Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

EPISODE 1

Advertisement

niranjana subramani

Well-known member
Member
1.
வாக்குண்டாம்
நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூசிக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற்
சார்வார் தமக்கு
.

என்று ஒலித்த கணீர் குரலுக்கு சொந்தகாரரான கிருஷ்ணஸ்வாமி தான் இந்த ராதை இல்லத்தின் தலைவர். கோயம்புத்தூரில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் இவரும் ஒருவர்.

“ராது ராது” என பூஜையை முடித்துவிட்டு தன் மனைவியின் பெயரை அழைத்துக்கொண்டே ஹாலிற்கு வந்தார் கிருஷ்ணஸ்வாமி.

“இந்தாங்க காபி” என காபி கோப்பையை கொடுத்தார் ராதை.

காபியை வாங்கிக்கொண்டு தன் மனைவியை பெருமை பொங்க காதலுடன் நோக்கினார்.

திருமணம் முடிந்து இந்த முப்பத்தைந்து
ஆண்டுகளில், ஒருமுறை கூட இவர் மனம் நோகும்படி நடந்து கொண்டதில்லை இவர் காதல் மனைவி. எப்பொழுதும் இவர் முகம் பார்த்து இவர் தேவையை நிறைவேற்றுவார் என்று எல்லாம் எண்ண ஆசைதான்.

ஆனால், இந்த காபியே காலையில் எழுந்ததிலிருந்து பல
தடவ கேட்டு இப்போதான் கிடைக்கிறது என்று பெருமூச்செறிந்தார்.

காபியை அருந்திவிட்டு சோபாவில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த மூத்த மகன் ஜெயவர்தனன்.

“என்னப்பா இன்னைக்கு உங்களுக்கு சுப்ரபாதம் ஆரம்பிச்சாச்சா” என சிரிப்புடன் வினவ ,

“ஏன்டா ஏன்?...... வீடு அமைதியா இருக்குறதுல தெரியல இன்னும் எதுவும் நடக்கல”.

“ஹா…..ஹா….அப்போ எப்போ வேணும்னாலும் புயல் வரலாம்னு சொல்லுங்க”
எனக்கூறி சிரித்தான்.

“அப்போ இன்னும் கொஞ்சம் நான் தாமதமாவே வந்துருக்கலாமோ அண்ணா”
என சிரிப்புடன் வினவிக்கொண்டு இரண்டாவது மகன் விஜயவர்தனன் அங்கு வந்து அமர்ந்து கொண்டான்.

“ என்னடா உங்க ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா” என முறைப்புடன் வினவ,

“பின்ன என்னப்பா ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு அம்மா உங்கள்ட்ட மூஞ்சிய காட்றது, சண்டைபோடுறது நீங்க அம்மாவை சமாதானம் பண்றதுண்ணு எப்பொழுதும் இதே வேலையா இருக்கீங்க ரெண்டு பேரும்” என சலிப்புடன் கூறினான் விஜயவர்தனன்.

என்னடா செய்றது எல்லாம் அவனால வந்தது அவன் மட்டும் இப்போ என்ட சிக்குனான்….. அவ்வளவுதான்” என பல்லை கடித்தார்.

“யாரு….. நீங்க….அவன திட்டுவீங்க?, அட போங்க ….ப்பா….. அவன பார்த்தவுடன் இனிமே இப்படி பண்ணாதடானு கொஞ்சுவீங்க இதான் காலங்காலமா இந்த வீட்டுல நடக்குது” என சலிப்புடன் ஜெயவர்தனன் கூற ,

அப்போது அங்கு வந்த ராதை,” என்ன எல்லாரும் இங்க நின்னு மாநாடு போடுறீங்க காலைலே யாரும் ஆபீஸ் போற எண்ணம் இல்லையா?” என கடிய,

இதோ என எல்லாரும் உணவு மேஜையில் அமர்ந்து காலைஉணவை உண்ண ஆரம்பித்தனர்.
அப்பொழுது இவ்வளவு நேரம் சரமாரியாக கிருஷ்ணஸ்வாமியால் வசவு வாங்கின இந்த வீட்டின் கடைக்குட்டி ஹர்ஷவர்தனன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனை பார்த்தவுடன் ராதை,”
டேய் ஹர்ஷா, நில்லுடா நேத்து காலையில வேலைக்கு போனவன் இன்னைக்கு காலையில வர்ற. ஒரு வார்த்தை வீட்டுக்கு போன் பண்ணி சொல்லணும்னு தோணலையா?” என திட்ட ஆரம்பிக்கும்போதே,

“அம்மா ப்ளீஸ் …….. நானே ரொம்ப களைச்சு போய் வந்துருகேன் நான் போய் ப்ரஷ் ஆகிட்டு வந்து ஒரு காபி குடிச்ச அப்புறம் உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்” என அவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.


