Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 8

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 8

கல்யாணி வந்ததும் நித்யா திட்ட ஆரம்பித்தாள்.
'ஒனக்கு என்ன ஆச்சு கல்யாணி? அவன் யாரு என்னன்னே தெரியாது.. அவன் கிட்ட போயி இப்படி நடந்துட்டு வந்துருக்கியே. இது தப்பில்லயா?'
நித்யாவைப் பார்த்து சிரித்தாள் கல்யாணி.
'அப்படி நான் என்ன பண்ணிட்டேன் நித்யா? நீயும் ப்ராங்க்ளினும் பண்ணாததயா நாங்க பண்ணிட்டோம்?'
தேள் கொட்டினது மாதிரி அதிர்ந்து போன நித்யாவால் கல்யாணியைப் பார்க்க முடியவில்லை. வாய் மட்டும் கேட்டது.
'நீ.. நீ.. என்ன சொல்ற நித்யா?'
'நான் தூங்கின பிறகு நீ மெல்ல எந்திரிச்சு ப்ராங்க்ளின் ரூமுக்குப் போனதும் அங்க அவன கட்டிக்கிட்டதும் அவன் ஒனக்கு முத்தம் குடுத்ததயும் நான் பாக்கலன்னு நெனக்கறியா? கள்ளி! இவ்ளோ க்ளோஸ் பிரண்டா இருந்தும் என் கிட்ட மறச்சிட்ட பாத்தியா?'
'ஒன் கிட்ட சொல்லலாம்னு நெனப்பேன் கல்யாணி. ஆனா நீ ஏதாவது நெனச்சிப்பியோன்னு பயமா இருக்கும். அம்மாட்ட போட்டுக் குடுத்துடுவியோனும் பயமா இருக்கும். என்ன மன்னிச்சிரு கல்யாணி.' நித்யாவின் கண்களில் நீர் நிறைந்தது.
'அசடு! இதுக்கு போயி என்ன பயம்? நீ அம்மாட்ட சொல்லாதேன்னா சொல்லாம இருக்கப் போறேன். காதல்னாலே என்னைக்கும் கள்ளத்தனம் தான் நித்யா. என்ன நீயா என் கிட்ட சொல்வேன்னு எதிர்பார்த்தேன். சரி. என்ன இருந்தாலும் நான் வேற தான..'
இப்போது கல்யாணியின் கண்களில் தண்ணீர்.
'என்ன கல்யாணி சொல்ற? நான் என்னைக்காவது அப்படி நெனச்சிருக்கேனா? ஏன் இப்படி எல்லாம் பேசற? ஒன் கிட்ட எப்படியும் ஒரு நாள் சொல்லிரலாம்னு தான் நெனச்சேன். சமயம் வரல்ல. இந்த லீவுக்கு வந்தப்ப தான் ப்ராங்க்ளின் தன் காதல என்கிட்ட சொன்னான். எனக்கும் அவன சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அதனால தலை ஆட்டிட்டேன். அன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் முத்தம். அதுக்குப்புறம் ஜஸ்ட் பாத்துக்கறது மட்டும் தான். ஒனக்கு புடிச்சா தான். இல்லன்னா... வேண்டாம்.
என்று தலையை குனிந்தாள் நித்யா.
கண்ணீரோடு சிரித்தாள் கல்யாணி. நித்யாவின் தலையை நிமிர்த்தினாள்.
'எங்க வேண்டாம்னு சொல்ற மூஞ்சிய பாப்போம். வேண்டாம்னு சொல்றவ தான் நான் பாக்றது கூட கண்ண மூடிகிட்டு அவன் நெஞ்சுல சாஞ்சிரிந்தியோ! ரெண்டு பேரும் ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துட்டு செய்ற வேலயப் பாரு. ஆமாம் சின்ன வயசுல நாம பேசுனது நியாபகம் இருக்குல்ல.'
'என்னடி' என்றாள் நித்யா.
'பாத்தியா மறந்துட்ட. ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னா ஒரே ஆள கட்டிக்கணும்னு சொன்னியே.. இப்ப ப்ராங்க்ளின எனக்கும் தருவியா?'
