Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

13. Ivan Vasam Vaaraayo!

Advertisement

கதையில் விறுவிறுப்பு உள்ளதா?

  • ம்.. ம்.. ஏதோ கொஞ்சம் இருக்கு..

    Votes: 4 30.8%
  • யம்மா.. போம்மா.. போயி கதைய டைப் பண்ணு.. சும்மா காமெடி பண்ணிக்கிட்டு..

    Votes: 9 69.2%

  • Total voters
    13

Annapurani Dhandapani

Well-known member
Member


13. இவன் வசம் வாராயோ!




நிரஞ்சனா காலில் சக்கரமில்லாத குறையாக பம்பரமாகச் சுழலத் தொடங்கினாள்.

காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடிகைக்கு ஒப்பனை மற்றும் காஸ்ட்யூம் டிசைனிங் வேலை; மதியம் மூன்று மணிக்கு பள்ளியில் கதை சொல்லல்; மாலை ஐந்திலிருந்து ஆறு வரை மதுரத்திடம் ஆங்கில வகுப்பு என்று டைம் டேபிள் போட்டு வேலை பார்க்கத் தொடங்கினாள்.

இவள் இப்போது வளர்ந்து வரும் கட்டத்தில் இருப்பதால் இவளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ் இவளை மதுரத்திடம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வைத்தான்.

அப்படியே அவளை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வையும் தனியாக எழுத வைக்க முயற்சி செய்தான். அதற்காக பெரிதும் முயன்று அவளுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் நகலையும் கல்விக் கருவூலத்திலிருந்து பெற்றும் விட்டான்.

அதற்கும் அவளை படிக்க வைத்தாள் மதுரம். கூடவே அவள் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்வதால் அவளுடைய ஆரோக்கியத்தையும் பார்க்க வேண்டுமென்று மதுரம் அவளை கண்ணும் கருத்துமாகக் கவனித்தும் கொண்டாள்.

சொக்கலிங்கம் அவளுக்கு கணக்கு மற்றும் கணக்கு பதிவியலை (Accountancy) அவள் புரிந்து கொள்ளும் விதமாகக் கற்றுக் கொடுத்தார்.

இவள் வெளியே வேலைக்காகக் சென்று விடுவதால், இவளுடைய குழந்தையை வளர்மதி கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ள, நிரஞ்சனாவுக்கு வளர்மதி மேல் தனியாக மதிப்பும் மரியாதையும் அதீதமான பாசமும் வளர்ந்தது.

நிரஞ்சனா, தமிழும் தமிழ் குடும்பத்தினரும் காட்டும் அன்பில் திக்கு முக்காடிப் போனாள்.

அதுவும் ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் அவளிடம் மிகுந்த பாசத்துடன் நடந்து கொள்வது அவளுக்கு பெரிய தெம்பாக இருந்தது.

அவள் தன்னுடைய இறந்து போன தந்தையை நினைத்துக் கொண்டாள்.

அப்பா.. ரொம்ப நாளைக்கப்றம் உங்க அன்பை இவங்க ரெண்டு பேர் மூலமா பாக்கறேம்ப்பா.. இப்பதான் நீங்க நெனச்சதெல்லாம் நடக்குது.. எம்பொண்ணு ஒரு நாள் பெரியாளா வருவான்னு நீங்க அம்மா கிட்ட அடிக்கடி சொல்வீங்களே.. அது கொஞ்சம் கொஞ்சமா நிறைவேறிக்கிட்டிருக்குப்பா.. என்று தன் தந்தையிடம் மானசீகமாகச் சொல்லிக் கொண்டாள்.

இவளுடைய ஒப்பனைத் திறமையால் பல பெரிய வாய்ப்புகளும் வரத் தொடங்கின. கயலும் தமிழும் சேர்ந்து எதை எடுத்துக் கொள்ளலாம்; எதை மறுக்கலாம் என்று அவளுக்கு ஆலோசனை சொல்லி அவளுக்கு வழிகாட்டினார்கள்.

ஒரு பக்கம் இவளுடைய ஒப்பனைக்காகவும் ஆடை வடிவமைப்புக்காகவும் வாய்ப்புகள் குவிய, மறுபக்கம் இவளுடைய கதைகள் பல குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்க்கத் தொடங்கியது.

அதனால் கயல் இவளுக்காக இணையத்தில் யூட்யூப் சேனல் ஒன்று ஆரம்பிக்க, நிரஞ்சனாவின் கதைகள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தது.

