Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 22 2

Advertisement

Admin

Admin
Member
சரி எம்.ஏல்.ஏ.வாக தான் ஆகமுடியவில்லை ஆதித்யாவுக்கு எல்லமாக தான் இருக்கலாம் என்று நினைக்கும் வேளையில் தனக்கு அடுத்து வந்த சத்யா அந்த இடத்தை பிடித்து விட. தான் அந்த கட்சியில் வெறும் உறுப்பினராய் மட்டுமே தான் கடைசி வரை காலத்தை தள்ள வேண்டுமா…..? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் வேளையில் தான் அவனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க சரியாக உபயோகித்துக் கொண்டான்.

ஆனால் தான் குத்தியதில் ஆதித்யா உடனே இறந்து விடுவான் என்று தான் நினைத்தான். ஏன் என்றால் அவன் ஒட்டு மொத்த பலத்தையிம் வைத்து அள்ளவா குத்தினான்.அவன் நினைத்தது சரியே அவன் குத்து சரியாக விழுந்து இருந்தால் அவன் நினைத்த படி தான் நடந்து இருக்கும்.

அந்த சமயத்தில் சத்யா சமயோக புத்தியில் ஆதித்யாவை தன் பக்க இழுக்க பார்க்க அவன் குத்து சைட்டு வாக்கில் தான் பட்டது. அது மட்டும் இல்லாது ஆதித்யாவின் ஆரோக்கியமான உடலும் அவன் உயிர் இழக்காததுக்கு ஒரு காரணமாக சொல்லலாம்.

வட போச்சே என்ற வகையில் அவன் தப்பி விட்டானே என்று இவன் யோசிக்கும் வேளையில் தான் குத்திய கத்தியைய் சத்யா பிடித்து இருப்பதை பார்த்து சந்தேகம் முழுவதையும் அவன் மேல் திருப்பி விட்டால் ஆதித்யாவை தன் ஆட்களுடன் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்வது போல் சென்று போகும் வழியிலேயே ஊசலாடும் உயிரை நிறுத்தி விடலாம் என்று அவன் நினைத்தான்.

அவன் நினைத்தது போல் எல்லாம் சரியாக தான் நடந்தது.ஆனால் சத்யாவின் அறிவு திறனை தான் கொஞ்சம் மட்டமாக அவன் நினைத்து விட்டான்.

மகேஷின் கண்ணிலேயே அவன் திட்டதை புரிந்துக் கொண்ட சத்யா தன்னை தலைவருடன் போக அனுமதிக்க மாட்டார்கள். மேலும் தன்னை இத்தனை பேருக்கும் புரியவைக்கும் நேரமும் இது வல்ல.

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தலைவரின் உயிருக்கு தான் ஆபாத்து என்று புரிந்துக் கொண்ட சத்யா தன் மேல் நம்பிக்கை வைத்திருந்த இரண்டு பேரை ஆதித்யாவின் கூட அனுப்பியது மட்டும் அல்லாது காரில் ஆதித்யாவை முடிக்கவில்லை என்றால் அவன் முயற்ச்சி ஹாஸ்பிட்டலிலும் தொடரும் என்று அறிந்தவனாய் தன் செல்லில் தாமரைய் அழைக்காது வசந்தியைய் அழைத்தான்.

ஏன் என்றால் தாமரைக்கு என்ன தான் ஆதித்யா மீது கோபமாக இருந்தாலும் தன் கணவன் சாக கிடக்கிறான் என்று கேள்வி பட்டால் கண்டிப்பாக அவளால் அதை தாங்க முடியாது.அதனால் தாமரை பதட்டம் தான் அடைவாளே தவிர நான் சொல்வதை கேட்டு நடப்பாளா என்பது சந்தேகமே….

மேலும் இது விவேகமாக செயல் படும் நேரம் இதற்க்கு வசந்தி தான் சரி என்று நினைத்து வசந்தியைய் அழைக்க வீட்டு போனில் சத்யாவின் குரலை கேட்ட வசந்தி என்ன இவன் நேரம் கெட்ட நேரத்தில் அழைக்கிறான் என்று நினைத்தாலும் காரணம் இல்லாது அழைக்க மாட்டானே…..

என்று நினைத்து “என்ன விஷயம் .” என்று கேட்டதுக்கு. சுருக்கமாக அனைத்தையும் சொல்ல.

மிக தைரியமான வசந்தியே பதைத்து விட்டாள்.” என்ன சொல்றிங்க. உயிருக்கு ஆபாத்து இல்லையே….?” என்றதற்க்கு.

“இதோ பார் வசந்தி என்னிடம் எந்த கேள்வியும் கேக்காதே நான் சொல்வதை செய். ஏன் என்றால் எந்த நிமிடமும் என்னை போலீஸ் அரெஸ்ட் செய்யலாம்.” என்றதும்.

