Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 05

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் ஐந்து:


அவனது இதழ் தீண்டலை எதிர்பார்த்திராத மைதிலி, அதிர்ச்சியில் அவனை தள்ளிவிட்டுவிட்டு, வேகமாக கட்டிலை விட்டிறங்கி சற்று தள்ளி நின்றுக்கொண்டாள்.

அவள் தள்ளிவிட்டதில் சிணுங்கியவன், "ஏன் மையு தள்ளி விட்ட? "என அவளிடமே வினவினான்.

"யூ.... யூ....யூ.........!!!! ஏண்டா என்னை கிஸ் பண்ணுன??? " என கூச்சம் கலந்த கோவத்துடன் கேட்டாள் மைதிலி.


"நீதானே மையு பண்ணிக்கோனு சொன்ன? இப்போ நீயே தள்ளி விடுற என்னை!!! போ,, நான் பேசமாட்டேன் உன்ட!!!! " தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு கோவம் காட்டினான் ராம்.

"ஏய், இங்க பாரு!!!" அவன் பின்னால் வேகமாக தட்டிவிட்டு, "நான் உன்னை லிப்ஸ்ல கிஸ் பண்ணுனு சொன்னேனா??" என எழுப்பிவிட்டு கேட்டாள்.

அவள் அடித்த இடத்தில் வேகமாக தேய்த்துக்கொண்டே, "அடிக்கமாட்டேனு தானே சொன்ன? இப்போ நீயும் அடிக்குற பார்த்தியா, என்னை??" அவள் கேள்வியாய் விடுத்து கண்ணை கசக்கினான் ராம்.

அவன் கண்ணை கசக்கியதும், இருந்த கொஞ்ச கோபமும் வடிந்தோட, பொத்தென்று அவனருகே அமர்ந்தாள் மைதிலி.

கண்களிலிருந்து அவன் கையை பிரித்துவிட்டு, தன் கைகளால் துடைத்துவிட்டாள்.. "ராம்..... சாரி ராம்.... இனி அடிக்கவே மாட்டேன்... நீ பண்ணது தப்புதானே? அதான் கோவத்துல அடிச்சுட்டேன்..." அவனிடம் சமாதானம் பேச,

"நான் எங்கே தப்பு பண்ணுனேன்?" என்று முறைத்தான் ராம்.

"லிப்ஸ்ல கிஸ் பண்ணக்கூடாது ராம்..அது தப்பு...." பொறுமையாய் அவள் எடுத்து கூற,

"அப்போ அவங்க ஏன் பண்ணாங்க??? " என்று அவளிடம் வினா எழுப்பினான்.

"எவங்க????? "

"அவங்கதான் டிவி ல..!? "

'டிவிலயா? ஒருவேளை படம் எதும் பார்த்துருப்பானோ?? பார்க்க பச்சபுள்ளமாறி இருக்கான்?!!!! ' அவனையே நோட்டம் விட்டாள் மைதிலி.
அதற்குள் அவன், "இங்க எல்லாம் கூட பண்ணுனாங்க தெரியுமா? ... அந்த பொண்ணு அவனை தள்ளியே விடலை....ம்ஹும்"அவன் மேலும் சில இடங்களை காட்டவும், தன்முன்னிருந்த அவன் கைகளை தட்டிவிட்டாள் மைதிலி.

"அய்யோ கருமம் கருமம்.... அதெல்லாம் எங்க பார்த்து தொலைஞ்ச நீ??? "

"அதுவா!!? நம்ம ரிஷி இல்ல? அவன் நைட்டான படம் பார்க்க உக்காந்துடுவான் அவன் ரூம்ல!!! அப்போ நானும் அவனுக்கு தெரியாம ஒளிஞ்சிருந்து பார்பேன்...ஹி ஹி " என தன் பயங்கரமான ரகசியத்தை அவளிடம் போட்டுடைத்தான் ராம்.

இதைகேட்ட மைதிலி "கடவுளே! இவனையா குழந்தைன்னு நினைச்சு கூட வச்சுருக்கோம்?" தன்னையே நொந்துக்கொண்டாள். "இங்க பாரு ராம்... அதெல்லாம் தப்புதான்...இனி அப்படியெல்லாம் பண்ணாத...! புரிஞ்சுதா? "என அவனின் மறுபக்கம் சென்று, முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள் மைதிலி. அதற்குமேல் அவளுக்கு பேச விருப்பமில்லை.