ஒரு நாள் இவள் இங்கே இருப்பதை சமூக வலைதளங்களின் உதவியுடன் மோப்பம் பிடித்துக் கொண்டு வந்த இவளுடைய அம்மா ராஜாத்தியும் அண்ணன் நரேனும், இவளை அசிங்கமாகத் திட்டி இங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர்.

"ஏய்.. இப்டி கண்டவங்க வீட்ல வந்து உக்காந்துகிட்டு எங்க மானத்த வாங்கறியே.. இது நல்லா இருக்கா.. இந்த வீட்ல தடி தடியா ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்க.. போதாததுக்கு ரெண்டு கெழவனுங்க வேற இருக்கானுங்க.. உனக்கு வெக்கமாயில்ல.." என்று வாய்க்கு வந்தபடி சொல்லி அவளை அடிக்கக் கை ஓங்கினான் அவளுடைய அண்ணன் நரேன்.

இவர்கள் வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் போது வீட்டில் எல்லாருமே இருந்தனர். அவன் கை ஓங்கியதும் அவனைத் தடுக்க அனைவருமே ஒரடி முன்னால் எடுத்து வைக்க, நிரஞ்சனாவுக்கு யாருடைய உதவியும் தேவைப்படவில்லை.

நிரஞ்சனாவே அவனுடைய கையைத் தடுத்து அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.

அதிர்ந்து போன நரேன், மீண்டும் அவளை அடிக்க வர,

"வேணாம்.. அண்ணன்னு பாக்கறேன். நா இன்னும் ஒரு அடி அடிச்சா நீ செத்துடுவ.." என்றாள் நிரஞ்சனா.

"ஐயோ.. ஐயோ.. ஊர்ல புள்ள பூச்சியா இருந்தா.. இங்க வந்து நாலு ஆம்பளைங்களுக்கு மத்தியில வாழறதுனால இப்டி ரௌடி மாதிரி ஆகிட்டாளே.." என்று ராஜாத்தி ஒப்பாறி வைத்தாள்.

"ஆமாம்மா.. உங்களுக்கும் உங்க உதவாக்கரை புள்ளைக்கும் பயந்து நடுங்கற அந்த நிரஞ்சனா செத்துட்டா.. இவ புதுசா பொறந்திருக்கறவ.. என் மேல கை வெச்சா.. சாவு நிச்சயம்.."

"சே.. பொண்ணாடீ நீ.. பொண்ணுன்னா அடங்கி ஒடுங்கி இருக்காம இதென்னடீ.. இப்டி.."

"போய்டுங்க.. இங்க நா நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பொறுக்கலியோ.. போங்க இங்கேர்ந்து.." என்று நிரஞ்சனா கோபமாகக் கூறி அவர்களை விரட்டினாள்.

"என்னடி நிம்மதி.. யார் எவர்ன்னு தெரியாதவங்க கூட இப்டி இருக்கியே.." என்று ஆரம்பித்த ராஜாத்தியைத் தடுத்தான் முகில்.

"அவ வர மாட்டா.. இங்கேர்ந்து போகப் போறீங்களா இல்ல போலீச கூப்பிடவா.." என்று மிரட்டினான்.

"அத சொல்ல நீ யார்டா.." என்று கோபமாகக் கேட்டான் நரேன்.

"அவ அண்ணன்டா.." என்றான் முகில் பெருமையாய்.

"அண்ணன்னா.. நீ என்ன.. அவ கூடப் பொறந்தியா.. வண்ட்டான்.. பெரிசா.."

"ஆமாண்டா.. அண்ணன்தான்.. கூடப் பொறக்கலன்னாலும் இவரு என் அண்ணன்தான்.. அண்ணன்னா எப்டி இருக்கணும்னு தெரியுமாடா.. நீ அண்ணனாவும் நடந்துக்கல.. மனுஷனாவும் நடந்துக்கல.. சொந்த தங்கச்சிகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணவன்தானே நீ.. ச்சீ.. த்தூ.." என்று நிரஞ்சனா நரேன் மீது காறி உமிழ்ந்தாள்.

"ச்சீ.. உனக்கு நடந்த அசிங்கத்த இப்டியா வெக்கமேயில்லாம வெளிய சொல்லிப்ப.. கருமம்.. கருமம்.." என்றாள் ராஜாத்தி.

