Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ithaiyam - Episode 7

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---7

இங்கு சென்னையில் பாட்டி வரும் விஷயம் அறிந்த பரினிதாவோ அன்று மட்டும் காலையிலேயே எழுந்துக் கொண்டு நல்ல பெண் போல் குளித்து விட்டு பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி விட்டு வந்து ஹோபாவில் அமர்ந்துக் கொண்டாள். பின் சமையார்காரர் அம்மா கொடுத்த காபி வாங்கி குடித்துக் கொண்டிருந்த தன் தங்கையை பேப்பர் படித்துக் கொண்டிருந்த சித்தார்த் புன்னகையுடன் பார்த்திருந்தான்.

அவனுக்கு தெரியும் இன்று தன் தங்கை தான் எழுப்பாமலேயே எழுந்து விடுவாள் என்று.அவள் எல்லோரிடமும் விளையாட்டு தனத்துடன் நடந்துக் கொண்டாலும் தன் பாட்டியிடம் அவள் அடக்கி தான் வாசிப்பாள்.

அது என்னவோ சின்ன வயது முதல் பரினிதாவுக்கு பாட்டி என்றால் கொஞ்சம் டிஸ்டன்ஸ் தான் மெயின்டன் பன்னுவா...அதற்க்கு காரணம் என்ன என்று இது வரை அவளுக்கே தெரியவில்லை.அதனால் இன்று பாட்டி வருவதால் நாம் போய் அவளை எழுப்ப வேண்டாம் என்று கருதி தான் சித்தார்த் பரினிதாவுக்காக காபி குடிக்காமல் அவளுக்காக காத்திருந்தான்.

பரினிதாவும் அவன் எண்ணம் போலவே மத்தவங்க எழுப்பாமலேயே எழுந்த தன் வேலையை முடித்துக் கொண்டு கீழே வந்தவள் தன் பாட்டி வரும் நாள் மட்டும் விளக்கு ஏற்றும் அவள் வழக்க படி அனைத்தும் சரியாக தான் நடந்தது.

ஆனால் காபி மட்டும் தனக்கு கொடுக்காமல் அவள் மட்டும் குடிப்பதை பார்த்த சித்தார்த் நேற்று அவளை தங்க விடாமல் அழைத்துக் கொண்டு வந்ததிற்க்காக தான் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்பதனை புரிந்துக் கொண்ட சித்தார்த் அவளை எப்படி சாமாதானப் படுத்துவது என்று அவளையே பார்த்திருந்தான்.



தன் அண்ணன் பார்ப்பது தெரிந்தும் அவனை பார்க்காது பக்கத்தில் இருக்கும் மற்றொரு பேப்பரை எடுத்து மிக தீவிரமாக படிக்க ஆராம்பித்தாள்.அவளின் செயலை அனைத்தையும் பார்த்திருந்த சித்தார் அவள் அருகில் வந்து அவள் கையில் உள்ள பேப்பரை பிடித்தான்.

தன்னிடம் உள்ள பேப்பரை பிடுங்க தான் வருகிறார் என்று நினைத்துக் கொண்ட பரினிதா “அண்ணா ஒருத்தர் படிக்கும் போது பிடுங்க கூடாது என்று நீங்க தானே சொல்லியிருக்கீங்க இப்போ நீங்களே பிடுங்கினால் எப்படி…?” என்ற தங்கையின் கேள்விக்கு சிரித்துக் கொண்டே

“என் குட்டிம்மா படிக்கும் போது நான் பிடுங்குவேனா…பேப்பர் தலை கீழா பிடிச்சிட்டு இருக்கேடா அதை நேரா பிடிச்சி படி.என் குட்டிம்மா பேப்பர் படிச்சி பொது அறிவு வளர்த்தா எனக்கு சந்தோஷம் தான்.” என்ற தன் அண்ணனை சந்தேகத்துடன் பார்த்தாள்.

அண்ணா சீரியஸா சொல்றாங்களா...இல்லை நம்மை கிண்டல் செய்றாங்களா...என்று அவனை சந்தேகத்துடன் பார்த்தாள். தன் தங்கை பார்வையை புரிந்துக் கொண்ட சித்தார்த்.

