Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)... 1

Advertisement

praveenraj

Well-known member
Member

"சில சமயம் வாழ்க்கை இப்படித்தான். பெரிதினும் பெரிது கேள் என்றொரு வாசகம் உண்டு. எல்லோரும் பெரியதையே கேட்கும் பட்சத்தில் சிறியதெல்லாம் ஏன் படைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்வியும் கூட. ஆனால் இங்கே நிரந்தர பெரியது நிரந்தர சிறியது என்று எதுவுமில்லையே. பெரியது சிறியது என்பதை அந்தந்த காலகட்டத்தின் தேவை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. பசியில் இருப்பவனுக்கு கண்ணில் படும் உணவு யாவும் பெரியது தான். வயிறு புடைக்க உண்டவனுக்கு தேவைப்படும் வெற்றிலை சீவல் உருவத்தில் சிறிது என்றாலும் அதுகாறும் அவன் உண்ட உணவின் நிறைவை அந்த வெற்றிலையால் மட்டுமே கொடுக்கமுடியும். அந்தந்த நேரத்து நியாயங்கள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. கிருஷ்ணப்ரியாவின் முடிவு உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் அதை ஒன்றும் சொல்ல முடியாது. விமர்சிப்பவர்களால் வாழமுடியாது. வாழ்பவர்களால் விமர்சிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் விடை எதிர்பார்க்க கூடாது. சில கேள்விகளை கேள்விகளாகவே விட்டுவிட வேண்டும். அதற்கு விடை தேட முயன்றால் நம் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விடவும் கூடும். நிஷாந்த் இழைத்த தவறுக்கு கிருஷ்ணா தன் தவறின் மூலமாகவே பதிலளித்து விட்டாள். ஆனால் கிருஷ்ணாவின் தவறுக்கான முடிவு? வாய்ப்பிருந்தால் வேறொரு கதையில் பதில் அளிக்கிறேன்...

ப்ரியங்களுடன்,
பவித்ரா குமாரசாமி"

என்று பவித்ரா சொன்னதை எல்லாம் தட்டச்சு செய்தான் நவிரன். தான் சொல்லும் போதே அதில் நவிரனுக்கு உடன்பாடில்லை என்று பவித்ராவும் புரிந்து கொண்டார் தான். ஒவ்வொரு முறை பவித்ராவைத் திரும்பி திரும்பி பார்த்தவன் இறுதி வார்த்தையைத் தட்டச்சு செய்து முடித்ததும்,

"ஏன் இப்படிப் பண்ண? உனக்கு கொஞ்சம் கூட கிருஷ்ணா மேல இரக்கமே இல்லையா?" என்று கேட்டவனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் குடிகொண்டது.

"அதில்லை நவி..."

"நீ நிறுத்து. எனக்கு உன் எக்ஸ்ப்ளனேஷன் வேணாம். அதெப்படி ஒருத்தங்க வாழ்க்கை இப்படி ஆரம்பத்துல இருந்து இறுதி வரை போராட்டமாவே இருக்கும். அப்படி வாழ்க்கை ஃபுல்லா போராட்டமாவே இருந்தா எப்படி மேற்கொண்டு வாழணும்னு ஆசை வரும். ஏதோ ஒரு பாயிண்ட்ல போடா இந்த வாழ்க்கையும் வேணாம் ஒரு டேஷும் வேணாம்னு ஏதாவது தப்பான முடிவைத் தான் எடுக்க தூண்டும். ஏன் அந்த நிஷாந்துக்கு தண்டனையே கிடைக்கல? தப்பு பண்ணவன் இனிமேல் ஜாலியா சுத்தப் போறான். ஆனா தவறிழைக்கப்பட்டவள் வாழ்க்கை முழுக்க அதையே நெனச்சு வாழணுமில்ல? திஸ் இஸ் சோ ரிடிக்குலஸ். நீ வேணுனா பாரு இதுக்கெல்லாம் சேர்த்து நீ நல்லா வாங்கிக் கட்டிக்கப்போற. அது உன் தலை விதி..." என்று இன்னமும் தன்னுடைய மனமாறாமல் புழுங்கிக்கொண்டு இருந்தான் நவிரன்.