போச்சு புயல் கரைய கடக்கும்னு பார்த்தா திசையை மத்திவிட்டு போறானே” என மகன்கள் இருவரும் கிசுகிசுக்க;

ராதை ஆரம்பித்துவிட்டார், “ஏங்க பாத்திங்களா எப்படி நின்னு கூட பேசாம போறான். இதுக்குதான் நான் அப்பவே சொன்னே மத்த நம்ம ரெண்டு பசங்க மாதிரி இவனையும் BE முடுச்சுட்டு MBA படிக்கவைக்கலாம்னு, நீங்கதான் அவன் BL படிக்க ஆசைப்படுறான்னு அத படிக்கவச்சிங்க.
இப்போ லாயரும்….. ஆகாம பிஸினஸும் பார்க்காம எதோ பிரைவேட் டிடெக்ட்டிவ்ன்னு மாச சம்பளத்திற்கு வேலை பார்க்குறான்” என தனது ஆதங்கத்தை கொட்டிக்கொண்டிருந்தார்.


ராது கொஞ்ச நாளைக்கு அவன் புடிச்சத செய்யட்டுமேமா” என சமாதானம் செய்ய,

“ஆமா நீங்க இப்படி செல்லம் குடுத்துதான் அவன் என்னை மதிக்கிறதும் இல்ல, நான் சொல்றத கேட்குறதும் இல்ல” என மறுபடியும் புலம்பினார்.

“அம்மா இப்போ உங்க பிரச்சனை என்ன ஏன் ?இப்பிடி காலையில புலம்புரிங்க” என்று கேட்டபடி வந்தான் ஹர்ஷா.

“ புலம்புறேனா?..... ஏன்டா! சொல்ல மாட்ட இதோ உங்க அண்ணன்கள் ரெண்டு பேரும் நான் சொல்றபடி கேட்டு படிச்சு இன்னைக்கு பிஸினஸ் பார்த்துக்கிட்டு சும்மா ஜம்முன்னு இருக்காங்க”
என கூறிக்கொண்டிருக்கும்போதே,

“அம்மா நானும் சும்மா ஜம்முன்னுதா இருக்கேன் இல்லப்பா?” என ஹர்ஷா கிருஷ்ணஸ்வாமியை கோர்த்துவிட,

இது புரியாம அவரும்,”ஆமாடா உனக்கு என்ன குறைச்சல் அப்படியே நீ என்ன போலடா” என தன் மீசையை நீவி கொண்டே ராதையை காண, அவர் பார்வையால் கிருஷ்ணஸ்வாமியை எரித்து கொண்டிருந்தார்.

‘ இவன் நமக்கு அடிவாங்கி குடுக்காம ஓயமாட்டான் போல’ என தன் மனதில் எண்ணிக்கொண்டே அமைதியாக இருந்தார்.

ராதை அமைதியாக ஹாலில் போய் அமர்ந்தார். அவரின் அமைதி கண்டு ஹர்ஷா “அம்மா உங்களுக்கு இப்போ என்ன கவலை” என கேட்டபடி அவரின் அருகில் அமர்ந்தான்.

உனக்கு புரியலையா ஹர்ஷா……ம்ம்ம்…..”சிறிது நேரம்,

கண்மூடி யோசித்துவிட்டு பேசஆரம்பித்தார் “ஜெய்க்கு கலெக்டர் பொண்ணு எடுத்தோம் இப்போ அவன் மனைவி ரோஹிணி தலை பிரசவத்துக்கு அவுங்க வீட்டுக்கு போயிருக்கா. விஜய்க்கு நம்ம பிஸினஸ் பார்ட்னர் சக்கரவர்த்தி பொண்ணு மைதிலியை இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணி வைக்கப்போறோம்;

