Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 1 1

Advertisement

Admin

Admin
Member
அனிதாவின் அப்பா




பகுதி – 1


பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள சதுரங்க பயிற்சி மையத்திற்குள் நுழைந்த ஹரிஹரனை பார்த்ததும் அங்கிருந்த மழழை பட்டாளம் ஆளுக்கொரு குரல் கொடுத்தது.

“ஹாய் சார்”



“good evening sir”



“sir... see this saran… he is taking my bishop sir….”



“no sir he is telling lies sir….”

“ok…ok no fighting. Let’s start the class….. Go and sit in your places.” என்றபடி அந்த அறையின் சுவரில் பெரிதாகத் தொங்கி கொண்டிருந்த சதுரங்க பலகையயின் அருகில் சென்ற ஹரிஹரன் “good evening சார்...” என்ற மழலையின் குரல் கேட்டு திரும்ப.... அங்கே மலர் சென்டிற்குக் கைகால் முளைத்தது போல்.... ஒரு குட்டி தேவதை நின்று கொண்டிருந்தது.

பிங்க் நிற கவுன் அணிந்து தலையில் இருபக்க குடுமியோடு பார்க்க புசுபுசுவென்று முயல் குட்டி போலவே இருந்தாள் அந்த சின்னப் பெண்.


அவளைப் பார்த்ததும் புன்னகைத்தவன் “ஹாய் அனிதா come... come....” என்றவன், உள்ளே வந்த பூச்செண்டை குனிந்து கைகளில் அள்ளிக் கொண்டான்.

“கிட்ஸ், ஷி இஸ் அனிதா.... நியூ ஸ்டுடென்ட்.” என்றவன் “நம்ம ஜெஸ் கிளாஸ்ல இருக்கிறதுலேயே குட்டி பொண்ணு இவங்க தான். ஜஸ்ட் சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்.” என்றதும், அனிதா வெட்கத்துடன் புன்னகைக்க.... மற்ற மாணவர்கள் கை தட்டி உற்சாகக் குரல் எழுப்பினர்.

அவளை அங்கிருந்த இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, திரும்பச் சென்று.... சதுரங்க காய்களின் செயல்பாட்டைப் பற்றி விளக்க ஆரம்பித்தவன், மாணவர்களுக்குப் புரிந்ததா என்று கேள்விகள் கேட்டு சரி பார்த்துக்கொண்டான்.

சிறிது நேரம் சென்று மாணவர்களை இரண்டு இரண்டு பேராகப் பிரித்து விளையாட விட்டுவிட்டு அனிதாவிடம் வந்தவன், அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.


“அனிதா எந்தக் கிளாஸ் படிக்றீங்க?”

“ப்ரஸ்ட் ஸ்டாண்டர்ட் A செக்ஷன்.”

“நல்லா படிப்பீங்களா....”

“ம்ம்....”

“குட்...”

மேஜையில் இருந்த சதுரங்க பலகையில் வரிசையாக அடுக்கபட்டிருந்த காய்களைக் காட்டி ஒவ்வொன்றின் பெயர்களையும் கேட்க.... அனிதா சரியாகச் சொல்லிக்கொண்டே வந்தாள்.

“ஓ.... சூப்பர் அனிதாவுக்கு எல்லாமே தெரியுதே..... யார் சொல்லிக் கொடுத்தா....”

“தாத்தா....”

“அப்படியா....” என்றவன் “ஹார்ஸ் எப்படி மூவ் பண்ணும் தெரியுமா....” என்றதும், அவள் சரியாக வைத்துக்காட்ட.... அவளுடன் சிறிது நேரம் விளையாடி அவளுக்கு எதுவரை தெரிகிறது என்று பார்த்துக்கொண்டான்.

வகுப்பு முடியும் நேரம் ஆன போது..... உள்ளே இருந்த மாணவர்கள் கிளம்ப.... அடுத்த வகுப்பிற்கான மாணவர்கள் உள்ளே நுழைந்தனர்.

