Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)-5

Advertisement

praveenraj

Well-known member
Member
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

அன்று காலையிலிருந்தே பவித்ராவுக்கு மனம் சரியில்லை. இன்னும் இருபது நாட்களுக்குள் தன்னுடைய 'கனவு கண்ட கல்லறை' கதையை முடித்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார். இந்தக் கதையைத் தொடங்கும் முன்பே அந்தப் பிரபல பப்லிஷிங் ஹவுஸானது இந்த நாவலின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்க நாவலை முடித்து அவர்களிடம் அனுப்பி வைப்பதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் பேனாவைப் பிடித்து தனது ஆஸ்தான இருக்கையில் அமர்ந்தாலே வார்த்தைகள் அருவிபோல் கொட்டும். ஒரு கதையைத் தொடங்கும் முன்னே அதற்கான 'ட்ராப்ட்டை' தன்னுடைய மனதிற்குள் வடித்து விடுவார். சிலரோ தாங்கள் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை யோசித்து அதை சிறுக சிறுக எழுதி ஒரு முழுக்கதையாகக் கோர்ப்பதுண்டு. இன்னும் சிலரோ கதையின் போக்கை மட்டும் தங்கள் மனதிற்குள் வகுத்துக்கொண்டு எழுத அமரும் வேளையில் தான் அதற்கொரு வடிவமே கொடுப்பார்கள். இதில் பவித்ரா இரண்டாவது ரகம். சமயங்களில் எவ்வளவு பிரபலமான எழுத்தாளர் என்றாலும் கூட அவர்களுக்கும் வார்த்தை வறட்சி ஏற்படுவதுண்டு. இதை ஆங்கிலத்தில் 'writer's block' என்று சொல்வார்கள். எப்படித் தொடங்குவது என்றோ இல்லை கதையை அடுத்து எப்படிக் கொண்டுசெல்வதென்றோ அவர்களுக்கே தெரியாது. அப்படியொரு நிலையில் தான் தற்போது பவித்ராவும் இருக்கிறார். இந்த அறைக்கு வந்து இரண்டு மணிநேரத்திக்கும் மேலாகிவிட்டது. இன்னும் முதல் வார்த்தையைக் கூட அவரால் எழுத முடியவில்லை. அங்கிருந்த கடிகாரத்தைப் பார்த்தவருக்கு அவரையும் அறியாமல் பதற்றம் கூடியது.

'உன்னை நெனச்சு பார்க்கும் போது கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது. ஆனா அதை எழுதணும்னு உட்கார்ந்தா இந்த எழுத்து தான்... வார்த்தை' இதுதாங்க writer's block ?

"செண்பகம்..." என்ற குரலைக் கேட்டு செண்பகத்துடன் மெர்சியும் சற்று அதிர்ந்தாள். இதுவரை மூன்று கோப்பைகள் காஃபி உள்ளே சென்றுவிட்டதே. இன்னொரு கோப்பை காஃபி வேண்டும் என்பதற்கான சமிக்ஞை தான் இந்த அழைப்பு. அவரது உடல்நிலைக்கு இரண்டு கோப்பை காஃபிக்கு மேல் கூடாது என்றதே அவர்கள் குடும்ப மருத்துவரின் அறிவுரை என்னும் வேளையில் தான் பவித்ரா செண்பகத்தை அழைக்க,

"நீங்க இருங்கக்கா. நான் போறேன்" என்று மெர்சி எழுந்து பவியின் அறைக்கதவைத் திறக்கவும் அங்கு மெர்சியை எதிர்பார்க்காத பவித்ரா,
"என்னாச்சும்மா? உடம்புக்கேதும் செய்யுதா?" என்று எழுந்தவரை அமரவைத்து,

"ஒண்ணுமில்ல அத்தை. நான் நல்லா இருக்கேன். உங்களுக்கு என்னாச்சு?" என்று கேட்டவள் அந்த மேஜையைப் பார்த்ததும் புரிந்துகொண்டு,
"கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க. உங்க ஹெல்த்துக்கு அதிகம் காஃபி கூடாதுனு டாக்டர் சொன்னாரே..." என்னும் போதே மெர்ஸியின் சிரமத்தைப் புரிந்துகொண்ட பவி அவரை தனக்கருகில் அமரவைத்தார். நற்றிணைக்கு ஆறு வயது முடியும் தருவாயில் தான் இரண்டாவது முறையாக மெர்சி கருவுற்றிருக்க இது அவளுக்கு எட்டாவது மாதம் என்பதால் தான் பவியும் சற்று பயந்துவிட்டார்.

