Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 9

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 9

'என்னது சேகர் அண்ணன் இல்லயா? என்ன சொல்றா இந்த அம்மா?'
ஆறுமுக அதிர்ச்சியோடு அம்மாவைப் பார்க்க, அவள் தொடர்ந்தாள்.
'என்ன கட்டிக்கறதுக்கு முந்தி ஒங்க அப்பாவுக்கு ஒரு தொடுப்பு. அவ பெத்தது தான் இந்த சேகர். அவ எங்கேயோ போயிட்டா. உங்க அப்பா என்ன கட்டிகிட்டாரு. நான் தான் பாவம்னு பாத்து சோறு போட்டு வளத்தேன். கொஞ்சம் பெரிசானதும் தூங்கறப்ப என் மேலயே கை வச்சுட்டான் அந்த ராஸ்கோலு. அதுக்கப்புறம் உங்க அப்பா அவன தொரத்தி விட்டுட்டார். அவன் கேரளால கொஞ்ச நாள் பெங்களூர்ல கொஞ்ச நாள்னு எங்க எங்க்கேயோ போவான். வருவான். மொறப்படி அண்ணன் தான். ஆனா கெட்ட புத்தி உள்ள பய.' என கண்ணீரோடு சொல்ல, ஆறுமுகம் யோசித்தாள்.
'ஆமாம்ல. சேகர் ஒரு நாள் கூட வீட்டில் தங்கியது இல்லை. அம்மாவை 'அம்மா' என்று கூப்பிட்டதில்லை. 'சோறு' 'டீ' 'அப்பா' போன்ற வார்த்தைகள் மட்டுமே. தங்கை, தம்பிகளுக்காக எதுவும் வாங்கி வந்ததில்லை. ஸ்கூலுக்கு கூட்டிப் போனதில்லை. சிவாவை என்றும் தூக்கிப் பார்த்ததில்லை. எப்படி இதெல்லாம் என் கண்ணுக்கு சிக்காமல் போனது?
அவள் ராக்காயியிடம் அனைத்தையும் சொல்லவே, அவள் அதிசயமும், அதிர்ச்சியும் அடைந்தாள்.
அம்மா கத்தினாள்.
'அன்னைக்குத் தான் வயசுக் கோளாறு, என் மேல கை வச்சான்னு நெனச்சா, என் புள்ளயயே கூட்டிக் கொடுத்துருக்கானே பாவிப்பய. அவன் வைசூரி வந்து சாவ. ஆத்தா அவன சும்மா வுட மாட்டா. என் வயிறு எரியுதே. பெத்த புள்ள இப்படி வந்து நிக்கறதப் பாத்தா.. என் பெத்த வயிறு துடிக்குதே.. மகமாயி ஒனக்கு இரக்கமே இல்லயா? அவன் கண்ணு அவிஞ்சுரக் கூடாதா? வாழக்குருத்து மாதிரி இருந்த பொண்ணு எப்படி வலி தாங்கிச்சோ? என் நெஞ்சு பதறுதே...' என்று அதையும் இதையும் புலம்பி வயிற்றில் அடித்துக் கொண்டாள்.
ராக்காயி ஓடி வந்து தடுத்தாள்.
'நீ சும்மா இரு செம்பகம். வயுத்துல புள்ள இருக்றத மறந்திட்டியா?'
'ஆமாம். இது ஒண்ணு தான் கொறச்சல். அப்பன முழுங்கிடிச்சி. அக்காவ இப்படி ஆக்கிரிச்சி. இன்னும் என்ன என்ன பண்ணப் போவுதோ?'
'அது பச்சக் குழந்த. அதுக்கு இன்னா தெரியும்? நீ சும்மா கெட. ஒம் புள்ள கணேஷ் கூட நடிக்கப் போவுது. அத்த நெனச்சு சந்தோஷப் படுவியா அத்த வுட்டுட்டு அழுவுற.'
'அவன எவ்ளோ நல்லவன்னு நெனச்சோம். இந்தச் சின்னப் புள்ளய இப்படி பண்றதுக்கு அவனுக்கு எப்படி மனசு வந்தது? அவன் புள்ளயும் இதும் வயசு தானே.'
'சரி வுடு. போனது திரும்ப வரவாப் போவுது. ஒம் புள்ளைக்கு இருக்ற புத்தி ஒனக்கு இல்லயே? ஒம் புள்ளயே நடிச்சு சம்பாதிச்சா அது நமக்குத் தானே நல்லது?'