அனிதாவை அழைத்துச் செல்ல அவளின் தாத்தா வந்திருக்க....அவரை பார்த்து புன்னகைத்த ஹரிஹரன் “நல்லா விளையாட தெரியுதே.... நீங்க தான் சொல்லி கொடுத்தீங்களா....” என்றதும்,

“நான் ரிடையர் ஆகிட்டேன் சார் .... பொழுது போகணுமே... நானும் என் ப்ரண்ட் கிருஷ்ணாவும் விளையாடும் போது... இவ என் மடியில உட்கார்ந்து பார்த்திட்டே இருப்பா...”

“பக்கத்து வீட்டு பையன் இங்க கிளாஸ்க்கு வர ஆரம்பிச்சதுல இருந்து என்னையும் கிளாஸ்ல போடுன்னு ஒரே தொந்தரவு.... அது தான் சேர்த்து விட்டோம்.” என்றவர் தொடர்ந்து,
“இந்த ஸ்கூல்ல தான் படிக்கிறா....” என்றார்.

“இந்த ஸ்கூல் நடத்திறது என் அத்தை தான். அவங்க கேட்டுகிட்டதுனால தான் இங்க கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்.” என்ற ஹரிஹரன் இன்னொரு மாணவனின் தந்தை அவனுக்காகக் காத்திருப்பதைப் பார்த்து, சிறு தலையசைப்புடன் விடைபெற்று அவரிடம் செல்ல...

“பாய் சார்....” என்று கையசைத்து விட்டு தன் தாத்தாவுடன் சென்றாள் அனிதா. அவள் வீடு அங்கிருந்து இரண்டு வீடுகள் தள்ளித்தான் இருக்கிறது.

வகுப்பு முடிந்ததும் அதே கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இருந்த தன் அத்தையின் வீட்டிற்கு ஹரிஹரன் சென்றான்.

“வாடா வளர்ந்தவனே..... இன்னைக்கு எப்படிப் போச்சு கிளாஸ்...” என்றபடி, அவனுக்கு ஹாலில் இருந்த மின் விசிறியை போட்டு விட்டவர், அவனுக்கு எதிரில் அமர்ந்தார்.

“குழந்தைகளோட இருக்கிறது போர் அடிக்குமா என்ன?” சொல்லிவிட்டு ஹரிஹரன் அவன் அத்தையைப் பார்த்து புன்னகைக்க....

“உண்மை தான். அதனால தானே நானே ஸ்கூல் வச்சு நடத்துறேன். அந்தப் பிஞ்சு முகங்களைப் பார்க்கும் போது.... எல்லாக் கஷ்ட்டமும் மறந்து உற்சாகம் தனானாவே வந்திடும்.” என்றவர், ஹாலில் மாட்டியிருந்த தன் கணவரின் படத்தை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டார்.

இரவு உணவை இருவரும் சேர்ந்து அருந்த..... சிறிது நேரம் சென்று ஹரிஹரன் அவரிடம் விடைபெற்று அவன் வீட்டிற்குக் கிளம்பினான். இங்குக் கிளாஸ் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து.... இரவு உணவு அத்தையுடன் தான். அவருக்கும் வேறு யாரும் இல்லாததால்.... அவர் மனம் வருந்துமே என்ற காரணத்தால்.... அவருடனே இரவு உணவு முடித்துக்கொள்வான்.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அனிதாவுக்குக் கிளாஸ் என்பதால் அடுத்த நாள் அவள் வரவில்லை... அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை எனபதால்.... ஹரிஹரன் நான்கு மணிக்கே வந்து பெரிய மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தான்.

ஹரிஹரனின் வண்டி நிறைப்பதை அவள் வீட்டில் இருந்தே பார்த்ததால்.... தன் தாத்தாவை தொந்தரவு செய்து அன்று சீக்கிரமே வகுப்பிற்கு வந்த அனிதா.... அங்கே ஹரி ஒரு பெரிய மாணவனுடன் அமர்ந்து விளையாடுவதைப் பார்த்தவள், நேராகச் சென்று அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

விளையாட்டு மும்முரத்தில் முதலில் ஹரிஹரன் அவளைக் கவனிக்கவேயில்லை... சிறிது நேரம் சென்று தான், மெத்தென்று பூவை போல் தன் மடியில் அமர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு உடலில் ஒரு சிலிர்ப்பு.