"தப்பு பண்ணவன் உங்க புள்ள.. அவனே திமிரா நிக்கறப்ப பாதிக்கப்பட்டவ நா.. நா ஏன் கூனிக் குறுகணும்.." என்று துணிவுடன் கேட்டாள் நிரஞ்சனா.

"ஐயா.. பாத்துக்கங்க.. இந்த கேடு கெட்டவ தன் வாயாலயே தனக்கு நடந்தத அசிங்கமேயில்லாம வெளிய சொல்லிக்கறா.. இவளப் போய் உங்க வீட்ல வெச்சி இவங்க சோறு போடறாங்களே.. அப்ப இவங்களும் கேடு கெட்டவங்கதானே.." என்று ராஜாத்தி நாக்கில் நரம்பில்லாமல் பேச, மற்றவர்கள் எல்லாரும் அதிர்ந்து நிற்க, நிரஞ்சனா தன் அம்மா என்றும் பார்க்காமல் ராஜாத்தியின் கன்னத்திலும் ஓங்கி அறைந்தாள்.

"இன்னும் ஒரு வார்த்தை இவங்களப் பத்தி தப்பா பேசினீங்கன்னா.. அம்மான்னு பாக்க மாட்டேன். கழுத்த நெறிச்சி கொன்னுடுவேன்.. ஜாக்கிரதை.." என்றாள்.

"டேய்.. இவ என்னையே அறைஞ்சுட்டா.. பத்தாததுக்கு கழுத்த நெறிப்பேன்னு சொல்றா.. இவள இழுத்து போட்டு மிதிக்காம என்னடா பாத்துட்டு மரம் மாதிரி நிக்கற.." என்று நரேனைப் பார்த்து ராஜாத்தி கோபமாகக் கேட்க,

அவன் நிரஞ்சனாவின் அருகே வந்து அவள் கையைப் பிடித்து இழுக்க வரும் போது, சரியாக அவனுடைய மனைவியும் நிரஞ்சனாவின் நெருங்கிய தோழியுமான பைரவி, காவலர்களுடன் வந்து இறங்கினாள்.

"இவங்கதான்.. இவங்கதான் சார்.. இந்த பொண்ணு என் ஃப்ரண்ட்.. என் கணவரோட தங்கச்சி.. இவள எங்க மாமியார்.. அதாவது இந்த பொண்ணோட அம்மாவே கொடுமை செய்றாங்க சார்.. என் புருஷனை ஏவி விட்டு அவ கிட்ட தப்பா நடந்துக்க சொல்லி தூண்டி விடறாங்க சார்.." என்று வேகமாகச் சொன்னாள்.

"ஏய்.. பைரவி.. என்ன இதெல்லாம்.." என்று நரேன் அவளை அதட்ட,

"இங்க பாருய்யா.. ஒழுங்கா என் பக்கம் வந்திடு.. நீயும் உங்கம்மாவும் சேர்ந்து ரஞ்சனிக்கு கரு கலைய மருந்து குடுத்தத வீடியோ எடுத்து வெச்சிருக்கேன்.. இப்ப மட்டும் நீ என் பக்கம் வரலன்னா அதே மருந்தை நா குடிச்சிட்டு என் வயித்தில வளர்ற உன் குழந்தைய கலைச்சிடுவேன். நீ எனக்கு வேணவே வேணாம்னு விவாகரத்து நோட்டீசும் அனுப்புவேன்.. நானும் உன் புள்ளையும் உனக்கு வேணும்னா மரியாதையா என் பக்கம் வந்திடு.." என்றாள் பைரவி.

நரேன் பயந்து நடுங்கியபடி, காவலர்களைப் பார்த்து,

"ஐயியோ.. நா ஒண்ணும் பண்ணல.. ஏய் பைரவி.. குழந்தைய கலைச்சிடாதடீ.. நா எதும் பண்ணலடீ.. எல்லாம் அம்மாதான்.. அம்மாதான், இப்ப நிரஞ்சனா பெரியாளா ஆகிட்டா.. நிறைய பணம் சேர்த்து வெச்சிருப்பா.. அவள இங்க கூட்டிட்டு வந்து வெச்சிகிட்டா அவ சம்பாதிக்கற பணத்த எல்லாம் நாம ஆட்டைய போடலாம்னு சொல்லி என்ன கூட்டிட்டு வந்தாங்க.. நா வேணாம்னு தான் சொன்னேன்.. ஆனா அவங்கதான்.." என்று அந்தர் பல்ட்டி அடித்தான்.

