Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் காதல் பூக்கும் பருவம் அத்தியாயம் 2

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 2

'அம்மா, நான் காலேஜ் போயிட்டு வரேம்மா!' அவசர அவசரமாய் செருப்பை மாட்டிக் கொண்டு நெஞ்சோடு அணைத்திருந்த புத்தகத்தை மேலும் இருக்கிக் கொண்டு பாவாடையை ஒரு கையால் செருப்பு போட இசைவாய் தூக்கிக் கொண்டே கத்தினாள் தேவி.
'இருடி டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போ' என்று டிபன் பாக்ஸோடு ஓடி வந்தாள் பத்மா. அருகில் நின்றிருந்த சரசு அதை வாங்கிக் கொள்ள 'போற வழியில அரசரடி பிள்ளயாரப் பாத்து ரெண்டு தோப்புக் கரணம் போட்டுக்கோடி தேவி.' என்றாள் பத்மா.
'சரிம்மா' என்று தலையை ஆட்டின தேவி 'வாடி போகலாம்' என்று பக்கத்தில் நின்ற சரசுவிடம் சொல்லி அவள் கையில் இருந்த டிபன் பாக்ஸை வாங்கி மென்மையான நெஞ்சுக்கு அணை கொடுத்தாள்.
இருவரும் வீட்டில் இருந்து இறங்கி தெருவுக்குள் நடந்தனர். முக்கு வீட்டு சரோஜா பாட்டி இவர்களைப் பார்த்து கேட்டாள்.'என்னடிம்மா! காலேஜுக்கு கிளம்பியாச்சா?' அந்த தெருவுக்கே அவர் தான் காவல். அவரை மீறி அந்த தெருவுக்குள் யாரும் வந்து விட முடியாது. அந்த தெருவில் உள்ள அத்தனை பேரையும் அவருக்குத் தெரியும். அத்துடன் அந்தந்த வீட்டு ப்ரச்னைகளும் அவருக்கு மனப்பாடம்.
'ஆமாம் பாட்டி' என்றனர் இருவரும் கோரஸாக.
'பாத்து பத்திரமா போயிட்டு வாங்க.'கால்களை திண்ணையில் நீட்டி கைகளால் நீவியபடியே சொன்னார்.
'ம்! எங்க அப்பா வெள்ளக்காரன் காலத்திலெயே என்ன பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறென்னு சொன்னார். எங்கம்மா தான் என்ன வுடல. பொம்பளப் புள்ளைக்கு படிப்பெதுக்குன்னு வீட்டுக்குள்ளேயெ வச்சுகிட்டா. இவர கட்டிகிட்டு இந்த ஊருக்கு வந்தா வந்த ரெண்டாவது வருசமே என்ன விட்டுட்டு அந்த மகராசன் போயிட்டாரு. நம்ம என்ன பின்னாலயா போக முடியும்? நம்ம விதி இருக்குல்ல. அது முடியணும்ல. கொஞ்சமா கஷ்டப்பட்டேன்? ஒரு குழந்தை குட்டி இல்லாம. ஏதோ இந்த நாலு லைன் வீடு இருக்கவும், சோத்துக்கு பஞ்சம் இல்லாம மானத்தோட வாழ முடியுது. நீங்களாவது படிச்சி வேலைக்குப் போயி குடும்பத்த சீரும் சிறப்புமா வச்சுக்கங்க கண்ணுகளா!'
இருவரும் பாட்டிக்கு ஒரு புன்னகையை பரிசளித்து விட்டு விரைந்தனர்.
முக்கு திரும்பவும் அரசரடி பிள்ளயார் தெரிந்தார்.
பெரிய அரச மரத்தடியின் கீழ் கருப்புக்கல்லில் வெள்ளைப் பரிவட்டத்தோடு பிள்ளயார் பார்க்க, இருவரும் திண்டில் புத்தகங்களையும் டிபன் பாக்சையும் வைத்து விட்டு பத்து தோப்புக்கரணங்கள் போட்டனர்.
