Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 04

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 4

"மையு..... என்னை பாரேன்..... இந்த சர்ட் எனக்கு நல்லா இருக்குமா?" கைகளில் ஒரு சட்டையை தன்மீது வைத்து காட்டிக்கொண்டே கேட்டான் ராம்.

"உன் கலருக்கு எல்லா சர்ட்டுமே அழகா இருக்கும் ராம்...." அவன் தோற்றத்தை கண்களில் நிரப்பியபடி பதில் சொன்னாள் மைதிலி.

அவள் சொன்னவுடன் ஆசையாய், "ஹை! அப்போ இதை வாங்கி தரியா?" என்று ராம் கேட்டிட, 'மாட்டேன்' என்றா சொல்வாள்?

"நீ எது கேட்டாலும் வாங்கிதரேன்.. ஆனா!?" என்று சட்டையை வாங்கி பார்த்துவிட்டு, "இந்த சர்ட் வேணாம். இதே மாறி வேற வாங்கிக்கலாம்..." என்றாள் மைதிலி.

"ஏன் மையு.....? " முகம் சுருக்கி கேட்டான் ராம்.

"இது பாரு ராம்.... உங்க சைஸ் இல்லை இது... இதை உன்னால போட முடியாது.. பத்தாது..." முடிந்தவரை அவனுக்கு புரியும்படி சொல்ல நினைத்தாள்.

"இல்லை... எனக்கு நல்லா பெருசாதானே இருக்கு....?" சட்டையை அவளிடம் இருந்து வாங்கிக்கொண்டு தன் மீது வைத்து காட்டினான் ராம்.

"ராம்..... இது உன் ஹைட்டுக்கு கரெக்ட்டா இருக்கு... But பாரு, உன்னால பட்டன் போட முடியாது.. உன் சைஸ்க்கு இதேமாறி நான் கேட்டு வாங்ககிதரேன்... சரியா!?" நம்பிக்கையாய் அவள் சொல்லியும் ராமின் முகம் தெளியவில்லை.

அரைகுறையாய் தலையாட்டினான். பின்னே அவன்கேட்டபடியே அவனுக்கு உடைகளை பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டு, அவனின் மலர்ந்த முகத்தை பார்த்தபின்பே கடையை விட்டு இறங்கினர்.

"மையு..... எனக்கு நிறைய வாங்கிக்குடுத்தியே! அப்போ உனக்கு?" அவளுக்கு எதுவும் வாங்காததால் காரில் ஏறும் முன் கேட்டிருந்தான்.

"எனக்கு?" தயங்கிய மையு, "எனக்கு எதுக்கு ராம்? உனக்குதானே ட்ரெஸ் இல்லை. அதான் உனக்குமட்டும் வாங்குனேன்..." என்றாள். ஆனாலும் கண்ணின் ஓரம் மிக மெலிதாய் கரித்தது. இத்தனை வருடமும் அவளுக்கு என்ன வேண்டும் என உரிமையாய் அன்பாய் கவனிக்க ஆள் இன்றி தனிமையில் தவித்தவளாயிற்றே!

"நீயும் வாங்கிக்கோ மையு... வா போலாம் உள்ள.... வாாாா...." அவள் கரம் பற்றிய ராம் பிடிவாதமாய், அவள் சொல்ல சொல்ல கேட்காமல் மீண்டும் உள்ளே அழைத்து சென்றான்.

இப்படி உரிமையோடு கைப்பிடித்து உடன்செல்லும் அவனையே சிரித்தபடி பின்தொடர்ந்தாள் மைதிலி.

ஜீன்ஸ் பேண்ட், குர்த்தி என வலம் வந்தவளை நொடிக்கொரு முறை பார்த்தவண்ணம் இருந்தான் ராம்.

"என்ன ராம்? பார்த்துட்டே இருக்கே?? "

"அது........ நீ அந்தமாறி எல்லாம் போட மாட்டியா?? " சற்று தள்ளி நின்றிருந்த இரு பெண்களை காட்டி கேட்டான்.

அவன் காட்டிய பக்கம் பார்த்தவள் மெலிதாய் திகைத்தாள்... 'புடவையா?'

"என் அம்மா போட்டோல இதான் போட்டுறுப்பாங்க.... அழகா இருக்கும் உனக்கு....." கூடுதல் தகவலாய் தன் அன்னையையும் அவன் சுட்டிக்காட்டி சொல்லிட, மறுக்க தோன்றாமல்,

"புடவை?? நான் கட்டினதே இல்லை ராம்....." என்றாள் இறைஞ்சலாய்.

