Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 03

Advertisement

அத்தியாயம்-03

"நான் உன் Husbandஆ? " வெள்ளைநிற போர்வைக்குள் உடல் மறைத்து, தலையை மட்டும் நீட்டியபடி கேட்டான் ராம்.

"மாட்டிகிட்டோமே!!!? "என உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியில், "ஹே நீ தூங்கிட்டு இருக்கனு நினைச்சேன்...எப்போ எழுந்துருச்ச? காபி போடுறேன் வா! "என அவன் கேள்வியை திசைதிருப்பிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தாள் மைதிலி.

காபியை தயாரித்தபின், அவனை அழைக்க வாயை திறந்தவள், அவன் பெயரை தான் இதுவரை கேளாததை நினைத்து மெலிதாய் தலையிலடித்துக்கொண்டாள்.

கோப்பைகளுடன் அவனிடம் சென்று ஒன்றை அவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை அவள் பருகத்தொடங்கினாள்.

அவன், "நீ காபி கூட சூப்பரா செய்யுறியே! நீ டெய்லி இதை குடிப்பியா!? எனக்கு இது ரொம்ப புடிக்கும். ஆனா இதெல்லாம் எனக்கு குடுக்க மாட்டாங்க...." சுனக்கமாய் சொல்லிவிட்டு காபியை காலி செய்தான்.

அவன் சொல்வதையெல்லாம் யோசித்துப் பார்த்த மைதிலிக்கு, அவன் வீட்டில் எதுவோ சரியில்லை என்பது போல் தோன்றியது.

அவன் அதற்குள், "உன் பேரு என்ன? "என கேட்டான்.

"அட! நானே கேக்கனும்னு நினைச்சேன்... என் பேரு மைதிலி. உன் பேரு என்ன? "

"மைய்யு....திலி யா? "

" மைய்யு...... திலி இல்ல.... மைதிலி.... இந்த பேரை சொல்லவே உனக்கு கஷ்டமா இருக்க?" பொய்யாய் அவனை முறைக்க, கிளுக்கி சிரித்த ராம், அவள் பெயரை சொல்லி பார்த்தான்.

"மை....திலி "

"சரி உன் பேரு என்ன? "

"ராம் "

அவன் 'ராம் ' என்றதும் தன்னுள் மின்னல் வெட்டியதை போல உணர்ந்தாள் மைதிலி.

மெல்ல இதழ் பிரித்து, "உன் பேரு நெஜமாவே ராம் ஆ?" என கேட்டாள்.

அவனோ உடனே "இல்ல " என்றான்.

"என்ன? " அத்தனை உணர்வும் வடிந்ததை போல தோன்றியது மைதிலிக்கு.

"என் முழு பேரு 'ஸ்ரீ ராம் ' "

'ஸ்ரீ ராம்...... மைதிலி..... மைதிலிஸ்ரீராம்....'சிறு புன்னகையுடன் மனதில் சொல்லிப்பார்த்தவள், திகைத்தாள். 'எதுக்காக இப்படி பண்ணுறோம்... தப்பு.... இந்த எண்ணத்தை இதோட நிறுத்திக்கனும் '.

தன்னுள் அவன் வர கூடாது என கடிவாளம் போட்டவளுக்கு, முதல் பார்வையிலேயே இவள் நெஞ்சில் சென்று ஒளிந்துக்கொண்டான் என்பது தெரியவில்லை.

"மையு... நான் குடிச்சுட்டேன் பாரு!!! " காலி டம்ளரை தூக்கி காட்டி சிரித்தான் ராம்...

அவன் சிரிப்பில் நிதானித்தவள், "சூப்பர்.. வெரி குட் பாய் ... இப்போ சமத்தா குளிச்சுட்டு வந்துடு, ஓடு... "கையில் டவலை கொடுத்து குளியலறைக்குள் அனுப்பினாள்.

விரிந்த கூந்தலை தூக்கி சுருட்டியபடி நடந்தவள் கண்ணில், நேற்று வாங்கிய காரின் எண் எழுதிய சீட்டு பட்டது.

