Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 2:

“இப்ப எதுக்கு கண்ணு கலங்குற..? என்ன பிரச்சனை உனக்கு..?” என்றார் பார்வதி கடுமையாக.

“ஒண்ணுமில்லை” என்பதைப் போல் மதியின் தலை ஆட..

“இங்க பார் மதி..எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான் இங்க வந்திருக்க.உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் தான் பார்க்கணும். அதை விட்டுட்டு..பலசையே நினைச்சு கண்ணு கலங்குறதா இருந்தா..நீ மெட்ராஸ்க்கே போய்டு..!” என்றார்.

“இப்ப எதுக்கு பட்டுப் பட்டுன்னு பேசுற..?” என்ற மனோகரின் அதட்டலில் கொஞ்சம் மட்டுப் பட்டார் பார்வதி.

மதிக்கு தான் குற்ற உணர்வாய் இருந்தது.”மன்னிச்சுடுங்கம்மா..” என்றாள் குனிந்த தலையுடன்.

“என் பொண்ணு இப்படி யார் முன்னாடியும் தலை குனிய கூடாதுன்னு தான் சொல்றேன்..” என்று பார்வதி சொல்ல..

“புரியுதுமா..” என்றாள்.

“ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க..! போய் துர்க்கையம்மன் கோவில்ல விளக்கு போட்டுட்டு...சாமி கும்பிட்டு வந்திடு” என்றார்.

“முடியாது” என்று வாயைத் திறக்கப் போனவளுக்கு சற்று முன் பார்வதி சொன்னது நியாபகம் வர..”சரி” என்று தலையை ஆட்டினாள்.

ஆனால் அப்படி பட்டென்று அவளால் போக முடியுமா..? நடந்த விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுமா..? என்று யோசிக்க... எப்படியும் எல்லாவற்றையும் கடந்து வந்து தான் ஆக வேண்டும் என்ற முடிவில் தங்கையுடன் கிளம்பினாள் மதி.

மனோகரனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது நிர்மூலம் தான்.அவர் ஆடிய ஆட்டமும் கொஞ்ச நஞ்சமில்லை என்பது அவருக்குத் தெரியும்.அதானால் அமைதியாய் இருப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

மதியோ..மாற்றங்கள் கண்ட தன் ஊரை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.இந்த பத்து வருடங்களில்..பல ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாக மாறி இருந்தன.

முன்பு எல்லாம்..அந்த ஊரில் ஒரே மச்சு வீடுதான் இருக்கும். அதையே மச்சு வீடு என்று அனைவரும் பெருமையாக பார்ப்பார்கள். ஆனால் இன்று பல வீடுகள் மாறி இருந்தது.குடிசை வீடுகள் அவர்கள் ஊரில் அதிகம்.ஆனால் இன்று குடிசை வீடுகளே இல்லை.

“என்னாக்கா..?அப்படி பார்த்துட்டு வர..?” என்று சுத்தி கேட்க..

“இல்லை..இத்தனை வருஷத்துல..ஊர் கொஞ்சம் மாறி இருக்கும்ன்னு நினைச்சேன்..ஆனா ஒரே அடியா மாறி இருக்கும்ன்னு நினைக்கவேயில்லை சுமதி..” என்றாள்.

“அது என்னவோ உண்மைதான் க்கா...நம்ம ஊரு முன்ன மாதிரி இல்லை.மனுஷங்களும் முன்ன மாதிரி இல்லக்கா...பொறாமை,வஞ்சகம் எல்லாமே கூடி தான் போயிருக்கு..” என்றாள் சுமதி கடுப்பாய்.

“என்னாச்சு சுமதி..?” என்றாள்.

எதையோ சொல்ல வாயெடுத்த சுமதி..பிறகு என்ன நினைத்தாளோ... ”விடுக்கா வந்த உடனே இதையெல்லாம் பத்தி பேசிகிட்டு..நீ வா...நாம போய் முதல்ல சாமியை கும்பிட்டு வரலாம்...” என்றபடி பேச்சை மாற்றினாள்.