அதுவரை நிசப்தமாக இருந்த அறைக்குள் நுழைந்தார் குமாரசாமி. அவர் கையிலிருந்த நற்றிணை நவிரனைக் கண்டதும் துள்ளி குதிக்க அவனுக்கு முன்பாக எழுந்த பவித்ரா அவளைத் தூக்கிக் கொண்டார்.

"அப்பா ப்பா..." என்று மழலையில் மொழிந்தாள் பதினான்கு மாத நற்றிணை.
இருவரும் ஆளுக்கு ஒரு புறமாக முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்ட குமாரசாமி,

"என்ன இது புயலுக்கு முன் அமைதியா இல்ல புயலுக்குப் பின் அமைதியா?" என்று நக்கலாக வினவ அதற்குச் சிரித்த பவித்ரா கண்ஜாடையில் நவிரனைக் காட்ட,

"என்னாச்சு நவி?" என்று அவனருகில் அமர்ந்தார்.

"நீங்களே இந்த நியாயம் கேளுங்க ப்பா. கிருஷ்ணாவை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கறதா ஏமாத்திட்டான் நிஷாந்த். ஆனா அவனுக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்காம கிருஷ்ணாவையே பழிவாங்கிட்டாங்க உங்க பொண்டாட்டி..."

"டேய் இது ஒரு கதை. ஜஸ்ட் எ நாவல். இதுக்கா இப்படி ஓவர் ரியாக்ட் செய்யுற?"

"நாவலா இருந்தா நியாயமா இருக்கக்கூடாதுனு ஏதாவது சட்டமா என்ன? எவ்வளவு அழகான பொண்ணு தெரியுமா கிருஷ்ணா? ஸச் எ போல்ட் பியூட்டிபுல் கேர்ள். கதை முழுக்க அவளை அவ்வளவு ப்ரொஃரஸிவா காட்டிட்டு கடைசியில இப்படி ஏமாந்து போறமாதிரி முடிச்சிட்டாங்க. சரி குறைந்த பட்சம் அவ ஜெயிச்ச மாதிரியா கூட முடிச்சிருக்கலாம்..." என்னும் போது பவித்ரா தன்னையும் மீறிச் சிரிக்கவும்,

"சிரிக்காத பவித்ரா. எனக்கு எரிச்சல் எரிச்சலா வருது. போ உன் பேச்சு டூ" என்றவன் எழுந்து அவர் கையிலிருந்த நற்றிணையை வாங்கி,

"பாட்டிகூட சேராதடா தங்கம். இவங்க சரியான சேடிஸ்ட் ரைட்டர். நீ வா நாம போய் விளையாடலாம்..." என்று நவிரன் வெளியேற,

"நவி, நில்லு. எல்லாம் பேக் பண்ணிட்டியா? அண்ட் ஆர் யூ சூர்?" என்றார் குமாரசாமி.

முன்னே சென்றவன் ஒரு கணம் நின்று திரும்பியவன்,"ப்பா இப்படிக் கேக்காதிங்கனு எத்தனை முறை உங்ககிட்ட நான் சொல்லியிருக்கேன்? எதுக்கு கடைசி நேரத்துல எனக்கு ப்ரெஸ்ஸர் கொடுத்து எம்பேரஸ் பண்றீங்க?" என்றவன் அதற்கும் சேர்த்து பவித்ராவை முறைத்தான்.

"உங்க சண்டையில நான் எங்க வந்தேன்? என்னை ஏன் முறைக்கிற?" என்று கூலாக வினவினார் பவித்ரா.