ஒரு கணம் கூட தயங்காமல் சொன்னாள் நித்யா
'அதிலென்ன சந்தேகம்? நீ கூட அவன மொதல்ல கல்யாணம் பண்ணிக்கோ. நான் ரெண்டாம் தாரமா வாக்கப்படறேன்.'
கல்யாணி அன்பின் மிகுதியால் ரோடு என்றும் பார்க்காமல் அவளை அணைத்துக் கொண்டாள்.
பிறகு நித்யாவின் மாமா வீட்டை நோக்கி நடந்துகொண்டே கேட்டாள்.
'நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி நித்யா. ஒன் மாதிரி பிரண்டு கெடச்சதுக்கு. எனக்கு ப்ராங்க்ளின் வேண்டாம். இந்த முறுக்கு மீச தான் கெடச்சிடுச்சே.' என்று சிரித்தாள்.
'ஏண்டி! அவன் யார் என்னனு தெரியாது. உண்மையிலேயெ கல்யாணம் பண்ணத்தான் லவ் பண்றியா இல்ல சும்மா ஊர் சுத்தறதுக்கா?'
'உண்மையாத்தான் லவ் பண்றேன். என்னமோ அவன் கிட்ட எனக்கு பிடிச்சிருக்கு. அவன் நல்லவன் தான். ஏதோ இந்த பொறுக்கித்தனம் மட்டும் இருக்கு. அவன திருத்திரலாம்னு தோணுது. பாப்போம். தலைவர் அவர் லவ்வ சொல்லலியெ!'
'நீ சொல்லிட்டியா?'
'ம்.. நாளைக்கு அவன நம்ம ஊருக்கு வரச் சொல்லி இருக்கேன். லவ் இருந்தா வருவான். இல்லன்னா இருக்கவே இருக்கான் ப்ராங்க்ளின்.'
இருவரும் வெடித்து சிரித்தார்கள்.

ஊருக்குத் திரும்பினார்கள்.
மறுநாள் எதிர்பார்த்த மாதிரியே சைக்கிளில் வந்து நின்றான் ரவி. கூடவே அவனது ரெண்டு சினேகிதர்கள். இவர்கள் வருவது பார்த்ததும் ரவி பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சீப்பை எடுத்து தலைவாரிக் கொண்டான். முகம் லேசாய் வியர்த்திருந்தது. மெதுவாய் கல்யாணியைப் பார்த்து சிரித்தான். கல்யாணியும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். கூட நின்று கொண்டிருந்த நண்பர்களில் ஒருவன் 'காலைல அஞ்சு மணிக்கே எங்க வீட்டுக்கு வந்து என்ன எழுப்பி சீக்கிரம் கிளம்புடா போலாம்னு படுத்தி எடுத்துட்டான். நான் ரெடியாகி இவனும்(பக்கத்தில் இருந்த இன்னொரு நண்பனைக் காட்டி) ரெடியாகி பஸ் பிடிச்சு வரதுக்குள்ள உங்க ஸ்கூல் தொடங்கிடிச்சு. அவ்ளோ தான். நீங்க நம்புறிங்களோ இல்லயோ இப்ப வரைக்கும் வெறும் தண்ணியும் இந்த வழியா வந்த ஐசும் சாப்பிட்டு இருக்கோம். அவன் அது கூட சாப்டல. செருப்பால அடிச்ச பொண்ணுக்கு இப்படி பழியா கெடக்ற பயல இப்ப தான் இந்த உலகம் பாக்குது. சரி வாடா போலாம். நாம ஏதாவது சாப்டுட்டு இவனுக்கும் ஏதாவது வாங்கிட்டு வரலாம்.'
மற்ற நண்பன் சொன்னான்.
'அவனுக்கு எதுக்கு சாப்பாடு? அதான் புல் மீல்ஸே எதிர்ல நிக்குதே. நாம போலாம்டா. ரவி அர மணி நேரத்துல வந்துர்றோம்.'
