Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

12. Ivan Vasam Vaaraayo!

Advertisement

கதை எப்படி போகிறது?

  • ரொம்ப மொக்க..

    Votes: 0 0.0%
  • பரவால்ல..

    Votes: 3 17.6%
  • ம்.. ம்.. நல்லதா தான் போகுது..

    Votes: 14 82.4%
  • நீ எப்ப நல்லா எழுத கத்துப்ப..

    Votes: 0 0.0%

  • Total voters
    17

Annapurani Dhandapani

Well-known member
Member


12. இவன் வசம் வாராயோ!



நிரஞ்சனாவுடன் வீட்டுக்குள் வந்த கயலை வீட்டிலுள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்க,

கயல் அவர்கள் முன் கேட்வாக் (catwalk) செய்து காட்டி அழகாய் நின்று போஸ் கொடுத்தாள்.

"என்ன கயல்.. இன்னிக்கு அப்டியே ஜொலிக்கற.. ரொம்ப அழகா இருக்கடீ.." என்று மதுரமும்,

"கயல்.. எதாவது விசேஷமா.. எத்தன நாள் தள்ளியிருக்குமா.. அதானா இவ்ளோ அழகா இருக்க.." என்று வளர்மதியும் கேட்க,

ஹா.. ஹா.. என்று சிரித்துவிட்டு கயல்,

"அத்த.. அதெல்லாம் எதுமில்ல.. இது ரஞ்சியோட கைவண்ணம்.." என்று வெட்கப் புன்னகை சிந்தினாள்.

தன் மேக்கப்பை கலைக்கும் முன், தன் கைப்பேசியில் வித விதமாக தன்னை படமெடுத்துக் கொண்டாள். வீட்டிலுள்ளவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டாள்.

எப்போதும் எல்லாவற்றுக்கும் கலாய்க்கும் தமிழ் கூட தங்கையின் அழகைப் பார்த்து பெருமையாய் மெச்சிக் கொண்டான்.

"என்ன இருந்தாலும் என் தங்கச்சி அழகுதான்.. ஒரு குழந்தை பெத்திருந்தாலும் உலக அழகிங்களுக்கே டஃப் குடுப்பாளாக்கும்.. " என்று சொல்லி தங்கையைப் புகழ்ந்தான்.

மதுரம் சாப்பாடு எடுத்து வைக்க, அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். வளர்மதி குழந்தைகள் இருவரையும் பார்த்துக் கொள்ள அமர்ந்திருந்தாள்.

முத்தழகி முதலில் தன் அம்மாவைப் பார்த்துவிட்டு அடையாளம் தெரியாமல் திரும்பிக் கொண்டாள். ஆனால் கயல் குரல் கொடுக்க, வந்திருப்பது தன் அம்மாதான் என்று புரிந்து கொண்டு ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்.

"ஹை.. அம்மா.. அய்கா ருக்க.. மை வெச்சியா.. கன்னத்தில நய்ய நய்ய போதர் போத்தியா.. " என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்டாள்.

அம்மாவை ஒரு மூச்சு கொஞ்சி விட்டு நிரஞ்சனாவின் குழந்தையுடன் விளையாடப் போய்விட்டாள்.

முகிலைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவன் கயல்விழியை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

தமிழ் கூட அவன் காதருகே,

"டேய்.. ஒத்துக்கறேன்.. உம்பொண்டாட்டி அழகுதான்னு நானும் ஒத்துக்கறேன்.. அதுக்காக இப்டி அவ அண்ணன் முன்னாடியே சைட் அடிக்க கூடாதுடா.." என்று கிசுகிசுக்க..

"சர்தான் அடங்குடா.. அவ எம் பொண்டாட்டி.." என்று முகில் தமிழுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு சைட் அடிக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

ம்.. நடத்துடா.. நடத்து.. என்று நினைத்த தமிழ் கயலைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்க, நடந்ததைக் கூறி, நிரஞ்சனாவை கயல் புகழ்ந்து தள்ளினாள்.