"ஏ பவித்ரா உன் எமோஷன் எல்லாம் கதையோட சரி? இல்லை கோபால் இல்லைனு சரோஜா தேவி மாதிரி உன் கதை ஹீரோவோட அம்மாங்க எல்லாம் பையன் வெளியூருக்குப் போனா கூட செண்டிமெண்ட் டைலாக் பேசுவாங்க ஆனா இங்க உன் பையன் அதும் உன் செல்லப் பையன் உன் சுண்டு உன் கைப்புள்ள நான் ஆஸ்திரேலியா போறேன்னு சொன்னதும் நீயும் சரினு சொன்னதோட சரி. மிஸ்டர் குமாராசாமிக்கு என் மேல இருக்குற அக்கறையில கொஞ்சம் கூட உனக்கு இல்லை தானே?" என்று நையாண்டியாகவே வினவினான் நவிரன்.

"டேய் அதென்ன எனக்கு உன் மேல இருக்குற அக்கறை கூடன்னு இழுக்குற? என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?" என்று குமாரசாமி நிஜமாகவே கோவம் கொள்ள,

"இங்க வா" என்று அவனை பவி அழைக்கவும் நற்றிணையுடன் அவருக்கும் குமாரசாமிக்கு இடையே சென்று அமர்ந்தான் நவிரன்.

"எப்பயும் எல்லாத்தையும் வார்த்தையிலே மட்டும் தான் கன்வே பண்ணனும்னு அவசியம் இல்ல. மௌனங்களும் கவி எழுதும். அண்ட் இது உன் வாழ்க்கை. ரெண்டு எலெக்சனுக்கு ஓட்டும் போட்டிருக்க. உன் கனவுகளுக்கு ஒரு நாளும் நான் குறுக்க இருக்க மாட்டேன் நவி. போயிட்டு வா. உனக்குனு பெரிய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் ஏதும் இல்லாத வயசிது. எக்ஸ்ப்ளோர் யுவர் செல்ப். புது நாடு புதிய மக்கள் புது காலேஜ் கலக்குற நவிரன் கலக்குற..." என்று சொன்னாலும் இறுதியில் பவித்ராவின் குரல் தடுமாற்றம் அடைந்தது என்னவோ உண்மை.

"ஈவினிங் சீக்கிரம் வந்திடு. டின்னர் போலாம்..." என்றவரின் தோளில் சாய்ந்துகொண்டான் நவிரன். நவிரன் ஒரு அஃமார்க் அம்மா பிள்ளை. அவனுடைய இந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில் அவனுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஃப்ரண்ட் என்றால் அது பவித்ரா தான். பெரும்பாலும் ம்ம்மி எப்போதாவது அம்மா சமயங்களில் பவி அல்லது பவித்ரா. எல்லோரையும் வாங்க போங்க என்று மரியாதையாக அழைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அம்மாவை ஒருமையில் அழைப்பதில் தான் பேரானந்தம் ஒளிந்திருக்கிறது என்பது என் கூற்று. வம்பிழுக்கும் மூடில் நவிரன் இருந்தான் என்றால் பவித்ராவை 'பாகு'(பவித்ரா குமாரசாமி என்பதன் ஆங்கில சுருக்கம்) என்றும் அழைப்பான்.

"ரெண்டு வருஷம் தான் ஃபாரின் எல்லாம். அப்பறோம் இங்கேயே வந்திடுவேன். அதுக்குள்ள நீயும் ஒரு அட்வென்சர் ஃபேண்டஸி கதை எழுதியிருக்கனும் பார்த்துக்கோ. என்ன பெரிய ஜே.கே ரௌலிங். விதவிதமா துடைப்பத்துல தான் பறக்குறான் அந்த ஹார்ரி. நீ எதாவது புதுசா எழுது. ஜே கே ரௌலிங்கே எங்க அம்மா சவால் விடுவாங்க. என்ன கரெக்ட்டாப்பா?" என்று அவன் தந்தையைக் கேட்க அவரும் தெரியாமல் ஊம் கொட்டிவிட,