'இதை மறந்துட்டோமே! ராம் சொல்லுறதெல்லாம் வச்சு பாக்குறப்போ எதுவோ தப்பா படுது... என்ன பண்ணலாம்? அவங்களை நம்பி ராமை எப்படி அனுப்பமுடியும்? '

ராமை அனுப்பி வைப்பதை நினைத்ததற்கே அவளுள் எதுவோ காலியானதை போல் உணர்ந்தாள் மைதிலி.

'முழுசா ஒரு நாள் கூட பழகல... அதுகுள்ளயே நான் இப்படி ஆகிட்டேனே!! ' கையில் அந்த காகித துண்டை வைத்துக்கொண்டு எண்ணங்களில் மூழ்கியிருந்தாள்.

"இஸ்ஸ் இஸ்ஸ்ஸ் "

அசையாமல் நின்றுக்கொண்டிருந்தாள் மைதிலி. மீண்டும் அந்த சத்தம் "இஸ்ஸ் இஸ்ஸ்ஸ்ஸ் ", இம்முறை இன்னும் சத்தமாய்...

அதில் அவள் கவனம் சத்தம் வந்த திசை நோக்கி குவிந்தது...

"ராம்!!!!!! " குளியலறை கதவின் வழியே தலையை மட்டும் நீட்டியபடி சத்தமெழுப்பியவனை குழப்பத்துடன் பார்த்தாள் மைதிலி.

"என்னாச்சு ராம்.. ஏன் இப்படி நிக்குற? " என்றபடியே அவனை நெருங்கினான்.

"அச்சோாா..... கிட்ட வராத மையு!!"

"ஏன்? "

"அய்யோ நான் பப்பிஷேமா இருக்கேன்...."

மைதிலிக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே புரியவில்லை. இது போன்ற சூழ்நிலை அவளுக்கு முற்றிலும் புதிது.

"குளினு சொன்னியே, ட்ரெஸ்ஸு குடுத்தியா?? " விவரமாய் அவளை கேட்டான் ராம்.

"ஹான்??? " என்ன சொல்வதென தெரியாமல் அப்படியே நின்றாள்.

"என்ன பாக்குற?? ம்ஹும் ம்ஹும் எனக்கு ட்ரெஸ்ஸு குடு மையு!! " சிறுபிள்ளையென அவன் சிணுங்க,

'என்ன மையு வா? இது எப்போ இருந்து?? ' அப்போதுதான் ராம் தன்னை "மையு" என அழைப்பதை உணர்ந்தாள்.

"மையுயுயுயுயு " மீண்டும் அழைத்திருந்தான்.

"ஹான் என்ன ராம்? "

"ட்ரெஸ் போடனும்...."

"இப்போ ட்ரெஸ் கேட்டா எங்க போறது ராம்?? முன்னாடி போட்டுருந்தது எங்க? "

"அது நனைஞ்சு போச்சு " முகம் சுருங்கி போனது அவனுக்கு.

"என்ன பண்ணுறது??" என யோசித்தவள், "சரி என்னோட சர்ட் ஒன்னு ப்ரீ சைஸ் இருக்கு.. போட்டுக்கோ... பேண்ட் இல்ல... டவல் கட்டிக்கோ... உன் ட்ரெஸ்ஸ வாஷ் பண்ணிடுறேன், கொஞ்ச நேரத்துல ட்ரை ஆகிடும். ஈவினிங் வெளியில போய் தேவையானதை வாங்கிகலாம்..." ஒரு முடிவுக்கு அவள் வர, அதற்கு ஒப்புக்கொண்டான் அவன்.

"ம்ம் Ok மையு "

அவனிடம் சர்ட் கொடுத்துவிட்டு வேகமாக காலை உணவை செய்ய தொடங்கினாள் மைதிலி.

"எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்?? ஆபிஸ், மீட்டிங், Foreign tripனு சுத்திட்டு இருந்தேன்... வந்தே ஒரே நாளுல என்னை தலைகீழா மாத்திருக்கான்!! " கை அதன் போக்கில் வெளியில் இருந்தாலும், மனம் அவள் மாற்றத்தை அலசிக்கொண்டிருன்தது.


