... அதான் சொன்னேன்...."

"ஓ!! ஓகே மேம்.... நான் கம்பெனி உள்ளே போய் டீடெய்ல்ஸ் அக்குரேட்டா கலெக்ட் பண்ணபிறகு உங்களை கான்டெக்ட் பண்ணுறேன்.... மே பி இன்னைக்கு நைட்டுக்குள்ள...."

"ஒகே!!! பட் பி கேர்புல் அன்ட் சேஃப்!! ரிஸ்க் எடுக்காதீங்க" சந்தோஷிடம் எச்சரிக்கை விடுத்து தொடர்பை துண்டித்தபின், "என்ன ராம்!? மூஞ்ச இப்படி வச்சுருக்க???" தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ராமிடம் வினவினாள் மைதிலி.

"யாரு சந்தோஷ்?? "

" அத ஏன் கேக்குற? " மீண்டும் துவாலையை அவன் தலைமீது வைத்து துவட்டத்தொடங்கினாள்.

சற்று வேகமாக தன்மீதிருந்த துவாலையை உருவியவன், "யாருனு சொல்லு மையு!!!!?" என்றான்.

"என் பிரண்டு!! " தான் வைத்திருந்த அவன் சட்டையை உதறிவிட்டு, பின் அவனிடம் கொடுத்தாள்.

அதை வாங்காமல் "ஓ! " என முனகினான்.

அவனது நடவடிக்கையை கவனிக்குமளவு மைதிலி நிதானத்தில் இல்லை. அவள் எண்ணம் முழுக்க சந்தோஷ் சொன்ன விஷயத்தில் தான் இருந்தது.

'ஸ்ரீராம் எப்படி டாக்டரா இருக்க முடியும்? இது சாத்தியமா?? ஒருவேளை நான்தான் என் ராமை குறைச்சு மதிப்பிடுறேனா? அவருக்குனு நெறைய சொத்து இருக்கப்போ, பாதுகாக்க சொந்தங்கள் இருக்கப்போ, ஏன் ராமை காணோம்னு யாருமே தேடி வரல!!? எதுவும் பிரச்சனையா இருக்குமா?? ' அவனை பற்றியே நினைத்தாலே ஒழிய, அவன் தன்னிடம் நடிக்கிறானோ?! என ஒரு நொடி கூட நினைக்கவில்லை. நினைக்க தோன்றவுமில்லை. யோசனையினூடே நடந்து தன் அறைக்குள் நுழைந்தாள்.

அதற்குமேல் எதுவும் மூளைக்குள் தோன்றாததால், சிந்தனை வலை அறுபட்டு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள் மைதிலி.

'எப்போ ரூம்க்கு வந்தேன்....?! Goddd!!! I'm thinking too much.... ' என நினைத்தவள் குளியலறைக்குச்சென்று குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்தாள்.

கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தபடி, அவள் இங்கு வந்த நாள் தொட்டு இதுவரை நடந்தவற்றை நினைவுக்கு கொண்டு வந்தாள்.

அவளை சுற்றிலும் ராமின் செயல்களும் பிம்பங்களும் வலம் வருவதை போல உணர்ந்தாள் மைதிலி. தலை குலுக்கி தன்னை சரிசெய்ய முயன்றபடி, படுக்கையறைக்குள் நின்றாள்.

'ரொம்ப இருட்டிருச்சே!!! கோதுமை தோசை செஞ்சுடலாம்... வேற செய்யுறதுக்கு நேரம் இல்லை....' முடிவு செய்தபடி கிட்சனுக்கு சென்று மாவை எடுத்தவள், 'என்ன சத்தமே காணோம்!? ' என எண்ணிக்கொண்டு "ராம்!!!!!!!!! என்ன பண்ணுற? " என அழைத்தாள்.

பதில் வராமல் போக, தன் வேலையை நிறுத்திவிட்டு ஹாலிற்க்கு வந்தவள், அவனை காணாது போகவும், அப்போதுதான் திரும்பி வருகையில் அவனை உடன் அழைத்து வராதது நினைவு வந்தது. "அய்யோ " என தலையில் அறைந்து கொண்டு வேகமாய் வெளியே ஓடினாள்.