இன்னும் ஒரு வருசத்துல உனக்கும் பார்க்கணும். நீ இப்படி மாச சம்பளத்துக்கு வேலை பார்க்குறேனு சொன்னா நம்ம சொந்தம் யாராவது மதிப்பாங்களா நாளைக்கு உனக்கு வர்ற பொண்ணு மதிக்குமா” என ராதை பேசிக்கொண்டிருக்கையில்,

இடைபுகுந்த ஹர்ஷா "அம்மா என்னை மட்டும் பிடிக்குற பொண்ணா பாருங்க. அவுங்க வசதி இல்லைனாலும் பரவால்ல.
இல்லைனா, என் மனசுக்கு பிடிச்ச பொண்ண நானே பார்த்துக்குறேன். அதனால இனி என் வேலை பத்தியோ இல்ல கல்யாணம் பத்தியோ கவலைபடாதீங்க” என கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்
.

ராதையும் கோவமாக தன் கணவரிடம் “என்னங்க இவன் எப்படி சொல்லிட்டு போறான்னு பார்த்திங்களா?”.

“ அது வந்து ராதும்மா”
என வழக்கம் போல கிருஷ்ணஸ்வாமி சமாதானம் செய்ய முயல.

“ என்ன ராதும்மா……..? இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்” என குற்றம்சாற்றும் குரலில்
ராதை கூறினார்.

“ நானா!” என அதிர்ச்சியுடன் வினவினார் கிருஷ்ணஸ்வாமி.

“ஆமா நீங்கதான்…... அவனை சின்ன பிள்ளைல, உங்க அம்மா நான் வளர்க்குறேன்டா ,அப்படின்னு சொல்லி மதுரைக்கு கூட்டிட்டு போனப்ப ஒன்னும் சொல்லல நீங்க” என ராதை கூற,

“ அதுக்கும் இன்னைக்கு நடந்ததுக்கும் என்னமா சம்பந்தம்?” என புரியாமல் வினவினார் கிருஷ்ணஸ்வாமி.


உங்க அம்மா அவனுக்கு சொல்லிகுடுத்துருப்பாங்க. என்னைய மதிக்க கூடாது, நான் சொல்றத கேட்க கூடாதுன்னு” என ராதை பொரிய.

“ ராதுமா…. அப்படி எல்லாம் இருக்காதும்மா”
என அவசரமாக கிருஷ்ணஸ்வாமி மறுக்க.

“ எப்பிடி சொல்றீங்க”

“ நீயே சொல்லு, எங்க அம்மாதான் என்னையையும் வளர்த்தாங்க இதுவரைக்கும் உன்னைய மதிக்காம, உன் பேச்சு கேட்காம இருந்துருக்கேனா” என கிருஷ்ணஸ்வாமி கூற ,

ராதை அவரை கொலைவெறியுடன் முறைத்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

அதை கண்ட கிருஷ்ணஸ்வாமி “அப்பாடா ரூம்க்கு போய்ட்டா அம்மா அமிர்தவல்லி நீ செத்தாலும் உன் மருமக உன்ன குறை சொல்றத விடல” என தனக்குள் முணுமுணுத்தபடி தன் ஆபீஸ்க்கு கிளம்பி சென்றார் .

பணம், கவுரவம், வறட்டு பிடிவாதம் என முக்கியத்துவம் இல்லாத விஷயங்களுக்காக தன் பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கூட செய்வதில்லை சில பெற்றோர்கள். அதைதான் ராதையும் செய்துகொண்டிருக்கிறார்.

தனது அறைக்கு வந்த ஹர்ஷாவுக்கு ‘தன்னை அம்மா புரிந்துகொள்ளவில்லையே என்ற கவலையும்; தன் டிடெக்ட்டிவ் அலுவலகத்தில் தான் எதிர்பார்த்த மாதிரி ஒரு நல்ல த்ரில்லிங் வழக்கு தனக்கு வரமாட்டேங்குது என்ற சிந்தனையிலும் இருக்கும் பொழுது அவன் கைபேசி சிணுங்கி அழைப்புவந்தது .

அந்த அழைப்பு அவன் எதிர்பார்த்த த்ரில்லாக இருக்குமா????????
 
உங்களுடைய "ஒற்றைக் கால்
மண்டபம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நிரஞ்சனாதேவி சுப்பிரமணி டியர்
 
Last edited:
Top