Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)- 3

Advertisement

praveenraj

Well-known member
Member

'மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்...
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை...' என்ற வரிகள் மென்மையாகவும் காதிற்கு இனிமையாகவும் ஒலிக்க மொட்டு ஒன்று மலர்ந்ததைப்போல் தன் இமைகளை மெல்லப் பிரித்தாள் அவள். அனிச்சையாக அவள் கரங்கள் அருகிலிருந்த தலையணையை வருட அவளது நினைவுகள் என்னும் அறையின் ஜன்னல்கள் காற்றில் ஆடியது தான் தாமதம் அந்த ஜன்னலை இழுத்து தாழிட்டவள் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் பொருட்டு ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.

உள்ளே நுழைந்தவள் அடுத்த அரை மணிநேரத்தில் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு அந்த அலமாரியில் இருந்து தன் உடுப்பை எடுத்து மாட்டினாள். அப்போது அவளது அறைக்கதவு தட்டப்பட,

"கமிங்..." என்று குரல் கொடுத்தவாறே திறக்க எதிரில் கார்த்தி தான் நின்றிருந்தாள். அவளின் தேவையை அவள் சொல்லாமலே உணர்த்துகொண்டவள் அவளுக்கு வழிவிட,

"டெய்லி காலையில எனக்கு இதே தலைவலி அஞ்சு. நானும் உன்கிட்ட நீ என் ரூம் மேட்டா வந்திடுனு கால்ல விழாத குறையா கெஞ்சுறேன் நீ தான் என் ரெக்வஸ்ட்டை தூசியா ஒதுக்கிடுற..." என்று தினம் பாடும் அதே பல்லவியை இன்றும் பாடினாள் கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திகா.

"கார்த்திக்கும் ஜெஸ்ஸிக்கும் நடுவுல நான் என்னைக்குமே வர மாட்டேன்ப்பா. விடிவில தான் பாவம் கார்த்தியும் ஜெஸ்ஸியும் ஒன்னு சேரல. அட்லீஸ்ட் இந்த பி.ஜிலயாவது அவங்க ஒன்னு சேரட்டுமே..." என்று சீரியஸ் டோனில் புன்னகையுடன் அஞ்சு சொல்ல அதில் கடுப்பானவள் பாத் ரூமின் கதவைத் திறந்துவிட,

"ஹேய் அறிவில்ல உனக்கு. யு ஆர் சோ டிஸ்கஸ்டிங் டி. எருமை..." என்று சொன்னவள் தன்னுடைய தலையை தானே அடித்துக்கொள்ள,

"இப்போ உனக்கு எப்படி இருக்கு? இதே மாதிரி தான் தினம் நீ என்னையும் ஜெஸ்ஸியையும் தொடர்பு படுத்தும் போது எனக்கும் இருக்கும். சிம்பு மாதிரி ஒரு பையன் கூட என்னைத் தொடர்பு படுத்தி கலாய்ச்சா கூட ஒரு நியாயம் இருக்கு. கழுத குடிசைனாலும் பரவாயில்லைனு ஏதோ ஒரு குப்பனையோ சுப்பனையோ வெச்சு கலாய்ச்சா கூட என் மனசு ஆறுதல் அடையும். ஆனா நீ என்னை போயும் போயும் அந்த ஜெஸ்ஸி கூட... நீ தான் டி டிஸ்கஸ்டிங்..." என்று உள்ளே இருந்தவாறே கார்த்தி புலம்ப வெளியே அவள் சொன்னதையெல்லாம் கேட்டவாறு சிரித்துக்கொண்டிருந்தாள் அஞ்சு என்றழைக்கப்படும் அஞ்சனா.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அஞ்சனாவின் ஒரே நெருங்கிய தோழி என்றால் அது கார்த்திகா மட்டும் தான். தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம் தான் கார்த்திகாவின் பூர்வீகம். இன்ஜினியரிங் படிப்பை திருச்சியில் படித்தவள் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் சென்னைக்குக் குடியேறிவிட்டாள்.
ஊரிலிருந்திருந்தால் இந்நேரம் ஒரு குழந்தை அம்மாவாகக்கூட ப்ரமோஷன் கிடைத்திருக்கும். ஏனோ அந்த ப்ரமோஷன் மீது விருப்பமில்லாதவள் தப்பித்தால் போதும் என்று எஸ்கேப் ஆகி இங்கே வந்துவிட்டாள்.