நற்றிணை உண்டான சமயத்தில் தான் உறவுகள் யாருமில்லாமல் மெர்சி சிரமப்பட்டதை எல்லாம் நவியின் மூலமாகவே தெரிந்துகொண்ட பவி இம்முறை மெர்ஸியை மிகுந்த அன்போடு தான் பார்த்துக்கொள்கிறார். நவிரன் ஆஸ்திரேலியா சென்றதும் தயக்கத்துடன் தான் மெர்சியுடன் பழக ஆரமித்த பவித்ரா ஒருகட்டத்தில் அவளுடன் உளமாறவே உறவுகொண்டாட தொடங்கிவிட்டார். அதற்கும் நவிரவின் வார்த்தைகளே காரணம்.
"ம்ம்மி எத்தனை வாட்டி இந்நேரம் நந்தினி அக்கா உயிரோட இருந்திருந்தா இப்படி இருந்திருப்பா அப்படி இருந்திருப்பானு சொல்லியிருக்க. நீயேன் அண்ணியை நம்ம நந்தினி அக்கா இடத்துல வெச்சுப் பார்க்கக்கூடாது? உன்னையும் அப்பாவையும் விட்டுட்டு நந்தினியக்கா போயிட்டாங்க. அதேபோல அண்ணியை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா போயிட்டாங்க. எனக்கென்னமோ இது ரெண்டுக்கும் இடையில ஒரு பட்டர்ஃபிளை எப்பெக்ட் இருக்குமோனு தோணுது?" என்று எப்போதும் போல் பவித்ராவைத் தன் பேச்சு சாதூர்யத்தால் தெளிவாகவே குழப்பிவிட்டான் நவிரன்.

(butterfly effect- தொடக்க காலகட்டத்தில் ஒரு வெளியில் ஏற்படும் சின்னதொரு மாற்றம் கூட எதிர்காலத்தில் வேறொரு பெரிய மாற்றத்திற்கு வித்திடலாம் என்பதே அந்தக் கோட்பாடு)

அதன் பின் அதிகம் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் மெர்சியை மெல்ல புரிந்துகொள்ள ஆரமித்த பவித்ரா இன்று அவளுடன் ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொண்டார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் முன்பு நவிரன் இருந்த இடத்தில் மெர்சி நுழைந்துவிட மெர்சி இருந்த இடத்திற்கு நவிரன் சென்றுவிட்டான். இதுவும் கூட அந்த பட்டர்ஃப்ளை எப்பெக்ட்டாக இருக்குமோ?

இந்தச் சமயத்தில் தான் தன்னுடைய நெருங்கிய நண்பனும் பிசினஸ் க்ளைண்டும் ஆனா வீரபாண்டியனின் மகனுக்கு நாளை சென்னையில் திருமண வரவேற்பு இருக்க மணப்பெண்ணும் தங்களுக்கு ஒரு வகையில் தூரத்து உறவென்பதால் குடும்பத்துடன் திருமணத்திற்குச் சென்று வர குமாரசாமி முடிவெடுத்தார்.

இந்த மூன்று வருடத்தில் அவர்களின் குடும்பத்தில் நிறைய மாற்றங்கள் அரங்கேறியிருந்தது. ஆனால் இந்த மாற்றத்தை அக்குடும்பத்தைச் சேர்ந்த யாரும் விரும்பவில்லை என்பதே நிதர்சனம். முன்பெல்லாம் நவிரன் வீட்டில் இருந்தான் என்றால் அவனும் நற்றிணையும் சேர்ந்து வீட்டை ஒரு குட்டி பஜார் போலவே மாற்றிவிடுவார்கள். சித்தப்பாவும் மகளும் அவ்வளவு நெருக்கம். அவர்கள் இருவரின் லூட்டியையும் கண்டு களித்திடவே நேரம் போதாது. அப்போது தான் இந்த டப்ஸ்மேஷ் தொடங்கி இன்ஸ்டா ரீல்ஸ் டிக்டாக் வரை எல்லாமும் பிரபலமடைந்து கொண்டிருந்த நேரம். இரண்டு அறுந்த வாலுகள் இணைந்தால் மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்?

