Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ!புது வசந்தம்! விமர்சனம் 🧡💞💞🧡

Advertisement

Narmadha mf

Well-known member
Member
24-23-3-1-0-14-53m.jpg
கதையின் நகர்வு மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. இருப்பது ஒரு வாழ்க்கை அந்த வாழ்க்கையை வசந்தமாக்குவதும் வறண்ட நிலமாக்குவதும் அவரவர் சாமர்த்தியம் என்பதை இந்த கதையில் கரிகால பாண்டியன் மதுமிதா தம்பதியினர் உணர்த்தியிருந்தனர்☺️☺️☺️☺️☺️.

கரிகால பாண்டியன்:
நல்ல ஆண்மகன், சிறந்த தமிழ் ஆசிரியர், கம்பீரம் இருந்தாலும் பொறுமையில் சிறந்தவன், தாய் -தந்தை குடும்ப உறவுகளின் பாரத்தை சுமந்து அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்ற தன்னையே உருக்கி கொண்டவன். தனக்கென தன் வாழ்வில் தன்னையே நம்பி வந்த வாழ்க்கைத் துணை மதுமிதாவை தன் உறவுகளின் முரண்பட்ட அவதூறு பேச்சுகளில் இருந்து காக்க வேதனையுடன் சில காலம் பிரிந்த போதும், அவளை மரியாதை உடன் தன் உறவுகளின் மத்தியில் தன் கனவு இல்லத்தில் குடியேற செய்ய இவன் பட்ட வேதனைகளும் மனதை கலங்கச் செய்தது😔😔, நல்லவனாக இருந்தாலும் வல்லவனுக்கு வல்லவனாக இருக்க வேண்டும் என்பதை அறிந்தாலும் உறவுகளுக்கிடையே விட்டுக்கொடுத்து சென்றதால் இவன் பட்ட வலிகள் ஏராளம்😒😒😒😒😒😒.

மதுமிதா:
அறிவும், அழகும், மேன்மையும் வசதியும் நிறைந்த செல்லக்கிளி. காதல் இயல்பானது அழகானது அந்தக் காதல் தான் எதையும் எதிர்த்து சிறகடிக்க இவளுக்கு கற்றுக் கொடுத்தது ஆனால் அதே காதல்தான் இவள் சிறகையும் வெட்டி ஒடுங்க செய்தது, இதனால் அவள் பட்ட வலிகளும், அவதூறு பேச்சுக்களும், விரக்தியும் என்ன சொல்ல விதியின் பொம்மலாட்டத்தில் இவள் வாழ்வும் ஆட்டம் கண்டது💔💔💔.

எவ்வளவுதான் இவளை ஒடுங்க செய்து ஒன்றுமில்லாமல் செய்ய நினைத்த நல் உறவுகள் என்னும் பெயரில் இருக்கும் பச்சோந்திகள் அவளைத் தாழ்த்தி வசை பாடினாலும் எதிர்த்து, துணிந்து, நிமிர்வுடன் தன் வாழ்க்கையை தன் கணவன் கரிகாலனுடன் அழகோவியமாய் மாற்றி அமைத்த வீரநங்கை இவள்😊😊😊😊😊.


கருப்பாயி- பாண்டி:
கருப்பாயி : இவரது வாழ்க்கையில் ஆரம்பகட்டத்தில் இருந்து ஏழ்மையில் தம் மக்களை உழைத்து, களைத்து காப்பாற்றியவர் தான் நல்ல தாய் தான் தம் மக்களுக்கு, ஆனால் ராஜபாண்டியன் பாரத்தையும் கரிகாலனின் பாரத்தையும் ஒரே தராசில் வைத்து பார்க்காதது இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது..
ராஜபாண்டி குடும்ப பாரத்தை சுமக்கவில்லை ஆனாலும் அவனை கலங்கக்விடாது அவனது குடும்பத்தை தாங்கி பிடித்த இவர் சின்ன மகன் கரிகால பாண்டியனுக்கு நியாயம் செய்யவில்லை 😒😒😒😒😒கரிகால பாண்டியன் குடும்ப பாரத்தையும் சுமந்து இறக்க வழி இல்லாமல் தவித்த போதும், அவன் வாழ்வில் அவனை நம்பி வந்த வாழ்க்கைத் துணையின் நடத்தையை ஊர் முழுக்க பேச்சு பொருளாக்கி கரிகாலனை தவிக்க வைத்த செயல் எல்லாம் இவர் மீது மதிப்பை குறைத்தது😒😒😒😒.