ஒன்றும் சொல்லாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நின்றான் அவன். கோவம் வருகிறதாம்!!!

சிறுகுழந்தைபோல் அடம்பிடிப்பதை பார்த்து, "ராம்ம்ம்..... வா Saree வாங்கலாம்...." அவள் தான் உடனே இறங்கிவந்தாள்.

"போலாம்.. ஆனா, நான்தான் எடுத்து தருவேன்... " கட்டளை போல சொன்னவனோடு, புடவை பிரிவுக்கு சென்றாள்.

அங்குள்ள சிப்பந்தியிடன் மைதிலி அவன் விருப்பம் கேட்டு எடுத்துபோட சொன்னாள்.

விதவிதமாய் ரகரகமாய் அவர்கள் எடுத்து போட்டாலும், பார்த்த அனைத்தையும் வேண்டாமென அவன் சொல்லவும் 15 நிமிடத்தில் சலிப்பு தோன்றியது மைதிலிக்கு.

"ஏன் ராம்..? எல்லாம் நல்லாதானே இருக்கு? ஏன் வேணானு சொல்லுற? "

"அய்யோ லூசு லூசு!! நல்லாதான் இருக்கு.. ஆனா எல்லாமே உன்ன விட பெருசா இருக்கு.. உன் சைஸ்க்கு தானே எடுக்க முடியும்... உனக்கு ஒன்னுமே தெரியல மையு..." அவன் புடவை எல்லாம் பிரித்து பிரித்து பார்த்து கலைத்து போய்ட்டுக்கொண்டிருந்ததன் அர்த்தம் இப்போது அவளுக்கு விளங்கியது.

'என்னது புடவைக்கு சைஸ்ஸா??' அவனையே பார்த்தபடி குழம்பி நின்றாள்.

சிப்பந்தி அவர்களை ஒருமாதிரி பார்க்கவே, "இதுக்கெல்லாம் சைஸ் கிடையாது ராம்.. " என்றாள் அவனிடம் ரகசியமாய்.

"ஏன்?? "

"ஏன்னா? என்ன சொல்லுறது? புடவையை அப்படியே தான் கட்டுவாங்க! சைஸ் கிடையாது.." மீண்டும் சொன்னாள்.

"அதான் ஏன் மையு? "

"அது...., புடவைக்கு சைஸ் இல்லைனு சொல்றேன்ல? சொன்னா கேட்டுக்கோ ராம்...."

அவள் இறைஞ்சலில் என்ன கண்டானோ உடனே சிறு சலிப்புடனே "சர்ர்ரி" என்றுவிட்டான்.

'நல்ல வேலை கடைக்காரர்க்கு தமிழ் தெரியாது.. ' என நினைத்தபடி சில புடவைகளை எடுத்துக்கொண்டு, இன்னும் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு காரின் அருகே சென்றனர். அவன் ஆசையாய் நின்று வேடிக்கை பார்த்ததால், அவன் விருப்பத்தை அறிந்து, அவன் கேட்கும்முன்னே, ஐஸ்கிரீமை வாங்கிகொடுத்துவிட்டாள்.

"அச்சோ ராம்.... ஐஸ்கிரீம் சிந்துது பாரு... "தன் கைக்குட்டையால் அவனை சுத்தப்படுத்தியபடியே சொன்னாள் மைதிலி.

"நீயும் சாப்புடு மையு.. நல்லாயிருக்கு!!!"அவள் மறுப்பதற்க்குள், அவன் பாதியுண்ட ஐஸ்கிரீமை மைதிலி உதட்டில் வைத்துவிட்டான்.

பட்டும் படாமல் சுவைத்தவள், "ம்ம்ம் போதும்... நீ சாப்புடு... பேக் எல்லாம் எடுத்துட்டோம்தானே?" என்று கேட்டிட, அவன் 'ஆம் 'என தலையை உருட்டவும், "சரி கார்ல ஏறு! கிளம்பலாம்..." அவர்கள் கார் அவ்விடம் விட்டு நகர்ந்தது.

அதுவரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த கண்களுக்கு சொந்தக்காரன், தன் கைகளில் இருந்த அலைபேசி மூலம் ஒருவரை தொடர்புக்கொண்டான்..

