Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

29. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
அகரயாழினி அந்த உருவத்தை நோக்கி கையை நீட்ட,

வேண்டாம் தேவி வேண்டாம். என அங்கும் இங்கும் தாவிய உருவம், யாழினி வெளியே சென்றதைக் கூட அறியவில்லை.

மீண்டும் அதன் பழுப்பு நிற கண்களை சுழற்றி அந்த அறையைப் பார்க்க, யாருமில்லாமல் இருக்கவும் தான் ஓர் இடத்திலேயே நின்றது.

கோபம் தலைக்கு ஏற வேக மூச்சுகளுடன் அறையின் நடுவில் அமர்ந்திருந்த உருவம்,

மீண்டும் மீண்டும் என்னை அடைக்கி ஆள நினைக்கும் இவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டியே ஆக வேண்டும். இனி இக்குடும்பத்திற்க்கு நரகம் என்பது என்ன என்பதை வாழும் போதே நான் காட்டுகிறேன்.
என்னால் இந்த அறையை விட்டு தானே வெளியேற முடியவில்லை. இங்கிருந்தே உங்கள் அனைவரையும் என் காலடியில் மண்டியிட்டு விழ வைக்கிறேன் பாருங்கள்.

ஏதேதோ செய்த அந்த உருவம், அதே ரீங்காரச் சத்தத்தோடு அந்த அறையை அதிர வைத்தது. சத்தம் இருக்க இருக்க அதிகமாகிக் கொண்டே இருக்க,

இப்படி ஏதேனும் அசம்பாவிதம் அந்த உருவத்தின் மூலம் கண்டிப்பாக நடக்கும் என அறிந்த சித்தன் ஐயாவும் மற்றவர்களும், முன்பே சுமதியைத் தவிர, மற்ற அனைவரையும் இளாவுடன் நீலகண்டர் இருக்கும் கோவிலுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

இப்போதைக்கு பிரச்சனை சரியாகும் வரை அங்கிருக்கும் மடப்பள்ளியில் இவர்களை பாதுக்காக்க ஏற்பாடு செய்யுமாறு வந்ததும் வேலைகள் துரிதமாக நடந்தது.

ஆகையால் இப்போது வீட்டில் சித்தன், தனா, யாழினி, குமரவேல், ரத்தினம், சுமதி மட்டுமே.

சுமதியை பிள்ளைகளுடன் போகச் சொல்ல, என்ன நடந்தாலும் நான் இங்கு தான் இருப்பேன் என்றுவிட்டாள்.

கடைசி அறையிலிருந்து வந்து கொண்டிருக்கும் சத்தம் மேலும் மேலும் அதிகரிக்க, காது கேட்கும் திறனை இழந்தாலும் இழக்கும் நிலை தான் இப்போது.

தாத்தா... ஏதாவது பண்ணுங்க. சத்தத்தில காது சவ்வு கிழிஞ்சிடும் போல.

அவர்கள் ஏன் செய்ய வேண்டும் நண்பா. அது தான் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா.

எது நானா...

ஆம் நீங்கள் தான். இதை அடக்க நீங்களும் இதோ உங்கள் பத்தினியாகப் பட்டவருமே போதுமே. எதற்கு பயம். நீங்கள் இருவரும் சென்று அதை அடக்கி விட்டு வாருங்கள். நாங்கள் விருந்துக்கான ஏற்பாட்டை கவனிக்கிறோம்.

திடீரென ஒரு பாம்பு வந்ததுமில்லாமல் பேசவும் செய்யவும் சுமதி சித்தன் ஏன் யாழினி கூட கொஞ்சம் மிரண்டு தான் விட்டாள்.

சீரனை பற்றி அவளிடம் கூறவில்லை. எனவே இந்த அதிர்ச்சி.

எல்லோரும் தனாவைப் பார்க்க, அவன் இவர் பெயர் சீரன். எனக்கு துணைக்கு நாகர்மலை சித்தர்கள் அனுப்பி வச்ச என்னோட புதிய நண்பன்.

எல்லோரும் ஆ.... ஆ... என்று அதையே பார்த்துக் கொண்டிருக்க,

எனைப் பார்த்தது போதும். போய் உங்கள் சக்தியை அந்த உருவத்தின் முன் காட்டுங்கள். பிறகு என்னைப் பார்த்துக் கொள்ளலாம்.

அதுவே சரி எனப் பட, யாழினி தனாவுடன் மீண்டும் மேலே சென்றாள். இம்முறை சாதாரண யாழினியாக.