பின்னர் பக்கத்தில் இருந்த திருநீறில் கொஞ்சம் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு விரைந்தனர்.
பஸ் ஸ்டாப்பில் மாணவ, மாணவியர் கூட்டம்.
இவர்களுடன் ப்ளஸ் டூ படித்த கும்பல் இவர்களை வரவேற்க அவர்களோடு போயி நின்றனர்.
'தில் பாத்திட்டியாடி?'
'இல்லடி.'
'விக்ரம் நல்லா இருக்கானாம்டி. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா பாட்ட விக்ரமுக்காகவே நான் சன் டிவியில பல தடவ பாத்திருக்கேன்.'
'என்ன சிட்டிசன் ஓடாததால அஜித்ட்ட இருந்து விக்ரமுக்கு தாவிட்டியா?'
'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. தில் விறுவிறுன்னு போச்சா? அதுல விக்ரமும் நல்லா நடிச்சிருந்தாப்ல. அதனால...'
'சரி சரி. ஏய் அந்த கும்பல்ல இருந்து நாகராஜன் இருக்கானே அவன் இங்கயே பாக்கறாண்டி.'
'விடுடி. பாத்துட்டு போகட்டும். பாவம். லீவ் எல்லாம் காஞ்சு போயி கெடந்திருக்கும்.'
'ஆமாம். பாக்குமே ஒழிய யார்ட்டயும் பேச தைர்யம் கிடயாது. அது யாரப் பாக்குதுன்னு யாருக்குமே தெரிய மாட்டெங்குது.'
'நான் வேணும்னா போயி கேட்டுட்டு வரட்டுமா?'
'ம்ம் நீ அந்தப் பக்கம் போ. நான் வரேன் மச்சான்னு பிரெண்ட்ஸ்ட்ட சொல்லிட்டு சைக்கிள எடுத்துட்டு நகர்ந்துரும். அது வெத்து வேட்டுடி'
இவ்ளோ அரட்டை அடித்தும் சத்தம் வெளியே வரவே இல்லை. ஒரெ கிசுகிசுப்பு தான்.
பஸ் வந்தது.
எல்லோரும் முண்டியடித்து எறினர்.
தேவிக்கும், சரசுவுக்கும் டிரைவர் சீட்டிற்குப் பின்னால் இடம் கிடைக்க, அவர்கள் அப்பாடா என்று அமர்ந்தனர்.
தேவி ஜன்னலோரம் அமர்ந்தாள்.
தென்றல் காற்றில் அவளது கேசம் அழகாக பறக்க, காதில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் டைங் டைங் என்று அவளது கன்னத்தில் மணி அடித்தன.
டிரைவர், கண்டக்டர் இறங்க, சரசு எரிச்சல் பட்டாள்.
'ப்ச். இனி டீ குடிச்சிட்டு தான் வண்டி எடுப்பாங்க. பத்து நிமிஷம் இதுல போயிரும். காலேஜ் நேரத்துக்கு போயிருவோமா?'
'போயிருவோம். இத விட்டா அப்புறம் கவர்ன்மெண்ட் பஸ். அது பத்து நிமிஷம் லேட்டா தான் வரும். அதுக்கு இதுவே பரவால்ல. இறங்கி ரெண்டு நிமிஷம் ஓட்டமும் நடையுமா போனா கரக்ட் டைமுக்கு போயிரலாம்.'
'பி.ஏ. லிட்ரெச்சர் எப்படிடி இருக்கும்?'
'நமக்குத் தான் கத புக்கு படிக்கிறது புடிக்கும்ல. அந்த கத புக்க படிக்கிறது தான் இந்தப் படிப்பே.'
'என்னவோடி. எங்க குடும்பத்துல நான் தான் மொத மொதல்ல காலேஜ எட்டி பாக்றென். நல்லபடியா முடிக்கணும்.'