"ஹலோ சார்.. நான் அசிஸ்டென்ட் மேனேஜர் ரவி பேசுறேன்..."

"சொல்லு ரவி!! கிளையன்ட்ட பார்த்துட்டியா?? " வேலை தொடர்பான கேள்விக்கு,

"சார்.. நான் மைதிலி மேடம்ம பார்த்துட்டேன்...!!!" என்று எதிர்பாராத பதிலை சொன்னார் அவர்.

"வாட்ட்ட்ட்ட்?? மைதிலிய பார்த்தியா? எங்கே? எப்போ???? " கேட்டவரின் குரலில், அதிர்ச்சியும் ஆசுவாசமும் போட்டி போட்டது.

"ஜெய்பூர் மெய்ன்ல ஒரு சூப்பர்மார்கெட் வாசல்ல...."

"ஹோ!! " தன்னை தொடர்புக்கொண்டால் வேறெங்காவது போய்விடுவேனென அவள் இறுதியாக போனில் பேசியதை நினைவுக்கூர்ந்தார்.

"சார்ர்ர்... நான் மேடம்ம ஒரு ஆளோட பார்த்தேன்..."

"நோ வே!! நீ மைதிலியதான் பார்த்தியா?? இல்லை யாரையோ பார்த்துட்டு உளறிட்டு இருக்கியா?? " மைதிலி பற்றி நன்கு அறிந்ததால் ரவி சொன்னவுடன் இக்கேள்வி அவரிடம் இருந்து வந்தது.

"இல்லை சார். நான் மேம்ம தான் பார்த்தேன். கூட இருந்தவரு மேம்ம "மையு"னு கூப்டாங்க... மேம் அவரை "ராம் "னு கூப்ட்டாங்க... ஒரே ஐஸ்கீரிமை ஷேர் பண்ணிக்கிட்டாங்க... and Sirrr?? " ஒட்டுப்பார்த்ததை ஒன்று விடாமல் ஒப்பித்துவிட்டு மேலும் அவன் இழுக்க,

"What?? " என்றார் மறுமுனையில் இருந்தவர் பொறுமையின்றி.

"I think they are in love with each other"

"ஓ!! "அவருக்கு ரவி சொல்வதையெல்லாம், இதுநாள்வரை மைதிலியை உடனிருந்து பார்த்ததால் நம்ப முடியவில்லை... 'மைதிலி லவ் பண்ணுறாளா? அவனுக்காகதான் எல்லாத்தையும் விட்டுட்டு போய்யிருப்பாளோ?? ' புதிய சந்தேகம் துளிர்விட்டது.

"சார்.. நான் அவங்களை ஃபாலோ பண்ணிட்டு போகவா?? "

"இல்லை, No.. no need.. இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும்... நீ உன் வேலையை முடிச்சுட்டு வா! "என அழைப்பை துண்டித்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஜனார்த்தனன் - மிதிலாவின் ஒரே செல்ல மகள் மைதிலி.... அவள் பிறந்ததுமுதல் இந்நாள் வரை உடனிருக்கும் அவர், கேசவன்! மைதிலியின் கார்டியன், ஜனார்த்தனின் உயிர்தோழன்... பெற்றோரின் இழப்புக்குபின் 'தனக்கென யாருமில்லை 'என்பது மற்றவர் பேசியதை கேட்டதின்மூலம் மைதிலி மனதில் ஆழப்பதிந்தது.,

அதை மாற்ற கேசவன் எவ்வளவோ முயற்சித்தும், இறுதிவரை முடியாமலே போனது.. அவள் ஒருவனை காதலிக்கிறாள் என்பதை நம்ப முடியாததன் காரணம், அவள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிடமாட்டாள். சில நேரம் 'தன்னையே அவள் சந்தேகிக்கிறாளோ? 'என்றுக்கூட கேசவனுக்கு தோன்றியதுண்டு..

"சார், இந்த பைல்ல சைன் பண்ணனும்.."

அதற்குமேல் கேசவன் நிமிர முடியாதபடி வேலை கட்டிப்போட்டது...
------------

"மையு இது நல்லாயிருக்கா?? "

"ராம்.... போதும்... எல்லா ட்ரெஸும் போட்டுக்காட்டிட்ட!!! டைம் ஆச்சு, வந்து படு, வா!!! " தாராளமாய் நால்வர் படுத்துறங்கும் கூடிய கட்டிலில் அவன் இடத்தைக்காட்டி அழைத்தாள் மைதிலி.