கதவைத் திறந்து இருவரும் உள்ளே அடியெடுத்து வைக்க, அந்த உருவத்தைக் காணவில்லை. ஆனால் சத்தம் இப்போது மும்மடங்கு அதிகமாக வர, பயத்தில் யாழினி இறுக்கி தனாவின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

அவனே பயந்து கொண்டு தான் இருந்தான். இதில் இவளும் கைகளை இறுக்க, அவனின் பலம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியது.

பயத்தில் நடுங்கிய கால்கள் இப்போது ஓர் அழுத்தத்துடன், அங்கு தடம் பதிக்க, கைகள் இப்போது யாழினியின் கையை கெட்டியாக பிடித்து ஆதரவு தர, அவளுக்குள்ளும் மாற்றம் கண்டது.

அவளது நிமிர்ந்த பார்வையில் அந்த உருவத்தையே அழிக்கும் அனல் பறக்கிறது. இருவரும் நிமிர்ந்து நின்று ஓசையிட்ட அந்த சொல்லில் வந்த சத்தம் கப்பென்று நின்று போனது.

இருவரின் குரலும் சேர்ந்து ஒலிக்க, கீழே சீரன், இருவரும் அவர்களின் பலனை முற்றிலும் பெற்று விட்டனர். இனி அந்த உருவத்தின் அழிவு வெகு விரைவில் நடைபெறும்.

இன்னும் பவுர்ணமி திதிக்கு மூன்று நாட்களே உள்ளன. அதன் ஆட்டம் அதிகமாக இருந்தாலும் அதை அடக்கும் சக்தி நம்மவர்களுக்கு உண்டு.

ம்ம்.. சுமதி அவர்களே நீங்கள் என் நண்பனுக்காக திருமண விருந்தை தயாராக்குங்கள். இன்னும். அவர்களுக்கு பல வேலைகள் உண்டு. வேலைகள் துரிதமாக நடக்கட்டும். சரிதானா...

ஆங்.... ஆங்.. சரி... சரி.

நான் வேண்டுமானால் உங்களுக்கு உதவிக்கு வரட்டுமா??

ஐய்யயோ அதெல்லாம் வேண்டாம்... வேண்டாம்.. நானே.. நான்... நானே பார்த்துக்குறேன்.

நீங்கள் ஏன் இப்படி என்னை பார்த்து நடுங்குகிறீர். நான் ஒன்னும் கெட்டவன் அல்ல. ரத்தினம் ஐயா, முதலில் என்னைப்பற்றி முழுதும் கூறி முடிங்கள். நான் பிறகு வருகிறேன். ஐயா நான் சாமி அறையிலேயே இருந்து கொள்கிறேன்... என நீளமாக பேசிவிட்டு, அதன் நீளமான உருவத்தை நகற்றிக் கொண்டு உள்ளே நுழைந்து நின்று மறைந்து போனது.

பூசாரி ஐயா... என்ன ஐயா இது.

அம்மா சுமதி அதான் தனா சொன்னானே... தனாவோட துணைக்கு அனுப்பி வைக்கப்பட்டவன் தான் சீரன். உங்களை அவன் ஒன்னும் செய்ய மாட்டான். நீ போய் வேலையை கவனி.

அப்போ தனா..

இனி எந்தக் கவலையும் வேணாம் மா. நீ போ.. நாங்க பார்த்துக்கிறோம்.

மேலே சென்றவர்களும் கீழே இறங்கி வர, யாழினி இன்னும் தனாவின் கைகளுக்கு உள்ளே தான் இருந்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் தன்னிலை அடைய, பிறகு தான் தனித்து நின்றார்கள்.

உங்களோட சக்தி வெளி வர ஆரம்பிச்சிடுச்சு. இனி தான் நீங்க ரெண்டு பேரும் கவனமா இருக்கணும். அந்த உருவத்தால இன்னும் நெறய பிரச்சனை வரும் நாம கடந்து வந்தா தான் அதை அழிக்க முடியும். ம்ம் சரியா.

சரிங்க ஐயா.

ம்ம் நல்லது. நீங்க இங்க இருங்க. நான் கோவிலுக்கு போய்ட்டு பூஜைய முடிச்சிட்டு வர்றேன்.

ரத்தினம் கிளம்பிவிட, சித்தனும், குமரவேலும் வீட்டில் வெளியே இருக்கும் மரத்தடியை நோக்கிச் செல்ல, இப்போது இவர்கள் இருவர் மட்டுமே நிற்க, என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற யாழினியை, அது தான் அம்மாவோட ரூம் நீ போய் இரு நான் வந்துடுறேன். என அவளை அனுப்பி வைத்து விட்டு சுமதியை தேடிச் சென்றான்.

அவர்கள் அந்த உருவத்தை அடக்கிய ஓசை என்ன????

விடை தேடி பயணம் தொடரும்...
Prabhaas....
 
Awesome 👍👍
 
Top