வேலை கிடைத்தாலும் தங்குவதற்கென்று ஒரு நல்ல இடம் கிடைக்காமல் அலைந்தவளுக்கு ஒரு ஆட்டோ காரரின் மூலமாக அறிமுகமானாள் அஞ்சனா. இரண்டு டபிள் பெட் ரூம் ஒரு சிங்கிள் பெட் ரூம் என்று இருந்த அறையில் வந்தவளுக்கு கிடைத்தது என்னவோ ஜெஸ்ஸியுடனான அறை மட்டுமே. அதன் பின் நாட்கள் வேகமாக உருண்டோட இந்த பி.ஜியின் ரௌடி பேபி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்குமளவுக்கு மாறி விட்டாள்.

"ஏ கார்த்தி, டைம் ஆச்சுடி. என்ன என்னைக்கும் இல்லாத மாயமா இன்னைக்கு இவ்வளவு நேரம் குளிக்குற... ஜெஸ்ஸி கூட கனவுல டூயட்டா?" என்று கேட்டதும் ஆக்ரோஷமாக கதவைத் திறந்தாள் கார்த்தி.

"உன்னை என்ன பன்றேன்னு பாரு... மூக்கு பொடப்பா இருந்தா இப்படியெல்லாம் பேசத்தோணும்... இரு டி..." என்று அந்த அறையை நோட்டமிட்டாள்.

"நம்ம பஞ்சாயத்தை ஈவினிங் வெச்சுக்கலாம் கார்த்தி. எனக்கு டைம் ஆச்சு. இன்னைக்கு வேற என்னை சீக்கிரமே வரச் சொல்லியிருந்தாங்க..." என்று அஞ்சு சொல்லவும் அமைதியானவள்,

"அப்போ இன்னைக்கு நீ தான் டின்னர் செய்யணும். என்ன ஓகேவா?" என்று தன்னுடைய முறையை வழக்கம் போல் அஞ்சுவிடமே தள்ளிவிட அவள் யோசிக்கவும்,

"ஆமா அப்படியே இல்லைனா மட்டும் நீ செஞ்சிட்டு தான் மறுவேலை பார்க்குற மாதிரி பேசுற..." என்ற அஞ்சனாவின் புன்னகையில் அகம் மகிழ்ந்தவள்,

"அஞ்சுனா அஞ்சு தான். ஏ புஜிக்கு புஜிக்கு புஜிக்கு..." என்று அவளது கன்னத்தைப் பிடித்து அவள் கொஞ்சவும்,

"உன் ஆளு அடுத்த ரூம்ல இருக்கா. நான் இல்ல" என்றதும் அஞ்சனாவின் கழுத்தைப் பிடித்து செல்லமாக நசுக்கியவள்,

"இரு டி. அஞ்சனாவுக்கு ரொம்ப நாளா உன் மேல ஒரு இதுவாம்னு ஜெஸ்சிகிட்ட வத்தி வெக்குறேன்..." என்று கார்த்தி ஓட அவள் பின்னாலே அஞ்சனாவும் வேகமாக ஓடிவந்தாள்.
அப்போது தங்கள் அறையிலிருந்து வெளியேறிய ஜெஸ்ஸி இவர்களைக் கண்டு,

"என்ன ரெண்டு பேரும் காலையிலே குஷியா இருக்கீங்க?" என்று வினவ அவளுக்கு பதிலளிக்க வாயைத் திறந்த கார்த்தியின் வாயை மூடிய அஞ்சு,

"ஒண்ணுமில்ல. இன்னைக்கு கார்த்திக்கு அப்ரைஸலாம். அதான் ஹேப்பியா இருக்கா" என்றாள் அஞ்சு.

"அப்போ நைட் கண்டிப்பா ட்ரீட் உண்டில்ல?" என்று இன்னொசெண்டாக ஜெஸ்ஸி வினவவும்,

"அப் கோர்ஸ். கண்டிப்பா கண்டிப்பா. நைட் உன்னை செமயா கவனிப்பா. யூ டோன்ட் ஒர்ரி ஜெஸ்ஸி" என்று இரு பொருள் பட அஞ்சனா மொழிய அதன் அர்த்தம் புரியாமல் ஜெஸ்ஸி தலையாட்ட அங்கே கார்த்தி ஒரு அக்கினி பிழம்பாகவே காட்சியளித்தாள்.

"அதென்ன என்னை மட்டும்? நீயும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ அஞ்சு. அதென்ன பண்ணிக்கோ? நீ கட்டாயம் ஜாயின் பண்ற..." என்று ஜெஸ்ஸி பதிலளிக்கவே அஞ்சனாவின் முகம் பேயறைந்தாற்போல் இருக்க கார்த்திக்கு எங்கிருந்து தான் அப்படியொரு சிரிப்பு வந்ததென்று தெரியாமல் வெடித்துச் சிரித்தாள்.

