Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 4

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member


" ஏய் , ஏய் யாரது? விடு என்னை விடு, யாராவது என்னைக் காப்பாத்துங்களேன் பிளீஸ் " என்று கதறினாள் வெண்ணிலா.
அவளது கதறல் ஒலி வெளியே எங்கும் கேட்காதவாறு, ஒரு கரத்தினால் அவளது இடையை வளைத்த அந்த உருவம் மறு கரத்தினால், அவளது நாசிகளில் மயக்க மருந்தை ஸ்பிரே செய்தது.
அவ்வளவு தான், சில நிமிடங்களில் வெண்ணிலா ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்று விட்டாள்.


கடிகாரம் மணி நான்கரை என்றது. மகளை எதிர்பார்த்தவாறே, வாசலில் ஒரு பார்வையைச் செலுத்தியபடி, வாடிக்கை பூக்காரியிடம், வாங்கிய முல்லை அரும்பினை நெருக்கமாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள் மேனகா.
' இதென்ன, இவ போரூரில இறங்கிட்டேன்னு சொல்லி அரை மணி நேரம் ஆகிப் போச்சு. இன்னும் வீடு வந்து சேரக் காணோமே. நான் தான் ஆட்டோ பிடிச்சுட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருன்னு சொல்விட்டேனே. அப்புறம் என்ன, இவ பஸ்சுக்காக எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கணும். ம் இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு, திரும்பவும் அவளுக்குப் போன் பண்ணிப் பார்த்துடுவோம் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் மேனகா.
மணி, ஐந்து அடிக்கும் முன்னரே சபாபதியும், மிருதுளாவும் வந்து விட்டிருந்தனர்.

" அம்மா, அக்கா எங்கேம்மா? இந்நேரம் வந்து இருப்பாளே, அக்கா , வெண்ணிலா அக்கா, அக்கா " என்று மிருதுளா உச்சஸ்தாயியில், அழைத்திட
உடனே மேனகா, " ஏய் நிறுத்துடி. அவ இன்னும் வரலை. அவ நம்பருக்குக் கால் பண்ணு " என்று மேனகா சொன்னாள்.
" என்னது? அவ இன்னுமா வரலை? மிருது, போன் பண்ணும்மா " என்று சொல்லிக் கொண்டே சபாபதி பின் கட்டுக்குச் சென்றார்.
மிருதுளா வெண்ணிலாவின் எண்களைத் தட்டினாள்.
முதலில் பீப், பீப் ஒலியுடன் முன்னுரை எழுதிய மறு முனை, அத்துடன் தனது உரையை முடித்துக் கொண்டது
சளைக்காத மிருதுளா, மீண்டும் ஒரு முறை அதே எண்களைத் தட்டினாள்.
அப்போதும் அதுவே தொடர்கதை ஆனது.
" அம்மா , அக்கா மொபைல் அவுட் ஆப் ரீச் போல இருக்கு. கொஞ்சம் நேரம் கழிச்சு, திரும்பவும், டிரை பண்றேன் " என்று சொல்லி விட்டு அவளும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
மேனகா தான் தொடுத்த அரும்பினை எடுத்து, ஈரத்துணிக்குள் சுற்றி வைத்தாள். அப்போது தான் அரும்புகள் , விரைவில் மலர்ந்து விடும் என்பது அவளது நம்பிக்கை.
பின் சமையலறைக்குச் சென்று, தேநீருக்காகப் பாலைக் காய்ச்சிட அடுப்பைப் பற்ற வைத்தாள்.
ஏனோ அவளது மனம், படபடவென்று, துடித்துக் கொண்டிருந்தது. ' ஏன் இப்படி மனசுக்குள்ளே ஒரே நெருடலா இருக்குது.. வயசுப் பிள்ளைங்களை வீட்டை விட்டு, படிப்பு, வேலைன்னு அனுப்பறதில முன்னக்கி இப்ப நாம நல்லாவே முன்னேறிட்டோம். ஆனா, அதுங்க சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னா மட்டும் இந்தப் பெத்த மனசு தவிக்கிற , தவிப்புல மட்டும் எந்த விதமான மாற்றமும் இல்லையே ' என்று புலம்பிக் கொண்டவள் மீண்டும், மிருதுளாவை அழைத்தாள் .
அதற்குள், சமையல் அறைக்குள் வந்து விட்டிருந்த மிருதுளா, " அம்மா , இப்ப திரும்பவும் கால் பண்ணினேன். ஆனா சுவிட்ச் ஆப் ஆகிடுச்சுன்னு சொல்லுதும்மா " என்று சொன்ன அவளது குரலிலும் இனம் புரியாத பீதி தென்பட்டது.
" என்னடி இது?. அப்பவே போரூரில இறங்கிட்டேன்னு சொன்னாளே. எப்படி இருந்தாலும் அவ நாலரை அல்லது நாலே முக்காலுக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துடுவாடி. இப்ப மணி அஞ்சே முக்கால் ஆகுது. இன்னும் வரக் காணோமே " என்று தவிப்புற்ற குரலில் சொன்னாள் மேனகா.
பின் கட்டுக்குச் சென்று தனது மாலை குளியலை முடித்து விட்டு வந்த சபாபதி, " ஏய், இப்ப வந்துடுவாடி .நீ போய் மத்த வேலைகளைக் கவனி. ஒருவேளை டிராபிக் ஜாமாகிக் கூட இருக்கலாம் இல்லை யா " என்றார்.
அரை மனதுடன் சமையலறைக்குச் சென்ற மேனகா, விருந்தினருக்காக வடை செய்திடவென தான் ஊற வைத்திருந்த, உளுத்தம் பருப்பினை, களைந்து மிக்ஸியில் இட்டு அரைக்கத் தொடங்கினாள்.