“என்னம்மா ஏன் அண்ணாவை இப்படி பாசமா பார்க்குற “ என்ற அவன் பேச்சிலேயே தன்னை கிண்டல் தான் செய்கிறார் என்று புரிந்துக் கொண்ட பரினிதா கோபத்துடன்.

“செய்வதையும் செய்து விட்டு என்னை கிண்டல் வேற செய்றீங்களா…? நேத்து எவ்வளவு ஆசையா அங்கு தங்குவதை பற்றி நானும் குழந்தைகளும் பேசிட்டு இருந்தோம் தெரியுங்களா…? என்னையாவது விடுங்க.

பாவம் அந்த பசங்க நீங்க வர சொன்னதா அந்த அங்கிள் வந்து சொன்னவுடனே அவங்க முகத்தை பார்க்கனுமே...அப்படியே வாடி போயிடுச்சி அண்ணா.அவங்களுக்கு கிடைப்பதே இது மாதிரி சிறு சிறு சந்தோஷம் தான்.

அதனையும் கொடுக்கிற மாதிரி கொடுத்து பிடிங்கிட்டா அவங்களுக்கு எப்படி இருக்கும். அதற்க்கு அவங்களுக்கு முதலிலேயே ஆசை காமிக்காமல் இருந்து இருக்கலாம் இல்லையா..?’” என்ற தங்கையின் பேச்சில் உள்ள உண்மை அவனுக்கு புரியாமல் இல்லை.

ஆனால் அவன் மட்டும் என்ன வேண்டும் என்றா அப்படி செய்தான்.நேற்று மருத்துவமனையில் இருந்து வரும் போது அமைச்சரிடம் வந்த போன் காலால் தான் பரினிதாவையும், குழந்தைகளையும் சட்டென்று அழைக்கும் படி ஆனாது.

அந்த அமைச்சர் சித்தார்த்துக்கு போன் செய்து “என்ன கலெக்டர் தம்பி உங்களுக்கு ஆஷிக் தம்பியைய் முதலிலேயே தெரியுமா….? ஏன் கேட்கிறேன் என்றால் உங்கள் தங்கை மற்றும் ஆஸ்ரமத்து குழந்தைகளை அவர் பொறுப்பில் விட்டு விட்டு வந்து இருக்கிறீர்களே அதனால் கேட்டேன்.ஆனால் ஒன்று மட்டும் ஒத்துக் கொள்ள வேண்டும்.ஆஷிக் தம்பியின் சாமர்த்தியம் யாருக்கும் வராது.” முதலில் சித்தார்த்துக்கு அவர் பேசுவது சுத்தமாக புரியவில்லை.

அந்த எரிச்சலில் “ எது என்றாலும் நேரிடையாக கேளுங்கள் அதை விட்டு இந்த சுத்தி வளைத்து எல்லாம் பேச வேண்டாம்.” என்ற சித்தார்த்தின் கோபமான பேச்சைக் கேட்ட அமைச்சர்.

“ஓ இப்போ புரியுது. அந்த ஆஷிக் தம்பி டீலிங்கை நீங்கள் ஏன் ஒத்துக் கொண்டிர்கள் என்று. அவர் சுத்தி வளைக்காமல் உங்களிடமே நேரிடையாக பேசியதால் ஒத்துக் கொண்டிர்கள் போல்.”

இப்போது அந்த அமைச்சரின் பேச்சு புரியவில்லை என்றாலும் அவரிடம் எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.அவனுக்கு புரிந்து விட்டது.ஆஷிக்குக்கு தன்னிடன் ஏதோ காரியம் ஆகவேண்டும் . அதனால் தான் தன்னிடம் அப்பாயின்மென்ட் கேட்டு இருக்கிறார் என்றும். அந்த காரியம் என்ன என்று இந்த அமைச்சருக்கும் தெரிந்து இருக்கிறது என்று அறிந்துக் கொண்ட சித்தார்த். எது என்றாலும் அமைச்சரின் வாயில் இருந்தே வரட்டும் என்று எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.

தன் பேச்சிக்கு எந்த பிரதிபலிப்பும் சித்தார்த்திடம் இல்லாதது போக அமைச்சரே நேரிடையாக விஷயத்தை சொல்லி விட்டார்.