அவனையும் அறியாமல் அவன் கைகள் மிருதுவாக அவளை அணைக்க.... அவள் தலையின் மீது இதழ் பதித்தவனுக்கு அப்படி ஒரு சுகம். அதே நேரத்தில் இப்படி ஒரு சுகத்திற்காக ஏங்கிய இன்னொரு ஜீவனின் நினைவு வர.... மனதை கட்டுபடுத்துவதற்கு மிகவும் சிரமபட்டான்.

அன்று வகுப்பை எப்படியோ எடுத்து முடித்தவன், இதற்கு மேலும் அவன் மனம் அலைபாய்வதைக் கட்டுபடுத்த முடியும் என்று தோன்றாததால்..... அத்தைக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு அங்கிருந்த காவல்காரனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அன்றிலிருந்து ஹரிஹரனுக்கும் அனிதாவுக்கும் இடையே.... ஒரு பந்தமோ சொந்தமோ எதோ ஒன்று உருவாகியது. கிளாஸ் இல்லாத நாட்களிலும் அனிதா அவனைத் தேடி வர ஆரம்பித்தாள்.




அவள் வீடும் அருகிலேயே இருந்ததால்.... ஹரிஹரன் அங்கே வந்த நொடி அவளும் வந்துவிடுவாள். அவனைத் தொந்தரவு செய்யாமல் அவள் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விளையாடி கொண்டிருப்பாள். ஹரிஹரன் வகுப்பு எடுத்து முடித்து நாற்காலியில் அமர்ந்த அடுத்த நொடி அவன் மடியில் இருப்பாள்.


ஹரிஹரன் இத்தனைக்கும் ரொம்பக் கலகலப்பாகப் பேசும் சுபாவம் கிடையாது. அளவாகத்தான் பேசுவான். மாணவர்களிடம் ரொம்பவும் இளக்கம் காட்டினால் அவர்கள் விளையாட்டுச் சேட்டையில் இரங்கி விடுவார்கள் என்பதால்... சிறிது கண்டிப்புடன் தான் இருப்பான். அப்படியிருந்தும் அவனிடத்தில் என்ன பிடித்ததோ..... அனிதா அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.

எல்லோருக்கும் அவள் மிகவும் இளையவள் என்பதால்... மற்ற மாணவர்கள் ஒன்றும் நினைத்துக்கொள்வது இல்லை.... ஆனால் அனிதாவுக்குத் தனிப்பட்ட சலுகை காட்டுவதில் அவனுக்கு விருப்பம் இல்லையென்றாலும்.... அந்தப் பிஞ்சு ஸ்பரிசத்தை இழக்கவும் மனமில்லை....

ஒரு காலத்தில் ஏங்கி தவித்த சுகம் இன்று தானாகக் கிடைக்கும் போது... ஏன் இழக்க வேண்டும்? அவள் கிளாஸ்க்கு வரும் வரையில் தானே.... என்று தன்னையே தேற்றிக்கொள்வான்.

மாத தொடக்கத்தில் வந்த அனிதாவின் தாத்தா அவனிடம் சென்ற மாதத்திற்கான கட்டணத்தைக் கொடுக்க... அதை ஹரிஹரன் வாங்க மறுத்தான்.

“சின்னக் குழந்தை சார்..... அவளுக்கு என்ன பீஸ் வாங்கிறது? இன்னும் ஒரு வருஷம் போகட்டும் பார்கலாம்.” என்றான்.

அனிதாவின் தாத்தா தயங்க.... “நான் பணத்துக்காக இதைச் செய்யலை.... எனக்கு வேற சொந்த தொழில் இருக்கு.... அதனால நீங்க எதுவும் நினைக்க வேண்டாம்.” என்று சொல்லி அவரைத் திரும்ப அனுப்பினான்.

 
:love: :love: :love:

Nice start...

அனிதாவுக்காக....

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு?
தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
 
Last edited:
எனக்கு ரொம்ப ரொம்பவே பிடித்த
இந்த "அனிதாவின் அப்பா"-ங்கிற
அழகான அருமையான லவ்லி
நாவலை மீண்டும் படிக்க ரீ ரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
ரம்யாராஜன் டியர்
 
Last edited:
Top