Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -13

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -13

காரை ஹோட்டல் ஹில்டன் பார்கிங்ல நிறுத்தினான் இனியன்... அவள் கையில் ஒரு சிறிய ஸ்ப்ரேவை கொடுத்தான்...

என்ன இது..

உனக்கு சிட்டுவேஷன் எப்படியிருக்குமோ அதான் இந்த ஸ்பிரே முகத்தில அடிச்சா மயக்கம் வந்துடும்... அப்பறம் உன் டாப்புல இந்த டிசைன் இருக்குல அதுல கேமரா வச்சிருக்கேன்...

அவன் சொல்லுவதை கேட்டு முழித்துக் கொண்டிருந்தாள் ஆரா தேன்மொழியாள்..

அவள் பக்கம் திரும்பி ,என்னடி புரியுதா...

ம்ம்.. அவசியம் நான் போகனுமா... எனக்கு பயமாயிருக்கு.

திரும்பவும் முதல் இருந்து ஆரம்பிக்காதடி... உனக்கு என்மேல நம்பிக்கையே வரலையா... பார்க்கில் இருக்கும் லைட் வெளிச்சத்தில் அவள் கண்கள் பிரகாசமாக தெரிய... அவள் விழியையே பார்த்து ஒரு நிமிடம் சொக்கிதான் நின்றான் இனியவன்..

இருக்கு அவள் உதட்டை சுழித்துக் கொண்டு சொல்ல...

பின்ன முதல்ல நீ போ நான் உன் பின்னாடியே வரேன்... இவள் இறங்கி முன்னே நடக்க கொஞ்சம் இடைவெளிவிட்டு ஆராவை தொடர்ந்தான்... அங்கே ராஜேஷ் ,ஆராவின் கையை பிடித்து ஒரு இடத்தில் உட்கார வைத்தான்...

இதோ வரேன் ,ஆராவிடம் சொல்லிவிட்டு பாபுராஜை போனில் அழைத்தான் அவள் முதுகு பின்னாடி போட்ட இருக்கையில் அமர்ந்தான் இனியன்... இருவரும் காதில் ப்ளுடூத்தை போட்டுக் கொண்டு பேசினர்...

இனியா அங்க டான்ஸ் ஆறாளே அந்த நடுவுல இருக்கிற பொண்ண பாரு...

யாரு...

அதான் நீல கலர் டிரஸ், தண்ணீ அடிச்சிட்டே ஆடுறா பாரு... திரும்பி அந்த பொண்ணை பார்த்தான் இனியன்...

ஏன் என்ன அந்த பொண்ணுக்கு மப்பு அதிகமாயிருக்கு போல.. அதான் இப்படி ஆடுது..

லூஸூ அந்த பொண்ணு யாருன்னே தெரியலையா உன் லட்சுமன மாமா பொண்ணு.. கிராமத்து பொண்ணு எப்படியிருக்குமோ சொன்னே..பாரு உன்னையே டேக் ஆப் பண்ணுறா...

ச்சீ... பயக்கற தண்ணீ பார்ட்டியா இருக்கும்போல, ஏய் அவகிட்ட வரா.. நான் அந்த பார்ல உட்காரேன்...

இனியன் எழுந்து தனக்கு தேவையான காக்டெயில ஆடர் செய்ய... அவன் பக்கத்தில் வந்தாள் லட்சுமணன் பொண்ணு அஞ்சலி...

ஹாய், ஐயம் அஞ்சலி எப்படி மாமாயிருக்கீங்க...

ஹோ அஞ்சலி நைஸ் டூ மீட் யூ.. அவள் அவனுக்கு கையை நீட்ட.. ஹீ..ஹீன்னு சிரித்துக்கொண்டே கையை கொடுத்தான்..

டேய் ஏன்டா இப்படி வழியிற ..வந்த வேலையை பாருடா இனியா.. மெதுவாக வாயில் கையை வைத்து பேசினான் எனக்கு தெரியும்.. நீ வாயை மூடு...

வாங்களேன் டான்ஸ் பண்ணலாம்.. ஸ்யூர் லெட்ஸ் கோ....அஞ்சலியுடன் செல்ல... ஆராவிற்கு டிரிங்க்ஸ் எடுத்துட்டு வந்து தந்தான் ஒரு பேரர்...