கிராமங்களில் பொதுவாக மாலை நேரங்களில் தான் அதிகமாக கோவிலுக்கு செல்வர்.அது அந்த ஊரிலும் வழக்கமாக இருந்தது.
வேண்டியதை கொடுக்கும் கோவில் என்ற பெருமை அந்த கோவிலுக்கு உண்டு.அந்த ஊரில் மட்டும் இல்லாமல் பக்கத்து கிராம மக்களும் அங்கு வந்து வழிபடுவது வழக்கம்.ஒரு சக்தி வாய்ந்த அம்மனாக.....அந்த துர்க்கை அம்மன் பிரசித்தி பெற்றிருந்தாள்.

கோவிலைப் பார்த்த மதிக்கு ஆச்சர்யம்.கோவிலும் மாறி இருந்தது. அம்மனும் மாறி இருந்தாள்.ஆம் முன்பு எல்லாம் சிறியதாக இருந்த அம்மன் சிலை இப்போது பெரிய சிலையாக இருந்தது.முன்பு சாதாரண கோவிலாக இருந்த இடம்..இன்று முற்றிலும் மாறி இருந்தது.அந்த கோவிலுக்கும் அவளுக்கும் உண்டான பந்தம்...சில வரிகளால் சொல்லக் கூடியது அல்ல.அவை பொக்கிஷமான நினைவுகள்.

அங்கே இரண்டு பெண்கள் கோவிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.இடுப்பில் ஒன்றும்,கையில் ஒன்றுமாய் குழந்தைகளுடன் வந்தவர்களை அடையாளம் கண்டதும் மதிக்கு ஆனந்த மகிழ்ச்சி.

“ஹேய் கங்கா,செல்வி...!” என்றாள் சத்தமாய்.இவளைத் திரும்பிப் பார்த்தவர்கள்...இவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்து...
“ஏய் வண்ணம்...” என்றனர் சந்தோஷமாய்.

“எப்படி இருக்கீங்க டி?” என்றாள் சந்தோஷமாய்.

“நாங்க இருக்குறது இருக்கட்டும்..நீ எப்படி டி இருக்க..இப்பதான் இங்க வர வழி தெரிஞ்சதா..?” என்றனர் உரிமையாய்.

“நான் நல்லா இருக்கேண்டி...உங்க ரெண்டு பேருக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு...இது உங்க பிள்ளைங்களா..?” என்றாள் மதி.

“அது ஆச்சுடி அப்பவே.பன்னிரென்டாவது கூட முடிக்கலை.. கட்டி வச்சுட்டானுக..!” என்றனர் சலிப்பாய்.

அந்த ஊரில் அது ஒரு பழக்கம்.பன்னிரெண்டாம் வகுப்பே...அவ்வூர் பெண்களுக்கு அதிகப்படியான படிப்பு.அதற்கு மேல் யாரும் அனுப்ப மாட்டார்கள்.

ஆண் பிள்ளைகள் படித்தால் தங்களை காப்பாற்றுவான்.பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் காதல் கசமுசா என்று வந்து நிற்கும் என்ற அதீத நம்பிக்கை அவ்வூர் மக்களுக்கு.

அந்த வகையில் மனோகரனுக்கு மகளாய் பிறந்ததில் வண்ண மதி பெருமை தான் கொள்ள வேண்டும்.எப்பொழுதும் அவளின் விருப்பத்திற்கு அவர் தடை சொன்னதில்லை.

மதி நன்றாக படிக்க படிக்க..அவளை மேலே படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடத்தில் வளர்ந்ததே தவிர...ஒருநாளும் வேறு மாதிரி யோசிக்கவில்லை.
 
Last edited:
“எங்களால தான் படிக்க முடியலை..நீயாவது மேல படிச்சியாடி...ஆளே அடையாளம் தெரியலை.ரொம்ப அழகாயிட்டடி..” என்றனர் அவளைத் தடவி..வெள்ளந்தியாய்.

“நல்லா படிக்க போயிதாண்டி கவர்மென்ட் வேலை வாங்கியிருக்கேன். டீச்சர் ஆகிட்டேண்டி..” என்றாள் மதி.

“என்னது டீச்சர் ஆகிட்டியா..?” என்று அவர்கள் அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் பார்க்க...

“அக்கா..! நிஜமாவா..?” என்றாள் சுமதி சந்தோஷமாய்.அப்பொழுது தான் எதிரில் இருந்தவர்களுக்கு தெரிந்தது..இந்த விஷயம் அவள் தங்கைக்கே இப்பொழுதான் தெரியும் என்று.

