Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

28. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
அன்னையவளின் ஆசி பெற்ற அகரயாழினியும், பெற்றவளின் ஆத்ம பலன் பெற்ற புத்திரனும் சேர்ந்து தான் அந்த உருவத்தை அழிக்க முடியும். அதற்கான ஆயுதம் உங்களில் உருவாகும் சக்தி மட்டுமே.

அடுத்து வரும் முழு பவுர்ணமி அன்று நீங்கள் அந்த உருவத்தை அழித்தே ஆக வேண்டும் கீர்த்தனா. உனக்கு துணையாக முன்பு அந்த உருவத்தை கட்டுக்குள் வைத்த யோகியும், இதோ இவர்களும் என உடனிருந்தவர்களை கை காட்டி பின் இதோ இவனும் துணையாக இருப்பார்கள் என்றார் அவர்.

அந்த உருவத்தை அழிக்கும் வழிமுறையை யோகியே எடுத்து சொல்வார். மேலும் இவன் இனி எப்போதும் உன்னுடனே இருப்பான். ம்ம்.... அழைத்துச் செல்.

சாமி...

ஹா... ஹா.... வேண்டாதவர்களுக்கு மட்டுமே இவன் விஷமுள்ள நாகம். ஆனால் உனக்கு இனி இவனே உற்ற நண்பன். துணிந்து உடன் அழைத்து செல் வெற்றி உனக்கே கிட்டும்...

போய் வா கீர்த்தனா. வெற்றியோடும் உன் வாரிசோடும் மீண்டும் இங்கு வா உனக்காகவும் உன் வாரிசுக்காகவும் நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் வாழும் இந்த நாகர்மலையும் உங்களுக்காக காத்திருக்கும்.

நன்றி ஐயா..

ம்ம் சென்று வாருங்கள்.

இருட்டும் வேளை தான் குகையின் உள்ளிருந்து வெளி வர முடிந்தது.

இனி எவ்வளவு நேரம் ஆனாலும் சரி அடிவாரத்திற்கு போய்டலாம் என தனா கூற,

இல்லை நண்பா... இருட்டில் தவம் செய்யும் சித்தர்கள் இங்கு ஏராளம். அப்படியிருக்க, நாம் இடையில் சென்று அவர்களின் தவத்தை கலைப்பது போல் நேர்ந்து விட்டால் பெரும் பாவமாகிவிடும். எனவே நாம் காலைப் பொழுதினில் பயணத்தை தொடங்குவதே நல்லது. இப்பொழுது இங்கே இவ்விடமே எல்லோரும் உங்களை அசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். அதுவே நாளைய பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தனா, ஆச்சரியமாக பார்க்க.

ஆச்சரியம் வேண்டாம்.... நானும் உங்களைப் போல் நன்றாகவே பேசுவேன் நண்பா. இனி எந்த கவலையானாலும் சரி என்னிடமே நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு உறுதுணையாக நான் எப்போதும் உடன் இருப்பேன். இப்போது வாருங்கள் சற்று ஓய்வு எடுக்கலாம்.

எல்லோரும் ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொள்ள, தனா அந்த நாகத்திடம் அதன் விவரங்களை கேட்டான்.

இல்ல என்ன நண்பன்னு சொல்லுறீங்க. அப்போ உங்களுக்கு கொஞ்ச வயசு தானா.

ஆம் நண்பா. எனது வயதும் உங்களது வயதும் ஒன்று தான். அதனால் தான் துணையாக என்னை அனுப்பினார்கள்.

அப்போ எப்பிடி கொஞ்ச வயசிலேயே நீங்க இவ்வளவு சக்தியோட இருக்கீங்க. இல்ல சித்தர்கள் எல்லாம் பல காலம் தவமிருந்தா தானே நெறய சக்தி எல்லாம் கிடைக்கும்.

உங்களுக்கு என்னோட வயசு தான்னா, அப்ப நீங்க எப்போ இருந்து தவம் இருக்கீங்க.

எங்கள் பிறவியில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இது எனது இருபத்தி ஐந்தாவது பிறப்பு. எங்களது பிறப்பைக் கொண்டே எங்கள் வயது நிர்ணயிக்கப்படும். உங்களுக்கு உதவுவதற்க்காகவே எனது பிறப்பு உருவாக்கப்பட்டது.

ஓ... ஓஹ்.. இவ்வளவு விஷயம் இருக்கா.

சரி, அப்போ உங்க பேர் என்ன?.

எனது பெயர் சீரன்.

சீரன் அப்பிடின்னா என்ன?

சீரானவன் அனைத்திலும் சிறந்தவன் என பொருள் படும்.

மேலும் பல பேச்சுகள் இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருக்க, ரத்தினம் தான் இதுவரை பேசியது போதும் இருவரும் ஓய்வெடுங்கள் என பேச்சை முடித்து வைத்தார்.