என்று சொல்லி விட்டு அவர்கள் இருவரும் நகர்ந்தனர்.
'டேய் தனியா விட்டுட்டு போகாதீங்கடா. நில்லுங்கடா!' என்று ரவி கத்த, 'நேத்து மட்டும் ரெண்டு பேரும் தனியா அந்த கொஞ்சு கொஞ்சுனீங்க. போடா! எத்தன படிச்சிருக்கோம்.' என்று சொல்லியபடியே ரெண்டு பேரும் போய் விட்டார்கள்.
நித்யா கல்யாணி காதோரமாய் கிசுகிசுத்தாள்.
'இங்க பாருடி! முத்தத்தோட போதும். மொத்தமும் குடுத்துராத. கிக் போயிடும். நான் அந்த புளிய மர ஓரமா ஒக்காந்து படிச்சிட்டு இருக்கேன். நீ இங்க காதல் பாடம் படி.'
கண்ணடித்தபடி புளிய மரம் நோக்கி நகர்ந்தாள்.
கல்யாணியும் ரவியும் ஆலமரத்தின் கீழே இரண்டு பெரிய கற்களில் அமர்ந்தார்கள்.
கல்யாணி தனது டிபன் பாக்ஸைத் திறந்து ரோட்டோரமாய் இருந்த கடையில் வாங்கிய கொடுக்காப்புளிகளை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
'ம்ம்! சாப்பிடுங்க.' என்றாள்.
அவன் அதை வாங்கி அவசரம் அவசரமாய் சாப்பிட்டான்.
'இந்தாங்க! அணில் கடிச்சது. நல்லா இருக்கும் சாப்புடுங்க.' என்று முனையில் சிவப்பாய் இருந்த வெள்ளை கொடுக்காப்புளியை கொடுத்தாள். உண்மையிலேயே சுவையாய் இருந்தது.
அவன் சாப்பிடுவதையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி.
ஆண்கள் உண்மையிலேயே பாவம். அன்புக்கு ஏங்கும் ஜீவன்கள். அன்பு காட்டினால் அகிலத்தையே வளைக்கும் வேங்கைகள். செருப்படி கொடுத்த கன்னத்தை பிடித்து ஆபாச பாடல் பாடிய வாயில் முத்தமிட்ட கணம் நியாபகம் வர சட் என்று வெட்கப்பட்டாள் கல்யாணி.
'ஒன் போட்டோ ஒண்ணு குடு கல்யாணி. ஒன்ன பாக்கணும்னா முப்பது மைல் தாண்டில்ல வர வேண்டி இருக்குது. நெனச்சா கண் முன்னால இருந்தா நல்லா இருக்கும்ல.'
'அப்போ ஒங்க மனசுல நான் இல்லயா?'
'நீ தான் இருக்க. ஆனா மனசுல சாமி இருந்தாலும் போட்டோ வச்சு வழிபடறதில்லயா.. அது போல கல்யாணி தேவியோட போட்டோ கிடச்சா வழிபட ஆரம்பிச்சிருவேன்.'
'அட அட..இப்பல்லாம் இப்படி தான் சொல்லுவீங்க. எத்தன படம் பாத்துருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா' அப்படின்னு சந்தோசப்படுவீங்க.'
'என்ன கல்யாணி இப்படி சொல்ற.'
'சரி அது கெடக்கட்டும். சீக்கிரமெ பி. காம். முடிச்சுட்டு பி. எஸ்.ஆர்.பி எழுதுங்க. பாங்க் வேலய சீக்கிரம் வாங்குங்க. நானும் டென்த், ப்ளஸ் டூலாம் படிக்கணும். காலேஜும் படிக்கணும்.எனக்காக கொறஞ்சபச்சம் ஒரு அஞ்சு வருசமாவது காத்திருக்கணும்.'
'ஒனக்காக யுகம் யுகமா காத்திருப்பேன் கல்யாணி.'
'ஆகா! எந்த சினிமா வசனம் இது?'
