Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

13. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
கீழ் உள்ள அறையில் நாதன் மகா தனா என மூவரும் உறங்கிவிட, கட்டுகள் விடுபட்ட ஆனந்தத்தில் உல்லாசமாக அந்த பொருளில் இருந்து வெளிவர தொடங்கியது அந்த உருவம்.

முதலில் அதன் தலையை நீட்டி,
பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்வது போல அதன் பழுப்பு நிற கண்களை அந்த அறை முழுதும் ஓடவிட்டது. அறையின் ஜன்னல் கூட மூடி தான் இருந்தது. மெது மெதுவாக அந்த பொருளிலிருந்து தனது மொத்த உருவத்தையும், ஏதோ பொதியிலிருந்து ஒற்றை துணியை உருவுவது போல அதன் உடலை அதுவே உருவிக் கொண்டு வெளிவந்து நின்றது.

முகத்தையும் கைகளையும் அந்த உருகிய சதை வடிந்த விரல்களால் தேய்த்து மீண்டும் வெளிவந்த மகிழ்ச்சியை அனுபவிக்க, இப்போது அதன் கண்களில் இருந்து ஏதோ பிசுபிசுப்பாக ஒரு திரவம் வழிந்தோடியது.

சட்டென்று மண்டியிட்டு கூனியபடி அமர்ந்த அந்த உருவம் அந்த திரவத்தை அதன் கைகளால் துடைத்தபடி பெருங்குரலெடுத்து ஓவென்று அழத் தொடங்கியது. அவை எல்லாம் சிறிது நேரம் தான். மீண்டும் நிமிர்ந்த உருவம், இப்போது அந்த அறையில் இருக்கும் பொருட்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே,

அதற்கு வேண்டிய பொருள் ஏதும் கிடைத்ததோ என்னவோ அதன் மீது கோணலாய் ஒரு பார்வையை வீசி விடியலில் தன் முதல் ஆட்டத்தை அந்த பொருள் மூலமாகவே நடத்த அதை தன் வசப்படுத்தியது அந்த உருவம்.

இன்றிலிருந்து உனக்கான நிம்மதி துளியளவும் இல்லாமல் போக போகிறது தரணி நாதா என நாதன் குடும்பத்தின் விடியலும் முன்னமே தொடங்கியது.

நாதன் அறையில் குளித்துக் கொண்டிருந்தார்.தனா வெளியே சென்றிருந்தான். மகா அம்மா சமையலறையில் வேலையாக இருக்க பின்னிருந்து வேலையாள் அரக்க பறக்க ஓடிவந்தான்.

மகாம்மா... மகாம்மா.... அய்யா.. அய்யா... ஐய்யோ யாராவது சீக்கிரம் வாங்களேன்...

என்னாச்சு பரமா... ஏன் இப்பிடி ஓடிவர்ற.

டேய் என்னடா ஆச்சு...

அய்யா.. நம்ம மாடு கயிறு இறுகிப் போய் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்குய்யா. சீக்கிரம் வாங்கய்யா.

ஐய்யோ... கடவுளே.. என இருவரும் பின்பக்கம் ஓட,

அங்கே அவர்கள் வீட்டில் இருக்கும் பசுமாடு கழுத்து கயறு இறுகி கத்தமுடியாமல் கத்தி, கண்கள் எல்லாம் பெரிதாகி கண்ணீர் வடித்தபடி உயிருக்காக போராடிக் கொண்டிருந்தது.

அதை பார்த்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை நாதனுக்கு. நிலமை புரிந்து நிதானத்திற்கு வந்த நாதன் கயிறை அவிழ்க்க படாத பாடு பட்டும் ம்கூம்.... சிறு பிசிறு கூட எழவில்லை அந்த கயிற்றில். மகா அம்மாவோ அழுது புலம்பிட, பசு இப்போது கத்தவும் முடியாமல் கால்கள் தள்ளியபடி படுத்தே விட்டது.

ஐயோ நிரஞ்ச வீட்டுல பசு மாட்டுக்கு இப்பிடி ஆக கூடாதே... கடவுளே உனக்கு கண்ணில்லயா.. இப்பிடி வாயில்லா ஜீவன கதற வைக்கிறயே.
தயவு செஞ்சு இந்த உயிர எப்படியாவது காப்பாத்து என் குலத்தாயே என மன்றாடிக் கொண்டிருக்க, அப்போது தான் உள்ளே வந்த தனா, அப்பா என்னாச்சு...

தனா ஓடு உள்ள போய் கத்தி இல்ல ஏதாவது அருவா இருந்தா எடுத்துட்டு வா... ஓடு ஓடு...

பசு விழுந்து கிடப்பதை பார்த்தவன், நாதன் சொன்னதும் ஒரே ஓட்டமாக ஓடி உள்ளிருந்து கத்தியை எடுத்து வர, வேறு எதையும் யோசிக்காது, சரசரவென பசுமாட்டின் கழுத்திலிருந்த அத்தனை கயிற்றையும் அறுத்து தள்ளி விட்டார்.

இறுக்கம் குறைந்ததால் ஒரு மாதிரி குரலெடுத்து கத்திய பசுவின் கழுத்தை உடனே தண்ணீரை வைத்து நீவி விட, அப்போது தான் சற்று அசுவாசமடைந்தது பசு.