"அடப்பாவி.. பொண்டாட்டி வந்ததும் அம்மாவ காட்டி குடுத்திட்டியேடா.. பாவீ.. நீ நல்லா இருப்பியா.." என்று ராஜாத்தி அவனை அடிக்க வர, பைரவி வந்து தன் மாமியாரின் கையைத் தடுத்து,

"தப்புக்கு மேல தப்பு செய்யற நீங்களே நல்லா இருக்கும் போது நாங்க நல்லா இருக்க மாட்டோமா.. போங்க.. போய் ஜெயில்ல உக்காந்து களி தின்னுங்க.. பெத்த பொண்ணயே கொடுமை பண்ணின பாவத்துக்கு ஜெயில்ல உக்காந்து கண்ணீர் விட்டு அழுங்க.. அப்பவாவது உங்க பாவம் குறையுதான்னு பாக்கலாம்.. என் மாமனாரரோட நல்ல மனசுக்காக உங்கள இதோட விடறேன்.. இல்லன்னா நடக்கறேதே வேற.." என்றாள் பைரவி.

காவலர்கள் வந்து நிரஞ்சனாவிடம் நடந்ததைப் பற்றிக் கேட்க, அவளும் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினாள்.

தற்போது தங்கியிருப்பது யார் வீடு என்று கேட்க, தமிழும் முகிலும் முன்னே வந்து தங்களைப் பற்றி கூறினார்கள்.

கூடவே கயலையும் பார்த்த காவலர்கள்,

"ஓ.. டீவில வர அந்த அம்மா..சரி.. சரி.." என்று சொல்லி கொசுறாய் ஒரு சல்யூட்டையும் வைத்துவிட்டு, ராஜாத்தியைக் கைது செய்து அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

"ஏய்.. நீ நல்லாவே இருக்க மாட்டடீ.. நா வயிறெரிஞ்சி சொல்றேன்.. காலம் முழுக்க நீ கண்ணீர் விடுவடீ.. " என்று நிரஞ்சனாவைப் பார்த்து சபித்துக் கொண்டே போனாள் ராஜாத்தி.

இதைக் கேட்டு அதிர்ந்து நின்ற நிரஞ்சனாவை சமாதானம் செய்த பைரவி,

"அவங்க கெடக்காங்க.. அவங்க சொல்றதல்லாம் ஒரு காலத்திலயும் நடக்காது.. தைரியமா இரு.. இனிமே ஒனக்கும் ஒன் குழந்தைக்கும் ஏறுமுகம்தான். சந்தோஷமா இரு ரஞ்சனி." என்று தேற்றினாள்.

"நீ ப்ரக்னன்ட்டா இருக்கியா பைரவி." என்று மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் நிரஞ்சனா கேட்க,

"ஆமா ரஞ்சனி. இருந்து இருந்து நாலு வருஷத்துக்கு அப்றம் இப்பதான் கரு தங்கியிருக்கு.. டாக்டருங்க என்ன எங்கியும் அலைய வேணாம்னு சொன்னாங்க.. ஆனா அத்தையும் இவரும் உன்ன கண்டுபுடிச்சிட்டாங்க.. என் கிட்ட சொல்லாம உன்ன தேடி சென்னைக்கு கிளம்பிட்டாங்க.. அதான் நானும் இவங்கள தேடி ஓடி வந்தேன்.."

"ஐயோ.. எனக்காக ஓடி வந்தியாடி.."

"பின்ன.. இப்பதான் நீ கொஞ்சமாச்சும் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிருக்க.. அது கூட அவங்களுக்கு பொறுக்கல.. அதான்.. என்ன ஆனாலும் சரின்னு கிளம்பிட்டேன்.. இனிமே நீ தைரியமா இரு.. இன்னும் இன்னும் சாதிச்சி பெரிய பெரிய அவாடு எல்லாம் வாங்குடீ.." என்று வாழ்த்தினாள்.

இவர்கள் பேசியதைக் கேட்டிருந்த கயலும் மதுரமும் வளர்மதியும் பைரவியை வீட்டுக்குள் அழைக்க,

"இல்லங்க.. வேணாம்.. இப்ப நேரம் சரியில்ல.. நான் இன்னொரு நாள் வரேன்.. இப்ப நா போகலன்னா என் புருஷன் மனசு மாறினாலும் மாறிடும்.. திரும்பியும் கொரங்கு வேலை செஞ்சாலும் செய்வாரு.. நா கிளம்பறேன்.. அப்றமா ஒரு நல்ல நாள் கிழமைக்கு வரேன்.. உங்க எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்.." என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பிவிட்டாள்.