"மையு.... "

"என்ன ராம்? " பாஸ்தாவை கிண்டியபடி திரும்பாமல் நின்றாள் மைதிலி.

"என்னை பாரேன்!!! " சட்டையின் இரு கீழ் ஓரங்களை பிடித்து இழுத்தபடி நின்றிருந்தான்.

பார்த்ததும் சிரிக்க தோன்றினாலும், சிரிப்பை மறைத்து 'சூப்பர் 'என விரல் மடக்கி காட்டினாள். முகமெல்லாம் பல்லாய் ஆனது ராமிற்கு.

"ரமா பாட்டியும் நான் எது செஞ்சாலும் சூப்பர்னு சொல்லுவாங்களேளள!!!!" குதூகலமாய் அவன் சொல்ல,

"ரமா பாட்டி யா? அது யாரு? " என்றாள் புரியாமல்.

"எங்க வீட்டுலயே இருப்பாங்க.. சமைப்பாங்க... நான் அடிவாங்குறப்போலாம் அவங்க அழுவாங்க. எனக்கு ரொம்ப புடிக்கும் பாட்டிய... "

"ஓ " ராம் குடும்பத்தை பற்றி விசாரிக்க வேண்டியதன் அவசியம் இப்போது கட்டாயமானது மைதிலிக்கு.

"என்ன சமைக்குற மையு? வாசனையா இருக்கு?? " அவள் இடப்புற கழுத்தில், தன் தாடையை பதித்தபடி கேட்டான் ராம்.

அவன் செயலில் திடுக்கிட்டு அசையாமல் நின்றவள், "என்ன பண்ற நீ? " என கேட்டாள்.

"மோப்பம் புடிக்குறேன்! "

"அதை இந்த பக்கம் வந்து புடி! " அவன் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்திவைத்தாள்.

"நல்லா வாசமா இருக்கு!!! இது என்னது? " மூக்கை சுருக்கி வாசம் பிடித்தவாறு சொன்னான் ராம்.

"பாஸ்தா...! சமைக்க வேற எதுவும் நான் வாங்கி வைக்கல... நீ சாப்பிட்டு இரு.. உன் ட்ரெஸ்ஸ வாஷ் பண்ணிவைக்குறேன். ட்ரை ஆனதும் வெளியில போய்ட்டு வரலாம்.." சொல்லிவிட்டு பாத்ரூமிற்க்குள் சென்றாள் மைதிலி...

"வெளியில போறோமா? ஹைஹ!! ஜாலி "என முதலில் குதித்தவன் பின் தயங்கி, "மையு...நீயும் என்னை காணா போட்டுடமாட்டதானே?? "என வினவினான்.

"ம்ம் ? காணா போய்ட்டா என்ன செய்வ?? "

"தெரிலயே!! "

அவன் வெகுளிதனத்தில் கவரப்பட்டவள், "So sweet.. உன்னை நான் பத்திரமா பார்த்துப்பேன்.. இப்ப போய் சாப்பிட்டு ரெடி ஆகு.."

"சரி மையு..."

இம்முறை மறவாமல் தனக்கு மிகவும் பரிச்சயமான டிடக்டிவ் ஏஜென்சிக்கு தொடர்புக்கொண்டு, அந்த காரின் எண்ணை கொடுத்தாள். ராமின் குடும்பம்பற்றி தெரிந்துகொண்டபிறகே அவரை ஒப்படைப்பதா? வேண்டாமா? என்ற முடிவை எடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள்.

வேலைகளை முடித்துக்கொண்டு, விடுதிஅலுவலகத்தின் காரில், அவனை ரசித்தபடியே, அவன் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் அளித்துக்கொண்டும், தன்னுடைய வாழ்வில் நடந்துள்ள திடீர் மாற்றத்தை எண்ணி வியந்தபடியும் பயணித்தாள் மைதிலி (ஸ்ரீராம்)....

-தொடரும்...
Super
 
மையு மையு மையு மையு மையு
"கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா
கேக்குறா
கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்............"
 
Last edited:
Top