அவளை நெருங்ககிச்சென்று, அவளது தோளில் சுரண்டினான்.

"என்ன ராம்??? "

"இல்ல.....? தப்புன்னா,,, ஏன் அவங்க அப்படி பண்ணுறாங்க?? "

சற்று மூச்சை இழுத்துவிட்டவள், "ராம், அவங்க ரெண்டுபேரும் ஹஸ்பெண்டு அண்ட் வைஃப்,,, அவங்க பண்ணலாம்... அப்போ தப்பில்லை.."என சொல்லிவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டாள்.

மீண்டும் அவளது தோளை சுரண்டியவனிடம் திரும்பி, "ம்ப்ச், இப்போ என்ன ராம்? " வெளிப்படையாகவே சலித்துக்கொண்டாள்.

"நீதானே, மார்னிங் போன்ல நான் உன் ஹஸ்பெண்டுனு சொன்ன??"

அவன் சொன்னத்தில் திடுக்கிட்டவள், எழுந்து தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்துக்கொண்டாள்.

அவளிடம் இருந்து பதில் வராததால், மனதில் ஏதோ நினைத்தவனாய், "மையு.... ஏன் பேசமாட்டுற?? நான் உன்னை எதுவும் கேக்கமாட்டேன்...நீ கோச்சுக்காத! சரியா? எனக்கு தூக்கம் வருது.. வா தூங்கலாம்..."என அவனே பேசியபடி போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டான்.

அவன் செய்கையை பார்த்தவள், நிம்மதியாய் மூச்சு விட்டாள்... 'Thank god!! என்ன சொல்லி சமாளிக்குறதுனு யோசிச்சுட்டு இருந்தேன்..அவனே விட்டுட்டான்... இனிமே அவன்கிட்ட கவனமா நடந்துக்கனும்...' என நினைத்துக்கொண்டு படுத்தவள் உறங்கிப்போனாள்.

மறுநாள் பொழுதும் இனிதாய் அவன் முகம் பார்த்துக்கொண்டே விடிந்தது மைதிலிக்கு... அவனையே பார்த்திருந்தவளுக்கு நேற்றைய நிகழ்வுகள் நினைவில் அணிவகுத்தது. அவன் தீடீர் முத்தத்தில் முதலில் அதிர்ந்தாலும், அதை இப்போது நினைத்தவளுக்கு முகம் முழுதும் வெட்கச்சிரிப்பே தோன்றியது.

'என்னமோ இருக்குடா உன்கிட்ட!' அவன் மூக்கை செல்லமாய் அவள் திருக,
அவனிடம் சிறு அசைவு தோன்றவும், வேகமாக கண்களை மூடிக்கொண்டு தூங்குவதைப்போல நடித்தாள்.

மெல்ல உடல் முறுக்கி நெளிந்தவன் அருகில் மைதிலி இன்னும் தூங்குவதைக்கண்டு, மெல்லிய குரலில் "மையு...."என அழைத்தான்.

'என்னதான் பண்ணுறானு பார்க்கலாம்...!'ஒரு வித எதிர்பார்ப்புடன் அசையாமல் படுத்திருந்தாள்.

அவள் அசையாததை கண்டு, "ம்ம் மையு இன்னும் தூங்குது" என சொல்லிவிட்டு குளியலறைக்குள் புகுந்தான்.. அவனுக்காக தூங்குவதைபோல நடித்தவள், உண்மையிலேயே கண்ணயர்ந்துவிட்டாள்.

15 நிமிடங்களுக்கு பின்.. அவனின் 'மையு' என்ற பிரத்தேகமான அழைப்புடன், கமகமவென வாசனையுடன் ஆவி பறக்கும் காபியை கையில் வைத்துக்கொண்டு சிரித்தபடி அவள்முன் நின்றான் ராம்.

"குட்மார்னிங் மையு! "

"வெரி குட்மார்னிங் ராம்!!!! இதென்ன காபி எல்லாம்? நீயே போட்டியா??"

"ஆமா மையு.. நேத்து ஈவினிங் நீ போட்ட மாறியே நானும் போட்டுறுகேன்... நல்லா இருக்கா?"

சிறுது பருகியவள் "ரொம்ப நல்லா இருக்கு ராம்... வெரி குட்..." என்றாள்.