"அய்யோ ராம், எதோ யோசனையில நீ கூட வந்துட்டு இருக்கியா? இல்லையானு கூட பார்க்காம இருந்துட்டேனே!! "

"இருட்டி வேற போச்சு!! பயந்துடுவியே!!! "

"கிளம்புறப்போவே நீ பயந்த ... நான்தான் பெரிய இவ மாறி கூட்டிட்டு வந்தேன்!!! "

"ராம்... நீ அங்கயே இருக்கனும்.. எங்கயும் போய்யிருக்ககூடாது"

"கடவுளே!!! அவனை அங்கயே இருக்க வை"

"அவன் வழி தெரியாம எங்கயும் போய்யிடகூடாது.... அவன் இல்லாம நான் எப்படி இருப்பேன்!?? என்னை தேடிகிட்டு எங்கயும் போய்டுவானோ!!? "

"வீட்டுக்கு போனதும்கூட அவனை தேடாம இவ்வளவு நேரம் தாமதிச்சுருக்கேனே!!!!! "

வாய்விட்டு அலற்றியபடி வேகமாக அருவியை நோக்கி வேகமாக ஓடினாள் மைதிலி.

அவன் அங்கேயே இருப்பான் என மனம் நம்பினாலும், எங்கே தன்னை தேடிக்கொண்டு எங்கேனும் சென்று விடுவானோ என்றும் மறுபுறம் பயப்பந்து உருண்டது அவளுக்கு.

வேக எட்டுகளில், கிட்டத்தட்ட ஓடிச்சென்று அருவிக்கரையை அடைந்தவள், அவன் அமர்ந்திருந்த கல்லில் அவனை காணாது சோர்ந்துப்போனாள்.

காலை மடக்கி தரையில் அமர்ந்தவள், சத்தம் போட்டு அழத்தொடங்கினாள். எதற்காக அழுகிறோம் என்று கூட யோசிக்காமல் தனது இத்தனை வருட திடமும் ஒரு சேர உடைய,, குழந்தையென தேம்பினாள். அழுகையினூடே "ராம்......... எங்கடா போன, என்னை விட்டுட்டு? நானே உன்னை தொலைச்சுட்டேனே!!! அய்யோ!" என்று அவள் அலட்ற,

சற்று தொலைவில் இருந்த பெரிய மரத்தின் பின்னிருந்து "மையு " என்ற மெல்லிய ஒலி அவளின் நீண்ட நேர அழுகையை ஒரு நொடியில் நிறுத்தியது.

"ராம்??? ராம் நீ எங்க இருக்க?? " சத்தம் வந்த இடம் நோக்கி வேகமாக ஓடினாள்.

அங்கே அவளை ஏமாற்றாமல், மரத்தின் பின்னால் கால்களை ஒடுக்கிக்கொண்டு பயத்தில் உடல் நடுங்க கண்ணீரோடு அரைமயக்கத்தில் "மையு " என அலற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான் ராம்.

விரைந்து அவனை தன் நெஞ்சோடு கட்டிக்கொண்ட மையு, "ராம்.... ராம்....." அதற்குமேல் எதுவும் பேசவராமல் அவனை கட்டிக்கொண்டபடியே அமர்ந்திருந்தாள்...

அவளது ஸ்பரிசத்தில் பயம் அகல, நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்ததும், மேலும் அவளை இறுக அணைத்துக்கொண்டு "ஏன் மையு என்னை காணா போட்ட??? நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா!!? " என விசும்பினான்.

"சாரி ராம்.. எதோ நினைப்புல நீ கூட வரியா இல்லையானு கூட கவனிக்காம இருந்துட்டேன்... சாரி ராம்.. இனிமே உன்னை எப்பவும் தொலைக்கமாட்டேன்... பத்திரமா வச்சுப்பேன்.. பிராமிஸ் டா!!! "

"போ! நான் ரொம்ப பயந்துட்டேன்! " அவளுள் மேலும் புதைந்தான் ராம்.

"தெரியும் ராம்.. தப்பு என்மேல தான்... சாரிடா.... இனி உன்னை எப்பவும் விடமாட்டேன்...."

"எப்பவுமா??? "

"ம்ம்ம் எப்பவுமே தான்... I will always be with you Ram.... " என சொன்னவள், மனதிற்க்குள், "I love you my Ram!" என்றாள். அவனை பார்த்த நொடி முதல் தன் மனதில் தோன்றிய உணர்வு 'காதல்' என்பதை அவள் மனம் இந்த அரைமணிநேர பிரிவில் அவளுக்கு அழகாய் எடுத்துரைத்தது.

அவளிடையை கோர்த்திருந்த தன் கைவிரல்களால் அவள் முதுகில் சுரண்டினான் ராம்.