பாண்டி : என்ன சொல்ல இவர் ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருந்திருந்தால் இவர்கள் பிள்ளைகளை சரியாய் வழி நடத்தி இருக்கலாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை குடி குடியை கெடுத்து அவர் மதிப்பையும் குறைத்து காட்டியது, ஆனால் உண்மையில் இவரின் பாசத்தில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை...

சுந்தரம் -மீனாட்சி
சுந்தரம்: நல்ல மனிதர் பாசமான தந்தை நம் மக்களுக்கு நியாயம் செய்வதில் நேர்மையாக இருந்தார், இவரது மகளின் துணைவனாக கரிகாலனை தேர்வு செய்தது மிகவும் சிறந்தது தான் ஆனால் சில இடங்களில் தன்னையே அறியாமல் மகளுக்கு வலியை கொடுத்து விட்டார். இருப்பினும் அதனை சரி செய்து மகளையும் -மருமகனையும் அரவணைத்து நின்ற விதம் மனதை நெகிழ்த்தியது☺️☺️☺️.

மீனாட்சி: என் பார்வைக்கு இவரும் கருப்பாயிக்கு சலித்தவர் இல்லை என்று தான் தோன்றியது😯😯. மகள் மீது பாசம் இருந்த போதிலும் தனது வசதி பொருட்டு கர்வம், தலைகணமும் அதிகம் கொண்டவராய் தான் புலப்பட்டார்..
மருமகனை நல்ல மனிதனாக ஏற்காமல் அவனது வறுமையை சுட்டிக்காட்டி மரியாதை குறைவாக நடத்திய விதமும் பேசிய விதமும் இவரை தான் தாழ்ந்து காட்டியது. மகளின் வாழ்க்கையை பற்றி கதறும் இவர் அதே மகளை அவளின் கடந்த காலங்களை பேசியும் கரிகாலன் உடனான திருமண பந்தத்தை தூற்றியும் அதிகம் மகளை கதற செய்தார். பாசம் இருந்த அளவிற்கு இவரிடம் கனிவு குறைவாகவே இருந்தது..😒😒😒😒😒😒.

ராஜபாண்டி -சகுந்தலா:
இருவரும் ஜாடிக்கேற்ற மூடி தான், இருவரும் அவர் நலன்களையும் அவர் மக்களை மட்டுமே போற்றும் சுயநல தம்பதிகள். உறவுகளின் மீது கரிசனம் வேண்டும் என்ன சொல்ல அவரவர் நியாயம் அவரவர்க்கு🤷🤷.

ரம்யா -மாதவன்
ரம்யா அறிவு இருந்தும் தன் கையே மருமகளாய் ஓங்கி நிற்க வேண்டும் என்று அறிவிழந்து செயல்படுபவள், தானே ஒரு பிம்பத்தை மதுமிதாவின் மீது உருவாக்கி பொறாமையில் அவளின் வாழ்க்கை கூத்தை தெருக்கூத்தாக இவள் செய்த செயல் கோபத்தை ஏற்படுத்தியது😐😐😐.
மாதவன்: சுயநலம்😏😏

சின்ன மாயன்:☺️☺️☺️☺️
கரிகாலன் மதுமிதா வாழ்க்கையை ஒழுங்கப்படுத்தி அவர்களின் வாழ்க்கையின் ஒளி விளக்காய் இவர் செய்த நியாயமான விவாதங்களும், பிரச்சனையின் தன்மையை தன் சகோதரியிடம் கண்டிப்புடன் விளக்கிய விதமும் அபாரம்👏👏👏👏👏.
இவரை காணும் போது கரிகால பாண்டியனை காக்க வந்த ஈஸ்வர பாண்டியராகத்தான் என் கண்களுக்கு புலப்பட்டார்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