அவள் பாராட்டில் குஷியானவன், "நீ சீக்கிரமா குளிச்சுட்டு வா மையு!! நம்ம சேர்ந்து குக் பண்ணலாம்...." என்றான்.

குளித்துவிட்டு புடவையை மேலே கொஞ்சம் சொதப்பலாக சுற்றிக்கொண்டு வந்து ராமை தேடினாள். வாசலில் அவன் குரல் கேட்கவும் அங்கு சென்றவள், அவன் சற்றுத்தொலைவில் எதையோ பார்த்தபடி நின்பதை கண்டு, "ராம்!!! அங்கே என்ன பார்க்குற??? " என்றாள்.

அவள்புறம் பார்வையை திருப்பாமல், "அங்கே பாரேன் மையு...அந்த மரத்துல இருக்க கூட்டுல ஒரேயொரு குட்டி குருவி இருக்கு!! "

அவன் காட்டிய திசையில் பார்வையை பதியவிட்டபடி.."ம்ம்ம் குட்டியா இருக்கு"என்றாள்.

"இப்போ பாரு... ஒரு பிக் குருவி வந்து, அந்த குட்டி குருவியை கிஸ் பண்ணும்..."

'புத்தி போகுது பாரு!! 'என மனதில் திட்டியபடி, "அது அந்த குட்டி குருவியோட மம்மி... அது ஒன்னும் கிஸ் பண்ணல... குட்டிக்கு சாப்பாடு குடுக்குது.... நல்லா பாரு...!" என்றாள்.

"ஓஓஓ!!!! "என்று இழுத்தபடியே திரும்பி அவளை பார்த்தான்...
"ஹை மையு!!!! சாரி கட்டிருக்க!??? சூப்பரா இருக்கு... இரு நானும் போய் என் நியூ ட்ரெஸ் போட்டுவரேன் "என குதித்துக்கொண்டு உள்ளே ஓடி விட்டான்...

மைதிலியும் சிரித்தபடியே கிட்சனுக்குள் புகுந்தாள்... அவனை பற்றியே நினைத்துக்கொண்டு வேலை பார்த்தவளுக்கு நேற்று தான் டிடெக்டிவை தொடர்புக்கொண்டது நினைவுவந்தது... 'அச்சோ பேசிட்டு மொபைலை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டோம்! அவர் எதுவும் சொல்லனும்னு நினைச்சுருந்தா என்ன பண்ணுறது? நம்மளே போன் பண்ணுவோம்...' பிசைந்துக்கொண்டிருந்த சப்பாத்தி மாவை அப்படியே வைத்துவிட்டு தனது மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

டிடெக்டிவ்விற்கு கால் செய்துவிட்டு காத்திருந்தாள். மறுமுனையில், "ஹலோ மேம்.. நானே கால் பண்ணனும்னு இருந்தேன்.. I've got some details about that car.."

"ஹலோ ராஜேஷ்! என்ன டீடெய்ல்ஸ் தெரிஞ்சுது...?"

"மேம் அந்த கார் வன் இயர் முன்னாடி சென்னையிலதான் Liquid cash குடுத்து வாங்கிருக்காங்க.. அவங்க அட்ரெஸ் கூட வாங்கிட்டேன்.. ஆனா அது business address .. பரவாலயா?? "

"நோ ப்ராப்பளம்... சொல்லுங்க..." அவனை பற்றிய தகவல் தெரிந்துக்கொள்ள ஆர்வமானாள்.

"வேளச்சேரில இருக்க SRIRAM BUILDERS & CONSULTANTS அட்ரெஸ் மேம் அது..." ராஜேஷ் சொன்னதும்,

"என்ன சொன்னீங்க? ஸ்ரீராம்ஆ?" என்று வியந்தாள்.

"எஸ் மேம்.. அந்த கார் கூட அவர் நேம்ல தான் இருக்கு..."

"Oh! அந்த கம்பெனி எம்.டி யாரு?"

"Ofcourse மிஸ்டர் ஸ்ரீராம் ரவிச்சந்திரன்" என்றதும்,

மைதிலிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. 'ராம் எப்படி ஒரு Concernக்கு MDயா இருக்க முடியும்..?'