காதல் உணர்வை முதல்முறை உணர்ந்த இதத்தில் சிவந்திருந்த மையு, அவன் தீண்டலில் உடல் சிலிர்க்க இன்னும் சிவந்தாள். "என்ன ராம்?? "

"பசிக்குது மையு! "

காதல் உணர்வு குறைந்து, தாய்மையுணர்வு எழும்ப "அச்சோ!! எல்லாமே மறந்து போகுது... நீ வா... வீட்டுக்கு போலாம்.."

வீட்டுற்க்குள் சென்றதும் அவள் கிட்சனுக்குள் செல்ல முற்பட, அவள் கையை விடாமல் இறுக பற்றியிருந்தான் ராம்.

"10மினிட்ஸ்ல சாப்புடலாம் ராம்.."

"சரி நானும் வரேன்... " அவளுடன் சென்று கிட்சன் மேடையில் அமர்ந்து சுட சுட தோசைகளை உள்ளே அனுப்பிக்கொண்டு இருந்தான் ராம்.

மைதிலியின் அலைபேசி ஒலி எழுப்பவும், செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அதை எடுக்க நகர்ந்தாள் மைதிலி.

அவள் புடவை முந்தானையின் ஒரத்தை பற்றி இழுத்த ராம், "அதுல பேசிட்டேதான் என்னை காணா போட்ட!! " என தட்டை பார்த்தபடி அவளை குற்றம் சாட்டினான்.

அவனிடம் நெருங்கி முகத்தை கைகளில் ஏந்தியவள், "நான் உனக்கு பிராமிஸ் பண்ணிருக்கேன்ல! இனி எப்பவும் உன்னை விட்டு போமாட்டேன்." நெற்றியில் மெலிதாய் முட்டிவிட்டு சிரித்தபடி அலைபேசியை இயக்கினாள்.

"சொல்லுங்க சந்தோஷ்..."

"மேம்.... நான் கம்பெனிக்குள்ள போனேன் ... விசாரிக்கவே தேவையில்லைங்குற அளவுக்கு ஸ்ரீராம் சார் போட்டோ இருந்துச்சு.. அதை பார்த்த பிறகு அவர் என்ன வேலை பார்க்குறாருனு விசாரிக்க எனக்கு கொஞ்சம் அபத்தமா இருந்துச்சு.. அங்க இருந்த போட்டோவ உங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணிருக்கேன்.. பார்த்துட்டு கால் பண்ணுங்க மேம்..."

சந்தோஷ் அவ்வாறு சொன்னதும் தனது வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தவள், அப்புகைப்படத்தையே பார்த்தபடி அசையாது நின்றாள். பளீரென்ற புன்னகையில் ராம், இயல்பாய் நடந்துவருகையில் எடுத்த புகைப்படம் அது! அதில் அவனை காண அத்தனை வசீகரம், கம்பீரம்! அவன் கண்களும் சேர்ந்து சிரிக்கும்போது அவளால் அவன் முகத்தை தாண்டி வேறெங்கும் பார்வை பதிக்க இயலவில்லை. அதோடு பொன் எழுத்துக்களால், "மிஸ்டர் ஸ்ரீராம் ரவிச்சந்திரன் MS., NEUROLOGIST (EDINBURGH) பொறிக்கப்பட்டிருக்க, வியப்பும் அதிர்வும் கலந்த உணர்வில் நின்றாள்.

"ஹை?!!! மையு.... இது நானு!!!" அவள் அருகே வந்து நின்றுகொண்டு சிரித்தான் ராம்.

சந்தோஷ் அனுப்பிய போட்டோவை பார்த்தபடியே நின்றவளை, "மையு....? ஏன் என் போட்டோவயே பார்த்துட்டு நிக்குற?" என அவள் தோள்களை பிடித்து குலுக்கினான்.

அவனிடம் எதையும் சொல்லாமல், "ஹான்? சும்மாதான்.... சாப்டிடாச்சா நீ? " என சரியாக துடைக்காமல் ஈரமாய் இருந்த அவன் தாடையை தன் புடவையால் துடைத்துவிட்டாள் மைதிலி.

"ம்ம்ம் புல்ல்ல்" கழுத்தில் கை வைத்து அவன் சொல்ல,

"சரி நீ ரூம்ல இரு... நான் போன் பேசிட்டு வரேன்..... " சந்தோஷ் எண்களை அழுத்தியபடி அவனிடம் சொன்னாள்.

"இல்ல.... நீயும் வா!! தனியா போகமாட்டேன்..."

இதற்குள்மேல் சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் என உணர்ந்ததை போல, "இங்கே உட்கார் " என நாற்காலியை காட்டினாள்.