“அது தான் கலெக்டர் தம்பி அவர் பக்கத்தில் அவர் வாங்கி இருக்கும் ஒடத்துக்கும் இப்போது இருக்கும் சொர்க்கபூமியின் இடத்துக்கும் இடையே ஒடும் கால் வாயை அவர் இடத்தோடு சேர்ப்பது பற்றி தான்.” என்ற விஷயத்தை கேட்ட சித்தார்த் ஒன்றும் பேசாமல் போனை அனைத்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

இதனால் தான் அவன் தெரியாத யாரிடமும் அதிகம் பேசமாட்டான். சித்தார்த் ஆஷிக் என்ற பெயரால் தான் அவனிடம் பேசினான் என்ற காரணத்தை வெளியில் சொல்லவா முடியும் என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தவன் உடனே பரினிதாவை அழைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

ஏன் என்றால் இந்த விஷயம் வெளியில் கசிந்தால் கலெக்டர் சித்தார்த்திடம் போனால் காரியம் ஆகிவிடும் என்று நினைத்து வந்தால் அவனால் சட்டத்துக்கு புறம்பாக கண்டிப்பாக செய்து கொடுக்க முடியாது.

அவர் தாத்தா அவனிடம் சொன்னது இது தான் தெரிந்தவர்கள். பணம் படைத்தவர்களுக்கு என்று பேதம் பார்க்காமல் சட்டத்தை மதித்து தான் நீ செய்ய வேண்டும் என்று அவர் கூறியதை இன்றும் கடைபிடித்து வருகிறான். அந்த கொள்கையை எந்த காரணத்துக்காகவும் விடுவதாக இல்லை.

அதனால் முதலில் குழந்தைகளை நினைத்து கொஞ்சம் தயங்கினாலும் பின் அவர்களை மற்றொரு நாள் வேறு எங்காவது அழைத்து செல்லலாம் என்று கருதி தான் உடனே அவர்களை வரவழைத்தான்.

ஆனால் தன் தங்கை காரணத்தை கேட்காமல் மூஞ்சை தூக்கி வைத்திருப்பதை பார்ப்பதற்க்கு கூட அவனுக்கு வேடிக்கையாக தான் இருந்தது.அதனால் தன் தங்கையை இன்னும் வெறுப்பு ஏற்ற நினைத்த சித்தார்த்.

“என் குட்டிம்மாவுக்கு என் மேல் கோபம் போல இருக்கே…?” என்று சொல்லிக் கொண்டே அவள் தோளின் மிது கைய் வைத்தான்.

கையய் தட்டி விட்டு அப்போது தான் அங்கு வந்த வேலையாளிடம் பேசினாள் “யாரும் என்னிடம் பேச வேண்டாம் என்று உங்கள் முதலாளியிடம் சொல்லுங்க.” என்றதற்க்கு சித்தார்தும் தன் தங்கை போலவே அதே வேலையாளிடம்.

“அய்யோ அப்போ குட்டிம்மா என்னிடம் பேச மாட்டாளா…? அப்போ பாட்டி வந்ததும் என் வேலை எல்லாம் ஒரு மூன்று நாளைக்கு ஒதுக்கி வைச்சிட்டு நான்,பாட்டி, குட்டிம்மா அப்புறம் ஆஸ்ரமத்து குழந்தைகளை அழைச்சிட்டு நம்ம ஏற்காடு கெஸ்ட் ஹாவுஸ்சுக்கு போகலாம் என்று நினைத்து இருந்தேனே…குட்டிம்மா எங்கிட்ட பேச வில்லை என்றால் டூர் போவதே வேஸ்ட்டு தான்.சரி என்ன செய்வது லீவை கேன்சல் செய்துட்டு என் வேலையை பார்க்க வேண்டியது தான்.” என்று கூறிக் கொண்டே இருக்கையைய் விட்டு எழுந்தான்.

உடனே தன் கோபத்தை எல்லாம் தூக்கி போட்டு விட்டு தன் அண்ணன் கைய் பற்றி இருக்கையில் அமர்த்திக் கொண்டு “அண்ணா நீங்க சொல்வது உண்மையா பாட்டி வந்ததும் நாம் ஏற்காடு போக போறோமா…?” என்று ஆசையுடன் கேட்கும் தன் தங்கையின் முகம் பற்றி “கண்டிப்பாடா செல்லம்.பாட்டி வந்ததும் நாம் மூன்று பேரும் பின் ஆஸ்ரமத்து குழந்தைகளையும் அழச்சிட்டு போகலாம்.