எதுவும் கேட்காதே..என்ற அவன் பேச்சை கேளாது “ஏன் ஏன் உங்களை அரெஸ்ட் செய்ய வேண்டும்.” என்று பதட்டத்துடன் கேட்க.

அந்த சூழ்நிலையிலும் அவளின் பதட்டம் அவனுக்கு மகிழ்ச்சியைய் கொடுத்தது.

மகிழ்ச்சி தான் உறவு இல்லாது வாழ்பவருக்கு தான் ஒரு உறவின் அருமை தெரியும். தனக்காக ஒருவர் கவலை படுக்கிறார் என்பதே அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைய் கொடுக்கும்.

அந்த மகிழ்ச்சியைய் தான் அவன் அனுபவித்தான். இருந்தும் சூழ்நிலையை உணர்ந்து தன்னை மீட்டுக் கொண்ட சத்யா….”தலைவரை நான் தான் குத்தினேன் என்பதற்க்காக.”

“இது என்னை பைத்தியகார தனம். நீங்கள் எப்படி அய்யாவை ….” அவள் சொல்லி முடிக்கவில்லை.

“இதோ பார் வசந்தி என் மீது நீ நம்பிக்கை வைத்திருப்பது சந்தோஷம். ஆனால் இது அதை பற்றி பேச வேண்டிய நேரம் இல்லை. தலைவரை குத்தினான் என்று நான் சந்தேகப்படும் ஆள் தான் தலைவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கிறான்.

நான் அவன் கூட நமக்கு நம்பிக்கையான ஆளையும் தான் அனுப்பி வைத்திருக்கிறேன்.

அது ஹாஸ்பிட்டல் வரை தான் அவர்களால் பாதுகாக்க முடியும்.காரில் அவன் திட்டம் செயல்படுத்த முடியவில்லை என்றால் அடுத்தது ஹாஸ்பிட்டலில் தான் தலைவரை முடிக்க பார்ப்பான்.

அதனால் இப்போது நீ ஹாஸ்பிட்டலுக்கு தாமரையை அழைத்துக் கொண்டு போ. கவனி வசந்தி நம் தலைவர் பக்கத்திலேயே தான் நீ இருக்கனும். அவரை விட்டு அங்கு இங்கு நீ அசைய கூடாது.

ஆ ஒன்று மறந்து விட்டனே நான் சந்தேகப்படும் நபர் பெயர் மகேஷ். அப்புறம் அவன் ப்ளூ கலர் சட்டை போட்டுக் கொண்டு இருக்கிறான். அவனை தலைவரின் பக்கம் போகாமல் பார்த்துக் கொள்”

என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே போலீஸ் ஆரன் ஒலி கேட்க.” வசந்தி நான் சொன்னதை செய்.” என்றதும்.

“அப்போ நீங்க. உங்க நிலை.” என்று அவள் வருத்தத்துடன் கேட்க.

“என் தலைவர் கண் முழுச்சிட்டா போதும். அவர் எல்லாத்தையும் பார்த்துப்பார்.” என்று அவன் சொல்லி முடிக்கவும். அவன் போன் போலீசால் கைய் பற்றவும் சரியாக இருந்தது.

போலிசின் அத்து மீரலை பார்த்த சத்யா இது மகேஷ் மட்டும் சம்மந்த பட்டதாக இருக்க முடியாது. அவனுக்கு பின் ஏதோ பெரிய சக்தி இயங்குகிறது என்பதை புரிந்துக் கொண்ட சத்யா ஏதும் பேசாது அமைதியாக போலிஸ் ஜீப்பில் ஏறினான்.

வசந்திக்கு எப்படி இந்த விசயத்தை தாமரைக்கு சொல்வது என்று பயந்துக் கொண்டே சொல்ல. அதை கேட்ட தாமரைக்கு ஒரு நிமிடம் அவள் என்ன சொல்கிறாள் என்பதே புரியவிலை.

புரிந்ததும் அவள் நினைவில் அவள் இல்லாது தரையில் வீழ்ந்தாள். வசந்திக்கு தான் அய்யோ என்றது. இங்கு தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆதித்யாவின் உயிருக்கு தானே ஆபாத்து என்று நினைத்தவள்.

ஒடி சென்று தண்ணியை அவள் முகத்தில் தெளித்து விட்டு “இதோ பார் தாமரை இப்போது தான் நீ தைரியமாக இருக்க வேண்டும்.” என்று சொன்னவள்.

பின் சத்யா தன்னிடம் சொன்னதை அனைத்தையும் சொல்லி முடித்தவள் இப்போது நாம் அங்கு போக வேன்டும் என்று சொன்னது தான் தாமரை அவளுக்கு முன்பாக வெளி கேட்டை நெருங்கி இருந்தாள்.

காத்துக் கொண்டு இருந்த காரில் இருவரும் மருத்துவமனைக்கு விரைய. இவர்கள் அங்கு செல்லும் போது ஆதித்யாவுக்கு சிகிச்சையை ஆராம்பித்து இருந்தனர்.