"பதினஞ்சு நிமிஷத்தில இந்த ப்ளவுசை ரெடி பண்ணிட்டா.. அதப் பாத்து என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம்.. ஆன்னு வாய் பொளந்துட்டாங்க.. ஆசம்.. ஃபென்டாஸ்ட்டிக்ன்னு ஒரேடியா புகழ்ந்து தள்ளிட்டாங்க..

சரி.. நிரஞ்சனா இனிமே ஒரு பெரிய டைலரா ஆகப் போறான்னு பார்த்தா.. அடுத்த பிரச்சனைக்கு திவி ஓடி வரா.. மேக்கப்மேன் மட்டையாகிட்டான்னு.. உடனே நிரஞ்சனா அடுத்ததா ப்யூட்டீசியன் அவதாரம் எடுத்தா..

சரி.. அப்ப இவ டைலர் இல்ல.. ப்யூட்டீசியன்.. ப்யூட்டி பார்லர் வெச்சிடுவான்னு பார்த்தா.. அடிச்சிது பாரு ஜேக்பாட்.. ரெண்டு வேலையும் சேர்த்து செய்யற மாதிரி..

இனிமே தமிழ் திரைப்பட முன்னணி கதாநாயகியான நேகாஸ்ரீக்கு நம்ம நிரஞ்சனாதான் மேக்கப்வுமன் கம் காஸ்ட்யூம் டிசைனர்.. கையோட அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிட்டாங்க.. நாளைக்கு காலையில இவள பிக்கப் பண்ணிக்க வீட்டு வாசல்ல கேப் (cab) வரும்.. எப்டி.. நம்ம ரஞ்சி ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்டா.." என்று கயல் சொல்லச் சொல்ல, எல்லாரும் ஆவென்று கேட்டபடியே சாப்பிட்டு முடித்தனர்.

எல்லாவற்றையும் கேட்ட, மதுரமும் வளர்மதியும் நிரஞ்சனாவை மனதாறப் பாராட்டி திருஷ்ட்டி வழித்தனர்.

தமிழும் முகிலும் கைதட்டி அவளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

நிரஞ்சனாவுக்கு இதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கூடப் புரியவில்லை.

கண்களில் தேங்கிய கண்ணீருடன் இதழ்களில் தோன்றிய புன்னகையுடன் அவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்.

"இதுக்கெல்லாம் நா என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல.. உங்களாலதான் இது நடந்துச்சு.. நீங்கல்லாம் இல்லன்னா நா இன்னிக்கு இப்டி ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கவே மாட்டேன்.." என்றாள் தழுதழுத்த குரலில்.

"அதெல்லாம் இல்லமா.. எல்லாம் உன் திறமை.. இவ்ளோ நாளா உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு உன்னப்பத்தி நீயே தப்பா நெனச்சிட்டிருந்திருக்க.. அதான் இப்டி பேசற.." என்று மதுரமும் வளர்மதியும் அவளை சமாதானம் செய்தார்கள்.

"சரிம்மா.. ரொம்ப லேட்டாகிடுச்சு.. குட் நைட்.." என்று கூறிவிட்டு கயல் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை முத்தழகியைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள். பின்னாலேயே குட் நைட் சொல்லிவிட்டு முகிலும் சென்றான்.

"என்னங்க இது.. இன்னிக்கு என்னையே சுத்தி சுத்தி வரீங்க.." என்று கயல் புன்னகைத்தபடி கேட்டுக் கொண்டே, தூங்கிய குழந்தையை அதனுடைய குட்டி மெத்தையில் படுக்க வைத்தாள்.

"இன்னிக்கு மட்டுமா.. நெனவு தெரிஞ்ச நாள்லேர்ந்து உன்னதானே சுத்தி வரேன்.. ஆனா இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கல்ல.. அதான்.." என்று சொல்லிக் கொண்டே அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அவளுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கினான்.






*************




நிரஞ்சனா தமிழிடம் வந்து எதையோ கேட்பதற்காக தயங்கித் தயங்கி நின்றாள்.