அவர்கள் போன பின் நிரஞ்சனா வீட்டிலுள்ளவர்கள் அனைவரிடமும் தன் தாயும் தமையனும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டமைக்காக மன்னிப்பு கேட்டாள்.

அப்போது சொக்கலிங்கம்,

"இங்க பாருமா ரஞ்சனி! முதன் முதல்ல தமிழ் உன்ன இங்க கூட்டிட்டு வந்தப்ப உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன்னு கேட்டான். ஆனா நீ மறுத்துட்ட.. உன் விருப்பம்னு நாங்களும் விட்டுட்டோம்.. ஆனா இன்னிக்கு உன்னோட அம்மாவும் அண்ணனுமே வந்து எங்கள பாத்து கேக்க கூடாத கேள்வில்லாம் கேட்டாங்க.. வாய்க்கு வந்த மாதிரிலாம் தப்பு தப்பா பேசினாங்க.. ஏதோ உங்க அண்ணி நல்லவளா இருக்க போய் பிரச்சனைியில்லாம முடிஞ்சது.. இதே அந்த பொண்ணும் அவங்க கூட சேர்ந்துகிட்டு எங்கள பேசியிருந்துச்சின்னா.. ஊர் உலகம் எங்கள நம்பும்னு என்ன நிச்சயம்.."

அவர் இப்படிக் கேட்டதும் வீட்டிலுள்ளவர்கள் எல்லாருமே அதிர்ந்தனர். அப்பா இப்டிலாம் பிரச்சனைய பெரிசு பண்றவர் கிடையாதே.. என்று தமிழும் கயலும் நினைக்க, மாப்ள தன் ஆட்டத்த ஆரம்பிச்சிட்டார்.. என்று ஈஸ்வர பாண்டி நினைத்துக் கொண்டார்.

"புரியுதுங்க.. அவங்களுக்காக நா மன்னிப்பு கேக்கறேன்.. மன்னிச்சிடுங்க.." என்றாள் நிரஞ்சனா.

"இப்ப இவங்க பேசினாங்க.. நாளைக்கு அக்கம் பக்கத்தில பேசுவாங்க.. அப்றம் ஊரே பேசாதா.."

நிரஞ்சனா இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"ஏன் மாமா.. அவள இப்டிலாம் கேட்டு நோகடிக்கறீங்க.." என்று முகில் நிரஞ்சனாவுக்காக பரிந்து கொண்டு வர,

"நா கேக்கறது நியாயம்தானே முகில்.." என்று அவனையும் கேட்டார்.

"பேசறவங்க ஆயிரம் பேசிட்டு தான் இருப்பாங்க.. அதையெல்லாம் கேட்டா நம்மால வாழவே முடியாது மாமா.."

"எல்லாத்தையும் அப்டி நெனச்சி ஒதுக்க முடியாது முகில். சில விஷயத்தில ஊரோட ஒத்துப் போய்தான் ஆகணும்!" சொக்கலிங்கம் விடுவதாக இல்லை.

"இப்ப என்னதான் சொல்ல வரீங்க மாமா! தெளிவா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிடுங்க மாமா!"

"சரி முகில்! நா நேராவே கேக்கறேன்! ஊர் வாய அடைக்கணும்னா நம்ம முன்னால ரெண்டு வழிதான் இருக்கு!

ஒண்ணு! ரஞ்சனி தமிழ கல்யாணம் பண்ணிகிட்டு இந்த வீட்ல உரிமையோட இருக்கணும்.. அப்ப யாரும் வந்து எந்த கேள்வியும் கேக்க முடியாது.."

"அப்ப ரெண்டாவது.." முகில் கேட்டான்.

"இத சொல்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. ஆனா சொல்ல வேண்டியும் இருக்கு.. ரஞ்சனி இந்த வீட்ல இனிமே இருக்க கூடாது.." என்றார் சொக்கலிங்கம்.

தமிழைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டதை விட இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று கேட்டதைதான் மிகவும் அதிர்ச்சியாக உணர்ந்தாள் நிரஞ்சனா.