'என்ன பேசுற ராக்காயி. அங்க போனா எவன் எவன் கூடயே இருக்க வேண்டியது இருக்கும். எம் புள்ள வாழ்க்க என்னாவது? கல்யாணம் காச்சின்னு ஏதாவது நடக்க வேண்டாமா? குடிகாரனோ, கூத்தியா வச்சிருக்கானொ கல்யாணம், புள்ள குட்டின்னு வேண்டாமா? இன்னைக்கு நடந்தத எத்தயோ மிதிச்சிட்டோம்னு நெனச்சு தல முழுகிரலாம். எம் புள்ள நல்லா இருக்கணும்.' கண்ணீர் வழிய முந்தானையால் துடைத்துக் கொண்டாள் செண்பகம்.
ராக்காயி என்ன பேசுவது எனத் தெரியாமல் அமைதியாய் இருக்க, ஆறுமுகம் வாய் திறந்தாள்.
'அம்மா, நான் சொல்றத நீ ஒண்ணு கேக்கறியா? எப்படியோ கெட்டுப் போயாச்சு. நம்ம குடும்பமோ நடுத் தெருவுல நிக்குது. நீயொ புள்ளத்தாச்சி. இத்தன பேருக்கு எப்படி சாப்பாடு போட்றது? நீ அரவான் கத சொல்லுவேல்ல.. போருக்காக அந்த கடவுள் தன்ன பலி குடுத்த மாதிரி நம்ம குடும்ப நல்லதுக்காக நான் ஏன் என்ன குடுக்கக் கூடாது? என் ஒருத்தியினால நம்ம வீட்ல எல்லாரும் வயிறு நெறய சாப்டா சந்தோஷம் தானே'
'அது இல்லடி. சினிமான்னு போனா கண்டவன் கூட இருக்க வேண்டியது வரும். புக், பேப்பர்னு ஒன்ன வெத வெதமா போட்டா எடுத்துப் போடுவான். புருஷனுக்கு காட்ட வேண்டியத ஊருக்கே காட்ட வேண்டியது வரும். நம்ம குடிசைக்கு எதிர்ல இருக்ற சுவர்ல ஒட்ற உமா தேவி படத்த பாத்துட்டு கெழடுல இருந்து கொமரன் வர எப்படி வாயில ஜொள்ளு ஊத்திட்டு வருதுன்னு நீயும் பாத்திருக்கேல்ல...'
'நீ சொல்றது சரி தாம்மா. சினிமாவோட இன்னொரு முகத்தையும் பாரு. நான் பிரபலமாயிட்டா நம்ம ஏன் இங்க இருக்கப் போறோம்? இந்த சுவத்தப் பாக்கப் போறோம்? கார்ல போறப்ப மனுஷங்க குரல் ஏன் நம்ம காதுல வுழப் போவுது? நல்ல வீட்ல இருக்கலாம். நல்ல சாப்பாடு சாப்டலாம். தம்பி, தங்கச்சிகள நல்லா படிக்க வைக்கலாம். எனக்கு செய்ய நெனச்சதெல்லாம் செவ்வந்திக்கு செய்யலாம். நான் சினிமால நடிக்கப் போகாம இருந்தா என்ன ஆவும்? நானும் தம்பி தங்கச்சியும் கூலி வேலைக்குப் போவோம். அதுல இன்னா வந்துரப் போவுது? இதே கஷ்டம் தான். வானா முழுக்க எல்லாரும் கஷ்டப்படறத விட நான் ஒருத்தி கஷ்டப்பட்டா.. நீங்க எல்லோரும் நல்லா இருக்கலாம்ல.?'
'ஒனக்கு ஏண்டி தலை எழுத்து? நான் ஒன்ன நல்லா வளத்து நல்ல ஆளா பாத்து கட்டி குடுக்கணும். நீ இப்படி அறுபது வயசு கெளவி மாதிரி பேசிட்டிருக்க..'
'அம்மா..நானா கணேஷப் பாக்க போல. நடிகை ஆகனும்னு ஆசப்படவும் இல்ல. மேக்கப் டெஸ்ட்ல பாஸாவேன்னும் நெனக்கல. ஒரு தடவ நடிச்சு பாக்கறெம்மா. முடியலன்னா இந்த ஊர விட்டு வேற எங்காவது போய் கூலி வேல செஞ்சு பொழச்சுக்கலாம்.'
அம்மா வியந்தாள்.
