Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 20

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 20

ஆயிற்று ஒன்பது மாதங்கள்.
சௌம்யாவும் ஒன்பது மாதம்.
அம்மா வளைகாப்பு பண்ணி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
நாகர்கோவிலில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சௌம்யா ஒதுக்கியது சந்துருவை மட்டும் அல்ல. அம்மாவயும் தான்.
அவளிடம் பேசவே மாட்டாள்.
அப்படியே பேச நேர்ந்தாலும் 'உம்' 'ஆமாம்' 'சரி' தான்.
இன்னும் குழந்தை பிறக்கும் வரை இங்கு இருக்க வேண்டுமே என்ற கவலயே அவளை அரித்தது. இருந்தாலும் தன் கடமை என்று பேசாமல் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி இருந்தாள்.
பக்கத்து வீட்டு இசக்கியம்மாவுக்கும் கல்யாணம் முடிந்து பேறு காலத்திற்கு வந்திருந்தாள்.
இவள் தனியாய் இருக்கும்போது இவளை வாசலில் நின்று பார்த்தவாறே உரக்க கூப்பிட்டாள்.
'சௌமி! நல்லா இருக்கியா? ரெண்டு வயித்துப் புள்ளக்காரிங்க பாத்துக்ககூடாதாம். அம்மா சொன்னாங்க. ஒன்ன சந்துரு மாமாவோட பொண்டாட்டி சின்னம்மா பாக்கணும்னு சொன்னா. சாயந்திரம் 4 மணிக்கு சந்தி சுடலை சாமி கோயில்ல இருப்பாளாம்.' என்று சொல்லி விட்டு வேகமாய் போய் விட்டாள்.
'என்னவா இருக்கும்' மண்டையில் புழு குடைந்தது சௌம்யாவிற்கு.
சாயந்திரம் 4 மணிக்கு இசக்கியம்மாளின் தங்கச்சியோடு கோயிலுக்குப் போனாள்.
கோயில் வாசல் பக்கம் இருந்த பழக்கடையின் அருகில் நின்றிருந்த ஒடிசலான அந்தப் பெண்ணைக் காட்டிய இசக்கியம்மாளின் தங்கை 'அது தான் சந்துரு மாமா அத்தை' என்றாள்.
'சரி நீ கோயில்ல போய் இரு. நான் வர்றென்.' என்றவள் அவளை நோக்கிப் போக எதிர்ப்பட்டாள் சித்தி உறவு முறை உள்ள சிவகாமி.
'நல்லா இருக்கியா சௌமி. அவரு எப்படி இருக்காரு?'
'நல்லா இருக்றென் சித்தி'
'எத்தன மாசம்?'
'ஒம்பதாவது'
அவள் சந்தி சுடலையை ஒருமுறை பார்த்து 'நல்ல படியா பிரசவம் நடக்க வைப்பா' என்று வேண்டிக் கொண்டு 'இங்க எங்க?' என்றாள்.
'பழம் வாங்கலாம்னு'
அவள் சட் என்று குசுகுசுத்தாள்.
'அந்த கடையில நிக்குதெ அது தான் ஒம் மாமா சந்துருவோட பொண்டாட்டி. சரியான தரித்திரம் பிடிச்சவ. இவ வந்ததுல இருந்து அவனுக்கு சோதன மேல சோதன தான். ஆட்டோ வித்தாச்சு. உங்க அத்த போயாச்சு. அவளுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணினவள்லாம் அஞ்சு ஆறு மாசம்னு வயித்த தள்ளிட்டு வந்து நிக்கிறா. இவளுக்கு ஒரு புழு பூச்சி முளைக்க மாட்டெங்குது. அவட்ட எதுவும் வச்சுக்காத. வரென் சௌமி'என்றவாறு அவள் நகர, சௌம்யாவிற்கு எதுவோ புரிவது போல் இருந்தது.
சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு பழக் கடையை நெருங்கினாள்.
'நான் தான் சௌம்யா.' என்று அவளிடம் கூற, அந்த சின்னம்மா கண்களில் சட் என்று திரளும் நீர்த்துளிகளொடு அவளைப் பார்த்தாள்.
'நல்லா இருக்கீங்களா? ரொம்ப அழகா இருக்கீங்க.. உடம்பு நல்லா இருக்கா?' என்று அவளது உப்பிய வயிற்றைப் பார்த்து கேட்டாள்.
சௌம்யா அளவுக்கு கலர் இல்லை என்றாலும் லச்சணமாகத்தான் இருந்தாள். சிரிக்கும்போது தெரியும் சிங்கப்பல்லே போதும். பேர் மட்டும் தான் கர்நாடகமாக இருக்கிறது. பேரில் என்ன இருக்கிறது?
'நான் மாமாவ பாக்கணும். நாளைக்கு காலைல இந்த கோயிலுக்கு வரச் சொல்றியா?'
திடுக்கிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்த சின்னம்மாளிடம், 'ஒன் பிரச்சினையைப் பத்தி பேசத்தான். நீ வேணும்னாலும் வா' என்றாள்.
'ஐயோ என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க. இனி உங்களத்தான் நான் மல மாதிரி நம்பி இருக்கேன். அவர வரச் சொல்றேன்.' என்று சொல்லி விட்டு சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்து விட்டு நகர்ந்தாள் சின்னம்மாள்.