"என்ன? ஏதாவது வேணுமா?"

"ம்.. வந்து.. இது அந்த நடிகை குடுத்தது.. இத எப்டி பணமா மாத்தணும்னு எனக்கு தெரியாது.." என்று கூறி அந்த நடிகை கொடுத்த காசோலையை அவனிடம் காட்டினாள்.

"குட்.. நீயும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்ட.. சீக்கிரமே உனக்கு பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்துடலாம்." என்றான்.

"ம்.. அப்றம்.. நாளைக்கு காலையில மேக்கப் போட என்ன கூட்டிட்டு போக வண்டி வரும்னு சொன்னாங்க.. ஆனா ஸ்கூலுக்கு போகணும்ல.. சம்பளத்துக்காக இல்ல.. பாவம் பசங்கல்லாம் நா வருவேன்னு ஆசையா காத்திருப்பாங்க.. நா என்ன செய்ய.."

"ம்.. புரியுது.. நாளைக்கு லீவ் சொல்லிடு.. நம்ம இதுக்கு என்ன பண்ண முடியும்னு யோசிக்கலாம்.." என்றான்.

"ம்.."

"நீ டென்த் பாஸ் பண்ணியிருக்கதானே.. உன் மார்க் ஷீட் வெச்சிருக்கியா?" அவன் கேட்டான்.

"இல்ல.. அத எங்கம்மா ஒரு முறை கோவத்தில கிழிச்சி போட்டுட்டாங்க.." என்றாள்.

"ஓ.. சரி பரவால்ல.. டுப்ளிகேட் மார்க் ஷீட் வாங்கிக்கலாம்.. உன் ஸ்கூல் நேம், நீ எந்த ஊர்ல படிச்சன்னு சொல்லு.. அப்டியே உன் பெயரை இங்க்லீஷ்ல எழுதி குடு.." என்றான்.

அவள் தன் பெயரையும் தான் படித்த பள்ளியின் பெயரையும் தன்னுடைய ஊர் பெயரையும் தெளிவான கையெழுத்தில் அழகாக எழுதிக் கொடுத்தாள்.

அதை வாங்கிப் பார்த்தவன்,

"உன் கையெழுத்து ரொம்ப அழகா இருக்கு.." என்றான்.

அதைக் டே்டு அவள் விரக்தியுடன் புன்னகைத்தாள்.

"கையெழுத்து அழகாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காதுன்னு சொல்வாங்க.. அது என் வரையில சரியாதான் இருக்கு.."

"இந்த மாதிரி மூட நம்பிக்கையெல்லாம் வெச்சிக்காத.. ஆண்டவன் ஒருத்தர ரொம்ப சோதிக்கறார்ன்னா.. அவங்களுக்கு ரொம்ப உயரமான இடத்த குடுக்க போறார்ன்னு அர்த்தம். நீ எவ்ளோம் பெரிய உயரத்துக்கு போகப் போற.. கண்டதையும் நெனச்சி குழம்பாத.."

அவள் தலையாட்டியபடியே உள்ளே செல்லத் திரும்பி விட்டு, மீண்டும் அவன் புறமாகத் திரும்பினாள்.

"என்ன? இன்னும் ஏதாவது கேக்கணுமா?"

"வந்து.." என்று இழுத்தாள்.

"பரவால்ல சொல்லு.."

"வந்து தேங்க்ஸ்.. அப்றம்.. சாரி.." என்றாள்.

"தேங்க்ஸ் எதுக்கு.. சாரி எதுக்கு.." என்று புன்னகையுடன் கேட்டான்.

"வந்து என்ன இங்க கூட்டிட்டு வந்து இவ்ளோ ஹெல்ப் பண்றதுக்கு.. தேங்க்ஸ்.." என்றாள்.

"ம்.. அப்ப சாரி?"

"ம்.. வந்து.. என்ன கூட்டிட்டு வந்து.. நீங்களும்.. கொடுமை பண்ணுவீங்கன்னு.. தப்பா நெனச்சிட்டேன்.. ரொம்ப சாரி.."