“என்னடி வண்ணம்..சுமதி கிட்ட கூட சொல்லலியா..?” என்றனர்.

“இன்னும் அம்மா அப்பாகிட்டையே சொல்லலடி...சாமிகிட்ட தான முதல்ல சொல்லணும்...நாம சின்ன வயசுல இருந்து அப்படித்தான..அதான் இங்க வந்தேன்.சாமியை கும்பிட்டு போய் தான் அம்மா,அப்பாகிட்ட சொல்லணும்..” என்றாள் சந்தோஷமாய்.

“இதைக் கேட்டா பார்வதி அத்தை ரொம்ப சந்தோஷப்படும்டி...! வீட்டுக்கு கண்டிப்பா வா வண்ணம்..! உன்கிட்ட நிறைய பேசணும்..!” என்று அழைப்பு விடுத்தபடி பள்ளிப்பருவ தோழிகள் செல்ல...

அவர்களையும் அவர்களின் கையில் இருந்த குழந்தைகளையும் பாவமாய் பார்த்தாள் மதி.அதிலும் கங்காவின் பின்னால் சென்ற அவள் மகளுக்கு எட்டு வயதாவது இருக்கும்.இருபத்தி ஐந்து வயதில் அவளுக்கு எட்டு வயது குழந்தை.நினைக்க நினைக்க நெஞ்சின் பாரம் ஏறியது மதிக்கு.

அம்மனிடம் தனது வேண்டுதலையும்,மன பாரங்களையும் இறக்கி வைத்தவள்...ஏதோ அமைதியாய் உணர்ந்தாள்.

அவள் கண்ணை இறுக மூடியிருக்க...”அக்கா..அக்கா..” என்று மெதுவாய் அழைத்த சுமதி...அவள் கையை சுரண்டினாள்.

“என்ன சுமதி..?” என்று அவளிடம் கேட்க போனவள்..அவள் கண் ஜாடை காட்டிய திசையில் திரும்ப...அங்கே அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் முத்து என்கிற முத்துக் கிருஷ்ணன்.

“முத்து..” என்று அவள் வாயிலிருந்து வார்த்தைகள் சத்தமின்றி வெளியே வர...அவள் தன்னைப் பார்த்தது தெரிந்ததும்...இன்னும் விடாமல் பார்த்தான்.

“இவன் எப்படி இங்கே வந்தான்..? நான் வந்தது தெரிந்து வந்தானா? இல்லை எதார்த்தமாக வந்தானா..? இப்ப என்ன பண்றது? இவன் கூட பேசணுமா? இல்லை பேசாம போய்டலாமா?” என்று மண்டைக்குள் ஆயிரம் கேள்விகள் அணி வகுக்க...என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே நின்றாள் மதி.

“வாக்கா..போய்டலாம்..! அம்மா பார்த்தா அடி பின்னிடும்..!” என்றாள் சுமதி பயந்தவளாய்.

“என்ன சொல்ற..?” என்றாள் மதி.

“ஆமாக்கா...அம்மா சொல்லி இருக்கு இந்த மாமா கூட பேசக்கூடாது அப்படின்னு..” என்றாள்.

“ஹோ..” என்றவள் அதற்கு மேல் ஒன்றும் யோசிக்கவில்லை.அவன் பார்த்துக் கொண்டே இருந்தாலும்...அதை சட்டை செய்யாது...சுமதியின் கையைப் பிடித்துக் கொண்டு..அவனைக் கடந்து போக முற்பட்டாள்.

எவ்வளவு முயன்றும் அவளால் அவனைப் பார்க்காமல் செல்ல முடியவில்லை.ஓரப்பார்வையால் அவனைப் பார்க்க...அவனோ...அவளைக் கண்டு கொண்டவன் போல் சரித்து வைத்தான்.

படக்கென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள் மதி.ஏதோ ஒரு படபடப்பு.

“என்ன மதி..? எப்படி இருக்க..?” என்றான் சிரிப்புடன்.

அவனை முறைத்தவள்..அவனை சட்டை செய்யாது கடந்து செல்ல முயல...

“நான் என்ன தப்பு பண்ணேன்...என்னை எதிரி மாதிரி பாக்குறிங்க உங்க வீட்ல...இதோ இந்த வாண்டு கூட என்னைக் கண்டா முகத்தைத் திருப்புது.இத்தனை வருஷம் கழிச்சு வந்த நீயும் அப்படிதான் பண்ற..?” என்ன விஷயம்.. என்றான்.

