Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூவிலை - 6 | இலைரசிகன் | கிருஷ்ணா பச்சமுத்து | திகில் நாவல்

Advertisement

writerkrishna

Member
Member
மூவிலை - 6
- கிருஷ்ணா பச்சமுத்து​
1221

| இலை ரசிகன் |



நவம்பர் 21, 2018. முன்னிரவு | முத்துசுவாமி இல்லம்.

முத்துசுவாமி அறையிலிருந்து வெளிவந்த மதன்ராஜ், "'இலை ரசிகன்' நீங்க மட்டும் உள்ளே வாங்க” என்றார். மயிலப்பன் தெரியாதது போல் நின்றிருந்தார்.

“சாரி.. மயிலப்பன் நீங்க தான்.. உள்ளே வாங்க..” திரும்பிப் பார்த்து அறை நோக்கி நடந்தார் மயிலப்பன். முத்துசுவாமி அறையில் வைத்தே விசாரணை நடந்தது.

“உங்களுக்கு முத்துசுவாமிய எவ்வளவு நாளா தெரியும்?”

“நான் அவர போட்டோல தான் பார்த்திருக்கேன்.. நேர்ல பாத்ததில்ல!”

மதன்ராஜ் சிரித்துக்கொண்டே, “எது? இந்த போட்டோவிலா?” கேட்டுவிட்டு முத்துசுவாமியும் இலை ரசிகனும் இருந்த புகைப்படத்தை அவர்முன்னே நீட்டினார்.

“ம்ஹூம்…” ஏளனச்சிரிப்பு சிரித்தார் மயிலப்பன்.

“ஆமாம்.. நானும் முத்துசுவாமியும் கல்லூரியிலிருந்தே நண்பர்கள். முத்துசுவாமி இறக்கும்போது நான் இங்கேயே தங்க வேண்டிய நிலை. நான் அப்போ சொன்னதுபோல், எனக்கும் யாருமில்லை. ஆனால் என்னால் நண்பனின் வீட்டில் நீண்ட நாள் தங்க விருப்பமில்லாமல், தான் ஒரு வேலைக்காரனாக தங்குவதென்றால் சரியென முத்துசுவாமியிடம் சொன்னேன். அவனும் சரியென்று, இறக்கும் தருவாயில் ஷண்முகவேலிடம் அவ்வாறே சொல்லிவிட்டு நிஜத்தில் மறைந்து எங்கள் உள்ளத்தில் நிலைகொண்டான். இதிலென்ன தவறு?” மயிலப்பன் தன் உணர்வுநிலை மேலுயர பேசினார்.

"நீங்க முத்துசுவாமியோட பிரண்ட்ங்கிறதுல எனக்கொன்னும் பிரச்சனையில்லை. அத நான் தவறுன்னும் சொல்லல. நீங்க ரைட்டரா?”

“இப்போ எழுதுறதில்ல..”

“எப்போ எழுதுனீங்க?..”

“தாவரங்கள பத்தி சில புத்தகங்கள் எழுதிருக்கேன்.”

“ஹ்ம். அங்க தான் எனக்கு டவுட்.. இந்த டெட்பாடிஸ் எல்லாத்தையும் பொதச்சு அதுமேல தென்னை மரங்களை வச்சுருக்காங்க. அதும் எல்லா டெட் பாடிஸும் லீப் ஸ்ட்ரக்சர்ல வச்சுருக்காங்க. சோ.. அவங்க மோடோ பாடிஸ மறைக்கறது மட்டுமில்ல. ஸேம் லீப் ஸ்ட்ரக்சர் முத்துசுவாமி ரூம்கு போற வழியில இருக்கு. இங்க எல்லாம் தாவரங்கள சம்பந்தபட்டதாகவும் அதை அழிக்கிற மனிதர்களுக்கு எதிராகவும் இருக்கு. இதை மையமா வச்சுதான் நீங்க புக் எழுதிருக்கீங்க. அதுதான் இது..” சொல்லிவிட்டு "மனிதனும் தாவரங்களும்” புத்தகத்தை மயிலப்பன் முன் நீட்டினார்.

“அதுமட்டுமில்லாமல், உங்க நட்பு பத்தியும், நீங்க பண்ண கொலைகள் பத்தியும் முத்துசுவாமியே எங்கிட்ட சொல்லிடாரு..?”

“முத்து வா..?” ஆச்சர்யமாக கேட்டார் மயிலப்பன்.

“ஆமா.. அத அப்புறம் சொல்றேன். நீங்க உண்மைய சொல்லுங்க..”

மயிலப்பன் நேராய் மதன்ராஜின் கண்களை பார்த்தார். மெல்ல உதடுகள் மட்டும் விரிந்தன.