அப்போது தான் தன்னை வைத்து இவர்கள் இருவரும் ஏதோ ரகசியம் பேசி கலாய்க்கிறார்கள் என்று உணர்ந்த ஜெஸ்ஸி,"ஏய் என்னை வெச்சு என்னமோ கிண்டல் பண்றிங்கனு மட்டும் புரியுது. ஆனா என்னனு தான் தெரியல. ஈவினிங் வந்து உங்களை கவனிச்சுக்குறேன்..." என்று ஜெஸ்ஸி சென்றுவிட,

"என்ன அஞ்சு, அப்போ நைட் மூணு பேரும் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..." என்று கண்ணடிக்க,

"அடிங்கு கழுதை பன்னி... உன்னை" என்று துரத்தும் முன்னே கார்த்தி தன் அறையின் கதைவடைத்துக்கொள்ள,

"சாயுங்காலம் வெச்சுக்குறேன் டி உன்னை..." என்று அஞ்சு சொல்ல,

"வெச்சுக்க வெச்சுக்க... நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை..." என்று கார்த்தி உள்ளிருந்தே பாட காலையிலிருந்து தன்னுடைய மனதைப் பிசைந்துகொண்டிருந்த ஏதோ ஒரு அழுத்தம் நீங்கியதாகவே உணர்ந்தாள் அஞ்சனா. அதற்குள் அவளுக்கான ஆட்டோ வந்துவிட கார்த்தியிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றாள்.

வழக்கமாக அவளை பிக் அப் செய்யும் கணேசன் அன்றும் தவறாமல் வந்துவிட அவரிடம் ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்தி உள்ளே எறியவள் வழக்கம் போல் தன்னுடைய குடும்பக்கதையை மனம் விட்டுப் புலம்பும் கணேசனுக்கு வழக்கம் போல் செவி கொடுத்தாள் அஞ்சனா. இங்கே பலருடைய பிரச்சனைகளை செவி கொடுத்து கேட்க ஒருவர் இருந்தாலே அவர்கள் தங்கள் பிரச்சனைகளை எல்லாம் கடந்து வந்து விடுவார்கள். அதோடு நிறுத்தாமல் அவருக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் எல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவும் செய்வாள் அஞ்சனா.

அஞ்சனாவை தன்னுடைய மகள் போல் பாவிக்கும் கணேசன் தன் பிள்ளைகளின் தேவைகளை எல்லாம் அவளைக் கேட்டு தான் நிறைவேற்றுவார். அதிகம் படித்திடாத கணேசன் தன் மகனையும் மகளையும் நன்கு படிக்க வைக்க எடுக்கும் முயற்சியைப் பாராட்டி அவரை ஊக்குவிப்பது தான் அஞ்சனாவின் வேலை.

சென்னையின் மிகப் பிரபலமான நட்சத்திர விடுதியின் முன்பு நின்றது அந்த ஆட்டோ.

"பாப்பா சாயுங்காலம் எத்தனை மணிக்கு வரட்டும்?" என்றவருக்கு,

"இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு அங்கிள். நான் மதியமா உங்களுக்கு கால் பண்றேன்..." என்று உள்ளே நடந்தவள் தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டி ரிசப்ஷனுக்கு அருகிலிருக்கும் ட்ரெஸ்ஸிங் அறைக்குச் சென்று தன்னுடைய யூனிஃபார்மை அணிந்தவள் தலையில் ஏப்ரானை மாட்டி கிட்சனை நோக்கி நடந்தாள்.

கிச்சனுக்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த சில ஜூனியர் செஃப் மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்க வழக்கம் போல் தன்னுடைய பணியில் தான் காட்டும் அதே கண்டிப்பான முகத்துடன் அவர்களுக்கு தலையசைத்தவள் மணியைப் பார்த்தவாறு செஃப் டி குசைன்(chef de cuisine- ஒரு கிச்சனில் தலைமை சமையற்கலைஞர். அன்றைய தினத்தின் மெனுவை தீர்மானிப்பது முதல் அதன் சுவையை சரிபார்ப்பது வரை எல்லாம் அவருடைய பொறுப்பு. அவருக்கு கீழ் சில சௌஸ் செஃப்(sous chef- ஒவ்வொரு வகையான உணவுக்கும் ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். அவரே sous chef.) அவருக்கும் கீழ் சில செஃப் டி பார்டி(chef de partie) என்று ஒரு கிட்சனின் படிநிலை அமைப்பு இருக்கும்) இருக்கும் அறையை நோக்கி நடந்தாள். மேற்கொண்ட விவரங்களுக்கு ஆஹா என்ன ருசி கதையின் பத்தாவது அத்தியாயத்தைப் பார்க்கவும்.

