Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராமனுக்கும் மேலே பேரின்பன் ?? - கோகுலத்தில் ராமன் கதைவிமர்சனம்

Advertisement

Anujan

Well-known member
Member
கோகுலத்தில் ராமன் - கதை விமர்சனம்

அப்புவோட விமர்சனத்தை பார்த்து மட்டுமே படிச்ச கதை.. ரொம்பவே ரசிச்சு, சிரிச்சு, பூரிச்சு படிச்ச கதை. கண்ணீர் வரல ஆனால் மனசெல்லாம் ஏதோ பண்ணியது.

Berries are a great source of Antioxidants
My Bery (பேரின்பன்) is great for Antifighting (பொறுமைசாலி)

என்னோட பிளக்பேரி அவன்.. இன்ரோ சீன்ல அவன் காட்டின மாஸ் இருக்கே அட அட தட் மொமண்ட் மயங்கினவதான் இன்னும் தெளியவில்லை.. கட்அவுட் சீன்ல நான் நாக்அவுட்... அதுவும் அடிபொடிகளுக்கு அவன் வெச்ச பெயரில் நான் குப்புற விழுந்தவ தான்... அவன் பாடின இங்கிலிஷ் பாட்டில் ஈஈஈஈஈ என்று என் முகமெல்லாம் பல்லாய் போனது..அவன் சிரிப்பில் சொக்கி போயி இருக்கேன்...

ராசாத்தி நீ ஜொல்லு விட்டது போதும் போதும் என்கிற உங்க மைண்டு வாய்ஸ் கேட்குது ??... சரி சரி இப்ப என் ஆளோட பராக்கிரமத்தை சொல்லுறேன் கேளுங்க..

இந்த கதையின் மையபுள்ளி, கடைசிபுள்ளி எல்லாமே இன்பன் தான். ஆரம்பம் முதல் கடைசி வரை அவனை மட்டுமே வட்டமிட்டது என் மனது. அவனை ராமனோட ஒப்பிட்டது எனக்கு அவ்வளவாக ஏற்க்க முடியவில்லை.. ராமர் என்றாலே மிலிட்டரி ஆபிசர் போல வெறப்பா ரேஷன் முறையில சிரிக்கிற மூஞ்சி தான் எப்பவுமே என் நினைவுக்கு வரும்.. ஆனால் பேரி அப்படி இல்லையே. சிரிச்சே ஆளைமயக்குமே என் செல்லக்குட்டி.. என் பேரியை யாருடனும் ஒப்பிடமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

ராஜ வீட்டுக்கன்றுகுட்டி ஆனால் ராஜபோக வாழ்க்கை வாழலையே..
எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாலும் தழைஞ்சு தழைஞ்சு போவானே..
வெறுப்போடு உமிழ்ந்த வார்ததைகளையும் சிரிப்போடு கடப்பானே..
வேண்டாம் என்று நிந்தித்தாலும் அரணாக முன்னே வந்து நிற்பானே..

ராமனுக்காவது பதினான்கு ஆண்டுகள் தான் வனவாசம்..
என் பேரிக்கோ முப்பத்தியிரண்டு ஆண்டுகள் தனிமைவாசம், உதாசீனம், அவமானம்..
காண்டிபன் என்று நாமகரம் சூட்டி என்ன புண்ணியம் அர்ஜுன்னாக வேண்டாம் துரியோதனன் போல துவேஷம் பாராட்டாமல் ஆவது இருந்து இருக்கலாமே. சகுனியின் பேச்சை கேட்ட துரியோதன்ன் போல அப்பா பேச்சை கேட்டானே இந்த காண்டீபன். வில்லில் இருந்து புறப்படும் கூறிய அம்புபோல அல்லவா வந்தது அவனின் ஒவ்வொரு சொல்லும். எதையும் தாங்கும் இதயம் என்று ஆமை ஓட்டுக்குள் தன்னை ஓடிக்கி கொள்வதுபோல தனக்குள்ளேயே ஏக்கங்களையும், கவலைகளையும், வேதனைகளையும், வலிகளையும் அடக்கிக்கொண்டு வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் இன்முகமாக முயலை போல துள்ளி குதித்து அடுத்தவர்களின் நலனை மட்டுமே எண்ணும் குணம் கொண்டவன்.. ராமனை விட பலமடங்கு உயர்ந்தவன் அல்லவா... என் பேரி..