"ராஜேஷ்... இப்ப அந்த ஆபிஸ்ல ஸ்ரீராம் இருக்காரா?? "
ஒருவேளை அங்கு இன்னொரு ஸ்ரீராம் இருக்ககூடுமோ? என்ற சந்தேகத்தில் கேட்டாள் மைதிலி.

"சாரி மேம்.. இதுக்கு மேல எந்த டீடெய்ல்ஸ்சும் ஒரு நாளுல கலெக்ட் பண்ண முடியல.. என் ஜுனியர் இப்போ சென்னை போய்ட்டு இருக்காரு.. அவர் மேற்கொண்டு தகவல்களை சேகரிச்சு உங்ககிட்ட சொல்லுவாரு.."

"Okay that's fine!! நான் வெயிட் பண்ணுறேன்.." என காலை கட் செய்துவிட்டு குழப்பத்துடன் கிட்சனுக்குள் நுழைந்தவளை, அவள் குழப்பம் தெறித்து ஓடும்படி செய்தது ராம் நின்ற கோலம்...

"ராாாாம்... என்ன பண்ணிட்டு இருக்க நீ?? "

தவறு செய்த குழந்தை அன்னையிடம் கையும் களவுமாய் மாட்டிக்கொண்டதைப்போல் மிரண்டு விழித்தான் ராம்....

ராம் நின்றதை கண்டு கண்டிக்கும் குரலில், "என்ன பண்ணுற ராம்???? "அதட்டினாள்.

அவனின் மருண்ட பார்வையை பொருட்படுத்தாது, "உன்னை யாரு இதை பண்ண சொன்னது...? இப்ப பாரு புது பேன்ட் முழுக்க மாவு தெரிச்சுருக்கு....."

"உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் மையு... நீ போன் பேசிட்டு இருந்த...அதான் நானே செய்யலாம்னுனுனு....."

அவன் சிதறி கொட்டியிருந்த மாவை சுத்தப்படுத்தியபடி, "ஆமாம்.... ரொம்ப பெர்ர்ர்ரிய ஹெல்ப்..... போய் ட்ரெஸ்ஸ க்ளீன் பண்ணு... போ!!!! " என விரட்டிவிட்டபின், "காபி நல்லா இருக்குனு சொல்லிட்டா, மனசுல பெரிய Chef தாமுனு நினைப்பு போல!! " சத்தமாகவே புலம்பினாள்.

பின்பு மதியஉணவு வேளை வரை அவனின் 'உம்'மென்ற முகத்துடன் கழிந்தது...

இருவர் மட்டுமே உள்ள அந்த தனிமை சூழலில் அவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்திருப்பது மைதிலியை சலிப்படைய செய்தது.

"ராம்...! எதுக்கு இப்போ 'உர்ர்ரு'னு இருக்க?? மாவை பிசையுரேனு தூக்கி தூக்கி அடிச்சு, கிட்சன் புல்லா நாஸ்தி பண்ணிட்ட.... உன் புது ட்ரெஸ் முழுக்க கொட்டி வேற வச்சுட்ட..... அதான் கொஞ்சம் திட்டிட்டேன்... வேணுனா நீயும் என்னை திட்டிக்கோ!!!"

அதுவரை கன்னத்தில் கை வைத்தபடி திரும்பி உட்கார்ந்திருந்தவன், அவள் "என்னையும் திட்டிக்கோ" வென்று சொல்லவும் வேகமாக அவள்புறம் திரும்பினான்...

"போடி சப்பாத்திமாவு " என கத்திவிட்டு மீண்டும் பழைய நிலையிலேயே அமர்ந்துக்கொண்டான்.

"என்னது?? 'டி'யா???? "

"ஆமா, நீ மட்டும் கோவத்துல என்ன 'டா ' சொன்னல்ல?? அதான் நானும் 'டி '..." முகத்தை திருப்பியிருந்தபடியே சொன்னான்....

அவன் முன்சென்று நின்றவள், அவன் மீண்டும் மறுபக்கம் திரும்பவும், அவனை பிடித்து நிறுத்தி, "நான் எப்போ 'டா' சொன்னேன்? " என கேட்டாள்.

"நேத்து நைட்டு சொன்ன!!!!"

"சொன்னேனா?? " என சந்தேகமாய் கேட்டாள்.

'ம்ம்ம் ' என தலையை மேலும் கீழுமாய் ஆட்டினான்.

