Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

23. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
தனா குமரவேலிடம், அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரா தாத்தா, என கேட்டுக் கொண்டிருக்கும் போதே அகரயாழினி அங்கே வந்து விட்டாள்.

தனாவின் முகத்தை ஒருமுறை கூர்ந்து பார்த்தவள், குமரவேல் பதில் அளிக்கும் முன்னேயே, அகரயாழினி கைத்தட்டி அழைத்தாள் குமரவேலை.

என்னமா யாழினி.. என இவரும் கேட்க, வேண்டாம் என அவளது கைகளை ஆட்டிக் காமித்தாள்.

ஏன் மா ஏன் சொல்லவேணாம்.

சைகையிலேயே ஏதோ சொன்னவள், மீண்டும் அவ்விடத்தை விட்டு அகல,

என்ன தாத்தா ஏன் அவங்க என்ன பாத்து தலயாட்டுனாங்க. சத்தமா கூட பேசல, ஏன் நாங்க வந்து அவங்களுக்கு பிடிக்கலையா? சைகையிலேயே ஏதோ சொல்லுறாங்க.. என்னாச்சு தாத்தா.

சிறு சிரிப்பை உதிர்த்து விட்டு, அவளுக்கு பேச்சு வராது கீர்த்தனன். அதான் சைகைலேயே பேசிட்டு போறா.

ஐயோ.. மனிச்சுக்கோங்க தாத்தா. தெரியாம ஏதோ பேசிட்டேன்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல பா. இன்னிக்கி நான் உங்களை தேடி வந்ததும் சரி, முன்ன நாதன் கூட பயணப்பட்டதும் சரி அது தானா நடக்கல.

நீங்க நம்புவீங்களா இல்லையா தெரியல, யாழினி பேசினா... அதும் ரெண்டே தடவை தான். நாதன் வந்து என்கிட்ட உதவி கேட்டப்போ. அப்புறம் நேத்து ராத்திரி. அந்த அம்பாள் இவள் மூலமா தான் எனக்கு வாக்கு கொடுத்துக்கிட்டு இருக்கா.

இப்போ கூட உங்க கிட்ட உங்க அப்பா பட்ட கஷ்டத்தை சொன்னா நீங்களும் கஷ்டபடுவீங்க.. ஏற்கனவே நீங்க வேதனைப்பட்டு தான் இங்க வந்ததால, இன்னும் இதை சொல்லி கஷ்டபடுத்த வேண்டாம்னு சொல்லிட்டு போறா.

அப்போ எல்லா விஷயமும் இவங்களுக்கு தெரியுமா தாத்தா. ஆமாப்பா.. நடக்குற எல்லா விஷயமும் அவளுக்கு தெரியும். நான் அவ கிட்ட மறைக்க முயற்சித்தாலும் அது முடியாது. ஏன்னா நம்ம மனசுல இருக்கிறதை அப்படியே அவ கண்டுபிடிச்சிடுவா.

வாய் பேச முடியாதுன்ற ஒன்னு தான் தம்பி அவளோட குறை. ஆனா அதைவிட நிறைவான அம்மன் அருள பரிபூரணமா பெற்றவ தம்பி. இவளுக்கு ஒரு நல்லது நடக்க தான் நானும் காத்துகிட்டு இருக்கேன்.

அப்போ இவங்களோட அப்பா... இல்லையா தாத்தா.

இல்லப்பா. அவரு யாழினி பொறக்குறதுக்கு முன்னாடியே இறந்து போய்ட்டாரு.

தாத்தா...

ஆமாப்பா.. யாழினி அப்போ பூங்கொடி வயித்துல அஞ்சு மாசம். வேலைக்கு போய்ட்டு வரும்போது ஆக்சிடென்ட் ஆகி அந்த இடத்திலேயே உயிர் போய்டுச்சு.

பூங்கொடிக்கு இருக்குற ஒரே ஆதரவு அவ மக தான். என்ன கொடுமையோ வாயும் பேச முடியாம போய்டுச்சு. அவளை நல்ல ஒரு இடத்தில கரைசேர்த்துட்டா அதுவே எனக்கு போதும் தம்பி.

அதெல்லாம் அமோகமாக நடக்கும் தாத்தா.

மன்னிச்சுக்கோ பா. நீயே கவலையில தான் இருக்க. இதுல எங்க கவலையையும் சேர்த்து சொல்லிட்டு இருக்கேன்.

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க குமரவேல் ஐயா. தனா தப்பா எடுத்துக்க மாட்டான். ரொம்ப தங்கமான பையன். நீங்க தயார்ன்னா நாம கோவிலுக்கு கிளம்பலாமா.

கண்டிப்பா ரத்தனம். வாங்க போகலாம்.

ம்ம் சரிங்க ஐயா. நான் போய் நீலகண்டரையும், வேலனையும் கூட்டிட்டு வர்றேன்.