சந்தோஷ் தொடர்பில் வந்ததும் "போட்டோ பார்த்தேன் சந்தோஷ்... நான்தான் வேற யாரையோ நெனைச்சு, உங்ககிட்ட தப்பா சொல்லிட்டேன் போல! " என கூறினாள்.

"பரவால மேம்..."

"மேம் எல்லாம் வேணாம்... No formalities.. மைதிலினு சொல்லுங்க"

அவள் போனில் அப்படி சொன்னதும், அருகிலிருந்த ராம், "ஏன்!? " என அவளை சுரண்டினான்.

அவனை அசட்டை செய்தவளாய், "நீங்க மேற்கொண்டு எதாவது தகவல் தெரிஞ்சா சொல்லுங்க சந்தோஷ்.... But, it must be highly confidential! " போனை ஸ்ப்பீக்கரில் போட்டுவிட்டு தனக்காக தோசை வார்க்க தொடங்கினாள் மைதிலி.

"Sure மேம்" என்றவன் பின், "Sorry, mythili" என மேடமை திருத்தி மைதிலி ஆக்கினான்.

"Fine" சிறு சிரிப்போடு அவள் பேச்சை நிறுத்த,

"மைதிலி!?? "

"சொல்லுங்க சந்தோஷ்.. "

"நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்ககூடாது..."

சந்தோஷ் அவ்வாறு சொன்னதும், சிறிது துணுக்குற்றவள், "சொல்லுங்க " என்றாள்..

"வாட்ஸ்அப் Dpல உங்க போட்டோ பார்த்தேன்... You're really sooo beautiiiiful..... நாளைக்கு கால் பண்ணுறேன்.. குட்நைட் மைதிலி...." அவள் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான் சந்தோஷ்.

சந்தோஷின் இந்த பேச்சை அவளால் தவறாக நினைக்க முடியவில்லை. தன் இத்தனை வருட வாழ்கை பயணத்தில் எவ்வளவோ ஆண்களை சந்தித்தவளால், அவர்களின் பேச்சிலும் பார்வையிலுமே, அவர்களை எடைப்போட கற்றிருந்தாள்.

ஆனால் ராம்??

தட்டில் தோசையை எடுத்துக்கொண்டு திரும்பியவள், ராம் அவளது மொபைலையே வெறித்து பார்த்தபடி உட்கார்ந்து இருப்பதை கண்டு குழப்பினாள்.

"என்னாச்சு இவனுக்கு? "என யோசத்தபோது, அவள் ஸ்பீக்கரில் போட்டு பேசியது நினைவுவர, 'ஓ!! சந்தோஷ் பேசுனதை கேட்டுறுப்பானோ!' என யூகித்தாள்.

அவனிடம் விளையாட எண்ணி, "ராம்??? ஏன் உம்முன்னு இருக்க?" என்றபடி அவனருகில் அமர்ந்தாள்.

அவன் இன்னமும் அந்த மொபைலை முறைத்தபடியே இருந்ததை கண்டு 'கோவத்துல தூக்கி அடிச்சுடுவானோ?' என பயந்து வேகமாக அதையெடுத்து தனதருகில் வைத்துக்கொண்டாள் மைதிலி.

அவன் பார்வை நகராது அங்கேயே இருக்கவும், "ராம்!!!! " என அவனது தோள் தொட்டாள்.

அவள் தொட்ட அந்த நொடி, அவளது வலதுதோள்பட்டையில் முகம் புதைத்தான் ராம்.

மைதிலி அவனது முகத்தை தன்னிடமிருந்து பிரித்து, அவன் முகம் பார்க்க நினைக்க, அதற்கு இடமளிக்காமல் மேலும் அழுத்தமாய் புதைந்தான்...

'இது வேலைக்கு ஆகாது! ' என நினைத்துக்கொண்டு, தன் தட்டை காலி செய்ய தொடங்கினாள் மைதிலி.

தன்னை எழுப்பி, என்னவென்று கேட்பாள் என அவன் காத்திருக்க, மைதிலியோ தன் வயிற்றை கவனிப்பதிலேயே கவனமாய் இருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்தவன், அவள் கண்டுக்கொள்ளாது இருக்கவும், அவள் கழுத்துவளைவில் இருந்து தலையை நிமிர்த்தினான்.