ஆசைகளை துறந்தவன் துறவி
குடும்பத்தை துறந்தவன் துறவி
என் பேரியோ ஆசைகளை மறந்து
ஏக்கங்களை எறிந்து
துக்கங்களை துறந்து
துறவியை போல தனித்து இருந்தானே..
ராமர் கூட மனைவி சகோதரனுடன் தான் வனவாசம் போனாரு.. ஆனால் இவன் தனிமை வாசம் தானே அப்ப ராமனை விட பலமடங்கு உயர்ந்தவன் அல்லவா... என் பேரி..

குடும்பத்தை இறுக்கி பிடித்து இருக்கும் அரண் என்று ஒண்டிவீர்ரின் மனக்குமுறலில் அறிந்தேன்..
குணத்தில் ராமன் என சிவகாமியின் அகத்தின்வழியே பார்தேன் ..
பேரழகன் என்று கோகிலாவின் காதல் மொழியில் கண்டேன்..
தங்கமான குணம் என்று தங்கத்தின் மனசு வழியே உணர்ந்தேன்..
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று சுசீலாவின் குற்றவுணர்வின் வழியே பார்த்தேன்..
என்ன செய்தாலும் அவர் என் அப்பா என்று சத்தியராஜின் கலங்கிய வதனத்தில் படித்தேன்..
பொறுமையின் இருப்பிடம், அன்பின் உறைவிடம் என்று காண்டீபன் கதறிய கதறலில் கண்டேன்..
எளிமையானவன், இனிமையானவன் என்று கிளிகளின் நட்பின் மூலம் அறிந்தேன்..

நடிகர் பார்த்திபனின் ஒற்றை செருப்பு திரைபடம் போல இந்த கதையில் பேரின்பனை மட்டுமே நான் பார்த்த, உணர்ந்த கதாபாத்திரம்.
அனைவரின் உள்ள சென்று அவரவரின் கண் கொண்டு அவனை மட்டுமே பார்க்க முடிந்தது, ரசிக்க முடிந்தது.

ஜோ..!! வென்று பொழிந்து பூமியின் சுட்டை கிளப்பி விடும் மழையல்ல
சீராக பொழிந்து மண்ணுக்குள் ஊறி பூமியை குளிரவைக்கும் மழை போல என்னுள்ளே வேறுன்றி விட்டன் பேரின்பன்.

‘Jack and the beanstalk’ கதையில் ஒரே இரவில் ஆகாயம் தொடும் உயரம் வளர்ந்த மரம் போல பொறுமைசாலியாக, கோபத்தை இழுத்து பிடிக்காமல், நல்லதே நினை நல்லதே நடக்கும் என்கிற குணத்தோடு பேரின்பனை போல வாழ வேண்டும் என்கிற ஆசையும் இன்று மரம் போல வளர்ந்து நிற்கிறது.

வாழ்த்துக்கள் பிரியா மோகன் ?? மேலும் பல கதைகளை எழுத எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக ???
 
ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய விமர்சனம் ...... ? ? ? கதையும் சூப்பர்....
 
சூப்பர் விமர்சனம், அனுஜான் டியர்
சித்ரா டியர் உங்களை பிரேம்ஸ்ன்னு சொல்றாங்க
உங்கள் நிஜப் பெயர் என்னப்பா?
 
சூப்பர் விமர்சனம், அனுஜான் டியர்
சித்ரா டியர் உங்களை பிரேம்ஸ்ன்னு சொல்றாங்க
உங்கள் நிஜப் பெயர் என்னப்பா?
Aamaam Namma London Chittu Premalatha thaan... ;);)
 
Last edited:
Top