ஐவரும் கோவிலுக்கு கிளம்ப, இரத்தினமும் நீலகண்டரும், குமரவேல் ஐயா... உங்க பேத்தி அகரயாழினியும் நம்ம கூட வரலாம்னு நாங்க நினைக்கிறோம். நீங்க என்ன சொல்லுறீங்க.

அவ எதுக்கு ரத்தினம்.

எல்லாம் ஒரு காரணமாத் தான் ஐயா. நீங்க போய் கூட்டிட்டு வாங்க.

இவர்கள் ஐவரோடு இப்போது அகரயாழினியும் சேர்ந்து கொள்ள கோவிலுக்கு கிளம்பினார்கள்.

சில நிமிடங்களிலேயே கோவிலை அடைந்து அம்மனை வணங்கி ஆசி பெற்று விட்டு, அங்கு பூஜை நடத்திய குமரவேலனின் தம்பியை கோவில் கதவை மட்டும் அடைத்து விட்டு வருமாறு குமரவேல் சொல்ல எல்லோரும் அதுவரை காத்திருந்தனர் .

எல்லோரும் சற்று அமைதியாக இருக்க, இப்போது ரத்தினமே முதலில் பேச்சை தொடங்கினார்.

தனா, உங்க வீட்டுல நடந்த, குறிப்பா உங்க அப்பாவுக்கு நடந்த எல்லாமே உங்க அம்மாவுக்கும் தெரியும். அந்த உருவம் உங்க வீட்டுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் பசுவுக்கு மட்டும் கெட்டது நடக்கல. கொஞ்ச கொஞ்சமா எல்லாமே கெட்டதா தான் நடந்திருக்கு.

முதல் நாள் நீலகண்டர் கிட்ட பரிகாரம் கேட்டுட்டு வீடு வந்த மகா, அவர் ஆபத்துன்னு சொன்னதும் அவளோட பதட்டத்தை எல்லார் கிட்டயும் இருந்து மறச்சு சாதாரணமா நடந்துகிட்டாலும் ஏதாவது நடந்திருமோன்னு பதட்டமாவே தான் இருந்திருக்கா. ஆனா மறுநாளே நாதன் பசுமாட்டை வித்துட்டேன்னு சொன்னது தான் அவளுக்கு ஏதோ தப்பா பட்டுருக்கு.

இதுவரை எதையும் மறைக்காத நாதன் சொல்லாம கொள்ளாம மாட்டை வித்தது தான் சந்தேகத்த கிளப்பிருக்கு.

உங்க அப்பாவ கவனச்சதுல, அந்த அறையும் அந்த உருவமும் அவளுக்கு தெரிஞ்சு போச்சு. பாவம் அவளுக்கு அதை நம்பக் கூட முடியல. ராத்திரியெல்லாம் அழுது புலம்பி யோசிச்சு பார்த்தவ காலையில உன்னை கூப்பிட்டு கோவிலுக்கு வந்தா.

அவ பாத்தது எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா. சொன்னதுமே எனக்கு புரிஞ்சி போச்சு, அது வேற எதுவும் இல்ல, குளத்துல கட்டுக்குள்ள இருந்த உருவம் தான்னு. சரி மகா, பயப்படாத... போய்ட்டு நாளைக்கு வான்னு தைரியம் சொல்லி அனுப்பி வச்சேன்.

தப்பு நடக்க கூடாதுன்னு, அந்த உருவத்தை குளத்துக்குள்ள கட்டுப்படுத்தி வச்ச யோகியத் தேடி அன்னைக்கே கிளம்பினேன். அன்னிக்கி முழுதும் தேடி, ராத்திரி தான் கண்டுபிடிச்சேன் அவரை. நம்ம ஊருக்கும் மூனு ஊரைத் தாண்டி இருந்த சிவன் கோவில்ல தான் அவரை பார்த்தேன்.

மகா சொன்ன எல்லாத்தையும் அவர்கிட்ட சொன்னேன்.

ஆமா ரத்தினம். எனக்கும் தெரியும். அதோட ஆட்டம் கொஞ்ச நாள் அதிகமா தான் இருக்கும். பல உயிர்களை காவு வாங்கி ஆட்டமா ஆடி மொத்தமா அழியும் நிலை ஒரு நாள் வரும். ஆனா அதுக்கும் முன்னே இழப்புகள் அதிகமா தான் இருக்கும். வேற வழியில்ல.

உன்கிட்ட பாதுகாப்பு கேட்டு வந்த அம்மாவுக்காக, இப்போவே போய் கோவில்ல காவல் தெய்வ பூஜை பண்ணு. விடியக்காலை நான் அங்க வர்றேன். இப்போதைக்கு நாம அவங்களுக்கு ஒரு உதவியும் பண்ண முடியாது. ஆனா அதை அழிக்க, ஒரு உயிரை தயார்ப் படுத்த முடியும்.

ம்ம்.. இப்போவே புறப்படு... நான் சீக்கிரம் வர்றேன்

மீண்டும் விறுவிறுவென கோவிலுக்குச் சென்று, பூஜையை ஆரம்பித்தார் ரத்தினம்.



விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top