"பரவால்ல.. உன் நிலையில யார் இருந்தாலும் இப்டிதான் நினைக்க தோணும்.. இதையெல்லாம் நினைக்காம நிம்மதியா தூங்கு.. நாளைக்கு புது வேலைக்கு போகப் போற.. உன் திறமைக்கு கிடைக்கப் போற பெரிய அங்கீகாரம்.. ஆல் த பெஸ்ட்.." என்று கூறி விட்டு உள்ளே போனான்.

அவனுடைய பேச்சையும் புன்னகையையும் கண்டவளின் மனதில் நெடு நாளைக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சி தோன்றியது.

என் திறமைக்கு கிடைக்கப் போற அங்கீகாரம். எனக்கு கூட திறமை இருக்கா? இருக்குன்னுதானே நம்ம கயலண்ணிலேர்ந்து அவ்ளோ பெரிய நடிகை வரைக்கும் சொல்றாங்க.. ஆனா.. இத மாதிரிலாம் ஏன் ஒரு நாளும் அண்ணனும் அம்மாவும் ஒத்துகிட்டதே இல்ல.. அண்ணியோட அந்த ப்ளவுசை என்னால பத்து நிமிஷத்தில சரி செய்ய முடியுதுன்னா எனக்கு திறமை இருக்குன்னுதானே அர்த்தம்..

ஆனா.. இத மாதிரி பல முறை என்னோட கிழிஞ்ச ப்ளவுசையும் சுடிதாரையும் அழகா மாத்தி தைச்சி வெச்சப்பல்லாம் கண்றாவியா இருக்குன்னு சொல்லி கிழிச்சிதானே போட்டிருக்காங்க.. அவங்க கிட்ட காட்டாம நா அத பத்திரப்படுத்தினத கூட தேடி எடுத்து கிழிப்பாங்களே.. என் மேல அவங்களுக்கு எவ்ளோ வெறுப்பு..

ஆனா அது கூட புரியாம எவ்ளோ நாள் இருந்திருக்கேன்.. பைரவி சொல்ற வரைக்கும் அம்மாவும் அண்ணனும் என் மேல வெறுப்ப காட்றாங்கன்னு கூட புரியாம இருந்தேன்..

நான் என்ன தப்பு செய்தேன்.. அவங்க சோத்தில மண்ணள்ளிப் போட்டேனா.. இல்ல சொத்தில பங்கு கேட்டேனா.. இல்லையே..

மனுஷங்க எப்டிலாம் இருக்காங்க.. கயலண்ணியோட குடும்பம் மாதிரி அன்பானவங்களாவும் இருக்காங்க.. என் அம்மா அண்ணன் மாதிரி வெறுப்ப கக்கறவங்களாவும் இருக்காங்க.. அந்த தேவகி டீச்சர் மாதிரி அடுத்தவங்களுக்கு நல்லது செய்யறவங்களும் இருக்காங்க.. அவங்க புருசன் மாதிரி அடுத்த வீட்டு பொண்ணு கைய புடிச்சி இழுக்கறவங்களாவும் இருக்காங்க.. என்று எதையெதையோ யோசித்தபடி படுத்திருந்தாள்.

குழந்தை சிணுங்கி எழுந்து கொள்ள, மணி பார்த்தாள். நேரம் இரவு பன்னிரெண்டரை எனக் காட்டியது. அவள் எழுந்து சென்று பால் கலந்து எடுத்து வந்து புட்டியில் விட்டு குழந்தைக்குப் புகட்டினாள்.

முத்தழகிக்காக அந்த வீட்டில் பால் எப்போதும் இருக்கும். இப்போது நிரஞ்சனாவின் குழந்தையும் இருப்பதால் பால் எப்போதும் குறையாமல் இருக்கும் வண்ணம் இன்னும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.

குழந்தைக்காக எப்போது வேண்டுமானாலும் பால் எடுத்துத் தர நிரஞ்சனாவுக்கு மதுரம் சமையலறையில் எது எது எங்கிருக்கிறது என்று காட்டிக் கொடுத்திருந்தாள். அதனால் நிரஞ்சனா எந்த வித தயக்கமுமின்றி பால் கலந்து எடுத்து வந்தாள்.

