Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

என்னதான் நடந்தது இவர்களின் வாழ்க்கையில்?
 
அவர்கள் வீட்டில் அவனுக்கு பிடித்த ஒருவர் என்றால் அது பார்வதி மட்டும் தான்.அவருடைய பொறுமையும்,வைராக்கியமும் அவனை ஈர்க்கும் விஷயங்கள்.அந்த ஒரு காரணத்திற்காகவே..மதியின் பின்னால் திரிகிறான்.

இல்லை என்றால்..எப்போதோ..அவளை..”நீயும் வேண்டாம்,உன் சங்காத்தமும் வேண்டாம்..” என்று போயிருப்பான்.

ஆனால் சமீப காலமாக..பார்வதியும் கூட அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.அதற்கான காரணம் மட்டும் தான் அவனுக்குத் தெரியவில்லை.எங்கே தவறிழைத்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தன்னால் அவர்கள் காயம் பட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டான்.எவ்வளவு தான் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும்..அவனுக்கே உரிய முரட்டுக் குணத்தை அவனால் விட முடியவில்லை.

அந்த முரட்டு குணத்திற்கும் அவன் பார்க்கும் மருத்துவர் வேலைக்கும் கொஞ்சம் கூட ஒத்துப்போகவில்லை.இருந்தாலும் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே மருத்துவம் படித்தான்.அதே காரணத்திற்காக மட்டுமே....இன்று அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறான்.

வீட்டிற்கு வந்த சுமதிக்கு...தன் அக்காவின் முகம் சரி இல்லாததைப் போல் தோன்றியது.

“என்னாச்சுக்கா..?” என்றாள்.

சுமதியின் குரலில் கலைந்தவள்..”ஒண்ணுமில்லை சுமதி...அதுக்குள்ள போயிட்டு வந்துட்டியா..?” என்றாள்.

“இன்னைக்கு கூட்டமே இல்லக்கா..அதான் போன உடனே வாங்கிட்டு வந்துட்டேன்..!” என்றாள் சுமதி.

அவளைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது மதிக்கு.தன்னை விட ஏழு வயது சிறியவள்.ஆனால் அவளுக்கு இருக்கும் பொறுப்பைப் பார்த்து மதி வியக்காத நாளே இல்லை.எந்த வேலை சொன்னாலும் ஒரு சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாமல் செய்வாள்.அவளைப் பார்த்து தான் இன்னமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பாள்.

சுமதியின் வருகை..அவளுடைய காயங்களை தற்காலிகமாய் ஆறப் போட்டிருந்தது.

அந்த விடுமுறை நாட்களை வீட்டின் உள்ளேயே இருந்து கழித்தால் மதி என்று சொன்னால் மிகையாகாது.அவளுக்கு வெளியே வரவே பிடிக்கவில்லை.வந்தால் எங்கே முகிலனின் முகத்தில் முழிக்க வேண்டி வந்து விடுமோ என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.

பார்வதி கூட இரண்டு முறை கேட்டு விட்டார்.”ஏன் மதி வீட்டுக்குள்ளயே இருக்க..?” என்று.

“என்ன சொல்வாள்...! இது தான் நடந்தது..இதனால் தான் வெளியே செல்ல பயம்..” என்று சொல்வாளா..?
நிச்சயமாக மாட்டாள்.அப்படி சொன்னால்..பார்வதி பயந்தே போவார்.அழுதே கரைவார் என்று அவளுக்குத் தெரியும்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..” என்று சமாளித்து வைத்தாள்.

முகிலனும் அவனுடைய வேலைகளில் பிசியாக இருந்ததால் இவளைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.ஆனால் முத்துவின் கண்களுக்கு இந்த மாற்றம் பெரியதாய் பட்டது.

“இரண்டு நாட்களாக பின்புறம் அவன் காத்துக் கிடந்தது தான் மிச்சம்..மதியின் வரவு...இல்லவே இல்லை..சரி என்று விட்டவன்...வீட்டிற்கு முன்னாலும் காத்துக் கிடந்தது பார்த்துவிட்டான்.அப்படியும் அவளைப் பார்க்க முடியவில்லை.