இன்றோ நிலை அப்படியே தலைகீழாக மாறியிருந்தது. நவிரன் வீட்டிலிருப்பதே அரிதிலும் அரிதாகிப்போனது. இதற்கு வழிவகை சேர்க்கும் விதமாகவே குமாரசாமி சென்னையில் சில ஷோ ரூம்களை நிறுவியிருக்க அதன் மொத்த பொறுப்பையும் தானாகவே ஏற்றுக்கொண்டான் நவிரன்.
அன்று மாலை என்றும் இல்லாமல் விரைவாகவே வீடு திரும்பியிருந்தான் நவிரன். இப்போதெல்லாம் அவன் அவீட்டில் உரையாடும் ஒரே நபர் என்றால் அது நற்றிணை மட்டும் தான். நவியின் கார் சப்தம் கேட்டதும் ஹோம் ஒர்க் செய்துகொண்டிருந்தவள் துள்ளி குதித்து வெளியேற அவளைக் கண்டவன் தனக்குள் இருந்த இறுக்கத்தை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு அவளை வாரி அணைத்தான்.

"என்ன சித்தா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமே வந்துட்ட?" என்று கேட்ட மகளுக்கு,

"இந்த வாரம் முழுக்கவே நான் உன்னைச் சரியாவே பார்க்கல தானே? அதான் இன்னைக்கு வந்துட்டேன்டா அம்மு" என்று முத்தம் வைத்தவன் அங்கிருந்த மெர்சியை ஒரு கார்டெசிக்கு பார்த்துப் புன்னகைத்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அப்போது தான் மகனின் குரல் கேட்டு பவி வெளியேற அவரைக் கண்டுகொள்ளாமலே மெர்சியிடம் பேசினான். மெர்ஸிகோ இப்போது தர்மசங்கடமான சூழல் உண்டாக மகளை அழைத்து அவளது ஹோம் ஒர்க் பற்றி வினவ பவியோ நவிரன் தன்னுடன் பேசமாட்டானா என்று மருகினார்.

இரவு அனைவரும் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருக்க குமாரசாமியே அந்தத் திருமணத்தைப் பற்றிப் பேச்சை ஆரமித்தார். மெர்சிக்கு நாளை டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதைப் பற்றிச் சொன்ன நலன் அவனாகவே நவியை நாளை பெற்றோர்களுடன் சென்றுவருமாறு சொன்னான். சொன்னான் என்பதைக் காட்டிலும் அதில் ஒரு கட்டளை மேலோங்கி இருந்தது.

"நான் போகல. வேணுனா ட்ரைவரை அரேஞ் பண்ணுறேன்" என்று சொன்ன நவிரனை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று புரியாமல் குமாரசாமியும் பவித்ராவும் முழிக்க,

"சரிப்பா, அப்போ நாளைக்கு நான் உங்க கூட வரேன். ரெண்டு பேரும் ரெடியா இருங்க..." என்ற நலன் மேற்கொன்டு ஏதும் பேசாமல் சாப்பிட்டான்.
நலனின் இந்தப் பதிலில் அங்கிருந்த எல்லோரும் குழம்ப,

"அப்போ நாளைக்கு அண்ணியோட அப்பாயிண்ட்மெண்ட்?" என்றான் நவிரன்.

"இன்னொரு நாள் பார்த்துக்க வேண்டியது தான். நான் எப்படி ஒரே நேரத்துல சென்னையிலும் இங்கயும் இருப்பேன்?" என்று சொல்லி அவன் சாப்பிட ஏனோ நலனின் திட்டத்தை நன்கு புரிந்துகொண்ட நவி வேறுவழியில்லாமல்,

"ஒன்னும் வேணாம். நாளைக்கு நீ அண்ணியை ஹாஸ்பிடலுக்கு மட்டும் கூட்டிட்டுப் போனா போதும். அதைத் தள்ளிப்போட வேணாம்" என்றதும் நிமிர்ந்து அவனை ஒரு பார்வைப் பார்த்தான் நலன்.

"நாளைக்கு நானே இவங்கள சென்னைக்குக் கூட்டிட்டுப் போறேன். போதுமா? ரெடியா இருக்கச்சொல்லு..." என்றவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் மேலே சென்றான்.