அவன் நிமிர்ந்தவுடன் காலிதட்டை தூக்கிக்கொண்டு கிட்சனுக்குள் நுழைந்துக்கொண்டாள் மைதிலி.
திரும்பி வந்தவள், வேண்டுமென்றே அவனை கவனியாது படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

அவளின் பாராமுகத்தில் துவண்டவன், எழுந்து படுக்கையறைக்குள் சென்றான். அங்கே படுக்கை விரிப்பை சீர் செய்துக்கொண்டிருந்தவளை, "மையு!!! மையுயுயுயு...!! " என்றான்.

அவனை பார்க்காமல் தன் வேலையை தொடர்ந்தவள், "சொல்லு ராம்! " என்றதும், அழுகையில் உதடு பிதுங்கியது ராமிற்க்கு.

சத்தம் வராமல் போகவும் தன்முன்னிருந்த கண்ணாடி வழியே ராமை பார்த்த மைதிலி, அவன் அழுவது தெரிந்ததும் விளையாட்டை கை விட்டவளாய், "ராம்!!! இதென்ன எப்பப்பாரு கண்ண கசக்கிக்கிட்டு....!! சின்ன புள்ளையா நீ? " என சொன்னபடி கண்களை துடைத்துவிட்டாள்..

"நான் ஒன்னும் சின்னபுள்ள இல்ல.. நான் பிக் பாய்!! " என வீராப்பாய் சொல்லிவிட்டு கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான்.

விடிவிளக்கை ஒளிரவிட்டுவிட்டு தானும் கட்டிலுக்கு சென்றவள், போர்வையை இழுத்து போர்த்தினாள். அவள் போர்வையை தன்பக்கம் வேகமாய் இழுத்தான் ராம்...

"டேய்! என்னடா?? "

"ஒன்னும் இல்ல...."

"ஒன்னுமில்லனா மூஞ்சிய ஏன் இப்படி வச்சுருக்க? என்னை பாரு இப்படி!!" அவனை பார்த்தபடி கேட்டாள் மைதிலி.

"அது யாரு? "

"எது? "

"போன்ல!? "

"அதான் சொன்னேனே! சந்தோஷ், என் பிரண்ட்..."

"எனக்கு அவனை புடிக்கல!! " தலையணையை நோன்டியபடியே சொன்னான் ராம்.

"ஏன் புடிக்கல? " என்னதான் சொல்கிறான் என அறியும் ஆவலில் அவளும் அவன்போக்கில் பேசத்தொடங்கினாள்.

"புடிக்கல மையு...." போர்வையால் முகத்தை மூடியபடி குரல்க்கொடுத்தான்.

போர்வையை விலக்கிவிட்டு, "ஏன்னு சொல்லு "என்றாள்.

"அவன் ஏன் உன்கிட்ட அப்படி சொன்னான்? "

"எப்படி? "

"நீ அழகா இருக்கனு! "

"ஏன்? நான் அழகா இல்லையா? " இதழ்க்கடையில் ஒட்டியிருந்த மென்னகை இருக்கவா, இன்னும் விரியவா என்றது!

ராமோ பதில் பேசாமல் மீண்டும் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டான். அவள் அதை விலக்க முயல, இறுக்கமாக அதை பற்றியபடி முகம் காட்டாமல் படுத்திருந்தான்.

"ஹேய் என்னை பார்த்து சொல்லுடா! நான் அழகா இல்லையா!? "

போர்வையை தானே விலக்கி "ரொம்ப அழகா இருக்க! " என சொல்லிவிட்டு மீண்டும் முகத்தை மூடிக்கொண்டான்.

'ஓ! வெட்கமா? ' என நினைத்தவள், "சரி எனக்கு சொல்லு, ஏன் உனக்கு சந்தோஷை பிடிக்கல?? "

"தெரியல " குரல் மட்டும் போர்வைக்குள் இருந்து வந்தது.

"சரி போ! " என திரும்பி படுத்துக்கொண்டாள்.

பின்பு மெல்ல அவள்புறம் திரும்பியவன், "மையு, அவன் எப்படி இருப்பான்? "

"யாரு ராம்..?"

"சந்தோஷ்..."

"ம்ம்ம்... தெரியலயே? "

"நீ பார்த்ததில்லையா? "

"ம்ஹும்!! "

"அப்போ அவன் உன்னை எப்படி பார்த்தான்..?"

அவனிடம் விவரிக்காமல், "இங்க பாரு.. இதுல தான் பார்த்தானாம்... " என வாட்ஸ்அப்பை திறந்து காட்டினாள். அவள் புகைப்படத்தை பார்த்த ராம் பேசாமல் இருக்க,

"என்ன ராம்? உன் மையு அழகா இருக்காளா? " என்று சீண்டினாள் மைதிலி.

