Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

30. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
சுமதியைத் தேடி சமையலறைக்குள் நுழைந்த தனா, முதலில் கேட்டதே, ஏன்க்கா நீ அவங்க கூட போகல.

எல்லா பிரச்சனையையும் நீயே பார்த்துக்கிடலாம்னு நெனச்சா, உனக்கு அக்கான்னு நான் எதுக்கு இருக்கேன் தனா.

அக்கா..

உனக்கு எத்தனை பலம், சக்தி என்ன வேணும்னாலும் கிடைக்கட்டும், ஆனா உனக்கு துணையா நானும் இருப்பேன் தனா.

போ போய் அந்த பொண்ணுக்கு என்ன வேணும்னு கேட்டுட்டு வா.

அக்கா என அணைத்துக் கொண்டவன், ஏன்க்கா நம்ம குடும்பத்துல மட்டும் இவ்வளவு பிரச்சனை. அம்மா அப்பா இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு க்கா. அதுலயும் மாமாவோட இழப்ப நீ கடந்து வந்தது போல என்னால முடியல க்கா.

கண்கள் கண்ணீரைக் கொட்ட தயாராய் இருக்க, எல்லாத்தையும் கடந்து வந்தா தான் தனா வாழ்க்கையை வாழ முடியும். மாமா போய்ட்டாருன்னு நான் கவலப்பட்டுக்கிட்டே இருந்தா என் புள்ளைங்கள யார் பார்ப்பா. அவங்களுக்கு அப்பாவா அம்மாவா நான் தான் இருக்கணும்னு ஆண்டவன் எழுதிட்டான். இனி தலைகீழா நின்னாலும் அதை நீயோ நானோ மாத்த முடியுமா சொல்லு. நமக்கு விதிச்சது அவ்வளவு தான்னு கடந்து போகணுமே தவிர, அதையே புடிச்சு தொங்க கூடாது தனா.

அம்மா, அப்பா, அகி, முகி எல்லாரும் போய்ட்டாங்க. ரொம்ப பெரிய இழப்பு தான். வாழ வேண்டிய வயசுல பொறந்த புள்ளையை விட்டுட்டு போய்ட்டாங்க. எனக்கும் கவலை மலையளவு இருக்கு தனா. ஆனா அதையே நினைச்சா வீட்டுல இருக்குற அந்த பொண்ணுங்கள என்ன செய்ய. கல்யாணம் ஆகி ஒன்ற வருசம் தான் வாழ்ந்திருக்காங்க. இனி அவங்க நிலைமை என்ன? நினைக்க நினைக்க நெஞ்சு தான் வலிக்கும். ஆனா இப்பிடியே கவலப்பட்டுக்கிட்டு இருந்தா இனி இருக்குற வாழ்க்கைய என்ன செய்யுறது.

அக்கா...

ஆமா தனா. அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய நாம தான் ஏற்பாடு பண்ணனும். அப்பா முகத்தையே பார்க்காத பச்ச பிள்ளைகள் கடைசி வரை அப்பா இல்லாமலே வளரக் கூடாது. சீக்கிரமே எல்லா பிரச்சனையையும் முடிச்சு அவங்களை நல்லா வாழ வைக்கணும். நான் இல்லாட்டியும் நீ அதை செய்யணும்.

அக்கா. என்ன பேசுற.

ப்ச்.. நான் அப்போ சொன்னது தான் இப்பவும். இந்த பிரச்சினையில உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்.

அதெல்லாம் ஒன்னும் ஆகாது க்கா.

ஆகாத வரை சந்தோசம் தான். கவலை படாம இனி நடக்க போற விஷயங்களை பத்தி மட்டும் யோசி. போ யாழினி தனியா இருப்பா.

அவள் சொல்லி முடிக்க, யாழினி ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள். அவள் சைகையிலேயே சுமதியின் எண்ணங்களை பாராட்டி, அவளுக்கு முத்தம் தர, வெகு நாட்களுக்குப் பின் மனதார சிரித்தாள் சுமதி.

இருவரின் புன்னகையையும் பார்த்து விட்டு வெளியே சென்ற தனா, மேலே அண்ணாந்து அந்த அறையை பார்த்தான்.

எங்க குடும்பத்தை போல, இன்னொரு குடும்பம் உன்னால கஷ்டபடக் கூடாது. உனக்கு அழிவு சீக்கிரமே நடக்கும். நடத்திக் காட்டுறேன் என மனதில் எண்ணியபடியே வெளியே இருக்கும் சித்தனையும் குமரவேலையும் தேடிச் சென்றான்.

இங்கு சமையலறையில் இரு பெண்களும் நன்றாக சிரித்து பேசிக் கொண்டே சமையலைத் தொடர்ந்தார்கள்.

வெளியே வந்த தனா,

என்ன தாத்தா புது தாத்தா கிடச்சதும் தீவிரமா பேசிட்டு இருக்கீங்க.

அதுவா, நீங்க ஊருக்கு போயிருந்தப்போ இங்க நடந்ததை சொல்லிட்டு இருக்கேன் பா.

அப்படி என்ன தாத்தா நடந்துச்சு.

எப்போவும் போல தான், என ஆரம்பித்து நடந்ததை விவரித்து, அது மட்டுமில்ல தனா இளா ரொம்ப சாமர்த்தியமா பிள்ளைகளை பார்த்துக்கிட்டான்.