இப்போது பவியின் கண்கள் தானாகவே கலங்க,

"ம்மா. எல்லாமே கண்டிப்பா மாறும். அழாதீங்க ப்ளீஸ்..." என்ற நலன் அவருக்கு அருகில் சென்று அமர அவனது தோளில் சாய்ந்துகொண்ட பவி,

"நான் இப்படியெல்லாம் ஆகும்னு..." என்று அவர் எதையோ சொல்ல வர, அவர் சொல்ல வருவதைப் புரிந்துகொண்ட நலன்,

"அம்மா, நீ எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம். என் அம்மாவோட கண்டிப்புக்கு பின்னாடி இருக்குற பாசம் எனக்கு நல்லாவே புரியும். நீங்க வீணா இதை நெனச்சு ஸ்ட்ரெஸ் ஆக வேண்டாம். இன்னைக்கு முழுக்கவே நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸா இருந்தா மெர்சி சொன்னா. டாக்டர் என்ன சொல்லியிருக்கார்? அண்ட் நான் அந்த பப்லிஷர் அருணா மேம் கிட்டப் பேசிட்டேன். நீங்க ஒன்னும் டெட்லைனை எண்ணி உங்களை நீங்களே வருத்திக்க வேண்டாம். இப்போ போய் நிம்மதியாப் படுங்க..." என்றான் நலன்.

எல்லோரும் களைந்துவிட நலன் மட்டும் ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.

************
அலங்காரத் தோரணைகள் மிளிர கண்கவரும் வண்ண விளக்குகள் பலூன்கள் முதலியவற்றால் அந்த மண்டபம் பிரமாண்டமாகக் காட்சியளித்தது. அகன்று விரிந்து ஒரு குட்டி மாளிகை போலே ஒளிர்ந்த வராஹி திருமண மண்டபத்திற்குள் ஒரு விலையுயர்ந்த லம்போரஃஹினி கார் நுழைந்தது. காரை பற்றிய விவரம் ஏதும் அறியாதவர்களைக் கூட ஒரு கணம் நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் அம்சம் கொண்டது அந்த கார். அந்த காரை காட்டிலும் அதைச் செலுத்தியவன் இன்னும் வசீகரிக்கக்கூடியவன் தான். ஆனால் அந்த வசீகரம் இன்று எள்ளளவும் அவன் முகத்தில் இல்லை. அதை அவனுக்குப் பின் அமர்ந்து வந்த பவித்ராவும் நன்கு அறிவார் தான்.

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே விட்டுப் பிடிப்பது என்று யோசித்தவர் நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து அவனை இங்கே வரவழைத்து விட்டார். வண்டி நின்று நொடிகள் பல கடந்தும் இறங்காமல் இருக்கும் அன்னையைக் கண்டவன்,

"மண்டபம் வந்திடுச்சு..." என்று யாருக்கோ சொல்வதைப்போல மொழிந்தான்.

"நீ இறங்கு நாங்க இறங்குறோம்..." என்று குமாரசாமி சொல்லவும் அவன் முகம் கோவத்தில் சிவக்க, அவர்களுக்கு பதில் சொல்ல எண்ணி திரும்பும் முன் பின்னாலிருந்து ஒலித்த இன்னொரு காரின் ஹாரன் அவனை முன்னே செல்லுமாறு உணர்த்த,

"வண்டிங்க வரிசையா வந்துட்டு இருக்கு. ப்ளீஸ் இறங்குங்க..." என்று கோபத்தையும் அதிருப்தியையும் ஒருசேர அடக்கி அவன் சொல்ல,

"பார்க்கிங்ல நிறுத்து நாம அங்க இருந்தே உள்ள போகலாம்..." என்ற பவித்ராவின் வார்த்தைகள் தங்களுடன் அவனும் உள்ளே வந்தே தீர வேண்டும் என்பதை வெளிப்படையாகவே நவிரனுக்கு உணர்த்தியது. அதற்குள் அந்த மண்டபத்தின் வாட்ச் மேன் மற்றும் மணமகனின் செக்ரெட்டரி ஆகியோர் இவர்களை நோக்கி வருவதை அறிந்தவன் ஏதும் பேசாமல் பார்க்கிங் லாட்டில் வண்டியை அமத்தியவன் வேண்டா வெறுப்பாகவே கீழே இறங்கினான்.

கீழே இறங்கிய பவித்ரா குமாரசாமியிடம்,"உங்க பையனை ஒழுங்கா உள்ள கூட்டிட்டு வாங்க. நான் முன்ன போறேன்" என்று எஸ்கேப் ஆக,

"நல்லாயிருக்கே! சிரிச்சுப் பேசும் போது மட்டும் அவன் உன் பையன். அதுவே சிடுசிடுன்னு பேசுனா அவன் என் பையனா?" என்று குமாரசாமி தன்னுடைய வழக்கமான நகைச்சுவைக் கலந்த நடையில் புலம்ப பொதுவாக இந்நேரம் இயல்பாக பவித்ராவின் உதடுகளில் குடியேறக்கூடிய குறுஞ்சிரிப்பு இம்முறையும் மிஸ் ஆனதில் குமாரசாமிக்கு தான் உள்ளுக்குள் பெரும் வருத்தம் குடிகொண்டது.

