Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

2. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
நல்லது எது கெட்டது எது என்று பகுத்து அறியும் பகுத்தறிவை ஆண்டவன் வரமாக கொடுத்தாலும் அதை சரிவர அறியாமல் நல்லது என எண்ணி கெட்டதை மட்டுமே தேடிக் கொள்ளும் மனிதப் பிறவிகள் தன்னை மட்டுமின்றி தன்னை சார்ந்தவர்களையும் சிக்கலில் தவிக்க விடுவது தான் கொடுமை.

தனாவை பெற்றவர் செய்த வினையின் பயன் இன்று அவரது பிள்ளைகளையும் ஆட்டுவிக்கிறது. ஒற்றை ஆளாய் அனைத்தையும் தாங்கி நிற்கும் கடைசி மகன்
தனாவின் பார்வை அவனது அக்காவையும் இறந்து போன மாமன் திருக்குமரனையும் மட்டுமே தழுவியது. மாநிறமாய் இருக்கும் திரு ரத்தமில்லாமல் வெளிறிய மஞ்சள் நிறத்தில் விகாரமாய் இருந்தான். உடம்பில் தேடி பார்த்தும் எங்கும் சிறு காயம் கூட இல்லை. ஆனால் ரத்தமில்லா உடல் போல வெளுத்து போய் இருந்தது. அவனது இறப்பே புரியாத புதிராய் மற்றவர்களுக்கு இருக்க, சாவு வீட்டிலும் புறம் பேசிக் கொள்ள கூட்டம் கூடியது. நேரம் கடந்தாலும் தனாவின் பார்வை திருவிடமே இருக்க,

திடீரென எழுந்த திரு, டேய் தனா.. மாமாவ மன்னிசுடுடா. தெரியாம அதுல கை வச்சுட்டேன். இப்பிடி உயிர வாங்கும்னு தெரிஞ்சிருந்தா நான் அத தொட்டுருக்க மாட்டேன் டா. எப்படியாவது நம்ம குடும்பத்தை காப்பாத்திருடா தனா..... சுமதியையும் குழந்தைகளையும் பார்த்துக்கோடா. அப்பா.. அப்பாவையும் பார்த்துக்கோ டா... தனாஆஆஆஆஆஆஆ......

தனா படாரென்று கண்ணை திறக்க சுமதி மயங்கி விழுந்திருந்தாள். படபடக்கும் நெஞ்சுடன் மீண்டும் திருவையே பார்த்த படி அங்கேயே நின்று விட்டான் தனா. திருக்குமரன் குடும்பம் குழந்தை என்றால் உயிராய் இருப்பவன் தான், ஆனால் கூடா நட்பு அவனின் குணத்தை மாற்றி விட இன்று உயிரற்ற உடலாய் கிடக்கிறான்.

தனா வீட்டில இனி கேட்க ஆளில்லை, பணம் குறையுதுனு தனாவும் கண்டுபிடிச்சாலும் உன்னை எதுவும் கேட்க மாட்டான். அதுனால நீ போ மச்சான். உனக்கு இல்லாததா.. என திருவின் நண்பன் இழுத்து விட்ட வினை தான் இன்றைய திருவின் மரணம்.

சமீப காலமாக தனாவின் வீட்டில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. தோட்டம், கடை என பணம் வரும் காரணம் தெரிந்தாலும் அது அளவுக்கு அதிகமாக தான் இருந்தது. எனவே அவர்களின் செழிப்பு ஊர் அறிந்த ஒன்று. ஒருவன் வீட்டில் வரவு அதிகமாய் இருந்தால் அவர்கள் ஊர் வாயால் மெல்லப்படுவதும் அதிகம் தான். தனாவின் குடும்பத்தின் மீது பொறாமை கொண்ட திருவின் நண்பன் ஒன்றுக்கு இரண்டாக ஏத்தி விட, ஆசை யாரை விட்டது என திருவும் செய்ய.. இதோ முடிந்தது திருவின் வாழ்க்கை.

தனக்கு கொள்ளியிட வேண்டிய மகனுக்கு தான் வைக்கிறேனே... என அழுது வெடித்தார் வேலன். தலைமகன், எனக்கு உதவியாக வலது கையாக இருந்த திரு இனி இல்லை என வேலனும், தந்தையில்லா பிள்ளைகளாய் மீண்டும் இரு பிள்ளைகள். துணையற்ற பெண்ணாய் தன் அக்காவும் இருக்க போகிறாள்.
இன்னும் என்ன என்ன என் வாழ்வில் நிகழ்த்த காத்திருக்கிறான் அந்த கடவுள் என தனாவும் கண்ணீர் விட்டுக் கொண்டனர்.

ஆயிற்று இன்றோடு திரு இறந்து பதினாறு நாள்கள். சுமதிக்கு சாங்கியம் முடிந்து வேலனின் வீட்டில் விட்டு வர தனாவிற்க்கு சுத்தமாய் மனம் வரவில்லை. வேலனின் மகள் செல்வியை எண்ணி கொஞ்சம் அல்ல நிறையவே பயமாகத்தான் இருந்தது. அண்ணன் இருக்கும் போதே அண்ணியான சுமதியை கொட்டிக் கொண்டே இருப்பவள், இனி அவனும் இல்லையென்ற பிறகு என்னென்ன சொல்வாளோ என பயந்தவன், இனி தன் வீட்டிலே இருக்கட்டும் என கேட்டுக் கொள்ள, வேலனும் நிலைமை அறிந்ததால் சரி என்றுவிட்டார்.