அதை பார்த்தவுடன் , இனியன் ஏய் அதை குடிக்காதடி சொல்லும் போதே ஒரு வாய் குடித்தாள்...

கொஞ்சமா குடிச்சிக்கிறேனே தண்ணீ தாகமாயிருக்கு... ஏய் போதை மருந்து கலந்துருக்கான்... மயங்கி விழுற மாதிரி ஆக்ட் செய்...

ம்ம் அப்படியே அந்த டெபிள்மேல் தலையை கவிழ்ந்தாள்... அப்போது பாபுராஜ் ராஜேஷ் மற்றும் தன் அடியாட்கள் இருவருடன் வந்தான்... என்ன ராஜேஷ், குட்டி பணக்கார குட்டிதானே...

ஆமாம் அண்ணே வசதியான பார்ட்டிதான்..

சரி நம்ம வழக்கமாக புக் பண்ண ரூமிற்கு இவளை கூட்டிட்டு போங்க... ஆராவை கைதாங்களா தூக்கிக் கொண்டு முதல்தளத்திற்கு கூட்டிவந்தார்கள்... அவள் செல்வதை தன் போனில் பார்த்தபடியே பின் தொடர்ந்தான் இனியன்... ரூமிற்குள் அழைத்து செல்ல... முதல்ல இந்த பொண்ணோட துணியை எடுங்கடா.. நல்லா அம்சமா இருக்கா... எல்லாரும் திரும்பி நில்லுங்க முதல்ல நான் முடிச்சிடுறேன்.... சுண்டி இழுக்குறா.. ஆராவின் மேல் கையை வைக்க..

தன் கண்ணை திறந்து எழுந்து உட்கார்ந்தாள் ஆரா..

ஏய், பதறி விலகினான் பாபுராஜ்... யாரு நீ முதல்முறை சந்தேகம் வர..

அண்ணா என்னை விட்டுட்டுங்க.. எனக்கு இதுக்கும் எந்த சம்மதமும் இல்ல... எல்லாம் வெளியே ஒரு ஆறடி ஆளுயிருக்கான் அவன் செஞ்ச வேலை என்னை ஒண்ணும் செய்யாதீங்க கெஞ்ச ஆரம்பித்தாள்..

தன் போனில் அவள் பேசுவதை கேட்ட இனியன் ச்சே என்று தலையில் அடித்துக்கொண்டான்.

ச்சீ வாயை மூடு.. விட்டா பேசிட்டேயிருக்க... டேய் இந்த ராஜேஷ் கீழேயிருக்கான் பாரு அவனை போன் போட்டு வரசொல்லு.

ஹாங்... இதோ வரண்ணா,ராஜேஷ் ரூமின் கதவை தட்ட...கதவின் லென்ஸ் வழியாக பார்த்தான் பாபுவின் ஆள்..

ராஜேஷ்தான் வரான்... கதவை திறக்க உள்ளே ராஜேஷுடன் இனியனும் நுழைந்தான்.... இவர்கள் பின்னாடியே வந்த பாபுராஜ் ஆள் ஒருவன்...பாபுண்ணா நம்மள போலிஸ் ரவுண்ட் பண்ணிருச்சு கத்த... இனியனை தள்ளிவிட்டு கீழே ஓடினார்கள்... அந்த ஹோட்டலின் பின்பக்கம் தோட்டத்தில் இறங்க.. அங்க சரண் அவர்களை பிடித்தான்... இனியனும் அவர்களை பிடித்து அடிக்க.. அதில் பாபுராஜ் இனியன் கை மூட்டியின் அருகே கத்தியால் சடாரென்று வீசினான்...

அப்படியே பாபுராஜ் கழுத்தில் கையை வைத்து வளைத்து பிடித்தான் இனியன்..

அதற்குள் போலிஸ் வந்து அவர்களை பிடித்தார்கள்... இனியன் ஏற்கனவே ஐ.ஜியுடன் தொடர்பு கொண்டு பேசிவிட்டான்...

அங்கிள் பார்த்து வெளியே தெரியாத மாதிரி பார்த்துக்கோங்க அபி வேற சம்மதப்பட்டிருக்கா..

இவன்களை வெளியே விடாதமாதிரி பார்த்துக்கிறேன் இனியா, அவர்களை உதைத்து வண்டியில் ஏற்றினர்..