அன்றைய தினம் அந்த நட்சத்திர விடுதியில் ஒரு பிரபல நடிகருடைய திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததால் அதில் உழைத்த கலைஞர்களுக்கு அந்த நடிகர் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். ஈவினிங் ஆறு மணிக்கெல்லாம் பப்பே ஆரமித்து விடும் என்று அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரியப்படுத்திருக்க அதன் பொருட்டே இன்று அவளை சீக்கிரம் வரச் சொல்லியிருந்தார் அவளது தலைமை செஃப் வேணுகோபாலன். இது போக வழக்கமாக அவர்கள் ஹோட்டலுக்கு வழக்கமாக வரும் விருந்தினரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செஃப் இருக்கும் அறை கதவை இவள் திறக்கவும் அவளது சக பணியாளரும் கிச்சன் நண்பருமான வினீத் அவள் பின்னாலே வந்து,

"குட் மார்னிங் பார்ட்னர்..." என்று அவள் செவிகளில் மென்மையாக ஓத,

"இடியட். இப்படித்தான் காதுல வந்தா குட் மார்னிங் சொல்லுவாங்க..." என்று செல்லமாகவே கோவித்தவள் தங்களுக்கு முன்னே வேணுவின் முன் அமர்ந்திருந்த ராபர்ட்டை கண்டு இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.

"குட் மார்னிங் செஃப்..." என்று அவர்களுக்குப் பின்னால் வந்த சந்தோஷ் குரல் கொடுக்க இவர்களின் புறம் திரும்பிய வேணு அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.

"செவன் தேர்ட்டிக்கு தான் ரிப்போர்ட் பண்ணும் படி செஃப் மஹேந்திரன் சொன்னாரு..." என்று மூவருக்கும் சேர்த்தவாறு பதிலளித்தாள் அஞ்சனா.

"எக்ஸாடா சொன்ன டைமுக்கு தான் ரிப்போர்ட் பண்ணனும்னு ஒன்னும் கட்டாயமில்லையே... யூ கைஸ் ஆர் இன் எ ரெஸ்பெக்டட் பொசிசன் இன் எ ரெப்புட்டேட் இன்ஸ்டிடூஷன்..." என்றதும்,

"சாரி செஃப்..." என்று வினீத் மூவருக்குமாகச் சேர்த்து மன்னிப்பை வேண்டவும் செஃப் மஹேந்திரன் வரவும் சரியாக இருந்தது.

முன்பு சொன்னதைப்போலவே அந்த புகழ்பெற்ற நட்சத்திர விடுதியின் தலைமை சமையற் கலைஞராக இருப்பவர் தான் வேணுகோபாலன். தலைமை சமையற் கலைஞராகவே இருந்தாலும் அவருடைய வேலையெல்லாம் இந்த அறையுடனே முடிந்துவிடும். அன்றைய தினத்திற்கான மெனுவை உறுதிப்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளை சுவைத்து விருந்தினருக்கு அதைப் பரிமாறலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதே அவர் பணி. அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் தான் மஹேந்திரனும் மனோஜும். கிட்சன் ஸ்டேஷனை முழுக்க முழுக்க தங்களுடைய கட்டுப்பாட்டில் தான் வைத்திருப்பார்கள். அவர்களுக்குக் கீழே தான் அஞ்சனா வினீத் சந்தோஷ் மற்றும் ராபர்ட் ஆகியோர் இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழே தான் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் உள்ளனர். 'ஸ்டார்டர் கோர்ஸ்' சந்தோஷின் தலைமையிலும் 'மெய்ன் கோர்ஸ்' வினீத் மற்றும் ராபர்டின் தலைமையிலும் 'டெஸர்ட்ஸ்' அஞ்சுவின் தலைமையிலும் இயங்குகிறது. அன்றைய தினத்திற்கான மெனுவை வேணுகோபாலன் மஹேந்திரன் மற்றும் மனோஜ் ஆகியோர் கலந்தாலோசிக்க 'சாக்லேட் அவகேடோ மௌஸ்' மற்றும் 'காஃபி வால்நட் கேக்' ஆகியவற்றை அஞ்சு சொல்ல ஒரு கணம் யோசித்த வேணு தன்னுடைய தலையசைப்பில் சம்மதம் தெரிவித்துவிட அஞ்சு கிச்சனுக்கு விரைந்தாள்.