“ச்சை...இத்தனை நாள் ஊர்ல இல்லாம இருந்து கொன்னா..இப்ப பக்கத்துல இருந்துகிட்டே கொல்றா..?” என்று முனங்கியவன்...அவளிடம் பேசும் வழி தெரியாமல் முழித்தான்.

விடிந்தால் திங்கட்கிழமை என்பது தான் அவனுடைய அப்போதைய சந்தோசம்.அவள் ஸ்கூலுக்கு போகும் போது கண்டிப்பாய் பார்த்து விட வேண்டும் என்று எண்ணினான்.

அன்று முகிலன் எதற்காக வந்துவிட்டு போனான் என்று தெரிந்து கொள்ளாவிட்டால் அவனுக்குத்தான் தலையே வெடித்து விடுமே.

இருக்கிற பிரச்சனையில் அவனுக்கு முகிலன் பிரச்சனை தான் பெரிதாக தெரிந்தது.அது முகிலன் கம்பீரத்தில் வந்த பொறாமையாகக் கூட இருக்கலாம்.

அவனை விட முகிலன் இரண்டு வயது பெரியவன்.ஆனால் அவனுக்கு இவனைக் கண்டால் ஆவதில்லை.இவனுக்கு அவனைக் கண்டால் ஆவதில்லை.

இதற்கும் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சனை என்பது கிடையாது.இவர்களுக்கு இடையில் பிரச்சனையின் மைய கருவாக இருப்பது மதி.

மறுநாள் காலை பள்ளிக்கு கிளம்பும் போதே..மதிக்கு மனது அடித்துக் கொண்டது.ஏதோ விரும்ப தகாதது நடக்க போவதைப் போன்ற ஒரு பிரம்மை..ஒரு அமைதியின்மை அவளுள்.

அடர் நீல வண்ண கட்டன் புடவை அவள் அழகுக்கு அழகு சேர்க்க..அவள் பின்னல் இடுப்பு வரை நீண்டு தொங்க..(கொண்டை போடுவது கட்டாயமில்லை போலும்..)பளிச்சென்று இருந்த அவள் முகத்தில் குழப்ப ரேகைகள்.

“கிளம்பிட்டியா மதி..! அப்பா வந்து பஸ் ஏத்தி விடுறேன்..!” என்றபடி மனோகரன் வர..அப்படி ஒரு நிம்மதி அவள் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.

அது தந்தையின் பின்னால் பாதுகாப்பிற்காக ஒளிந்து கொள்ளும் குழந்தையின் செயலே.அதற்காக அவள் குழைந்தை இல்லை.பாதுகாப்பை நாடும் குமரி.அவ்வளவே.

அப்பாவின் வண்டியில் அமர்ந்து செல்லும் மதியையே பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.அவனுடைய அன்றைய பிளானும் சொதப்பலாய் முடிந்தது.

“இப்ப எதுக்குடா அந்த சிறுக்கியவே பார்த்துட்டு இருக்க..?” என்று முத்துவின் தாய்,அவன் பார்வை கண்டு கோவத்துடன் கேட்க...

“அவளைப் பார்த்தேன்னு நீ பார்த்தியா..பேசாம போய் உன் வேலையைப் பாரு..!” என்று எரிந்து விழுந்தான் முத்து.
முத்துவிற்கு ஒரு மறு பக்கம் உண்டு.அந்த பக்கத்தை மதி மட்டுமே அறிவாள்.

பஸ் ஸ்டாப்பில் சென்று மதியை இறக்கி விட்ட மனோகரன்...”இன்னும் பஸ் வரலை போல மதி...!” என்றார்.
“வந்திடும்ப்பா..” என்றாள்.

எப்பவும்..”நான் போய்க்கிறேன்..நீங்க போங்கப்பா...!” என்று சொல்லும் மதி, அப்படி ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருப்பதைப் பார்த்து அவருக்கு யோசனையாகப் போனது.