அதிகாலையும் புலர்ந்தது. சீரனே எல்லோரையும் எழுப்பி பயணத்தை மீண்டும் தொடங்க வைத்தது. உண்மையில் இரவு ஓய்வெடுத்தது எல்லோருக்கும் புத்துணர்வாக இருக்க பயணம் வேகமாகவே இருந்தது. சூரிய உதயத்தை கடந்து சில மணிகளிலேயே அவர்கள் குமரவேலின் வீட்டினை அடைந்தனர்.

இவர்களை கண்டதும் தான் அகரயாழினிக்கு நிம்மதியாக இருந்தது. என்ன நடந்தது என்பதை குமரவேலின் மூலம் தெரிந்து கொண்டவள், பயணத்திற்காக தயாராக ஆரம்பித்தாள்.

பூங்கொடியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு அகரயாழினியோடு குமரவேலும் தனாவின் வீட்டிற்கு செல்வதாக முடிவு எடுக்கப்பட்டு தனா, அகரயாழினி, குமரவேல், நீலகண்டர், ரத்தினம், வேலன் என அனைவரும் ஊருக்கு கிளம்பினார்கள்.

மகளுக்கு நல்வாழ்க்கை கிடைத்த திருப்தியில் பூங்கொடியும் யாழினியை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

கிட்டத்தட்ட முழுதாக ஒரு நாள் பேருந்து பயணம் முடிய அகரயாழினி தனாவின் வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்தாள்.

ஏற்கனவே தனாவின் திருமணத்தைப் பற்றி சுமதியிடம் சொல்லி இருந்ததால் இவர்கள் வருவதற்கு முன்பாகவே சுமதி ஆரத்தியுடன் வாசலில் காத்திருந்தாள்.

எந்தவித சங்கடமும் இல்லாமல் சுமதி சிரித்த முகமாகவே அகரயாழினியை வீட்டிற்கு வரவேற்றாள்.

விளக்கேற்றி, சித்தனிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு அவள் முதலில் சென்றதே அந்த கடைசி அறைக்குத் தான். யாரையும் உடன் வர வேண்டாம் என்று கீழே இருக்க வைத்தவள், தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி படியேறினாள்.

எல்லோரும் கீழிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க, விறுவிறுவென நடந்து அவள் கடைசி அறையை அடைந்தாள்.

ஏற்கனவே சித்தன் போட்டு வைத்த திருநீறு வாசலில் வீற்றிருக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

கோபத்தின் உச்சியில் இருந்த அந்த உருவம் யாழினியை கண்டதும் அதிர்ந்து நடுங்கிப் போனது. இருந்தும் கோபத்துடனே அவளை எதிர்த்து நிற்க, யாழினியின் கோப பார்வையில் அப்படியே அடங்கிப் போனது.

என்னிடமே உன் ஆட்டத்தை காட்டுகிறாயா?. நான் யார் என்று அறிந்த உனக்கு என்னால் உனக்கு நேரா போகும் அழிவும் நன்றாகவே தெரிந்திருக்கும் அல்லவா. ஹா....ஹா... இன்னும் சிறிது நாட்கள் தான்... இப்படியே இந்த அறையிலேயே எண்ணிக் கொண்டிரு... உனது இறுதி நாட்களை.

நிறுத்து உன் பேச்சுக்களை. நான் யார் என்று தெரிந்தும் என்னிடம் மோதுகிறாயா எனக்கு அழிவென்பதே இல்லை. பெற்றவளின் ஆத்மபலன் பெற்ற அந்த கீர்த்தனனை அழித்து, அழியா வரம் பெற்று உன்னையும் மிஞ்சிக் காட்டுகிறேனா இல்லையா என்று பார்.

ஹா.... ஹா... ஹா... அது அப்போது மூடனே. இப்போது அவன் இந்த தேவி அவளின் முழு ஆசி பெற்ற அகரயாழினியின் கணவன். இனி ஒருபோதும் அவனின் மீதிருக்கும் சிறு துரும்பைக் கூட உன்னால் அசைக்க முடியாது.

மீறினால் என்ன நடக்கும் என்று பார்க்கிறாயா?

ரிர்ரீ.... ரிரீ..... வேண்டாம் தேவி... வராதே.... என்னருகில் வராதே...

இவ்வளவு பயம் இருக்கும் நீ என்னிடம் மோத நினைத்தது யானையிடம் எறும்பு மோதுவது போல் அல்லவா இருக்கிறது.

மிரண்டு போன அந்த உருவம் போகும் வழி அறியாது அங்கும் இங்கும் தாவித் திரிய,

யாழினி அவள் கைகளை அதனை நோக்கி நீட்டினாள்.


விடை தேடி பயணம் தொடரும்.....
Prabhaas...
 
Top