அஞ்சனா எப்போதும் இப்படித்தான். அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவளாகவே தீர்மானித்து விடுவாள். தீர்மானிப்பதில் இல்லை அவளுடைய சாதுர்யம். தன்னுடைய தீர்மானத்தை எந்த வித ஆட்சேபனைக்கும் இடமின்றி வேணுவை சம்மதிக்க வைப்பதில் தான் அவளுடைய சாதுர்யம் ஒளிந்திருக்கிறது.

அங்கே கிச்சனில் தன் ஜூனியர்களுக்கு மெனுவையும் அதைச் செய்யும் முறையையும் விளக்கிக்கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த வினீத்,

"எப்படி பார்ட்னர் எப்பயுமே இப்படி எள்ளுனா எண்ணையாவே இருக்க. நாங்க சொல்றதை ஒண்ணுக்கு மூணு முறையாவது கரெக்சன் பண்ணி தான் செஃப் ஓகே பண்ணுவார். ஆனா நீ மட்டும் எப்படி?" என்று எப்போதும் போல் இப்போதும் அவளை விந்தையாகவே பார்த்தான் வினீத்.

"என்னையே சைட் அடிச்சது போதும். போய் கொஞ்சம் வேலையும் பாரு..." என்று அஞ்சனா சொல்ல அதில் தெளிந்தவன்,

"இருந்தாலும் உனக்கு இவ்வளவு கற்பனை கூடாது. உன்னைப்போய் யாராச்சும் சைட் அடிப்பாங்களா?" என்று கிண்டல் பேச,

"ஆமா இவரு பெரிய மன்மத குஞ்சு... உன்னை கட்டிக்கப்போறவளை நான் பார்க்கத்தானே போறேன்..." என்னும் வேளையில் மனோஜ் அங்கே வர வினீத் இடத்தை காலி செய்தான்.

காதலால் நிறைப்பாள்...

அவ்வளவு தான் மக்களே! i have ran out of episodes. அடுத்து பதினோராம் தேதி தான் அடுத்த எபி வரும். 11 ஆம் தேதி ஒரு சம்பவம் இருக்கு. last year 0.15 ல மிஸ் பண்ண sbi po வோட interview இந்த முறை 11 th அன்னைக்கு நடக்குது. அதுவரை எழுத முடியாது. படிக்குற வேலை பெருசா இல்லைனாலும் வயித்துக்கு தொண்டைக்கும் இடையில் உருவமில்லா ஒரு உருண்டை உருள ஆரமிச்சிடுச்சி? அதையும் மீறி எபிசோட் எழுதுற அளவுக்கு நான் அப்பாடக்கர் இல்ல? அப்போறோம் என் கதைகள் எப்பயுமே 18+ தான். சிலது கன்டென்ட் வைஸ் சிலது டைலாக் வைஸ். சோ இந்த எபிசோட் படிச்சிட்டு யாரும் காண்டாக வேண்டாம்? அப்படி என்ன இருக்கு இந்த எபிசோட்ல னு இப்போதான் சிலருக்கு டௌட்டே வந்திருக்கும். அப்படி வந்திருந்தா ரொம்ப சந்தோசம்? அதுவரைக்கும் நாலு டீசர் வேணுனா வரும். அப்பறோம் நிறைய பேருக்கு 'ஆஹா என்ன ருசி' ஞாபகம் இருக்கும்னு நினைக்குறேன். அந்தக் கதை இங்க இருந்து எடுத்துட்டேன். யாராச்சும் படிக்க விரும்பினா மார்ச்ல இருந்து rerun போடுறேன். இது வரைக்கு வந்ததுல இந்தக் கதை தேறுமா நல்லா இருக்கா புரியுதா புரியலையானு கமெண்ட் பண்ணுங்க... நன்றி?

Nirmala vandhachu ???
All the best pa @praveenraj ???
 
எல்லாமே புரியுது... நல்லாவே புரியுது ???

Yes, எனக்கு ஞாபகம் இருக்கு போன முறை மிஸ் பண்ணிட்டேன் சொல்லி பீல் பண்ணீங்க :(:(
Don't Worry, இந்த முறை கிடைப்பதற்கு வாழ்த்துகள் ???

ALL THE BEST FOR YOUR INTERVIEW ???
 
Top