குழந்தை பாலைக் குடித்துவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர, நிரஞ்சனா பால் புட்டியைக் கழுவி வைத்துவிட்டு வர திரும்பவும் சமையலறைக்குச் சென்றாள்.

அவள் திரும்பி வரும்போது வாசல் பக்கத்திலிருந்த வராண்டாவில் பேச்சுக் குரல் கேட்டது.

தமிழ், முகில், கயல் மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தனர். ரஞ்சி என்று இவளுடைய பெயர் அடிபட்டதால் அப்படியே நின்று கேட்டாள்.

இருட்டில் நின்றிருந்ததால் இவள் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"எப்டிண்ணா.. இப்டி ஒரு யோசனை வந்துச்சு உனக்கு.." கயல் கேட்டாள்.

"ஏய்.. அவ முந்தி ஒரு முறை.. அந்த தாம்பரம் வீட்ல நீங்க இருக்கறப்ப.. உன்னோட ப்ளவுஸ் ஒண்ணு வீணாப் போச்சுன்னு சொன்னியே.. அதக்கூட அவ டிசைனர் ப்ளவுசா மாத்தி கொண்டு வந்து குடுத்தாளே.. ஞாபகம் இருக்கா.. அன்னிக்கு நா உங்க வீட்லதானே இருந்தேன்.. நேத்திக்கு ஒரு புடவை விளம்பரம் பாக்கறப்ப அது ஞாபகம் வந்துச்சு.. அதான் நா உன்கிட்ட உன் ப்ளவுசை அவ கிட்ட குடுத்து ரெடி செய்ய சொல்லுன்னு சொன்னேன்.."

"சூப்பர்ண்ணா.."

"ம்.. ஆனா அது உங்க ஆஃபீஸ்ல இருக்கற பொம்பளைங்களுக்கு டைலரா ஆகற வாய்ப்பைத்தான் அவளுக்கு குடுக்கும்ன்னு நெனச்சேன்.."

"ஆமாண்ணா.. நா மேக்கப் போடவான்னு அவ கேக்கறப்ப நா கொஞ்சம் பயந்தேன்.. ஆனா அவ முகத்தில ஒரு நம்பிக்கை.. கண்ல ஒரு கெஞ்சல்.. எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடுங்க ப்ளீஸ்ன்னு சொல்ற மாதிரி.. நா சரின்னு சொன்னதும் அவ கண்ல ஒரு மின்னல் வந்துச்சு பாரு.. சான்சே இல்ல.. மளமளன்னு வேலைய ஆரம்பிச்சா.. கை பரபரன்னு வேல செய்யுது.. கலர் காம்பினேஷன்லாம் பக்கா.. என்ன கான்சென்ட்ரேஷன் தெரியுமா.. இத்தனைக்கும் அந்த ரூம்ல அவ்ளோ வெளிச்சம் கூட இல்ல.. இதே அந்த மேக்கப்மேனா இருந்தா.. இந்த ரூம்புல டீப் லைட் வெள்ச்சம் பத்தல.. அந்த ரூம்பு்கு வா.. அந்த ரூம்புல சேரோட (chair) ஐயிட்டு (height) பத்தல.. குன்ஞ்சி குன்ஞ்சி குறுக்கு நோவுதுன்னு எதையாவது சொல்லி சொல்லியே எங்க அத்தன பேர் உயிரையும் எடுத்திருப்பான்.." என்றாள் கயல்.

"அவளுக்குள்ள இன்னும் எத்தன ஹிட்டன் டேலன்ட்ஸ் (hidden talents) இருக்கோ தெரியல.. முடிஞ்ச வரைக்கும் அத்தனையும் வெளிய கொண்டு வரணும்.." என்றான் தமிழ்.

"நீயும் அவளுக்காக என்னென்னவோ பண்ற.. ஆனா அவ உன்ன திரும்பி கூட பாக்க மாட்றாளே.." என்று கேட்டான் முகில்.