பின் பக்கமாகயிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆரா, இனியன் கையில் வழியும் ரத்ததை பார்த்து இனியா என்று மயக்கம் போட்டு விழுந்தாள்..

இவளை பிடித்தபடி கீழே உட்கார்ந்தான்... இவவேற ஒருத்தி இரத்தத்தை பார்த்தவுடனே மயக்கம்போட்டுட்டா.. அவள் கண்ணத்தில் தட்டி

ஏய் ஆரா எழுந்துருடி... அவளை இருகையால் தூக்கிக் கொண்டு நடக்க சரண் பார்க்கிங்கில் இருந்த காரை எடுத்து வந்தான்...

ஆராவை காரின் சீட்டில் உட்கார வைத்தனர்..முகத்தில் தண்ணீர் தெளித்தான் இனியன்.. கண்களை சுருக்கி இமை திறந்தாள்... இனியனின் கண்ணத்தை பிடித்து எதாவது ஆயிடுச்சா உனக்கு என்று கேட்க...

லூஸூ வாய்தான் உனக்கு அதிகம் பயந்தாங்கொள்ளி... சின்னதா கீறிட்டான்.. இங்கபாரு பர்ஸ்ட் ஏயிடு பண்ணா சரியாப்போயிடும்...

சரண் ஆராவை பார்த்து சிரிக்க... அது ஒண்ணுமில்லண்ணா இவன் எனக்கு சாப்பாடே வாங்கிக்கொடுக்காம கூட்டிட்டு வந்துட்டான்.. அதான் மயக்கமா வந்திடுச்சு..

இனியன் சிரித்தபடியே சரண் வண்டியை ஏதாவது ஹோட்டல்ல விடு.. இவ பசி தாங்க மாட்டா...

மணி 11.30 ஆயிடுச்சே மச்சான்... ஹாங் அங்க ஒரு பீட்ஸா கார்னர் இருக்கு..கேட்டுவரேன்..

சிறிது நேரத்தில் பிட்ஸா வாங்கிவந்தான் சரண்... அதை ஆராவிடம் கொடுத்தான்..

ஐய்யா சிக்கன் பீட்ஸா, பண்ணீர் சூப்பரண்ணா... ரொம்ப நாளா சாப்பிடனும் ஆசை... அம்மா வாங்கி தர மாட்டாங்க.. வெயிட் போடுவேனாம்..

தன் கைக்கு மருந்து தடவியிருந்த இனியன் இதை கேட்டு வாய்விட்டு சிரிக்க..

நீ ஏன்டா சிரிக்கிற..

க்கும் இதுக்குமேல வெயிட் போடனுமா ...

அண்ணா அவன வாயை மூடுசொல்லு... பசியில் சாப்பிட ஆரம்பித்தாள்... சரணும் சாப்பிட ஆரம்பிக்க.. இனியனோ தன் கைக்கு காட்டன் வைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தான்...

இனியனுக்கு ஒரு பீஸ் எடுத்து ஆரா ஊட்ட..எனக்கு வேணாம் நீ சாப்பிடு, உனக்குதான் ரொம்ப பிடிக்கும் சொன்னே... எனக்கு இந்த ஜூஸ் போதும்..

நான் சாப்பிட்ட மிச்சம்தான் உனக்கு தரேன்... சரண் சிரித்தபடி குட்டிமா அப்ப வரபோற புருஷன் கதி அவ்வளவு தானா...

அவனுக்கும் நான் சாப்பிட்ட மிச்சம்தான்... இனியன் வாயை திறந்து அவள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள...சரனும் தன் மச்சானுக்கு ஊட்டிவிட்டான்...

......

அடுத்த நாள் இரவு அனைவரும் ஹாலில் கூடியிருக்க... இனியனோ சத்தியமூர்த்தியின் மடியில் தலைவைத்து சோபாவில் படுத்தபடி பேஸ்புக் பார்த்துக்கொண்டிருந்தான்...

மாமா இந்த வீடியோவை பாருங்க.. லட்சுமண மாமா பொண்ணு அஞ்சலி என்று ஆரா அனைவரிடம் காட்டினாள்..

லதா அதை பார்த்து என்ன பொண்ணை இப்படி வளர்த்து வச்சிருக்கு அண்ணே..