"ம்ம்ம்.... சரி இதுக்கும் அதுக்கும் சரியா போச்சு... என்ன? Okவா?? "

"ம்ம்ம்...." மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டான்...

"இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்துருக்குறது??? போர் அடிக்குது,,, வா.... கீழே ஒரு ரவுண்டு போலாம்....." அவன் கை பிடித்து இழுத்தாள் மைதிலி.

அவளிடமிருந்து தன் கையை உருவிக்கொண்டவன் 'ம்ஹும் ' என திரும்பிக்கொண்டான்..

"அடேயப்பா!!!!! இவ்வளவு வீம்பு ஆகாதுடா!! தப்பு நீ பண்ணுவ,,, அதை ஏன்னு கேட்டா,,, என்னவோ நான் தப்பு பண்ணுனா மாறி என்கிட்டயே கோச்சுப்ப!!! நான் உன்னை சுத்தி சுத்தி வந்து சமாதானம் பண்ணணும்?? எல்லாம் என் நேரம்!!! நான் கீழே போறேன்.... நீ வந்தா வா!!! "என குரலுயர்த்தாமல் பேசிட்டு கீழே சென்றாள்...

அவள் தலை மறையும் வரை தில்லாய் அமர்ந்திருந்தவன், அவள் சென்றதும் சட்டென தனது ஆற்றல் முழுதும் வடிந்து, உடல் நடுங்குவதை போல உணர்ந்தான்... அவள் பின்னூடே ஓடியவன் அம்மரபடிகட்டிகளில் உருண்டு விழுவதை போல ஓடிச்சென்றான்.


அவன் எழுப்பிய சத்தத்தில், சற்றுதூரத்தில் நடந்துக்கொண்டிருந்த மையு, திரும்பி பார்த்தாள்.. அவள் வேகவேகமாய் இவளை நோக்கி வருவதைக்கண்டு சிரிப்பு மூண்டாலும், அவனை காணாததை போல, சுற்றிலும் பார்த்தபடி நடந்து சென்றாள்.

அவள் நடையின் வேகம் அதிகரிக்கவும், ஓடிச்சென்று அவளுக்கு இணையாய் பக்கத்தில் சென்றதும்,, அவனும் மைதிலியை போல சுற்றிலும் பார்த்துக்கொண்டு (மையுவை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டு) நடந்தான்...

"எதுக்கு இப்போ என்கூட வர ராம்?? "

"அது......!? நீ காட்டுக்குள்ள காணாம போய்யிட்டா?? அதான் கூட வரேன்.....?"

"ஓஹோ!! அப்போ நீ துணைக்கு வர?? "

"ம்ம்ம் ம்ம்ம்...."

'இந்த சீனுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை....' என நினைத்தபடி நடந்தவர்கள் சிற்றருவியை அடைந்தனர்...

அருவியின் அருகே செல்ல செல்ல ராமின் கைகள் தன்னியல்பாய் மைதிலியின் கரம் பற்றின...

அவனின் பயம் உணர்ந்த மைதிலி.., "ஹே ராம்... ஒன்னும் பயம் இல்லை... நான் உன்னை தொலைச்சுட மாட்டேன்... என்கூடவேதான் நீ இருப்ப! என்னை நம்பு!!! "அவன் கரம் பற்றி அழுத்தம் கொடுத்தாள்.

அதில் மனம் தெளிந்தவன், "அப்போ நம்ம போய் குளிக்கலாமா??" என ஆசையாய் கேட்டான் ராம்...

'நம்ம குளிக்கலாமா வா? அய்யோ எதாவது ஏடாகூடமா செஞ்சு தொலைக்க போறான்!!!? இவனுக்கு எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணவேற முடியல... என்ன பண்ணலாம்???' என யோசித்தாள் மைதிலி.

அதற்க்குள், "என்ன மையு? தண்ணி பார்க்க பயமா இருக்கா?? பயப்படாத!! என்னை கெட்டியா புடிச்சுக்கோ!! வா உள்ள போலாம்...." அவளுக்கு தைரியம் சொன்னான்.

'கெட்டியா புடிச்சுக்கவா!' என அதிர்ந்தவள், "ஹி ஹி எனக்கு பயம் எல்லாம் இல்லை... நம்ம ரெண்டு பேருமே தண்ணிக்கு போய்ட்டோம்னா சரிவராது ராம்... எதாவது டேஞ்ர்னா எப்படி தெரியும் நமக்கு?"