"நீ போ பவிம்மா நாங்க பின்னாடியே வரோம்..." என்பதற்குள் அங்கிருந்த சில பெண்மணிகள் தங்கள் ஆஸ்தான எழுத்தாளரைக் கண்ட பிரமிப்பு மற்றும் குதூகலத்தில் பவித்ராவை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

"மேம், அடுத்த புக் எப்போ வரும்? ஏன் இப்போல்லாம் முன்ன மாதிரி அதிகம் எழுதுறதில்லை நீங்க?" என்று உரிமையாகவே கேட்ட ஒரு வாசகிக்கு என்ன பதில் சொல்வார் பவித்ரா.

"உங்க ரைட்டிங்கை ரொம்ப மிஸ் பண்றோம் மேம். புக் வராட்டி கூடப் பரவாயில்ல ஏன் இப்போல்லாம் நீங்க உங்க பிளாக் சைட்ல கூட பெருசா எழுதுறதில்லை?" என்று கேள்வியின் தோற்றம் மாறினாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்தது.

சிலர் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக புத்தகத்தை எடுக்க செல்ல பலரோ அவருடன் செல்பிக்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடன் செல்பி எடுத்து ஆட்டோகிராஃப் போட்டுக்கொண்டிருந்த பவித்ராவுக்கு சட்டென்று ஒன்று நினைவுக்கு வர வேகமாக பின்னே திரும்பியவரின் கண்கள் அங்கு நின்ற நவிரனைக் கண்டு மகிழ்ச்சியா ஏமாற்றமா என்று வரையறுக்க முடியாத ஒரு பாவனை செலுத்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

**************

அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் வெல்வெட்டால் போர்த்தப் பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமைதியாய் அமர்ந்தான் நவிரன். அவன் மனம் அமைதியிழந்து தவித்தது. ஒரு வித பதற்றம் மற்றும் இறுக்கம் அவனைச் சுற்றி வளைக்க ஏனோ நொடியில் அவனது சீரான சுவாசம் தடைப்பட எழுந்தவன் அங்கிருந்த கதவைத் திறந்து வெளியேறினான். உள்ளே சென்ற பவித்ராவையும் குமாரசாமியையும் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள் சூழ்ந்துகொள்ள இரண்டு வயது சிறுவனின் தாயைப் போல் நிமிடத்திற்கு ஒரு முறை திரும்பி திரும்பி நவிரனையே பார்த்துக்கொண்டிருந்தார் பவித்ரா. சட்டென திரும்பியவருக்கு நவிரன் வெளியேறியது தெரியவர அந்தக் கூட்டத்தை தன் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு அவனைத் தேடி பின்னோடினார் பவித்ரா. ஓடினார் என்பதற்கு வலு சேர்க்கும் விதமாகவே அவரது நடையும் இருக்க அந்தக் கதவைத் திறந்ததும் தான் அவர் சுவாசம் சீரானது. தூரத்தில் ஓடியாடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளை ஒரு தூணில் சாய்ந்தவாறு ரசித்துக்கொண்டிருந்தான். நவிரனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை இஷ்டம். அவனே ஆறு வயது சிறுவனாக இருந்த பொழுது மூன்று வயதான அவன் சித்திப்பெண்ணுக்கு உணவு ஊட்டியவனாயிற்றே!

இனி மகனைப் பற்றிய கவலை இல்லை என்று திரும்பியவர் அந்தக் கதவை வெளியிலிருந்து அவர் இழுக்கவும் அதே சமயம் உள்ளிருந்து திறக்கப்பட்ட கதவின் த்ரஸ்ட்டில்(thrust- உந்துதல், திடீரென்று தள்ளுதல். physics தான்?) நிலைத்தடுமாறியவள் தன்னுடைய கையிலிருந்த ஐஸ் க்ரீமை எதிரே நின்ற பவித்ராவின் சேலையில் கொட்டிவிட்டாள்.

நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும் தருணம் இல்லை...

காதலால் நிறைப்பாள்...