நான் மட்டும் வேண்டும் என்றா நேற்று உங்களை அழைச்சிட்டு வந்தேன் என் நிலமை அப்படி குட்டிம்மா.என் பதவி காரணமாக தான் இது போல் நடந்துக்க வேண்டி உள்ளது.ஏற்காடில் நான் வேறு எந்த வேலையும் வைத்துக் கொள்ள மாட்டேன். உன் கூடவும் அப்புறம் குழந்தைகள் பாட்டி கூடவும் மட்டுமே என் நேரத்தை செலவிடுவேன்.” என்று பரினிதாவிடம் வாக்குறுதி அளித்தான்.

பரினிதா சந்தோஷத்துடன் தன் அண்ணனின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு.

“அண்ணா ஆஸ்ரமத்துக்கு சொல்லிட்டிங்களா அண்ணா.”

“சொல்லிட்டேன் குட்டிம்மா.சொல்லிட்டு தான் உன்னிடம் சொல்லலாம் என்று காபி கூட குடிக்காமல் உனக்காக காத்திட்டு இருந்தா நீ என் மேல் இருக்கும் கோபத்தில் எனக்கு காபி கூட கொடுக்காமல் நீ மட்டும் குடித்து விட்டாய்.” என்றதும்.

“இரு அண்ணா. நான் சமையல்காரர் அம்மா கொடுத்த சுமார் காபியை குடித்தேன். உங்களுக்கு நானே என் கைய்யால் சூப்பர் காபியை கொடுக்கிறேன்.” என்று கூறி சமையல் அறை நோக்கி சென்றாள்.

தன் தங்கை போவதை சிரிப்புடன் பார்த்திருந்த சித்தார்த் அவள் கொடுக்கும் சூப்பர் காபிக்காக காத்துக் கொண்டிருந்தான்.அவளும் அரை மணி நேரத்தை செலவிட்டு காபி கோப்பையுடன் தன் அண்ணனை நோக்கி வந்தாள்.

காபி வாங்கி ஒரு சிப் சிப்பிய சித்தார்த் “நீ சொன்னது போல் சூப்பரா இருக்கு குட்டிம்மா.” என்று சொல்லிக் கொண்டே ரசித்து குடித்தான்.

அவன் பாதி குடிக்கும் போதே அவன் கையில் இருந்து காபி பிடுங்கபட்டதும் யாரு என்று நிமிர்ந்து பார்த்த சித்தார்த் அங்கு இவன் குடித்த காபி தன் பாட்டி குடிப்பதை பார்த்து அதை அவர் கையில் இருந்து பிடுங்க பார்த்தான்.

இருந்துக் கொஞ்சம் குடித்து விட்டே காபி கோபையை அவனிடம் கொடுத்த வரலட்சுமி பாட்டி. “ஏண்டா தங்கை மேல் பாசம் இருக்க வேண்டியது தான். நான் வேண்டாம் என்று சொல்ல வில்லை.ஆனால் அந்த பாசம் நம் உயிர் போகும் அளவுக்கு இருக்க கூடாது.இந்த காபியை குடித்தா எவ்வளவு திடகாத்திரமான உடம்பு ஆனாலும் தாங்காது போலவே…” என்ற தன் பாட்டியின் பேச்சைக் கேட்டு பரினிதா அவரிடம் இருக்கும் பயத்தால் ஒன்றும் பேசாமல் தன் அறை நோக்கி செல்ல பார்த்தாள்.

உடனே பாட்டிம்மா “இது என்ன பழக்கம் வந்தவங்க கிட்ட மரியாதையா எப்படி இருக்கீங்கன்னு கேக்காம்மா...நீ பாட்டுக்கு உன் ரூமுக்கு போவது.” என்ற தன் பாட்டியின் அதட்டலுக்கு அடிபணிந்து.

உடனே “எப்படி பாட்டி இருக்கீங்க. ஊரில் எல்லாரும் நல்லா இருக்காங்களா…?” என்று கேட்டாலும் மனதுக்குல் இவங்க மட்டும் வந்ததும் நான் என் அண்ணனை காபி கொடுத்து கொலை பண்ண பார்க்கிறேன் என்று அசால்ட்டாக பழிய தூக்கி போடுவாங்களாம்மா...நான் மட்டும் இவங்களை முறைப்படி விசாரிக்கனுமா. இது எந்த ஊரு நியாயமுன்னு தெரியலையே…? என்று தன் மனதோடு பேசிக் கொண்டாள்.