"ம்ம்ம் ம்ம்ம்... அவன காட்டு... அவனும் இருப்பான்தானே இதுல...?" முகத்தை மட்டும் கோவம் போல வைத்துக்கொண்டு கேட்டான் அவன்.

"அட ஆமா! எனக்குகூட தோணல..." சந்தோஷின் Dpயை திறந்து காட்டினாள் மைதிலி. இடுப்பு வரை தெரிந்த அந்த நிழல்படத்தில் கண்களில் ஸ்டைலாக கூலர்ஸ் அணிந்து, எங்கோ பார்த்து சிரித்தபடி, கிட்டத்தட்ட ரசகுல்லா போல இருந்தான் சந்தோஷ்.

மைதிலி, "He's smart!! இல்ல?? "

"இல்ல " என சொல்லிவிட்டு 'உர்ர்ரென்ற ' முகத்துடன் போர்வைக்குள் தன்னை சுருட்டிக்கொண்டு உறங்கிப்போனான் ராம்.

மறுநாள் காலை,, "மையு... காபி!!"

"குட் மார்னிங் ராம்..." சிரித்தபடி தொடங்கியது அவர்களின் நாள்.

காலைஉணவின்பின், வீட்டின் வெளிபுற படிகட்டுகளில் அமர்ந்து கதைபேசியபடி இருந்தனர்.

"ராம்? உன் பேமிலி பத்தி சொல்லு....."

"என் பேமிலியா!!? "

"ஆமா.. சொல்லு..."

"விச்சு மாமா, ரிஷி, லட்சுமி அத்தெ, அப்புறம்???? ரமா பாட்டி... அவ்ளோதான்..."

"உன் அப்பா அம்மா? "

"அவங்கள நான் போட்டோல தான் பார்த்தேன்..."

"போட்டோலதான் பார்த்தன்னா? ஏன் நேரில பார்த்தது இல்லையா?"

"இல்ல.. நான் சின்ன பையனா இருந்தப்போ, ஒரு மலைக்கோவில் போனோமாம்... அப்போ நாங்க தவறி விழுந்ததுல அவங்க இறந்துட்டாங்க... நான் மட்டும் பொழைச்சுட்டேன்..."

'இதென்ன புதுக்கதை? ராமோட அப்பா ரிசென்டா தானே இறந்துட்டதா சந்தோஷ் சொன்னான்? ' என குழம்பினாள்.

பின், "உனக்கு ஒன்னும் அடிபடலையா ராம்? "

"தலையில அடிபட்டுச்சாம்..." என பின்னந்தலையை சுட்டிக்காட்டினான் ராம்.

"ஓ! சரி நீ என்ன படிச்சுருக்க?? "

"படிப்பா?? ஹா ஹா! எனக்கு அடிபட்டுச்சுனு சொன்னேன்ல, அதுக்கு அப்புறம் நான் எழுந்துக்கவே இல்லையாம்... ரொம்ப வருஷமா தூங்கிட்டேதான் இருந்தேனாம்!!!"

'புதுசா இருக்கேடா இது!! ' என எண்ணியபடி, "நீ எங்கயாது Foreign போயிருக்கியா ராம்? பிளைட்டுல?? "

"அதெல்லாம் நான் பார்த்ததுகூட இல்லை.. நம்ம போலாமா அதுல?" ஆசையாய் கேட்டான்.

'Edinburgh போய் படிச்சுருக்கான்... பிளைட் பார்த்தது இல்லைனு சொல்லுறானே??!! Something fissy, என்னமோ நடந்துருக்கு? இதுக்குமேல எதையும் நமக்குள்ளயே வச்சிருந்து பிரயோஜனம் இல்ல... சந்தோஷ்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம். அவரு விசாரணைக்கு யூஸ்புல்லா இருக்கும்...'

மனதில் நினைத்துக்கொண்டு சந்தோஷை தொடர்பு கொள்ள தன் அலைபேசியை எடுக்க அறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில்...

"ராம்ம்!!! என் மொபைல் எங்கடா?"

வாசலில் இருந்தவன் தன் கைகளை வயிறோடு கட்டிக்கொண்டு அமர்ந்தபடி "எனக்கு தெரியாது மையு" என கத்தினான்.

"இவனோடடடடட " என செல்லமாய் முறைத்துக்கொண்டு அவனை தேடி சென்றாள் மையு.

-தொடரும்....
 
Top