"டேஞ்சர்னா?? நமக்கு என்ன டேஞ்சர்??? " என தாடை தட்டி யோசித்தான் ராம்...

"எது வேணா வரலாம்... ம்ம்ம்?? இங்க யானை தண்ணி குடிக்க வருமாம் ராம் ... சொன்னாங்க... சோ, நீ ஜாலியா குளி.. நான் அனிமல் வந்தா சிக்னல் குடுக்குறேன்!! எப்படி!? சூப்பரா? "

"ஹான்.....!!!! சூப்பர் சூப்பர்... நீ இங்கேயே இரு... நான் விளையாண்டுட்டு வரேன்... யானை வந்தா சொல்லு, ஓடி போய்டலாம்" தனது மேல்சட்டையை அவளிடம் தந்துவிட்டு உள்ளே ஓடினான் ராம்.

"ரொம்ப உள்ளே போகாத ராம்... நான் பார்க்குற தூரத்துலயே நில்லு..." என்று அவனிடம் உரக்க கத்திவிட்டு அவனை பார்க்கும்படியான தொலைவில் ஒரு கல்லின் மேலே அமர்ந்துக்கொண்டாள் மைதிலி.

தன்மீதிருந்த அவன் சட்டையில் இருந்து வந்த பிரத்யேக நறுமணத்தில் லயித்தபடி, அவனை கண்களில் காதல் தேங்க இமைக்காது பார்த்துக்கொண்டு இருந்தாள்.....

'ராம்கிட்ட அவன் குடும்பத்தை பற்றி விசாரிக்கனும்னு நெனைச்சேன்... மறந்தே போச்சு... இவன்கூட இருந்தா இவனை தவிற எதுவுமே மண்டைக்குள்ள ஓட மாட்டுது.... அவன் வெளியில வந்ததும் நியாபகமா இதைபற்றி கேக்கனும்....' என தனக்குள் நினைத்தபடி அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மைதிலி.

அவள் தன் கையோடு வைத்திருந்த அலைபேசியின் ஒலியில் தன் கவனத்தை ராமிடமிருந்து செல்போன் திரைக்கு மாற்றினாள்.

புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர, "அன்நோன் நம்பரா இருக்கே!! யாரா இருக்கும்? அட்டென்ட் பண்ணலாமா?!! ஒருவேளை அங்கிள் கான்டெக்ட் பண்ணுறாறோ?
ம்ஹும் இருக்காது.. " இவள் யோசனைக்கு காத்திராமல் அலைபேசி மௌனமாகியது.

யோசித்தபடி இருந்தவளுக்கு சட்டென மின்னல் வெட்டியதை போல தோன்றியது.

'காலையில டிடெக்டிவ் பேசுறப்போ சென்னையில இருக்க அவரோட அசிஸ்டென்ட் கான்டெக்ட் பண்ணுவாறுனு சொன்னாரே? ஒருவேளை அவரா இருக்குமோ??? ' வந்த எண்ணிற்க்கு மீண்டும் அழைக்க எத்தனித்த போது, அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

உடனே அழைப்பை ஏற்றவள்
"ஹலோ?" என்றதும்

"ஹலோ மைதிலி மேமா..?"

"எஸ்... நீங்க? "

"மேம், நான் சந்தோஷ்.. சென்னையில இருந்து பேசுறேன்.."

"ராஜேஷ் சொன்ன டிடெக்டிவ் நீங்கதானா? " சரியாய் கணித்தாள் மைதிலி.

"எஸ் மேம்... இனி இந்த கேஸ்ல உங்களுக்கு ஹெல்ப் பண்ண போறது நான்தான்... எனக்கு எந்த தகவல் தெரிஞ்சாலும்,, தகவல் சின்னதோ, பெருசோ,, உடனே உங்களுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுவேன்.."

"தட்ஸ் குட் சந்தோஷ்... எப்போ வேணாலும் என்னை நீங்க கான்டெக்ட் பண்ணலாம்..."

"தேங்க்யூ மேம்.. பை தி வே, இப்போ நான் ஸ்ரீராம் பில்டர்ஸ் கிட்டதான் இருக்கேன்... வொர்கர்ஸ் இப்போ லஞ்ச் ப்ரேக்ல இருக்காங்க...."