பூந்தமல்லி, ஹை ரோட்டில் அமைந்திருந்த அட்சயா மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில், ரவிச்சந்திரனின் வேலை விரைவில் முடிந்து விட்டிருந்தது.
அவன் மீண்டும் வண்டியைத் திருப்பிக் கொண்டு, தனது வீட்டிற்குச் செல்லும் பாதையைத் தீண்டினான்.
போரூர், ரவுண்டானா அருகே இருந்த, பரிசுப் பொருள் அங்காடியில், தனது தேவதைக்கென ஒரு, பொக்கே வாங்கிக் கொண்டான்.
' ம், பூவைப் பிடிக்காத பொண்ணுங்களும் இருக்காங்களா என்ன?.நம்மளோட முதல் பரிசு பூவாகவே இருக்கட்டும் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், ' உன்னைப் பார்த்த பின்பு நான், நானாக இல்லையே ' என்று தனது வாய்க்குள், பாடிக் கொண்டே, பொக்கேவிற்கான தொகையைச் செலுத்துவதற்காகத் தனது, பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்த போது அதனுடன் இணைந்து, ஒரு எட்டாக மடிக்கப்பட்ட தாளும் வெளியே வர, ரவிச்சந்திரன், அதனை விரிக்கத் தொடங்கினான்.
" ஹாய், வெண்ணிலா.." என்று தொடங்கிய அந்தக் கடிதத்தைக் கண்டவுடன் தான், அவனுக்கு ரோகிணி மருத்துவமனையில் அந்தக் கடிதம் தன்னிடம் சேர்ப்பிக்கப்பட்ட, நிகழ்வு , ஞாபகத்திற்கு வந்தது.
' ம், ச்சேச்சே இதை நாம படிக்க வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்தில வெண்ணிலாவைப் பார்க்கத் தானே போறோம்..அப்ப அவ கையிலேயே கொடுத்துடுவோம் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனாய் ( நம்ப ஹீரோ அடுத்தவங்களுக்கு வர்ற லெட்டரை எல்லாம் படிக்க மாட்டாரு) மீண்டும் தனது சட்டைப் பையில் அந்தக் கடிதத்தினைத் திணித்துக் கொண்டான்.
சென்னை மாநகரத்தின், போக்குவரத்து வெள்ளத்தில், நீச்சல் அடித்துக் கொண்டு, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான் ரவி .
அவன் வீடு வந்து சேர்ந்த போது அவனது தாய் சுமதி, தனது வேலைகளை முடித்து விட்டு, தொலைக்காட்சி பெட்டியின் எதிரில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
மகனைக் கண்டதும், " டேய், தம்பி சட்டுன்னு கிளம்புடா. இப்பக் கிளம்பினாத் தான் நாம ஒரு ஆறரை மணிக்காவது பொண்ணு வீட்டுக்குப் போய்ச் சேர முடியும். நான் ரெடியா தான் இருக்கேன் " என்று சொன்னாள் சுமதி.
" இதோ வந்துட்டேன் மா " என்று சொல்லிய ரவி, ஒரு நிமிடம் தான் வெண்ணிலாவை மருத்துவமனையில் பார்த்து விட்டதை , சுமதியிடம் சொல்லி விடலாமா? என்று யோசித்தான்.
பின், தனக்குள் சிரித்துக் கொண்டவனாய், " அம்மா, ஒரு விஷயம். இன்னிக்கு, நான் ஆர்டருக்காகக் கான்வாஸ் பண்றதுக்காகப் போன ஹாஸ்பிட்டல்ல வச்சி , இந்தப் பொண்ணைப் பார்த்தேன்மா " என்று சொன்னான்.
சுமதி அவனை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தாள். " ஏய், நிஜமாவா சொல்றே. அந்தப் பொண்ணைப் பார்த்துட்டியா? உனக்குப் பிடிச்சுருக்கா? ஏதாவது பேசினியா என்ன? " என்று கேட்டாள்.
" ம்ம், டாக்டரை மீட் பண்றதுக்கு அவ தான் ஹெல்ப் பண்ணினா. அப்பப் பேசினேன் " என்று சொன்னான்.
ரவிச்சந்திரன், வெண்ணிலாவை ஒருமையில் குறிப்பிட்டுச் சொன்னதைத் தனக்குள் குறித்துக் கொண்டது அந்தத் தாய் மனம்.
அதற்கு மேல் அவள் அவனை எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை .
ஆனால், இந்த முறையாவது, ரவியின் மனம் சிறிதும் ஏமாற்றம் அடைந்து விடக் கூடாது என்பதே, அவளது பிரார்த்தனையாக இருந்தது.