"பாரு நீ என்ன சொன்னாலும் ஊம் கொட்ட கூடவே ஒரு ஆளு இருக்கு. பேசாம நம்ம அப்பாவை ஹீரோ ஆக்கிடு. மார்கழி மாசத்துல நாய் ஏன் குரைக்குதுனு பார்க்க எழுந்து வரார் மிஸ்டர் குமாரசாமி. அப்போ எதிர்பாரா விதமா ஒரு கரப்பான் பூச்சி அவரைக் கடிச்சிடுது. உடனே அவர் ஒரு காக்ரோச் மேன் ஆகிடுறார். ராத்திரி காக்ரோச் பகல்ல மனுஷன். தன்னோட இந்த விசித்திர அவதாரத்துல எப்படி பூமியை நோக்கி படையெடுக்கும் ஒரு வெட்டுக்கிளி ஏலியனை தனி ஆளா காப்பாத்தறார்ங்கறது தான் கதை. எப்படி? டைட்டில் கூட ரெடி. 'காக்ரோச் சாமியும் விசித்திர பூச்சியும்' இதையே கொஞ்சம் ஆன்மீகமா எழுதினா 'அவதார புருஷன் தோன்றினார்'னு எழுது. என்ன ஓகே வா?" என்று நவிரன் சொல்ல சொல்ல பவித்ரா விழுந்து விழுந்து சிரித்தார்.

இவர்களின் சிரிப்புச் சப்தத்தைக் கேட்டதும் ஹாலிலிருந்த நலனும் மெர்சியும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே எட்டிப்பார்க்க அங்கே பவித்ராவின் மடிமீது தலைவைத்து குமாரசாமியின் மீது கால்களை நீட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் நற்றிணையைக் கிடத்தி கதைபேசிக்கொண்டிருந்தான்.

நலனும் மெர்சியும் அந்த அறையின் வாசலிலே நின்று இவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க ஏனோ குமாரசாமிக்குத் தான் மனம் சற்று நெருடலாக இருந்தது. தந்தையின் முகத்தை வைத்தே அதை யூகித்த நவி ஊருக்குச் செல்லும் முன் இதற்கொரு முடிவுகட்ட எண்ணினான்.

அப்போது வேண்டுமென்றே தன்னுடைய செல்லை எடுத்தவன் அந்த மாதத்தின் ட்ரெண்டிங்காக இருந்த வேலையில்லா பட்டதாரி படத்தின் 'அம்மா அம்மா நீ எங்க அம்மா... உன்னை விட்டா எனக்காரு அம்மா...' என்ற பாடலை ஒலிக்கவிட வெளியே நின்றவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்த பவித்ராவின் மீது நவிரனுக்கு உண்மையிலே கோவம் வந்தது.

2014 ஆம் ஆண்டின் பிற்பகுதி அது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐநூறு மற்றும் ஆயிரம் ருபாய் தாள்கள் செல்லாக்காசாகும் என்ற உண்மை அறியாமல் அவற்றை கொடுத்து அதற்கீடான ஆஸ்திரேலியன் டாலர்களை பணப்பரிமாற்றம் செய்து எடுத்து வந்திருந்தான் நலன். இதை இப்போதே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இதை ஒரு சாக்காக வைத்து பெற்றோரின் அறைக்குள் நுழைய எண்ணியிருந்தான் நலன்.

"ஏன் அங்கேயே நிக்குற? உள்ள வா நலா. வாங்க அண்ணி..." என்று நவிரன் அழைக்க எல்லோரின் முகத்திலும் ஒரு அசௌகரியம் கூடியது ஏனோ உண்மை.

அப்போதும் உள்ளே வராமல் அவர்கள் பவித்ராவின் பதிலுக்காகவே காத்திருக்க இன்றைய இரவுக்குள் இந்த லக்ஷ்மண கோட்டை அழித்தே தீர வேண்டும் என்று சூளுரைத்துக்கொண்டவன்,

"அண்ணா, நைட் நாம எல்லோரும் டின்னருக்கு போறோமாம். அம்மா டேபிள் புக் பண்ணச் சொன்னாங்க. நீ செஞ்சிடுறியா?" என்றதும் பவித்ரா அதிர குமாரசாமியும் நலனும் உள்ளுக்குள் ஆசுவாசமடைந்தனர். பவித்ராவுடைய பிடிவாதத்தின் எல்லை நவிரன் தான் என்று அவர்களும் அறிவார்களே!