அப்போது தான் போன உயிர் திரும்ப வந்தது எல்லோருக்கும்.

கோபமாக பரமனிடம் திரும்பிய நாதன், கயிறு இறுகுற மாதிரி இருந்தா உடனே மாத்த வேண்டியது தானேடா. இப்போ பாரு... உன்னோட கவனக் குறைவால என்னெல்லாம் நடந்து போச்சு. இதை கவனிக்கிறதை விட உனக்கு என்னடா வேலை.

அவனும் அழுதபடியே ஐயோ அய்யா... போன வாரம் தானே நான் புது கயிறு அம்மா கிட்ட வாங்கி மாத்துனேன். இதோ இந்த கயிறு தான் இன்னிக்கி புதுசா இருக்கு. இதை கூட நான் கட்டலயே.

நீங்க தான் யாரோ கட்டிருப்பீங்கன்னு நான் நினைச்சேன். இதோ இந்த மணியும் அதுல கோர்த்து தான் இருந்துச்சு.

புதிதாக இருந்த கயிறையும் மணியையும் எடுத்து நாதனிடம் காட்ட, இதை யாரு கட்டியிருப்பா, அதுவும் இந்த மணிய...

இது என்கிட்ட இருந்தது தானே....

யோசனையில் இருந்த நாதனை மகாவின் குரல் தான் மீட்டெடுத்தது.

சரி போனது போகட்டும் இனியாவது ஜாக்கிரதையா இருங்க. வீட்டுல உள்ள பிள்ளைகள் எப்பிடி முக்கியமோ அதே போல இந்த ஜீவன்களுக்கு முக்கியம். இனி பொறுப்பா பார்த்துக்கோ பரமா. இப்போதான் எனக்கு உசுரே வந்த மாதிரி இருக்கு என்று மேலும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

சரிங்க மா பார்த்துக்கிறேன்..

அம்மா நீ அழாத மா... அதான் ஒன்னும் இல்லையே. வா உள்ள போகலாம்.

ஆனால் நாதன் அத்தனை லேசாக விடவில்லை.

உடனே அவரின் அந்த கடைசி அறைக்கு சென்றார். கையில் வைத்திருந்த மணியை பார்த்தவர் இதை யார் எடுத்திருப்பா. ஒருவேளை சுத்தம் பண்ணும் போது நான் தான் எங்கயாவது போட்டுடேனா. இல்ல இல்ல அதுக்கு வைப்பே இல்ல.

ஒருவேள சுமதி புள்ளைங்க எதும் இங்க வந்து விளையாடிருப்பாங்களோ.

ம்ம்... கரெக்ட் அவங்க தான் வந்திருக்கணும். விளையாட்டு தனமா மாட்டுக்கும் கட்டி விட்டிருக்கணும். வரட்டும் இனி அப்படி செய்யக்கூடாதுன்னு ரெண்டு பேர்கிட்டயும் சொல்லிவைக்கணும்.

தானாகவே யோசித்து அவரே ஒரு முடிவையும் எடுத்து விட்டு அறையை பூட்டி விட்டே வந்தார்.

அவர் சென்ற அடித்த நொடி பழுப்பு நிற கண்களில் அகங்காரம் மின்ன அது நினைத்தது நடக்காமல் போன வெறியை அதன் மீதே காட்டிக் கொண்டது அந்த உருவம்.

ஏற்கனவே உருகி வடிந்த தேகத்தை கொடூரமாக அதுவே சேத படுத்திக் கொண்டு உர் உர் என ஏதேதோ செய்ய அதன் சதை இப்போது உருகி தரையிலும் வழிந்தது.

பின் தன்னைத் தானே நிலைப்படுத்திக் கொண்ட உருவம்....

ர்ரீர்.... ரரீர்... என மீண்டும் அந்த பொருளுக்குள் நுழைந்து கொண்டது.

மகா அம்மா நடந்த சம்பவத்தில் பயந்து உடனே கோவிலுக்கும் கிளம்பி விட்டார்.

ஏங்க இன்னிக்கி நீங்க கடைக்கு போக வேண்டாம். கீர்த்தனாவ கூட்டிட்டு நான் கோவிலுக்கு போய்ட்டு வந்திடுறேன். நீங்க கவனமா இருங்க. சுமதிக்கு போன் பண்ணி வரச் சொல்லியிருக்கேன்.

அவ வந்து உங்களுக்கு சாப்பாடு தருவா.

நான் போய்ட்டு வரேன். வா கீர்த்தனா.

ம்ம் போலாம்மா வா.

நடந்த சம்பவம் மகா அம்மா மனதிற்கு ஏதோ நெருடலாகவே பட்டது. குடும்பம் குழந்தைகள் என வாழும் வீட்டில் பசு மாட்டிற்க்கு இப்படி நடந்து நல்லதாக படவில்லை.

கோயிலில் மனமுருக வேண்டி தனாவை பிரகாரத்தில் அமர்த்தி விட்டு உள்ளே இருக்கும் குருக்களிடம் வீட்டில் நடந்ததை கூறி ஏதேனும் பரிகாரம் கேட்க,

அவர் சொன்ன பதிலோ மகா அம்மாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.



விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top