மக்களே ரொம்ப சாரி. பதினோராம் தேதி interview ரொம்ப நல்லாவே போச்சு. சரி அடுத்த எபி சீக்கிரம் போடலாம்னு நெனச்சா பத்தாம் தேதி இன்னொரு எக்ஸாம் ரிசல்ட் வந்திடுச்சு. அதாவது ibps po. அதோட interview 25 த் அன்னைக்கு இருக்கு. போன வருஷம் அதுல தான் 0.18 ல மிஸ் ஆகி reserve listல இருக்கேன். சோ அப்படியே அடுத்து prepare ஆகும்படி சூழல் அமைச்சிடுச்சி. ரெண்டுக்கும் தனித்தனியா prepare ஆகணும்னு அவசியமில்லை தான். இருந்தாலும் இது எப்படியும் மார்ச்ல தான் வரும்னு அசால்ட்டா இருந்தேன். சோ அடுத்த லீவ் லெட்டர் இது. திரும்ப உங்களை 26 அல்லது 27 த் அன்னைக்கு சந்திக்கிறேன்.

மார்ச்ல இருந்து என்ன ஆனாலும் ரெகுலர் uds கட்டாயம். இதையும் ப்ரதிலிபில 'மழைக்கால மேகங்கள்'னு ஒரு நாவலையும் இப்போ எழுதிட்டு இருக்கேன். april குள்ள ரெண்டையும் முடிச்சிட்டு கீர்த்தனை மற்றும் மஞ்சள் வெயில் மாலையிலே தொடர்கிறேன். mm almost interval வரை எழுதிட்டேன். அது ஒரு குறு நாவல் தான். சோ அதை இங்க side by side கொடுக்குறேன்.
கடைசியா எனக்காக இன்னொரு முறை pray பண்ணிக்கோங்க மக்களே! 25 த் interviewvum நல்ல படியா முடியனும்! ???
எனக்கும் பலமுறை writers block நிகழ்ந்திருக்கு. நிறைய எழுதி அதை அப்படியே டெலீட் பண்ணி டென்ஷன் கூட ஆகியிருக்கேன்?
 
Nirmala vandhachu ???
 
முன்னாடி நவி சமாதானம் பன்னினான் இப்போ நலன்,
வாழ்க்கை ஒரு sarcastic circle ???????? என்று புரியவைக்கறீங்க praveen ??

உங்க ரைட்டர் at a time ல ஒருத்தர்ட்ட தான் க்ளோஸ் ஆஹ் இருப்பேன்னு சபதமா ??

பாவம் இப்படி தான் பல நாள் epi போட முடியாமா இருப்பன் ?? கதையில் கூட கதை முடிக்க முடியல ??????

டேய் நவி எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டா போடா ?? ??

** very happy that you did ur interview well praveen. All the best nalla panunga, ellam clear panitu happy ah vanhdu update podunga. ✌✌✌ ??? will wait ☺️?

ஆவலுடன்
 
வாழ்த்துகள் ???
ரொம்ப ரொம்ப சந்தோசம் ???

அடுத்த இன்டெர்வியூ வையும் இதே மாதிரி நல்லா பண்ணுங்க....ALL THE BEST ?????
 
முன்னாடி நவி சமாதானம் பன்னினான் இப்போ நலன்,
வாழ்க்கை ஒரு sarcastic circle ???????? என்று புரியவைக்கறீங்க praveen ??

உங்க ரைட்டர் at a time ல ஒருத்தர்ட்ட தான் க்ளோஸ் ஆஹ் இருப்பேன்னு சபதமா ??

பாவம் இப்படி தான் பல நாள் epi போட முடியாமா இருப்பன் ?? கதையில் கூட கதை முடிக்க முடியல ??????

டேய் நவி எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டா போடா ?? ??

** very happy that you did ur interview well praveen. All the best nalla panunga, ellam clear panitu happy ah vanhdu update podunga. ✌✌✌ ??? will wait ☺?

ஆவலுடன்

அதானே நிஜம்! ரொம்ப நன்றி ? ஹா ஹா என்ன பண்ண அவங்க டிசைன் அப்படி? அதானே ஒருவேளை அந்த 'பவித்ரா'ங்கிற பேர்ல என்னமோ இருக்கு போல? சீக்கிரமே நவியின் காதல் பக்கங்கள் திறக்கும்? thank you so much again? இனிமேல் தொடர்ந்து கதை எழுதப்போறேன்?(எந்த இடைஞ்சலும் வராது என்ற நம்பிக்கையில்)
 
Top