இன்றோடு இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று மனப்பால் குடிந்துகொண்டிருந்த நவிரனின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கக்கூடியவளை இன்னும் ஒரு வாரத்தில் சந்திக்கப்போகிறோம் என்பதை பாவம் நவிரன் அறியவில்லை. அது மட்டுமா? இந்த டைம் மெஷின் படங்களில் வருவதைப்போல அவனுடைய மொத்த வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஒரு நிகழ்வு இனிமேல் தான் அரங்கேற போகிறது என்றும் அதன் தாக்கம் அவன் வாழ்வில் கூடவே வருமென்றும் அறியாத சிறுபிள்ளை ஒரு சிறுபிள்ளையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறது.

காதலால் நிறைப்பாள்...

first epi வந்திடுச்சுனு யாரும் அடுத்தடுத்து எபிசோட் எதிர்பார்க்க கூடாது மக்களே! அப்பறோம் கம்பெனி அதுக்கு பொறுப்பேற்காது. இருந்தாலும் அடுத்த 15 நாட்களில் இன்னும் இரண்டு எபிசோட் தான் வரும். அதுக்குப் பிறகு வேகமா இந்தக் கதையை முடிச்சிடுறேன்? எப்படி இவ்வளவு உறுதியா சொல்றேன்னு நீங்க ஆச்சரிய படலாம். காரணம் இருக்கு. ஏன்னா நம்பிக்கை அதானே எல்லாம்? வாழ்க்கைங்கற வண்டியே நம்பிக்கைங்கிற சக்கரத்துல தானே ஓடுது? காலையில கண் விழிப்போம்ங்கற நம்பிக்கையில தானே ராத்திரி கண் மூடி தூங்குறோம். காலையில சூர்யன் உதிங்குற நம்பிக்கையில தானே வெய்ட் வெய்ட் நான் சொன்னா இப்படி சொல்லிட்டே போவேன். சோ trust me?

எப்போ பிரவின்ராஜ்ங்கற என் பேரை பிர'வீண்' ராஜ்னு அட்மின் எழுதினாங்களோ அப்போவே ஏதோ தப்பா பட்டது. பார்ப்போம்? just for fun

Nane firstu ???
 
மௌனங்களும் கவி எழுதும்.????
நவிரன் ஒரு அஃமார்க் அம்மா பிள்ளை.
Ahaan ?????

நலன் மகள் நற்றிணை, என்ன இந்த ரைட்டர் நலன் ஐ அவாட் பணறாங்க ??.. Hero பாய் just 22 ஆஹ். நெஸ்ட் நம்ம ஆஸ்திரேலியா போறோமா ?

Adventure கதை ???????

நானே idea தேடினேன் நல்லா வேளை கொடுத்தீங்க ???????

நல்லா கலகலப்பா இருக்கு praveen. ☺☺ஆவலுடன் அடுத்த பதிவு எதிர்ப்பார்க்கிறேன்.
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story pa
 
Ahaan ?????

நலன் மகள் நற்றிணை, என்ன இந்த ரைட்டர் நலன் ஐ அவாட் பணறாங்க ??.. Hero பாய் just 22 ஆஹ். நெஸ்ட் நம்ம ஆஸ்திரேலியா போறோமா ?

Adventure கதை ???????

நானே idea தேடினேன் நல்லா வேளை கொடுத்தீங்க ???????

நல்லா கலகலப்பா இருக்கு praveen. ☺☺ஆவலுடன் அடுத்த பதிவு எதிர்ப்பார்க்கிறேன்.
அதே அதே? அடுத்த எபிசோட்ல காரணம் தெரியும். எஸ் ஆஸ்திரேலியால கொஞ்சமும் லண்டன்ல கொஞ்சமுனு கதை நகரும். திரும்ப சென்னை திருவண்ணாமலைனு நகரும்... சூப்பர் சூப்பர் நீங்களே எழுதுங்க? நான் படிக்க ரெடி. சீக்கிரம் கொடுக்கறேன் sis? நன்றி ?
 
Top