"ஓ!!! "

"ராஜேஷ் சார்கிட்ட நீங்க மார்னிங் இங்க கம்பெனியோட எம்.டி பற்றிய தகவல் கேட்டுருந்ததா சொன்னாரு.. நான் இங்க வந்த அரைமணிநேரத்துல, கம்பெனிவிட்டு வெளியில வந்த வேலையாட்கள்ட பேச்சுக்கொடுத்து சில தகவல்களை சேகரிச்சேன்..."

"கிரேட், என்னனு சொல்லுங்க சந்தோஷ்...."

"தெரிஞ்சவரை சொல்லுறேன் மேம்... அதுக்குமேல நான் விசாரிச்சு உங்களுக்கு டெய்லி அப்டேட் பண்ணுறேன்..."

"இட்ஸ் ஓகே மேன்..டெல் மீ! " ஆர்வத்தில் அவனை துரிதப்படுத்தினாள்.

"இந்த கம்பெனியோட முன்னாள் MD மிஸ்டர் ரவிசந்திரன், இரண்டு வருஷம் முன்னாடி ஒரு விபத்துல தவறிட்டார். அதுக்கு பிறகு நிர்வாகம் அவரோட பையன்,, அதாவது மிஸ்டர் ஸ்ரீராம் ரவிச்சந்திரன் கைக்கு மாறிருக்கு... இப்போ வரைக்கும் அவர்தான் எம்.டி மேம்..."

"இததான் ராஜேஷும் சொன்னாரு..." புதிய செய்தி கிடைக்காத ஏமாற்றத்தில் மைதிலி குரல் சலிப்பை காட்டியது...

"இப்போ ஸ்ரீராம் ஆபிஸ் பார்த்துக்குறாரானு கேட்டீங்களே மேம் ராஜேஷ்ட்ட?? " அடுத்த கேள்வியாய் சந்தோஷே எடுத்து கொடுக்க,

"எஸ் எஸ்.. Diu know about it?" என்றாள் மைதிலி.

"எஸ் மேம்... நிர்வாகம் என்னவோ ஸ்ரீராம் பேரூல இருந்தாலும் டெய்லி ஆபிஸ்க்கு விஸ்வநாதன் தான் வருவாராம். அவர் ஸ்ரீராம் சாரோட அத்தையின் கணவர்.."

'விஸ்வநாதன்?' என சொல்லிபார்த்தவள், 'ராம் சொல்லுற விச்சு மாமா அவர்தானோ? ' என்று எண்ணினாள்.

"அவரோட பையன் ரிஷிகேஷ் தான் ஸ்ரீராம் இடத்துல இருந்து எல்லாம் கவனிக்குறாராம்..." அடுத்த பதில் சந்தோஷிடம் இருந்து வர,

'ஓ!! ராம்க்கு படம் ஓட்டி காட்டுன புண்ணியவான் அவன்தானா!? ' என மனதில் நினைத்தவள், தூரத்தில் நீரீல் ஆடிக்கொண்டிருந்த ராமை 'போதும்! வா!! ' என சைகை காட்டிக்கொண்டே போனில்
"ஏன் அந்த ஸ்ரீராம் கம்பெனிக்கு வரமாட்டாரா? " என வினவினாள்.

அவள் கண்கள் தன்னை நோக்கி சிரித்தபடி நடந்துவரும் ராமையே மொய்த்தது...

"இல்ல மேம்.. அவர்க்கு இதுல ஆர்வம் இல்லையாம்... so he's taking care of his own profession in bangalore.. Monthly once chennai officeக்கு வருவாராம். கொஞ்சநாளா அதுவும் வரதில்லையாம் மேம்.."

"அப்படி என்ன வேலை பார்க்குறாரு? கலெக்டர் வேலையா?? " ராமை பற்றி தெரிந்ததால் விளையாட்டாய் கேட்டாள் மைதிலி.

"ஹா ஹா.. கலெக்டர் வேலை இல்லை மேம்.. டாக்டர் வேலை... Yes, he's a famous neurologist in bangalore... "

"வாட்ட்ட்ட்ட்ட்"

எதிர்பாராத செய்தியால் முழு அதிர்வை முகத்தில் தேக்கி தன்முன் நின்றவனை பார்த்தாள் மையு!!
 
Top