வெண்ணிலாவுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை.
கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டிருக்கிறாள். உள்ளுக்குள் ஒரு குரல், ' ஏய், கருப்புக் கலர் உனக்கு ஆகாதுடி. இனிமே கருப்பு கலர் டிரஸ் எதுவும் வாங்காதே ' என்று
ஒரு குரல் ஒலிக்கிறது.

மொட்டை மாடிக்குச் செல்ல எண்ணி முதல் படிக்கட்டில் தனது காலை வைக்கிறாள்.
அப்போது எதிர்பாராத விதமாக , மின் தடை ஏற்பட்டு விட, தட்டுத் தடுமாறி, அந்தக் கனத்த இருளுக்குள் ஒவ்வொரு படிக்கட்டாகத் தனது பாதங்களை அழுந்தப் பதித்தவாறே, ஏறிக் கொண்டே வருகிறாள்.
அப்போது, ஒரு கரம் நீண்டு அவளது கழுத்தைப் பிடித்து நெரிக்கிறது.
"ஆ, ஐயோ அம்மா " என்று கத்தியவாறே எழுந்து கொள்கிறாள் வெண்ணிலா.
நெடிய மயக்கத்திற்குப் பின் கண் விழித்துக் கொண்ட வெண்ணிலாவுக்குத் தலை விண் விணென்று தெறித்தது. தான் கண்டது கனவு தான் என்று அப்போது தான் அவளுக்குப் புரிந்தது.
சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டிருந்தமையால், அவளது கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.
மனம் மட்டும், முழுவதுமாக விழித்துக் கொண்டிருந்தது.
ரவிச்சந்திரனிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டதும் தன்னை யாரோ பிடித்து இழுத்து மீண்டும் ஒரு காருக்குள் திணித்துச் சென்றது , அவளுக்கு நினைவில் இருந்தது. ஆனால் அது யார் என்பது அவளுக்குத் தெரியவில்லை.


தான் வீட்டுக்குச் செல்லவில்லை, ரவி தன்னைப் பெண் பார்க்கவும் வரவில்லை என்பது நினைவிற்கு வந்ததும் அவளுக்கு அழுகை வெடித்துக் கிளம்பியது.
' அப்படின்னா, எனக்கு என்ன தான் ஆச்சு? நான் இப்ப எங்கே இருக்கேன்? " என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.
அவளது மேனி, பயத்தில் தூக்கி வாரிப் போட்டது. " யாரது? யாராவது இங்கே இருக்கீங்களா? யாராவது இருக்கீங்களா? நான் இப்ப உடனே எங்க வீட்டுக்குப் போகணும். எங்க அம்மா, அப்பா என்னைத் தேடுவாங்க . பிளீஸ் என்னை விட்டுடுங்க, என்னை விட்டுடுங்க " என்று பெரிதாகக் குரல் கொடுத்துத் தேம்பி அழத் தொடங்கினாள்.
ஆனால் அவளது அலறல் எவரது செவிகளிலும் விழுந்தாற் போலத் தெரியவில்லை.
அந்த இருட்டு அறைக்குள் இருந்து பார்த்த போது, வெளிப்புறத்தின் வெளிச்ச அடையாளம் மெல்லிதாகத் தென்பட்டது.
யாரோ தனது அறையை நோக்கி வருவது, கதவின் கீழிடுக்கின் வழியாகப் புலப்பட்டது.
கதவை யார் திறக்கப் போகிறார்கள்? வெண்ணிலாவைப் போல நாமும் காத்திருப்போம்!


வீட்டைப் பூட்டி விட்டு காரில் ஏறிக் கொள்வதற்காக வாசலை விட்டு தாயும் மகனும் கீழே இறங்கிய போது ரவியின் அலைபேசி ஒலித்தது.
அதனை உயிர்ப்பித்து, தனது செவிகளைக் கொடுத்த ரவிக்கு மறு முனையில் ஒலித்த சபாபதியின் பதட்டம் மிகுந்த குரல், பயமுறுத்தியது.
" என்னது, இன்னுமா வரலை? நான் தானே அவளைப் போரூரில டிராப் பண்ணினேன். நாலு மணிக்கெல்லாம் அவ இறங்கிட்டாளே " என்று அவரைத் தாண்டிய பதட்டத்துடன் ரவி கூறிட , சுமதி கேள்விக் குறியுடன் அவனைப் பார்த்தாள்.



( வரும்)










 
அட ஆண்டவா திக்கு திக்கு இருக்கு.. இந்த ஹாஸ்பிடல் ஆளுங்க தான் இதுக்கு காரணமா.. அடே நல்லவனே இந்த பேப்பர் யை கொஞ்சம் படிச்சி தான் பாரேன் ..
 
Very interesting update
யார் கடத்தினது
ஹாஸ்பிடல் ஆளுங்களா
லெட்டரை கொஞ்சம் படியேன்டா
 
Top