என் புள்ளையும் என்ன விட்டு போய்ட்டான், இப்போ பேர புள்ளைகளையும் கூட்டிட்டு போறியே தனா.. என்னயும் நீ நம்பலயா தனா என வேலனின் மனைவி பத்மா அவனை பிடித்து அழ,

அதெல்லாம் இல்ல அத்தை. உங்களை நம்பி தானே நான் இருக்கேன். நிலைமை என்னன்னு உங்களுக்கே புரியும் அதனால நான் என்கூடயே கூட்டிட்டு போறது தான் நல்லது அத்தை.

அதன் பிறகு பத்மா எதுவும் பேசவில்லை. சுமதி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களின் சொந்த வீட்டிற்கே வந்து விட்டான். திரு இறந்த இரண்டு நாளிலேயே மச்சு வீட்டில் இருந்த மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டான். வீட்டிற்கு வந்த சுமதியை கண்ட மற்ற இருவரும் அணைத்து அழுது கொண்டிருக்க, மூவரில் யாருக்கு யார் ஆறுதல் சொல்ல என்பதே தெரியவில்லை.

தனா பிள்ளைகளை கவனிக்க, ஓரளவு தேறிய சுமதி மற்ற இருவரையும் கவனிக்க என நாட்கள் கடந்தது.

அன்று எல்லோரும் உறங்குவதை பார்த்து விட்டு தன் அறைக்கு வந்தவன் அரண்டு அப்படியே நின்று விட்டான். தரை முழுவதும் இரத்தம் பரவிக் கிடக்க, அந்தரத்தில் சிதைந்த நிலையில் ஒரு உருவம் தலைகீழாய் தொங்கியபடி கண்களை பம்பரம் போல சுழற்றி வாசலில் நின்றிருந்த தானாவை பார்த்து அதன் வாயை பிளக்க, அம்மா என்ற படி அங்கேயே தடுமாறி விழுந்துவிட்டான்... தட்டுத்தடுமாறி எப்போதும் உன்னுடனே வைத்திரு என்று வேலனின் நண்பர் குடுத்த ருத்ராட்சத்தை எடுத்து உள்ளங்கையில் அழுத்தி பிடித்து எழுந்து பார்க்க அந்த உருவத்தை காணவில்லை.

ஆனால் தரை முழுதும் பரவி கிடந்த இரத்தம் அதிக துர்நாற்றத்தை கிளப்ப, பயத்துடனே என்ன செய்யலாம் என எழ முயன்றவனின் காதருகில் அந்த கரகரப்பான குரல் கொடூரமாய் முணங்கிச் சென்றது....

மிகவும் யோசிக்காதே, உன் குடும்பத்தில் நானே மிகவும் ஆசைப்பட்டு எடுத்துக் கொண்ட உயிரின் இரத்தம் தான் இது.
அதிர்ந்து விழித்தவன் யாருடையது என யோசிக்க,

ஹி.. ஹி... புரியவில்லையா?? உன் அருமை மாமன் திருக்குமரனின் இரத்தம் தான் இது என்றதுடன் கொடூரமாக ஒரு சிரிப்பையும் சிரித்து விட்டு சென்றது.

அந்த சத்தத்தில் காது பயங்கர வலியை உண்டாக்க, இறுக்க மூடிக் கொண்டே நிமிர... தரையில் இருந்த இரத்தம் அப்படியே மறைந்து காணாமல் போனது. இது என்ன மாய மந்திரமா,
உணமைதானா நான் பார்த்ததும் கேட்டதும் உண்மைதானா என நெஞ்சம் பயத்தில் தாறுமாறாக துடிக்க, தட தடவென கீழே ஓடி எல்லோருடைய அறைக்கும் சென்று பார்த்தவன் அன்று முழுதும் உறங்கவே இல்லை.

மனம் இன்னும் நிதானமடையவில்லை அவனுக்கு.
விடிந்ததும் வேலனிடம் சொல்லலாம் என்று நினைத்தவன், பின் அவரின் நிலையை நினைத்து விட்டு, வேண்டாம் இதை யாரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது என தனக்குள்ளேயே மறைத்து வைத்தான்.

அன்றிலிருந்து வீட்டில் உள்ளவர்களை மேலும் கவனமாக பார்த்துக் கொண்டாலும் மனம் தான் கண்ட நிகழ்வையும், இனி வரும் நாட்களையும் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தது.

திரு இறந்து முப்பது நாள் முடிஞ்சா தான் அங்கே போக முடியும் தனா, என வேலன் சொல்லிவிட்டார்.
தினமும் யோசனையுடன் இருக்கும் தனா, முப்பது முடிய
இன்னும் பத்து நாள் தான், எப்படியாவது அந்த இடத்துக்கு போய் பிரச்சனைக்கான விடையை என் உயிரை கொடுத்தாவது கண்டுபிடிச்சே ஆகனும் என நினைத்துக் கொண்டான்.

நினைப்பவனுக்கு தெரியவில்லை அது அத்தனை சுலபமில்லை என்று.

அவசரபடாதே கீர்த்தனா உன் உறவில்
இன்னும் ஒரு உயிரை இழந்தால் மட்டுமே நான் உனக்கு கிடைப்பேன் என விடையும் காத்திருக்கிறது அவனுக்காக.




விடை தேடி பயணம் தொடரும்....

Prabhaas...
 
Top