'நீயாடி இப்டி பேசுற? ஒரு நாள் சினிமா சகவாசம் ஒன்ன இப்படி மாத்திருச்சே! வாழ்க்கைல பணம் மட்டுமே முக்கியம் இல்லடி. தோலு சுருங்கற வர தாண்டி பொம்பளைக்கு மதிப்பு. சுருங்கிரிச்சி.. சுருக்குப்பை மாதிரி தொங்க விட்ருவாங்கடி. அதுவும் ஒனக்குத் தெரியாத தொயிலு. படிப்பும் ஒனக்கு பத்தாது. ஏமாத்திட்டா என்னடி பண்றது?'
'இப்பவே ஏமாந்து தானேம்மா நிக்கிறேன்? சேகரயே பாத்துட்டேன். இத்த விட மோசமானவங்களா அங்க இருக்கப் போறாங்க. சினிமால நடிக்ரவங்க எல்லாருமே படிச்சவங்களோ சினிமா தெரிஞ்சவங்களோ இல்லேலம்மா. 'பொம்மை'ல எத்தினி பேட்டி பாத்திருப்பேன். டைரக்டர் ஹோட்டல்லயோ, ஜவுளிக்கடயிலயோ, ஏன் பிச்சைக்காரியா இருந்தவ நடிகை ஆயிட்டான்னு கிசுகிசு கூட வந்துதே. அவங்களெ நடிக்கிறப்ப எனக்கு நீங்க இத்தினி பேரு இருக்ரீங்கல்லம்மா. நான் கீழ வுழுந்தா தாங்கிப் புடிக்க மாட்டீங்களா என்ன..'
ஆறுமுகம் மூச்சு விடாமல் பேச வாயடைத்து நின்றாள் செண்பகம்.
'சரிடி. ஆனா ஒண்ணு மட்டும் நான் சொல்றத கேளு. இந்த ராக்காயிய எங்க போனாலும் கூட்டிட்டுப் போ. ஒனக்கும் பாதுகாப்பு வேணும். நானும் இவ ஒங்கூட இருக்றான்னு நிம்மதியா இருப்பேன்.'
ஆறுமுகம் சரி என தலையாட்ட, ராக்காயியும் ஒத்துக் கொண்டாள்.
ஆறுமுகம் நைட் ஷூட்டிங் விசயம் சொல்ல ராக்காயி நல்ல சாரி ஒண்ணு அணிந்து ஆறுமுகத்துடன் கிளம்பினாள்.
பஸ்ஸில் ஏறி பக்கத்து ஊரு பஸ் ஸ்டாண்டில் நிற்கவே சொன்னபடி ரஞ்சித்து காரில் இன்னொருவனுடன் வந்தான்.
ஆறுமுகத்துப் பக்கம் காரை நிறுத்தி ராக்காயியைப் பார்த்து 'இது யாரு?'என்று கேட்டான்.
'கூட தொணைக்கு கூட்டிட்டு வந்தேன். தனியா வந்தா குப்பத்துல ஒரு மாதிரி பேசுவாங்க. ஒரு பிரச்னையும் இல்ல. நம்பிக்கயான ஆளு தான்.'
ஒரு நிமிடம் யோசித்த ரஞ்சித்து 'சரி'என்று இருவரையும் காரில் ஏற்றினான்.
கார் சிறிது தூரம் சென்று ஒரு பங்களாவில் நின்றது. இது கணேஷ் தங்கி இருக்கும் பங்களா இல்லை என்று ஆறுமுகத்திற்கு சட் என்று புரிந்தது. கார் போர்டிகோவில் நின்றதும் நால்வரும் உள்ளே போனார்கள்.
'சாப்டாச்சா?' என்று ரஞ்சித்து கேட்கவும், இல்லை என்று தலைஅசைத்தாள் ஆறுமுகம்.
'வாங்க' என்று டைனிங் டேபிள் இருந்த அறைக்கு கூட்டிப் போகவும், மூவரும் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள். ரஞ்சித்து பக்கத்தில் இருந்த கிச்சனில் போய் வர சிறிது நேரம் கழித்து பனியன் லுங்கியோடு தோளில் பச்சைத் துண்டுடன் ஒரு மலையாளி ஆள் ரெண்டு மூடி போட்ட பாத்திரங்களை எடுத்து வந்தான். அதை டைனிங் டேபிள் நடுவில் வைத்து விட்டு அவன் நகர, ரஞ்சித்து ஒரு பாத்திரத்தை திறந்து பார்த்தான். ஆவி பறக்க இட்லிகள். இன்னொரு பாத்திரத்தில் இட்லி சாம்பார்.
'எடுத்துக்கோங்க' என அவன் சொல்ல, ஆறுமுகம் எழுந்தாள்.