அவளருகே வந்து படுத்தவன், "நீ என்ன ரொம்ப மிரட்டுற!! " என 'உம்'மென்றே முகத்துடன் புகார் படித்தான்.

"ஆமா ஆமா.. நான் மிரட்டி நீ ரொம்ப பயந்துட்டே!!! "செல்லமாக அவன் கன்னம் கிள்ளினாள் மையு.

"மையு??? "

"என்ன ராம்?? "

"நீ ஏன் தனியா இருக்க??" அவனுக்கு திடீரென சந்தேகம்.

"தனியாவா இருக்கேன்? உன்கூட தானே இருக்கேன்!! "

"அதில்லை... உன் டாடி மம்மி எங்க?? "

"அவங்க இல்லையே!!! "

"எங்க போய்ட்டாங்க?? "

"சாமி கிட்ட... "

"எப்போ? "

"ம்ம்ம்... நான் மூணு வயசு இருக்கப்போ!! தாத்தா பாட்டி அம்மா அப்பா நான் எல்லாரும கார்ல டூர் போனோம்... திடீர்னு ஆச்சிடென்ட்... பெரியயய ஆக்ஸிடென்ட்.. எல்லாரும் இறந்துட்டாங்க... என்னை தவிர.. அப்போ இருந்து தனியாதான் இருக்கேன்..." அவளுக்கே தெரியாமல், அவள் கண்களின் ஓரங்களில் இருந்து இருதுளி கண்ணீர் கசிந்தது. விட்டத்தையே பார்த்தபடி படுத்திருந்தவளின் அருகில் நகர்ந்து, அவள் கண்களை துடைத்து விட்டான் ராம்.

"அழாதே மையு.,.. இனி தனியா இருக்காத.. நான்கூட இருக்கேன்.. சரியா? " ஆறுதல் சொல்லக்கூட தெரிந்தது அவனுக்கு.

"நீயா??நீதான் உங்க விச்சு மாமா வந்துட்டா எனக்கு டாடா சொல்லிடுவியே!?? " கவலை மறந்து அவனை கிண்டல் செய்தாள் மைதிலி.

அது புரியாதவன் தீவிரமான குரலில் "இல்லை இல்லை... யாரு வந்தாலும் உன்னவிட்டு போகமாட்டேன்..." என்றான்.

அவன் கூற்றில் நெகிழ்ந்தவள், மகிழ்ச்சியில் அவன் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றினாள்.

"அச்சச்சோ!!! நீ என்னை கிஸ் பண்ணிட்ட!" அவளே யோசிக்காமல் நொடியில் செய்துவிட்டதற்கு, தம்பட்டம் அடித்து காட்டினான் ராம்.

"இப்ப என்ன அதுக்கு?? "முகம் சிவந்தது மையுவிற்க்கு..

"நீ மட்டும் பண்ணுற?? நானும் பண்ணுவேன்..."

"வேணாம் வேணாம்.. தூங்கு..." குரல் உள்ளே சென்றது.

"நானும் பண்ணுவேன்...."

அவன் அடம்பிடிப்பதைக்கண்டு வேறு வழியின்றி, "சரி பண்ணிக்கோ!!! "என கண்களை இறுக்கி மூடியபடி அவனின் நெற்றி முத்தத்திற்க்கு காத்திருந்தாள்.

அருகில் வந்தவன், நேரே சென்றது அவள் இதழ்களுக்கு... அவன் இதழ்கள், அவளின் இதழ்களை தீண்டியதும், அந்த தீடீர் தாக்குதலை எதிர்பார்க்காத மைதிலியின் விழிகள் அதிர்ச்சியில் பூசணிக்காய் போல் விரிந்தது. இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் அவளால் தள்ளி நிற்க முடியும், மேலும் அவனை இத்தனை கவனமாய் அவள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் அவளுக்கு இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று, அவனிடம் இருக்கும் எதிலோ ஒன்றில் அவள் மூழ்கி போனாள்.

பூவனத்தின் நடுவே முதல் முறை சந்தித்துக்கொண்ட ராமனுக்கும் சீதைக்கும் 'கண்ட நொடியில் காதல்' வந்தது என்றால், கலியுகத்தில், அடர்வனத்தின் நடுவே சந்தித்துக்கொண்ட இந்த ராமனுக்கும் மைதிலிக்கும் கூட 'கண்டதும் காதல்' தான்!

-தொடரும்...
 
Top