தாமரை பார்த்த அனைவருக்கும் ஆதித்யாவின் மனைவி என்று தெரியுமாதளால் அனைவரும் அவளிடம் ஆருதல் சொல்ல. ஆனால் எதையும் கேட்கும் சூழலில் அவள் இல்லை.

அவள் மனம் முழுவதும் தன் பாட்டி தன்னிடம் சொன்ன. நம் பரம்பரையில் யாரும் கணவன் மனைவி நீண்ட ஆண்டுகள் வாழ்ந்தது இல்லை என்ற சொல்லே திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து அவளை கொள்ளாமல் கொன்றது.

ஆதித்யா தன் கழுத்தில் தாலி கட்டாமல் இருந்து இருந்தால் இப்படி எல்லாம் ஆகி இருக்காதோ….என்று தன் மனம் கண்ட படி நினைக்க.

வசந்தியோ சத்யா அடையாளம் சொன்ன ஆள் யார் என்று சுத்தி பார்க்க. ஒரு வட்டத்துக்குள் சத்யா சொன்ன அங்க அடையாளத்துடன் இருக்க. அவன் முழியும் சத்யா சொன்ன ஆள் இவன் தான் என்று சொல்லாமல் சொல்லியது.

அவன் பார்வை ஒரு வட்டத்துக்குள் அடங்காமல் அங்கே இங்கே என்று அலை பாய்ந்துக் கொண்டே இருந்தது.அவன் அப்படி சுத்தி முத்தியும் பார்க்கும் போது வசந்தி தன்னை பார்ப்பதை பார்த்து விட்டு.

இவள் ஏன் என்னை இப்படி பார்க்கிறாள் என்று நினைத்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்றான். அவனுக்கு ஆதித்யாவின் மனைவிக்கு ஆருதல் அளிப்பது போல் அளித்து அவள் கூட ஆதித்யாவின் அருகில் செல்ல நினைத்து.

தாமரையின் அருகில் சென்று “நம்ம தலைவருக்கு இப்படியாகி இருக்க கூடாது. அதுவும் அவர் ரொம்ப நம்புன அந்த சத்யா பைய்யனே இப்படி செய்வான் என்று யாரும் எதிர் பார்க்கலை.” என்று சொல்ல.

தாமரைக்கு அவன் பேச்சி எல்லாம் காதில் விழவே இல்லை. அவள் கண் மனம் அனைத்தும் ஆப்பிரேஷன் தியேட்டர் வாசலிலேயே இருந்தது. ஆனால் வசந்தி ஆதித்யாவின் இப்போது நிலை எப்படி இருக்கிறது என்ற கவலையோடு இனி அவனை யாரும் ஒன்றும் செய்ய விட கூடாது என்ற கவலையும் சேர்ந்து இருந்ததால்.

மகேஷின் பேச்சை கேட்டு “அது எப்படி சத்யா தான் குத்தினார் என்று உறுதியா சொல்ற….”

அவள் பேச்சில் யார் இது தலைவரின் பொண்டாட்டியே கம்முன்னு இருக்கும் போது இவள் இப்படி பேசுவது என்று நினைத்தாலும் வாய் தன் பாட்டுக்கு “அது தான் எல்லோரும் பார்த்தோமே….”

“எதை அவர் குத்தியதையா…..?”

சற்று தடுமாற்றத்துடன் “குத்தியது இல்லை….அங்கு அவங்க இரண்டு பேரு தான் இருந்தாங்க. நாங்க போய் பார்க்கும் போது தலைவரை குத்திய கத்தியைய் சத்யா தான் பிடித்துக் கொண்டு இருந்தான்.”

“அப்போ யாரும் பாக்கலே…. கத்தியே பிடிச்சி இருந்ததை மட்டும் தான் எல்லாரும் பார்த்திங்க.” என்றதற்க்கு.

“ஆமாம் கைய் புண்ணுக்கு கண்ணாடி எதற்க்கு.” என்று கேட்டு வைக்க.

“அது எந்த புண்ணுன்னு நம்ம தலைவர் எழுந்து வந்து பார்ப்பாரு.ஆனா இப்போ எனக்கு ஒரு சந்தேகம் அவர் எழுந்து வந்த உடன் அந்த புண்ணு பட்ட கைய் இருக்குமா என்பது தான்.” என்று அவள் சொல்லி முடிப்பதற்க்கும் ஆப்பிரேஷன் ரூம் திறப்பதற்க்கும் சரியாக இருந்தது.
 
ஆதித்யாவுக்காக தாமரையின் பாடல்...

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
என் கண் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்.
புண்பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நலம் தானா? நலம்தானா?
உடலும் உள்ளமும் நலந்தானா?
நலம்பெற வேண்டும்
நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு...
 
Last edited:
Top