அவள் எப்போதும் அப்படி தான்.தன் பாட்டியிடம் தைரியாமக பேச பயம். அதனால் அவர் சொல்வதற்க்கு நல்ல பிள்ளையாக வெளியில் பதில் சொன்னாலும் உள்ளுக்குல் அதற்க்கு எதிர் பதமாக தான் கெளண்டர் கொடுப்பாள்.

இதனை அறிந்த சித்தார்த் தன் தங்கையை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே “சரி பாட்டிம்மா...அவளை விடுங்க.” என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டே தன் தங்கையை கண்சாடை காட்டி அவ்விடத்தை விட்டு போக சொன்னான்.

அதனை பரினிதா பார்த்தாலோ இல்லையோ பாட்டிம்மா பார்த்து விட்டு சித்தார்த்திடம் “நீ தான் அவளை செல்லம் கொடுத்து கெடுப்பதே…ஒழுங்கா சாப்பிடுவது கிடையாது.ஒழுங்கா படிப்பது கிடையாது.குழந்தைகளோடு குழந்தையாக ஆட மட்டும் தெரியும். எங்காவது வயதுக்கு ஏத்தா மாதிரி நடந்துக்குறளா...சொல்லு.

எனக்கும் வயதாகிட்டே போகுது. உனக்கு ஒரு கல்யாணம் செய்து விட்டு அப்படியே அவள் படிப்பு முடிஞ்சதும் அவளுக்கும் ஒரு கல்யாணத்தை செய்து விட்டுட்டா.. .இந்த தொழிலை எல்லாம் நீயிம்,மாப்பிள்ளையும்,சேர்ந்து பார்த்துப்பீங்க நான் கொஞ்சம் ஒய்வு எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.” என்ற பாட்டியின் பேச்சில் நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த பரினிதா.

உள்ளுக்குள் “ என் படிப்பு முடிஞ்சுதான் என் கல்யாணம் என்றால் , இந்த பாட்டிம்மா...எனக்கு ஒரே முட்டா அறுபதாவது திருமணம் தான் செய்யனும் என்று நினைத்துக் கொண்டே…

பாட்டிம்மாவிடம் “நான் இந்த வருஷத்துக்குள்ள படிப்பை முடிச்சுடுறேன் பாட்டிம்மா...அதுக்குள் நீங்க அண்ணாவுக்கு பார்க்கலாம் இல்லையா ..?” என்று கூறிக் கொண்டே தன் அண்ணனை பார்த்தாள்.சித்தார்த்தோ அந்த பேச்சை கேட்காத மாதிரி குனிந்துக் கொண்டே தன் செல்லை பார்த்துக் கொண்டிருந்தான்.

பரினிதாவின் பேச்சைக் கேட்ட பாட்டி “நீ உன் வாழ் நாளிலேயே இப்பா தான் உருப்படியா பேசியிருக்கே. நான் நேற்றே தரகரை வர சொல்லி சித்தார்த்துக்கு ஏத்த மாதிரி இடம் கொண்டு வந்து இருக்கேன்.இந்த தடவை ஊருக்கு போவதுக்கு முன்னே இரண்டில் ஒன்று தெரியமா...நான் போக மாட்டேன்.” என்று சொல்லி சித்தார்த்தை பார்த்தார்.

சித்தார்த் இதற்க்கு மேல் தலை குனிந்து இருப்பது சரியில்லை என்று கருதி தன் பாட்டியை பார்த்து

“பாட்டிம்மா நான் எதற்க்கு உங்களை வரச் சொன்னேன். அதை பற்றி பேசாமல் நீங்கள் என்ன என்னவோ பேசிட்டு இருக்கீங்க. அதுவும் இல்லாமல் இப்போ எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம். முதலில் பரினிதா படிப்பு முடியட்டும்.பிறகு அவளுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் செய்து கொடுத்துட்டு அப்புறமா என் விஷயத்தை பார்க்கலாம்.” என்று கூறிய சித்தார்த்தை பாட்டி எதுவும் பேசாமல் சந்தேகமாக பார்த்தார்.