'ஒனக்கும் சேர்த்து தான் நான் பிள்ளயார்ட்ட வேண்டுனேன், சரசு.'
சரசு நெகிழ்ந்து தேவியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
கண்டக்டர் பஸ்ஸில் ஏறி 'டிக்கட் டிக்கட்' என்றார்.
'ரெண்டு மேரிஸ்'
டிக்கட் வாங்கினாள் தேவி.
'இந்தாடி' என்று அஞ்சு ரூபாயை நீட்டினாள் சரசு.
'நீ நாளைக்கு வாங்குடி' என்று ரூபாயை வாங்க மறுத்து விட்டாள் தேவி.
கூட்டம் சேரத்துவங்க, டிரைவர் பஸ்ஸில் ஏற பஸ் ஒரு சிறிய உருமலுடன் புறப்படத் துவங்கியது.
பஸ் நகரத் துவங்கவும், ஜன்னலில் இருந்து ஒரு கை நீண்டது தேவியின் அருகில். அந்தக் கையில் ஒரு நோட்டும் ஒரு புத்தகமும். தேவி திடுக்கிட்ட்டாள். ஜன்னல் வழியாகப் பார்க்க ஒரு அழகிய வாலிபன் வெளியே நின்றிருந்தான்.
'ஒரு நிமிஷம் இதப் புடிங்க. காலெஜ் தான?'
அவள் ஒரு கணம் தலையை அசைக்க, 'புடிங்க. கூட்டமா இருக்கு. நான் இத வச்சிட்டு ஏற முடியாது.' என்று மூச்சிரைத்தான் அவன்.
தேவி தயக்கத்துடன் அதை வாங்கிக் கொள்ள, சட் என்று மறைந்தான்.
டிரைவர் சீட்டிற்கு பின்புறம் இருக்கும் தன்னிடம் புக்சை தந்து விட்டு எப்படி ஓடுற பஸ்ல ஏறப் போறான்? தேவிக்கு திக் என்க, பஸ்ஸின் படிக்கட்டை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் ஏறிய மாதிரி தெரியவில்லை. முழுவதும் காலேஜ் பசங்களோட கூட்டம் நின்று கொண்டு, மேலே விரல்களால் தாளமிட்டபடி, பாட்டு பாடியபடி என்று... அந்தக் கூட்டத்தில் அவனைக் காணவில்லை.
ஒரு முறை பார்த்தாலும் அவன் முகம் அச்சாய் விழுந்திருந்தது தேவியின் நியாபக அடுக்கில்.
கிட்டத்தட்ட நடிகர் மாதவனின் ஜாடை. ஆனால் அழகான மீசையுடன். சிரிக்கும்போது கன்னத்தில் சின்னதாய் ஒரு குழி. நெடிய உயரம். மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க வெட்கப்பட்டு அவள் சரசுவிடம் திரும்பினாள்.
'என்னடி அவன காணவே இல்ல. இத என்ன பண்றது? நாம வேற எறங்கணும்.'
'பயப்படாதடி. நோட்ல என்ன பேரு எழுதிருக்கான் என்ன டிபார்ட்மெண்ட்னு பாரு. நம்ம க்ளாஸ் பாய்ஸ் யார்ட்டயாவது குடுத்து அங்க குடுக்க சொல்லலாம்.'
நல்ல ஐடியாவாய் தோன்ற, மெதுவாய் மடியில் இருந்த நோட்டைப் பிரித்தாள் தேவி.
முதல் பக்கத்தில் அவனது போட்டோவுடன் கீழே எழுதியிருந்ததைப் படித்து அதிர்ந்தாள்.
'ஐ லவ் யூ தேவி! -சரவணன்'

(தொடரும்)
 
Nice epi.
Street ku oru CC camara(saroja paati)
Katha 80 s period ah.
Saravana muthal naal le unn settai ya thudangi allo?inni padicha pol than.
Yedo avalu than family la first collage student,athu unnaku pidikalaya.
 
Top