"இல்லடா.. அவ இன்னும் தன்னையே உணரல.. தன்னை உணர ஆரம்பிச்சாதான் தன் மனசை உணருவா.. தன் மனசில இருக்கற என்னையும் உணருவா.. எனக்கு நம்பிக்கையிருக்கு.."

"ஹூம்.. அவ உணரதுக்குள்ள ரெண்டு பேருக்கும் வயசாகிடும்.. அப்றம் எப்ப சேர்ந்து வாழறது.."

"இப்ப மட்டும் வாழாமலா இருக்கோம்.. வேற வேற ரூம்ல இருந்தாலும் அவ கூடதான் நா வாழ்ந்துட்டிருக்கேன்.." என்றான் தமிழ்.

"உன் நல்ல மனசுக்கு.. சீக்கிரமே அவ உன்னோட சேர்ந்து வாழணும்னு நா வேண்டிக்கறேன்டா.." என்றான் முகில்.

"சரி.. சரி.. ரொம்ப நேரமாய்டுச்சு.. ரெண்டு பேரும் போய் படுங்க.. நாளைக்கு ஆஃபீஸ் போகணும்.. ரஞ்சிக்கு வேற கேப் (cab) வந்துடும்.. அவ சீக்கிரமே கிளம்பணும்.. அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா.. கயல்.. நீதான் அவளுக்கு உதவணும்.. போங்க.." என்று அவர்களை அனுப்பினான் தமிழ்.

கயலும் முகிலும் எழுந்து கொள்ள, இதையெல்லாம் கேட்டிருந்த நிரஞ்சனா சத்தமில்லாமல் தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்.

இதெல்லாத்துக்கும் காரணம் இவருதானா? ஆனா என்ன நெனச்சி.. இவரு பாவம்.. எதுக்கு காத்துகிட்டிருக்காரு.. என்னால இவர கல்யாணம் செய்துக்கவே முடியாது.. என் சூழ்நிலை அப்டி.. இத எப்டி இவர்கிட்ட சொல்லி புரிய வெப்பேன்.. நான் ஏற்கனவே ஒரு கேடு கெட்டவனால வஞ்சிக்கப்பட்டவன்னு தெரிஞ்சும் இவரு ஏன் இப்டி.. கடவுளே.. என்ன ஏன் இப்டி சோதிக்கற.. என்று நினைத்தபடியே வெகு நேரம் தூக்கமின்றித் தவித்து பின்னிரவுக்கு மேல் ஒரு வழியாய் உறங்கிப் போனாள் நிரஞ்சனா.

ஆனால், எப்போதும் தமிழைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவன் இவன் என்றே நினைத்திருந்தவள், இப்போது அவர் இவர் என்று எண்ணத் தொடங்கியதை அவள் உணரவேயில்லை.



இன்னும் நிரஞ்சனாவுக்காக என்னவெல்லாம் தமிழ் செய்தான்?

ஊருக்குச் சென்ற ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் நிரஞ்சனாவைப் பற்றிய பெரிய பெரிய உண்மைகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.


அந்த உண்மைகள் எல்லாம் தமிழ் அறிந்தால் அவளுக்காக அவனுடைய அன்பு இப்படியே இருக்குமா?



எல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்..






- தொடரும்....
 
Last edited:
ரொம்ப அருமையான பதிவு
அவ திறமையை வெளிப்படுத்த
தயார் செய்து வச்சாச்சு
இன்னும் என்ன நடக்க போகுதோ
 
என்னது...பெரிய பெரிய உண்மையை தூக்க முடியாம தூக்கிட்டு வாந்தாங்களா...இத்தி.....அப்டி என்ன ரகசியமா இருக்கும்.....இவளப் பத்தி...அந்த உண்மை தெரிஞ்சா தமிழ் நேசம் இருக்குமாவா...அதான கொஞ்சம் நல்லா போனா பிடிக்காதே உங்களுக்கு
 

Advertisement

Top