என்ன... என்ன... என் பேச்சு அடிபடுது.

வா இளா எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா.

அங்க எல்லாம் சுபம் தான். இங்க என்ன பேச்சு அதை முதல்ல சொல்லுங்க.

எல்லாம் உன்னை பத்தி தான் பேசிட்டு இருக்கேன் இளா.

எதுக்கு தாத்தா பாராட்டு. வேணும்னா என்ன புகழ்ந்து ஒரு பாட்டு பாடுங்களேன் கேட்போம்.

ஏய்... படவா...

ஹா... ஹா.. சும்மா... சும்மா... தாத்தா.

இளா.. ரொம்ப நன்றி இளா.

அட என்ன தனா நீ. இது நம்ம குடும்பம். நாம சேர்ந்து நின்னு ஜெயிச்சுக் காட்டுவோம்.

சரி அப்புறம் தாத்தா எனக்கு கொஞ்சம் உங்க வித்தைகளை சொல்லித்தர சொல்லிக் கேட்டேன். நீங்க என்ன இன்னும் சொல்லித்தர மாட்டேங்குறீங்க.

சொல்லித்தந்தா எனக்கு என்ன தருவ.

உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க தாத்தா.

அதை சொல்லித் தந்ததும் கேட்பேன். கண்டிப்பா நீ தரணும்.

ம்ம். ம்ம்.. கண்டிப்பா தரேன் தாத்தா.

சரி இளா. இப்போ வாங்க உள்ள போகலாம். நமக்கு நெறய வேலைகள் இருக்கு.

தனா.. நீ யாழினிய கூட்டிகிட்டு குளக்கரை கோயிலுக்கு போய்ட்டு வந்திடு. முடிஞ்சா சிவன் கோயிலுக்கும் போய்ட்டு நீலகண்டர பார்த்து நாளைக்கு நம்ம வீட்டுல ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ண சொல்லிட்டு வா.

தாத்தா.

ஆமா தனா முதல்ல வீட்டுல தெய்வ சக்திய அதிகப்படுத்துவோம். அதுவே அந்த உருவத்தை அடக்கி ஒடுக்க துணையா இருக்கும். என்ன செய்யணுமோ அது எல்லாத்தையும் நான் சொல்லுறேன். நீ செய்.

சரிங்க தாத்தா.

ம்ம் கிளம்பு. இளா நீ வீட்டுக்கு போய் திருவோட பொருள் ஏதாவது ஒன்னை எடுத்திட்டு வா. பூஜைக்கு தேவைப்படும்.

ம்ம். சரிங்க தாத்தா என இளா கிளம்ப,

தனா நேரே சென்று சுமதியுடன் இருந்த யாழினியிடம் விவரத்தைச் சொல்லி தயாராகச் சொன்னான். யாழினி சரி என்று தலையாட்டிவிட்டு அறைக்குச் செல்ல, சுமதி தனாவிடம்,

ஏன்... தனா, உனக்கு யாழினிய புடிச்சிருக்கா.

ஏன்க்கா இப்பிடி கேட்கிற.

ம்ம்... எல்லாம் காரணமாத் தான். நீ சொல்லு.

எனக்கு எதுவும் சொல்லத் தெரியலக்கா. இப்போதைக்கு இந்த பிரச்சினை எல்லாம் முடிஞ்சா போதும்னு இருக்கு. மத்ததை அப்புறம் தான் யோசிக்கணும்.

அவனை ஏற இறங்க பார்த்த சுமதி, நீ ஏன்டா இவ்வளவு நல்ல பையனா இருக்க. கொஞ்சம் வயசுக்கு ஏத்த மாதிரியும் நடந்துக்கோடா.

அக்கா.....

பின்ன என்னடா. நல்ல அழகான பொண்ணை பக்கத்துல வச்சுக்கிட்டு சாமியார் மாதிரி பேசிட்டு இருக்க. அவ உன் பொண்டாட்டிடா. கொஞ்சம் சைட்டு தான் அடியேன்.

அக்கா.. என்ன பேசுற நீ.

நான் நல்லாத் தான் பேசுறேன். நீ தான் புரியாம சுத்திட்டு இருக்க. போ... போ அவளை கொஞ்சம் கவனி. போகும் போது நிறைய பூ வாங்கிக் கொடு. பாத்து பத்திரமா கூட்டிட்டு போ. ஆங். அப்புறம் உன் வண்டியிலேயே போங்க.

சரிக்கா... என சிரித்த படி வெளியே சென்ற தனா, திரும்பி வந்து அக்கா அந்த பொண்ணு நீ சொல்லுற மாதிரியெல்லாம் பார்த்தா அடிக்காது தானே.

அவன் கேட்ட கேள்வியில் படாரென்று திரும்பிய சுமதி.....

உண்மையிலேயே இவனுக்கு ஒன்னும் தெரியாதோ... ம்ம்மா இருந்தாலும் உன் புள்ளய ரொம்ப நல்லா வளத்துருக்கம்மா. கஷ்டம் தான் போ.

டேய்... ஒழுங்கா ஒடிப்போய்யிடு... நிக்காத சொல்லிட்டேன்...



விடை தேடி பயணம் தொடரும்...
Prabhaas.....
 
Top