மறுநாள் காலை 9 மணி.
அதே கோவில்.
அதே ஜோடி.
ஆனால் காலம் அவர்களது வாழ்க்கயையே புரட்டிப் போட்டிருந்தது.
சௌம்யா சந்துருவைப் பார்த்தாள்.
நிறம் கருத்து தாடி வைத்திருந்து கண்களில் ஒளியிழந்து அந்த கோலத்தில் அவனைப் பார்க்கவே அவளுக்கு கஷ்டமாய் இருந்தது.
அவளை ஒரு முறை பார்த்து விட்டு அவன் திரும்பி நின்று கொள்ள, அவள் கேட்டாள்.
'நல்லா இருக்கியா மாமா?'
அவன் 'உம்' என்று மட்டும் சொன்னான்.
'நீயும் நானும் நெனச்சது ஒண்ணு. நடந்தது ஒண்ணு. நானும் ஒரு குழந்தைக்கு தாயாகப் போகும்போது தான் ஒரு தாயோட மனசு புரியுது. ஆனா எங்கம்மா பண்ண விஷயத்துக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன். காலம் காலமா மொறப்பையங்கள கட்டிகிட்ட எல்லா ஃபாமிலியும் அப்படியா இருக்கு. அம்மா கொஞ்சம் பயந்துட்டா. பரவால்ல. எல்லாம் விதின்னு நெனச்சுக்கலாம்...'
'சௌமி..சாரி சௌம்யா. நீ கெளம்பு. யாராவது பாத்துட்டு நாளைக்கு ஏதாவது ஒனக்கு பிரச்சினைனா என்னால தாங்க முடியாது.'
'கவலப்படாதெ மாமா. என் ஹஸ்பெண்ட் அப்படிப்பட்டவர் இல்ல. ஒன் விஷயம் தெரிஞ்சு தான் என்ன கட்டிகிட்டாரு. ஒன்ன மறக்கக் கூட எனக்கு டைம் குடுத்தாரு. நான் தான் நிச்சயத்துக்கு முன்னாலேயே எப்ப ஒன் போட்டோ லெட்டர்லாம் குடுத்தேனோ அப்பவே ஒன் நெனப்ப அழிச்சிட்டேன். பொம்பளைங்களுக்கு அது ஈஸியானு எனக்குத் தெரியாது. ஆனா இன்னும் பழசயே நெனச்சிட்டு ஒன்ன நம்பி வந்தவளுக்கு 'மலடி' பட்டம் வாங்கிக் கொடுத்துறாத. அடுத்த வருஷம் சின்னம்மாவப் பாக்கறப்ப அவ என்ன மாதிரி நிக்கணும். இது தான் நீ எம்மேல வச்சிருந்த பாசத்துக்கு மரியாத சொல்லிட்டேன்.'
என்று சொல்லி விட்டு மெதுவாய் வயிற்றைப் பிடித்துக் கொண்டு'நான் வரென் மாமா' என்று இசக்கியம்மாள் தங்கச்சி கையைப் பிடித்துக் கொண்டு கோயிலை விட்டு சௌம்யா வெளியேற, அவளயே பார்த்துக் கொண்டு நின்றான் சந்துரு.
அன்று இரவு..
அல்வா பாக்கெட்டும் பூவோடும் வந்த சந்துருவைப் பார்த்து முகம் மலர்ந்து சிரித்தாள் சின்னம்மாள்.
'கள்ளி! நீ நல்ல கூரு சின்னு. யாரப் பிடிச்சா வேல ஆகும்கறது ஒனக்கு நல்லா தெரிஞ்சுருக்கு.'
உடனே சிணுங்கினாள் சின்னம்மா.
'அப்போ நான் இதுக்கு அலயறென்னு நெனச்சிட்டீங்களா'
'அப்படி இல்ல சின்னு. என்ன தான் ஆனாலும் நான் படிப்பு கம்மி தான. அம்மா இருந்தாலாவது ஏதாவது சொல்லி என்ன உணர வச்சிருப்பா. என் பிரெண்ட்ஸும் நான் எதுவும் சொல்லாததால என் மனச காயப்படுத்தக் கூடாதுன்னு 'விசேஷமா'ன்னு கேக்கல.எனக்கும் ஒன் மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு தெரியல. எல்லாம் தெரிஞ்சு நீ என்ன கட்டிகிட்டதால அவள நெனச்சி தான் ஒன்ன தொடுறென்னு நெனச்சுட்டா..'
'ஐயோ ராமா. என்ன கற்பன ஒங்களுக்கு. அப்படில்லாம் இருந்தா ஒங்கள கல்யாணம் பண்ணி இருக்கவெ மாட்டேன். புடிச்ச பொண்ணயே இப்படி தாங்கினவரு.. அம்மா பேச்சுக்கு மரியாத குடுத்து அவளயே விட்டவரு...பொண்டாட்டிய உள்ளங்கைல வச்சுத் தாங்குவாருன்னு பாத்தா..இங்க வந்து சமையல்காரியாதான் ஒரு வருஷம் இருந்துருக்கறென். அதான் ஒங்க மனசுல என்ன இருக்குங்கறத தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் அக்காவ தூது அனுப்பினேன்.'

என்று அவள் கட்டிலில் அவன் பக்கத்தில் அமர, 'இப்ப என்ன ஒன்ன உள்ளங்கைல வச்சித் தாங்கணும் அவ்ளோ தான' என்றவாறு அவன் கைகளை நீட்டியவாறே அவளை நோக்கி வர, 'மொதல்ல லைட்ட அணைங்க.' என்று சிலிர்த்தாள் சின்னம்மாள்.
 
Leenu

Well-known member
Member
Nice epi.
Yedo, unn valkaya nee vazha unnakku oru recommendation ah?? pavam unnal manaivikku ketta per.
Sowmi sonnathum instant ah varutha priyam????
Authore epi mela va?? Nalla irruku, tq.
 
Top