அம்பிகா, சுமதி: மனித நேயத்தின் இருப்பிடம் ☺️☺️☺️☺️ இவர்களின் உதவி மிகவும் அளப்பரியது மதுமிதா -கரிகாலன் தம்பதியினருக்கு🙏🙏🙏🙏🙏🙏.

கரிகாலன் -மதுமிதா வாழ்வின் வசந்தம்💞💞💞💞💞💞💞💞.
இவர்களின் வாழ்வின் தொடக்கமே பல முரண்பட்ட எண்ணங்களை இவர்களுக்கு கொடுத்தது, அவற்றை கலைய அதிகம் யார் பாடுபட்டனர் என்று பிரித்து சொல்ல இயலாது இருவரின் திருமண பந்தத்தின் மீதான கனமான நம்பிக்கையே இவர்களை காதலுடன் வாழ்க்கையை அதன் போக்கில் சென்று பலகட்ட சோதனையை, வேதனையைக் கடந்து மீண்டு தனக்கு கிடைத்த வாழ்க்கையில் வறட்சியை நீங்க செய்து புது வசந்தத்தை ஏற்படுத்தி மகள் தமிழிசையுடன் மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழ்கின்றனர்❤️🧡❤️🧡❤️🧡❤️.

மதுமிதா மாமனார் -மாமியாருடன் அழகாக அவர்கள் போக்கில் சென்றும் நிறைவான நிம்மதியை உறவுகளுக்கும் கொடுத்து எம்மை கவர்ந்தாள் ☺️☺️☺️☺️☺️.

மனம் கவர்ந்த நிகழ்வு:🥰🥰🥰🥰🥰🥰
இவர்களது பாட்டுக் கச்சேரியில் இசைக்கப்படும் பாடல்கள் மனதை ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது💕💕💕💕.
இவர்களது இன்னிசை என்றென்றும் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து ஒலிக்கட்டும் ☺️☺️☺️☺️.
வாழ்க வளமுடன்❣️❣️❣️❣️❣️.


கதைக்களம் அழுத்தமானதாகவும், எதார்த்தமானதாகவும், நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவில் நிறைவுடனும் அழகாக நிறைவு பெற்றது உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை எழுத்தாளரே 👌👌👌👌👌👌👌👌.

@ஆராதனா துரை போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐💐💐💐💐💐💐💐.
 
Last edited:
சூப்பர் சூப்பர் நம்மூ.♥️♥️♥️♥️♥️
நான் வாசிக்கும்போது சில விசயங்களை சிந்திக்காத கோணத்துல சிந்திச்சு அருமையா விமர்சனம் செஞ்சிருக்கீங்க. ஆவ்சம்டா 💞💞💞💞💞💞💞💞.
ஒவ்வொரு கேரக்டரையும் வர்ணனை பண்ணியிருக்கீங்க.
 
சூப்பர் சூப்பர் நம்மூ.♥️♥️♥️♥️♥️
நான் வாசிக்கும்போது சில விசயங்களை சிந்திக்காத கோணத்துல சிந்திச்சு அருமையா விமர்சனம் செஞ்சிருக்கீங்க. ஆவ்சம்டா 💞💞💞💞💞💞💞💞.
ஒவ்வொரு கேரக்டரையும் வர்ணனை பண்ணியிருக்கீங்க.
Thanks da🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Nice review.
BTW மதுவின் காதல் பற்றி detail ஆ எதாவது episode ல சொல்லி இருக்காங்களா??
அவ ஏன் police station ல இருந்தா ??
மாதவன் ஏன் வரல?
அது பத்தி கதையில் ஒன்னுமே வரலையே??
 
Top