தன் பாட்டியின் பார்வையை புரிந்துக் கொண்ட சித்தார்த் அவரை பார்க்க முடியாமல் தன் தங்கையின் பக்கம் திரும்பி “என்ன குட்டிம்மா இங்கயே இருக்கே.பாட்டி வந்து எவ்வளவு நேரமாகுது போய் சமையல் காரம்மாவிடம் சாப்பிட ரெடியாகி விட்டதான்னு பாரு.” என்று பேச்சை மாற்றும் பொருட்டு பரினிதாவிடம் கூறினான்.

பரினிதா அவ்விடத்தை விட்டு அகன்றதும் பாட்டிம்மாவுக்கு இன்னும் வசதியாகி விட்டது. “சித்தார்த் என் முகத்தை பார்த்து சொல். ஏன் திருமணத்தை தள்ளி போடுகிறாய்.எனக்கு உண்மையான காரணம் தெரியனும்.

உன் தங்கை திருமணம் இது மாதிரி சப்பை கட்டு எல்லாம் கட்டாதே….காரணம் அது இல்லை என்று எனக்கு தெரியும்.இப்போ நானே பரினிதாவுக்கு நல்ல இடமா எடுத்துட்டு வந்தா நீ அவளை கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று எனக்கு நன்கு தெரியும்.அவளுக்கு அந்த பக்குவமும் இப்போ இல்லை.

முதலில் அவளுக்கு வயதுக்கு ஏத்த மெச்சுருட்டியே இன்னும் வரவில்லை.என்னாலேயும் அவள் கூட இருக்க முடியலே...அதனால் தான் உனக்கு ஒருத்தி வந்தா அவளை பார்த்து கொஞ்சம் பரினிதா கத்துப்பா...அதுவும் இல்லாமல் அவள் தனிமை உணர்வும் போகும் இல்லையா…” என்று கூறி சித்தார்த் முகத்தையே பார்த்தார்.

ஆனால் சித்தார்த் அதற்க்கு எந்த பதிலும் சொல்லாமல் . “ப்ளீஸ் பாட்டிம்மா இந்த கல்யாணம் பேச்சை இத்தோட விட்டு விடுங்க. காரணம் கேட்காதீங்க அதை சொல்லும் நிலையில் நான் இல்லை.” என்று கூறி தன் ரூமுக்கு சென்றான்.

எல்லாம் ரெடி என்று சொல்ல வந்த பரினிதா அண்ணாவின் கல்யாணம் வேண்டாம் என்ற கடைசி வார்த்தையை கேட்டு எதற்க்கு என்று தன் மனதுக்குள் யோசிக்கும் போதே பக்கத்து வீட்டில் இருந்து விளையாட குட்டிஸ் வந்ததும் தன் அண்ணனின் திருமணத்தை மறந்து குழந்தைகளுடன் குழந்தையாக ஐய்கியமானாள்.

பாட்டிம்மா எவ்வளவோ வாதாடியும் சித்தார்த் திருமணத்துக்கு சம்மதிக்கவே இல்லை.அந்த கோபத்தில் வரலட்சுமி பாட்டி இரண்டு நாளிலேயே பொள்ளாச்சிக்கு சென்று விட்டார்.

பாட்டியின் கோபத்தை பார்த்த பரினிதா சித்தார்த்திடம் “அண்ணா பாட்டிம்மா சொன்ன மாதிரி நீங்கள் திருமணம் செய்துக்கலாம் இல்லையா… அண்ணா. ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க. நான் தான் எப்போதும் மத்தவங்க பேச்சை கேட்காம அடம் பிடிப்பேன். ஆனால் நீங்க ரொம்ப நல்லவர் ஆச்சே அண்ணா. எப்போதும் பெரியவர்கள் பேச்சை நீங்கள் கேட்பீங்களே... இது மட்டும் ஏன் கேட்க மாட்டேங்கிறீங்க.” என்ற தங்கையின் பேச்சிக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தான்.


பரினிதா செயல் குழந்தை மாதிரி இருந்தாலும், அண்ணனின் இந்த மவுனம் அவளை யோசிக்க வைத்தது. ஏன் அண்ணா திருமணத்தை வேண்டாம் என்று சொல்கிறார்.

Disclaimer: This story is copyrighted to Vijayalakshmi Jagan
 
Last edited by a moderator:
Top