🌺 ஆராதனா துரையின்... இலக்கணம் பெண்மையே! 🌺

Advertisement

Sugaaa

Well-known member
Member
🤩🤩ஆராதனா துரையின்...🤩🤩

MEME-20241009-041406.jpg


🌺 இலக்கணம் பெண்மையே...!🌺

🌺 ஆராதனா துரை அவங்க கதை படிச்சிருக்கியா...? அவங்க எழுத்து நல்லாருக்கும் என்ற என் அத்தையின் வார்த்தைகள் தான் உங்கள் எழுத்தை தேடிப் படிக்கத் தூண்டியது...

🌺 முதல் அத்தியாயத்திலேயே நாம எப்படி இவங்க எழுத்தை கவனிக்காமல் போனோம் என்ற எண்ணங்கள் தான்...

🌺 கதை முழுவதும் வாசிப்பதற்குள் இடையிடையே அன்றாட வேலைகள் இருந்தாலும்... சாலாவிலிருந்து வெளிவரவே முடியவில்லை... முழுவதும் எப்போது வாசிப்போம் என்று ஒரு குரல் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது...

🌺 கதைகளில் ஏதாவது ஒரு காட்சியில் மனம் பதறும்... ஆனால் சாலாவிற்காக கதை முழுவதுமே மனம் பதறுகிறது... அந்த வேதனையை வாசிக்கும் நமக்கே அந்த நிகழ்வைக் கடக்க முடியவில்லை...


1d64625eacd15b25a78c0f5ae2324abe.jpg

🌺 சாலா என்ன செய்யப் போகிறாள்...?
கடந்து விடுவாளா...?
அவளின் உடல் வேதனை வேறு எப்படி சமாளிப்பாள்...? என்று ஆயிரம் யோசனைகள்...

b9d995dbc8b54ef46aa0285f7deeba4d.jpg


🌺 சாலா நின்று... நிதானித்து திரும்ப அடிப்பது அத்தனை சூப்பர்...👏👏👏👏👏👏👏👏
அவளுடைய பொறுமையும்... விவேகமும்... வாவ் என வாய்பிளக்கச் செய்கிறது...

🌺 இன்று சாலாவைப் போல எத்தனை பெண்கள்...
படிப்பில்லாத பெண்கள் கூட விரைவில் வெளியே வந்துவிடுகிறார்கள்... படித்த பெண்கள் அந்த நொடியிலேயே வேதனையோடு தேங்கி விடுகிறார்கள்...


df4ba4879486a336d8ab257bd41ad434.jpg



🌺 ஆனால்... சாலா இன்று பல பெண்களுக்கு முன்னுதாரணம்... வழிகாட்டி... நம்பிக்கை...
வாழ்க்கையை கடந்து போக வழித்துணை...🥳🥳🥳🥳🥳

e20adac733e858aeb6d5d26003cb9fe7.jpg


🌺 வலியை சுமக்கும் ஒரு பெண்ணின் மனத்துயரங்களை இத்தனை தத்ரூபமாக சொல்ல முடியுமா...? ஒரு துளி அளவு கூட விடவில்லை... சாலாவைப் போன்ற பெண்ணின் மன உணர்வுகளை கொஞ்சம் கூட குறையாமல் அத்தனை நேர்த்தியான எழுத்து...

15ae7c6e722d830bd9a0082df44e5d55.jpg


🌺 உன்னைப் போல் ஒரு ஆள் என் வாழ்வில் இல்லவே இல்லை என்று சாலா சொல்லும் போது சபாஷ் போட வைக்கிறது...🥳🥳🥳🥳👏👏👏👏👏👏👏

e55a34fba66a5b1543933833209c246d.jpg


🌺 எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதிந்து விட்டது...

🌺 மீனாட்சி ... சாலாவை மட்டுமல்ல நம்மையும் யோசிக்க வைக்கிறாள்... அவசரத்தில் என்றுமே முடிவெடுக்க கூடாதென்பதுதான்...

🌺 மணிமாறன்... பல பேர் இப்படித்தான்... சொந்த வாழ்க்கையை இழந்தும் விடுகிறார்கள்...

🌺 தேவி... இன்னும் பெண்கள் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்... பாண்டியம்மாளுக்கு வாழ்க்கை பாடம் புகட்டியது போல்... அல்லலுறும் பெண்களுக்கு வாழ்வில் விடியல் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏...

c3eb0291a2264cd22fdd1d79b0dffe7c.jpg

🌺 வயது வித்தியாசமின்றி எதிரில் சந்திக்கும் எல்லோரிடமும் உங்கள் எழுத்தைப் பற்றி பேசத் தோன்றுகிறது... என்னால் முடிந்த வரை எல்லோருக்கும் கதையைப் பகிர்ந்தேன்...


🌺 இது சாதாரண கதையல்ல...
வாழ்க்கையை கடக்க முடியாத பெண்களுக்கு ஒளிவிளக்கு...



699976f3ced2df859ad9610d12f0b4a4.jpg




🌺 கணவனின் அன்பைப் பெறுவதில் சாலா தோற்றிருக்கலாம்...

b5a3e20e9c0daf38da9e4bfdb766eda8.jpg


ஆனால் வாழ்க்கையில் ஜெயித்து விட்டாள்...👏👏👏👏👏👏👏👏👏👏🥳🥳🥳🥳🥳🥳



 
Last edited:
மிக்க நன்றி மேம். நான் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு ஹேப்பியா இருக்கு. அழகான, ஆழமான விமர்சனம். நன்றி 🙏🙏🙏
 

Advertisement

Advertisement

Back
Top