'நான் எடுத்து வைக்றேன்' என்று ஆளுக்கு மூன்று இட்லி எடுத்து வைத்து சாம்பாரை ஊற்றினாள். ரஞ்சித்துடன் வந்திருந்தவன் 'போதும் போதும்' என்று அநியாயத்துக்கு கூச்சப் பட்டான். அவர்கள் சாப்பிட்டதும் எழுந்து முன் அறையில் இருந்த சோபாவில் அமர ராக்காயி ஆறுமுகத்திற்கு பரிமாறினாள்.
இட்லியும் சாம்பாரும் அமிர்தமாய் இருந்தது.
அவள் சாப்பிட்டு வருவதற்குள் முன் அறையில் டீப்பாயில் ஒரு பாட்டில் விஸ்கியும் ரெண்டு கிளாசும் உட்கார்ந்திருந்தன.
'ம்ம் ஒரு கிளாஸ் குடி. அப்பதான் ஈசியா இருக்கும்' என்று உடனிருப்பவனை வற்புறுத்தினான் ரஞ்சித்து.
சியர்ஸ் சொல்லி விட்டு இரண்டு பேரும் ஒரு பெக் அடித்த பிறகு வைத்திருந்த வறுத்த முந்திரியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்கள்.
'நீங்கலும் எடுத்துக்கொங்க...' என்ற ரஞ்சித்தின் குரலில் மது வழிந்தது.
ராக்காயியும், ஆறுமுகமும் கொஞ்சம் எடுத்து கொறித்தார்கள்.
'ஆறுமுகம்.. ஒம் பேர மொதல்ல மாத்தனும். ஆம்பலய்க்கு வைக்க வேண்டியத ஒனக்கு வச்சிருக்காங்க.. நான் ஸ்ரீனு வர மாதிரி மூணு பேரு வச்சிருக்கேன். நீயே சூஸ் பண்ணு. ஸ்ரீலதா, லதாஸ்ரீ, லயனாஸ்ரீ..'
ஆறுமுகம் யோசித்தாள்.
'ஸ்ரீலதா புடிச்சிருக்கு.' என்றாள்.
'குட். இன்னைலருந்து நீ ஸ்ரீலதா. இனி ஆறுமுகத்த மறந்துரனும். சரியா?'
'சரி'
'இந்தா இந்த சுதீஸ் தான் இந்த படத்துல ஒன்ன கெடுக்ற வில்லனோட பையன். இந்த சீன் தத்ரூபமா வரனும்னா நீங்க ரெண்டு பேரும் 'பழக' வேனும்.'
படுக்கனும்கறத பழகனும்னு சொல்றான் பாரு என்று நினைத்துக் கொண்ட ஸ்ரீலதா (நாமும் இனி அப்படியே கூப்பிடுவோம்) சரி என்று தலை அசைத்தாள்.
'நீங்க அந்த ரூம்ல இருங்க.' என்று ராக்காயியைப் பார்த்து சொன்ன ரஞ்சித்து 'மஞ்சு' என்று கூப்பிட்டான். ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி வரவே, 'நீ இவங்க கூட அந்த ரூம்ல உக்காந்து டெக் போட்டு படம் பார்த்திட்டிரு' என்று சொன்னான். ராக்காயி அந்த பெண் உடன் டெக் ரூமுக்குப் போகவே ஸ்ரீலதாவிடம் திரும்பிய ரஞ்சித்து பக்கத்து அறையைக் காட்டி 'நீங்க ரெண்டு பேரும் அங்க போய் பேசிட்டு இருங்க'எனவே, ஸ்ரீலதா முன்னே போக சுதீஸ் அவளைத் தொடர்ந்தான்.
அவர்கள் ரூமுக்குப் போய் கதவை சாத்திக் கொள்ள, சோபாவில் இருந்து எழுந்த ரஞ்சித்து அவர்கள் சென்ற அறைக்குப் பக்கத்து அறையில் நுழைந்து கதவை சாத்தினான்.
அங்கு தொங்கிய காலண்டரைத் தூக்கி தரையில் எறிந்து விட்டு அதில் இருந்த செங்கல் ஒன்றை நகர்த்தினான். பக்கத்தில் வைத்திருந்த கேமராவை எடுத்து தெரிந்த துவாரத்தின் வழியே கேமராவை இயக்கினான். சுதீஸ் ஸ்ரீலதாவின் தாவணியை விலக்குவதை கேமரா பசியோடு தத்ரூபமாகப் படமாக்கியது.
(தொடரும்)


 
சினிமாக்காக வந்த என்னென்னவோ நடக்குதே. ஆறுமுகம் இதிலும் ஏமாறுகிறாளா
 

Advertisement

Top