“பாவம் உனக்கு ஒண்ணுமே தெரியாது..?” என்ற நக்கல் பார்வை அவள் பார்க்க..இந்த முறை அவன் தான் தலை குனிய வேண்டி வந்தது.

“வாக்கா போகலாம்..!” என்று சுமதி இழுக்க...

“குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!” என்று அவன் கண்களைப் பார்த்து சொன்னவள்....பார்வையை வெட்டிவிட்டு நடையைக் கட்டினாள்.

“இவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? என்கிட்டயே வந்து காரணம் கேட்குறான்..?” என்று பொருமிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.

“என்ன மதி..? எப்ப இருந்து நீ திருந்துன? ஒரு காலத்தில் அவனுக்காக எல்லார்கிட்டயும் சண்டைக்கு போனவ தான நீயி? இப்ப என்ன புதுசா ஞான உதயம்..?” என்று மன சாட்சி கேள்வி கேட்க...

அதன் கேள்விகளுக்கு பதில் கூற பயந்தவளாய்...அதனை தள்ளி வைத்தாள்.

“அக்கா.. முத்து மாமா..” என்று சுமதி ஏதோ சொல்ல வர...

“இந்த பேச்சை இதோடு விட்டுடு சுமதி..!” என்று அவளின் வாயை அடைத்து விட்டாள் அவள்.

அந்த ஊரில் மொத்தமே நான்கு ஐந்து தெருக்கள் தான் இருந்தது.அதனால் எந்த ஒரு விஷயம் என்றாலும் உடனடியாக ஊரே தெரிந்து விடும்.

மதியின் வருகையும் அப்படித்தான்.அன்றே எல்லாருக்கும் தெரிய வர...பாதிப்பேர் அவளைப் பார்க்க உண்மையான அன்புடன் வர..பாதிப்பேர்..அவள் எப்படி தான் இருக்கிறாள்? என்று பார்க்க வந்திருந்தனர்.

“நம்ம மதியை அடையாளமே தெரியலையே மதினி...ஆளே மாறிட்டா?” என்று உறவுகள் சலசலக்க...

“நம்ம மதி டீச்சர் ஆகிடுச்சாமே..!” என்று பல குரல்கள் வியந்து சொல்ல..அதில் பாதிப் பேரின் குரலில் பொறாமை அப்பட்டமாக தெரிந்தது.
 
“பரவாயில்லையே மனோகரா...நீ சொன்ன சொல்ல உம் மக காப்பாத்திட்டாலே..?உன்னைய பெருமையா நிக்க வச்சுட்டா அப்பு..” என்று அந்த பணியாரக்கார பாட்டி சொல்ல...

அந்த இடத்தில் எந்த தாய்,தகப்பனாக இருந்தாலும் பெருமைதான் பட வேண்டும்.ஆனால் அங்கு சூழ்நிலை அப்படி இல்லை.அவர்களின் வருத்தமும்,கவலையும் தான் அதிகம் ஆகியது.

அதிலும் பார்வதிக்கு தன் மகளை இத்தனை அழகாய் பார்க்க பார்க்க...வயித்துக்குள் ஒரு பயபந்து உருவாகி நின்றது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேசிக்கொண்டிருக்க...அப்போது புயலாய் பக்கத்து வீட்டில் இருந்து வெளியேறி வந்த பெண்...

“வந்துட்டாளா..? அந்த சிறுக்கி மக சிறுக்கி.செஞ்சது பத்தாதுன்னு...இப்ப யாரு குடியை கெடுக்க திரும்ப வந்திருக்கா...? என் வீட்ட நாசமாக்கிட்டு போயிட்டு...இப்ப மினிக்கிகிட்டு வந்துட்டாளா...? அவ நல்லா இருப்பாளா..?” என்று அடுத்த வார்த்தையை விடப் போக..

“அம்மா..!” என்று அதட்டியபடி வந்தான் முத்து.

“வாடா வா..! அவளை சொன்னா எங்க இருந்தாலும் வந்துடுவியே..? அதனால தாண்டா அவளுங்க ஏறி மேய்ராளுக...! யார சொல்லி என்ன நோக...நான் பெத்த மகன் சரியில்லையே...?” என்று அவர் சொல்லிக் கொண்டு அழ..