“என்னம்மா மதி? எதுவும் பிரச்சனையா?” என்றார்.

தன் அப்பா எதையோ மாற்றம் கண்டுவிட்டார் என்பதை உணர்ந்த மதி..’அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா..நீங்க கிளம்புங்க..! நான் போய்க்கிறேன்..!” என்றாள் எப்பவும் போல்.

“இல்லம்மா..நான் இருந்து பஸ் வந்ததும் ஏத்தி விட்டுட்டே போறேன்!” என்றபடி நிற்க...ஆனால் பஸ் தான் வந்தபாடில்லை.
“எப்பா பஸ்சு பக்கத்து ஊருல பஞ்சர் ஆகிடுச்சாம்..வர நேரம் ஆகும்ன்னு சொன்னாக..!” என்று போற போக்கில் ஒருவர் சொல்லிவிட்டு செல்ல..

“இப்ப என்ன செய்றது..? நேரம் வேற ஆகுதே..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மதி.

“அடுத்த பஸ்க்கு போனா நேரம் போய்டுமே மதி..!” என்றார் மனோகரன்.

“ஆமாம்ப்பா..!” என்று அவஸ்தையாய் சாலையைப் பார்க்க..அவர்களின் பின்புறம் வந்து நின்றான் முகிலன்.

எதுவும் பேசாமல் வண்டியை உறுமவிட்டுக் கொண்டு நிற்க..மனோகரனுக்கு தான் என்ன செய்வதென்று புரியவில்லை.அவன் அவருடன் பேசுவதில்லை.

ஆனால் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டு நிற்க...”நீ இன்னைக்கு மணி கூட போய் இறங்கிக்கம்மா...அவரும் டவுனுக்கு தான் போறாரு..!” என்று சொல்ல..

“இல்லப்பா..! நேரம் ஆனாலும் பரவாயில்லை..நான் பஸ்லயே போய்க்கிறேன்” என்றாள்.

அவன் கடுப்புடன் கிளம்ப தயாராக..”அப்பா சொல்றேன்ல..போம்மா..இல்லைன்னா நானே வந்து விட்டுட்டு வரேன்..!” என்றார்.

“அவ்வளவு தூரம் அவரை அலைய வைக்க மதிக்கு விருப்பம் இல்லை.பரவாயில்லைப்பா...நான் அவரு கூடவே போறேன்..!” என்றபடி.. முகத்தைத் தூக்கியபடி அவனின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

“சூதானம் மதி..!” என்று மனோகரன் சொல்ல..

“இல்லைன்னா கடிச்சு தின்னுடுவோம்..!” என்று மனதிற்கு நினைத்தவன்..அவரை முறைத்தபடி...வண்டியை எடுத்தான்.

அவன் வண்டியை எடுத்த உடன்..தடுமாறி லேசாக அவன் மீது மோதியவள்...பின் கடுப்புடன் கைப்பையை இருவருக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள்.

கருப்பு பேண்ட்டும்,வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தவன் ..முகத்தை இருக்கமாய் வைத்திருக்க..அதுவே அவனை அழகனாய் காட்டியது.

இரண்டு புறமும்..இயற்கையின் கைவண்ணத்தில் வயல்களும்,வாழைத் தோப்புகளும் பசுமையாய் காட்சியளிக்க...
தன் வண்டியில்...தன் மனதிற்கு பிடித்தவள்..சில்லென்று வீசி காற்று...இவையெல்லாம் சேர்ந்து முகிலனை...வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது.மனதினுள் இதுவரை உணர்ந்திடாத அமைதியை உணர்ந்தான்.

ஆனால் பின்னால் இருந்த மதி....?

காலத்தின் போக்கிலும்..கதையின் போக்கிலும்...நாமும் இவர்களைப் பற்றி..இனிதான் அறிந்து கொள்ள போகிறோம்..!

காதல் வளரும்..!

[/QUOTE super sis
 
Top