எப்படியிருக்கும் மாமா கற்பனை செய்யுங்க, வீட்டிலே பாரை ஓபன் பண்ணி நம்ம இனியனும், அஞ்சலியும் குடியும் குடித்தனுமா இருப்பான்.. அவனுக்குகேத்த சிட்டிகேர்ள் ஆரா கலாய்க்க..

நீ வேற நல்ல பொண்ணா பாரு சக்கி, நான் கட்டிக்கிறேன். சொல்லி சத்தியமூர்த்தியை பார்த்தான்.. அவர் அவனின் தலையை கோதிவிட்டு “உன்னை நானறிவேன் என்னையின்றி யார் அறிவார்”, என்று தன் மருமகனின் காதில் பாட...

ம்ம். கரெக்ட் மாமா நீங்கதான் எனக்கு ஏற்ற மாதிரி பொண்ணை பாருங்க, நல்ல அழகா, ஸ்மார்டா, முக்கியமா ஒல்லியா இருக்கனும் மாமா...

சரிடா...

அங்கே அபி வர, ஆரா அடுத்ததை ஆரம்பித்தாள்... மாமா காலேஜே போர் அடிக்குது மாமா... நாம்ம ஒரு சேன்ஜூக்கு டூர் போகலாமா... ஊட்டியில நல்ல சீஸன்னாம்... எங்க பிரண்ட்ஸ் மூனுபேரும் வரேன் சொல்லியிருக்காங்க...

போலாம்டா...பிள்ளைகளுக்கு போர் அடிக்குது பாவம்.. லதா நாளைக்கே கிளம்பலாம்.. நம்ம கெஸ்ட் ஹவுஸை கிளீன் பண்ண சொல்லுமா..

ஆமாம் ரொம்ப படிச்சு களைச்சு போயிடுச்சு, ஊர சுத்த எப்படி ப்ளான் போடுறா பாரு சத்தியா மாமா... நான் வரல எனக்கும் சரணுக்கும் வேலையிருக்கு..

அய்யோ நம்ம ஒரு ப்ளான் போட்டா, இவன் சொதப்புறதுதான் வேலை... உடனே அவனுக்கு கால் செய்தால்...அவளின் நம்பரை பார்த்து... என்ன பிசாசு இங்கிருந்தே போன் செய்து... அவளை நிமிர்ந்து பார்த்தான்... தோட்டத்திற்கு வா என்று கண்ணை காட்டினாள்...

ஆரா எழுந்து வெளியே செல்ல... ஓகே மாமா நான் தூங்க போறேன், இனியனும் எழுந்துக்கொண்டான்...

தோட்டத்தில் தனக்காக காத்திருக்கும் ஆராவின் அருகில் சென்றான்.. எதுக்குடி கூப்பிட்ட...

ஏற்கனவே சரணும், அபியும் பேசறதில்ல.. அபி வேற மூட் அவுட்... அவங்கள சேர்த்து வைக்க நான் ப்ளான் போட்டா... நீ வந்து கெடுக்குறே...

அவங்க கொஞ்சம் மனம்விட்டு பேசினா.. புரிஞ்சிப்பாங்க இல்ல..

இனியனும் சிறிது யோசித்துவிட்டு , சரி போகலாம் என்றான்..

ஹப்பா ஜாலி... நான் போய் பேக் செய்யனும் டைமில்ல வரட்டா...

ஏய் இங்க வா... அவங்கதான் கல்யாணம் செஞ்சிக்க போறாங்க... சரி தனியா பேசட்டும்.. நீயேன்டி ஒவரா துள்ளுற...

எங்க அண்ணாவும், அபியும் சேர்ந்தா எனக்கு ஹாப்பிதானே...

அடுத்த நாள் குடும்பமே ஊட்டியை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தது...

.....மெய் தீண்டுவான்.
 
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு பதிவு
ஊட்டில என்ன கூத்தோ??
 
அபி பிரச்சினை ஓவர்
ஆரா மயக்கம்
ஆஹா என்ன ஒரு விளக்கம்....
இனியன் இருக்க பயம் ஏன்???
ஆரா பிளான் எல்லாம் ஓகே
ஆனா சொதப்பாமல் இருந்தா ஓகே....
 
Top