“இப்ப வாயை மூடப் போறியா இல்லையா..?இப்ப எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்க..நீ மொத வீட்டுக்குள்ள போ..” என்று விரட்டிக் கொண்டிருந்தான்.

“எப்படிடா பேசாம இருக்க சொல்ற..? இவளால தான்டா உன் வாழ்க்கையே சீரழிஞ்சு போச்சு...எப்படி இருக்க வேண்டியவன்...இப்ப இப்படி இருக்கியேடா..?” என்று புலம்ப...

“நான் உன்னைய உள்ள போன்னு சொன்னேன்...!” என்றான் காட்டுக் கத்தலாய்.

“என்னைத்தான அடக்கு...! அவளுகள ஒன்னும் சொல்லிடாத..!” என்று மூக்கை சீந்திக் கொண்டு உள்ளே செல்ல...

“இவளுக்கு வேற வேலை இல்லை...இம்புட்டு வருஷம் கழிச்சு வந்த புள்ளைகிட்ட சண்டைக்கு நின்னுகிட்டு..நீ ஒன்னும் மனசுல வச்சுக்காதம்மா...அதோட கவலை அதுக்கு..அது நிலைமைல யாரு இருந்தாலும் அப்படித்தான் பேசுவாங்க...இதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத.படிச்ச பிள்ள...உனக்கு சொல்லிப் புரிய வேண்டியது இல்ல..”என்று பல குரல்கள்.சில அறிவுரையாய்,சில ஆதங்கமாய்.சில அனுதாபமாய்.

மதிக்கு தான் அவமானமாய் இருந்தது.இதை எல்லாம் எதிர் பார்த்திருந்தாலும் இந்த அளவிற்கு இல்லை.ஏனோ மனம் அடி வாங்கியதைப் போல் உணர்ந்தாள் அவள்.

“அக்கா..அழுகாதக்கா..!” என்று சுமதி சமாதனப்படுத்த...

“இது நீயா இழுத்து வச்சது...இப்ப அழுது என்ன பிரயோசனம்.அன்னைக்கே நான் சொன்னதைக் கேட்டிருந்தா இப்ப இவ்வளவு பிரச்சனை இல்லை... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை..” என்று பார்வதி சொல்ல வர...

“அது மட்டும் சத்தியமா முடியாதுமா..? என்னை விட்டுட்டுங்க..! பிளீஸ்..” என்றவள் எழுந்து பின்னால் இருந்த மாட்டுக் கொட்டகைக்கு சென்று விட்டாள்.

சில காயங்கள் அவளைக் கீறி விட்டு..அவள் மனதை ரணமாக்கி வலியைத் தர...அதைத் தாங்க முடியாமல்....துவண்டு போனாள் மதி.

“நான் இங்க வந்திருக்கவே கூடாது..!” என்ற எண்ணம் அவளுக்குள் மீண்டும் மீண்டும் வர....விட்டால் உடனே ஓடி விடலாம் என்று எண்ணினாள் போலும்.

திரும்பி வீட்டினுள் செல்ல முற்படும் போது...ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த....பக்கத்து வீட்டு கொள்ளைப் புறத்தைப் பார்த்தாள்.

அங்கு அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் முத்து.அவனைப் பார்த்து ஒரு நிமிடம் அவள் திகைக்க...

“கண்ணைத் துடை..” என்று அவன் சைகையில் சொல்ல...அவன் மேல் கோபம் இருந்தாலும்..அவள் கைகள் தானியங்கியாய் கண்ணீரைத் துடைத்தன.

அவளை சமாதானம் செய்யும் விதமாக இரு காதுகளிலும் கையை வைத்துக் கொண்டு அவன் தோப்புக்கரணம் போட...அவள் மனம் சற்று லேசானது.

“உனக்கு நான் இருக்கிறேன்..!” என்பதைப் போல் இமைகளை மூடித் திறந்தான்.

அதைப் பார்த்த அவள் வேகமாய் தலையை ஆட்ட....அதை வெறித்துக் கொண்டு நின்றன இரண்டு கண்கள்.

அவள் சிரிப்பதை பார்த்தவுடன் தான் முத்துவிற்கு நிம்மதியாக இருந்தது.ஆனால் அந்த கண்களுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

காதல் வளரும்...
 
R

Romba nalla iruku mam
 
Top