'உண்மை தான் கல்யாணி. எங்க அம்மா அன்பே கிடைக்காம ஹாஸ்டல்ல வளந்தவன் நான். அதனால பொண்ணுங்க பத்தின தவறான அபிப்ராயம் தான் என் மனசுல இருந்தது. நீ தைரியமா என்ன எதிர்கொண்ட விதம், முத்தம் குடுத்தும் அழாம, சூசைட் பண்ண முயற்சி பண்ணாம, என் மேல காதல வெளிப்படுத்தின விதம் எல்லாம் நைட் பூராவும் ரிவைண்ட் ஆயிட்டே இருந்தது. எத்தன நாள் அம்மா கதறிருப்பாங்க. நான் இப்படி இருக்கேன்னு. ஆனா இன்னைக்கு காலைல அம்மாட்ட பிரண்ட்ஸோட பக்கத்து ஊருக்குப் போயிட்டு வந்திர்றென்னு சொல்லவும் எங்க அம்மா மூஞ்சில அவ்ளொ சந்தோசம். நீ கல்யாணம் பண்ணிகிட்டு கூட படிக்கலாம் கல்யாணி.'
'எப்படி காலேஜ்ல போயி வயித்த தள்ளிகிட்டா?'
'எட்டாம் க்ளாஸ் படிக்குற பொண்ணா நீ? இவ்ளொ தெரிஞ்சு வச்சுருக்கிறியே'
'ம்ம். சடங்கானாலேயே பொம்பளப் புள்ளைங்களுக்கு இதெல்லாம் தெரிய வந்துரும். என்ன எல்லாரும் வெளிக்காட்ட மாட்டாங்க. நான் வெளிக்காட்டிக்கிறென். அவ்ளோ தான்.'
'சரி வயித்த தள்ளிகிட்டு காலேஜ் போனாதான் என்ன.'
'சும்மா பேச்சுக்கு சொன்னா. அதயே பிடிச்சுக்கறியே! இங்க பாருங்க. ஏதோ ஒரு தடவ முத்தம் குடுத்தேன். அதெல்லாம் நித்தமும் தர முடியாது. ஏதோ உங்களுக்கு பொறந்த நாளா இல்ல எனக்கு பொறந்த நாளா அப்ப மட்டும் தான்.'
'அப்படியா! இன்னைக்கு என் பொறந்த நாள் தான் கல்யாணி. எனக்கு புத்தி வந்த நாள் புதுசா பொறந்த நாள் தானே.' என்று அவள் முகத்தருகில் வந்து உதட்டை குவித்து கண்களை மூடினான்.
அவன் உதட்டை கையால் தள்ளினாள் கல்யாணி.
'ஐய. ஆசயப் பாரு. நித்யா ரொம்ப நேரமா வெயிட் பண்ரா. ஸ்பெஷல் க்ளாஸ் முடிச்சு டென்த், ப்ளஸ் டூ புள்ளைங்க வர நேரம். நாம அடுத்த வாரம் திங்கள் மீட் பண்ணலாம்.'
'என்னது இன்னைக்கு புதன். இன்னும் நாலு நாள் காத்திருக்கணுமா?'
'காத்திருந்தா தான் காதல் ருசிக்கும் என் முறுக்கு மீச!'
'ருசிக்கும் ருசிக்கும். பெத்தவ வரது கூட தெரியாம ஒனக்கு கொஞ்சலு கொலவலு. தடிக்கழுத. மொளச்சு மூணு இல விடல்ல. எட்டாங்க்ளாஸ் கூட தாண்டல.காதலா ஒனக்கு' என்று வெளக்குமாற்றோடு அவளை நெருங்கினாள் முத்தம்மாள்.
பக்கத்தில் விமலா.

(தொடரும்)
 
Nice epi.
B.Com kazhinja BSRB exam kurichu theriyuthu ok ,over maturity intha age la thevai illa.
Amma vannu allo aayuthathodu.
Vimala nee nallavala? kettavala?
Randu ennamum koottukarikala? koottukalli kala?maatri maatri thappa maraikuthu. Ithukku Vimala better pottu kodukuthu .
 
Top