இந்த வீட்ட விட்டு எப்டி போவேன்.. இது என் வீடு.. என்று தோன்றியதும் இன்னும் அதிகமாக அதிர்ந்தாள். அப்ப அவங்கல்லாம் சொல்ற மாதிரி நா அவர விரும்ப ஆரம்பிச்சிட்டேனா.. என்று நினைத்து குழம்பினாள்.

ஆனா இது எப்டி நடக்கும்! நா எப்டி அவர கல்யாணம் பண்ணிக்கறது.. இல்ல என்ன பத்தி தெரிஞ்சா அவருதான் என்ன கட்டிக்க சம்மதிப்பாரா.. கடவுளே.. என்ன ஏன் எப்பவும் சோதிச்சிகிட்டே இருக்க.. என்று உள்ளுக்குள் அழுதாள் நிரஞ்சனா.

அதற்குள் முகிலும் கயலும் நிரஞ்சனாவை சம்மதிக்க வைக்க முயன்றனர்.

"சரின்னு சொல்லு ரஞ்சி.. மாமா சொல்றது சரிதானே.. இங்க உன்ன எல்லாருமே ஏத்துக்க தயாரா இருக்கும் போது நீ ஏன் இன்னும் தயங்கறன்னு எனக்கு புரியல.." என்றான் முகில்.

"அப்பா உன் நல்லதுக்குதான் சொல்றாரு ரஞ்சி. அது மட்டுமில்ல.. அண்ணன் உன் மேல உயிரையே வெச்சிருக்கான்.. உன்ன கல்யாணம் கட்றதுக்கு முன்னாடியே உனக்காக யோசிச்சி பாத்து பாத்து செய்யறான்னு நீயும் பாத்துட்டுதானே இருக்க.. அப்றம் ஏன் ரஞ்சி தயங்கற.. சரீன்னு சொல்லு ரஞ்சி.." என்று கணவன் மனைவி இருவரும் நிரஞ்சனாவை கரைக்கத் தொடங்கினர்.

வேற வழியில்ல.. அவங்க சொல்ற மாதிரி இந்த வீட்டோட, வீட்டு மனுஷங்களோட ஒரு பாசம் உருவாகிடுச்சு.. இத கெடுத்துக்க என் மனசு ஒத்துக்க மாட்டேங்கிது.. என் சுயநலம்தான்.. ஆனா அவங்க அன்பு காட்டும் போது மறுக்கறது முட்டாள்தனம்.. இந்த அன்புக்குதானே ஏங்கிட்டிருந்தேன்.. இப்ப கிடைக்கும் போது நா ஏன் ஒதுங்க நினைக்கணும்.. நா ஒதுங்க போறதில்ல.. என்ன ஒதுக்கி வெச்சவங்க முன்னாடி நிமிர்ந்து நின்னு வாழ்ந்து காட்டப் போறேன்.. என்று தெளிவான முடிவெடுத்துக் கொண்டு அங்குள்ளவர்களை நிமிர்ந்து பார்த்தாள் நிரஞ்சனா.

"நா என் முடிவைப் பத்தி சொல்றதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்றாள்.

அனைவரும் அவள் அப்படி என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலாய்ப் பார்த்தனர்.




அவள் என்ன சொல்லப் போகிறாள்? அடுத்த எபியில்..



- தொடரும்....
 
Last edited:
வாவ்.இவ்ளோ சீக்கிரம் அடுத்த எப்பி...ஆச்சரியமா இருக்கு....இதே மாதிரியே குடுத்திடுங்க....

ச்செய்...எவ்ளோ மோசமான ஜென்மங்கள்இந்த நரேனும் ராஜாத்தியும்....விளக்கமாறுக்கு பேர் பட்டுக்குஞ்சமாம்....அதுமாதிரி இந்த சாக்கடைக்கு ராஜாத்தினு பேர்....பேரை மாத்துங்க முதல்ல....

ஏற்கனவே ஊர்ல இருந்து அவங்க என்ன இரகசியம் கொண்டு வந்தாங்கனு தெரில...இப்ப இவ என்ன ரகசியம் சொல்லப்போறானு தெரில
 
உண்மையிலேயே அவங்க நிரஞ்சனாவோட அம்மா அண்ணன் தானா...இவ்வளவு மோசமா இருக்காங்க..

கல்யாணம் பண்ண கண்டிஷன் எதுவும் போடுவாளோ
 
Nice update
Oorilirundu vandila ethikitu vanda ragasiyam enna
Marriage ku apram tan twiste va
 
Top