“இது எப்படியும் ஒரு நாள் நடக்கும் எனக்கு தெரியும். இதெல்லாம் யோசிச்சா எதுவுமே பண்ணமுடியாது. இந்த பூமில மொதல்ல வந்தது யாரு? மனிதனா? இல்ல தாவரங்களா? ஒரு காலத்துல பாதுகாப்பா தங்க இடம் தேடிய மனிதன் மரத்துமேல தங்குனான். அது அவனுக்கு பாதுகாப்பையும் உணவையும் தந்துச்சு. ஏதோ இவனோட அறிவ வளர்த்துகிட்டு, வீடு கட்ட கத்துகிட்டவுடனே அடைக்கலம் கொடுத்த மரத்தையே வெட்டி வீடு கட்டிகிட்டான். 'இது' தான் அழகுனு சொல்றதுக்கு மனிதன் யாரு? ஒரு செடிய வைக்கிறான். அது ஒவ்வொரு முறையும் தன் கிளையை மகிழ்வோடு விரிக்கையில், வெட்டி வெட்டி விட்டுட்டு, அதோட வளர்ச்சியை முடக்கிட்டு அதுதான் அழகுங்க்கிறான். நம்மலவிட பலசாலியான ஒரு உயிரினம் வந்து இதுதான் அழகுனு சொல்லி நம்ம கையும் காலையும் வெட்டி, ஒரே இடத்துல உக்கார வச்சா எப்டி இருக்கும்? ஒவ்வொரு கைப்பிடி மண்ணும் கர்ப்பப்பை. நாம கான்கிரீட் போட்டு வீடு கட்டும்போது மழை தண்ணி மண்ணுக்குள்ள போறது மட்டும் தடைபடுறதில்லை. பல்லாயிரம் கருப்பைகள் அடைக்கபடுகிறது. மனிதன் தனக்கு போதுமான இடைத்தை தாண்டி பல வீடுகள், சாலைகள் கட்டுவதால், நகரங்களில் கருவிலிருந்து பிறக்கும் சேய் செடிகளின் எண்ணிக்கை மிக குறைவு. கிராமமும் இப்போது நகரமாகிறது. மனிதனுக்கு ஒரு விஷயம் நடக்காம தடுப்பது எப்படினு எழுத மட்டும்தான் தெரியும், அத பின்பற்றவோ மத்தவங்கள பின்பற்ற வைக்கவோ தெரியாது. மனிதனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. மூளை சொல்லும் அறிவுரையை, அவன் செய்யும் தவறு, அவனை பாதிக்காத வரையில் கேட்கமாட்டான். அவனுக்கு சட்டம், தண்டனை என ஒன்றை இயற்றி கட்டுக்குள்ளேயே வைக்கவேண்டும். நான் கொன்ன எல்லாரும் தங்களோட தேவைக்கு அதிகமா வீடு வச்சுருக்கவங்க. ஒவ்வொன்றும் பெரிய பெரிய வீடுகள். தாவரங்களை அழிக்கும் மனிதனின் உடல்களை அந்த தாவரங்களுக்கே உரமா போட்டுட்டேன்!" சொல்லிவிட்டு மேலே சுவரில் மாட்டப்பட்டிருந்த முத்துசுவாமியின் படத்தைப் பார்த்து உதடுகளை விரித்தார். அது கொடுர சிரிப்பாக மதன்ராஜை சில வினாடிகள் பயமுறுத்தியது. மீண்டு வந்து கேட்டார் மதன்ராஜ்.

“அப்போ அத்தனை கொலைகளையும் நீங்க தான் பண்ணீங்களா?”

“ஆமா..”

“முத்துசுவாமிக்கு இதில எந்த சம்மந்தமும் இல்ல?”

“இல்ல..”

“முத்துசுவாமிக்கு தெரியாமலே எல்லா பிணங்களையும் அவர் தோட்டத்துல பொதச்சீங்களா?”

“ஆமா.. அவனுக்கு எந்த சம்மந்தமும் இல்ல..”

“பொய் சொல்றீங்க! உங்களுக்கு நாவல் படிக்கிற பழக்கம் இருக்கா?”

“இருக்கு.."

“இத படிக்கிறீங்களா?” சொல்லிவிட்டு ஒரு குறிப்பேட்டை அவரிடம் நீட்டினார் மதன்ராஜ். ஒன்றும் புரியாமல் வாங்கிப் படித்தார் மயிலப்பன். முதல் இரண்டு பக்கங்களை கடக்கும் போதே மயிலப்பனுக்கு புரிந்துவிட்டது. லேசாய் சிரித்துவிட்டு மதன்ராஜ் சொன்னார்.

“எங்கிட்ட நீங்க முன்னாடி சொன்னது பொய். உங்களுக்கு குழந்தை இல்லாம போகல.. ஒரு பையன் இருந்துருக்கான். உங்க ஒய்பும் பையனும் உங்களுக்கு 40 வயசாகும்போது ஆக்ஸிடெண்ட் ல இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் உங்க வாழ்க்கைல பிடிப்பு போய் பிணமாய் வாழ்ந்த போது, ஏற்கனவே லேசாய் இந்த சமூகத்துமேல இருந்த வெறுப்பு, அதிகமாகி தப்பு பண்றவங்களுக்கு தண்டனை குடுத்து, தன்னோட வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாத்த முடிவு பண்ணிருக்கீங்க. அந்த சமயம் வில்லேஜ்ல செட்டில் ஆகனும்னு வந்த முத்துசுவாமிய பாத்துருக்கீங்க. இயற்கையோட மீதி வாழ்கைய கழிக்கலாம்னு வந்த முத்துசுவாமிக்கு, நீங்க சொன்ன விசயத்தை செஞ்சா இயற்கைக்கு நன்றி கடன் செலுத்துறதா இருக்கும்னு நெனச்சு சம்மதிச்சுருக்கார். அதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் 13 பேர செலக்ட் பண்ணி, கடத்திருக்கீங்க. வெவ்வேற இடத்துல இருந்து, வெவ்வேற டைம்ல கடத்திருக்கீங்க. பாடிஸ ஆரம்பத்தில், கட்ட ஆரம்பித்திருந்த இந்த வீட்டுக்கு அடியில பொதைக்க நெனச்சு, பின் தென்னை மரத்துக்கு அடியில பொதைக்க பிளான் பண்ணிருகீங்க. இதுக்காக இந்த வீட்டு கன்ஸ்ட்ரக்சன 3 வருஷம் நிறுத்தி வச்சு இந்த வேலையெல்லாம் பண்ணிருக்கீங்க. உங்க பாரின் பிரண்ட் கிட்ட இருந்து டிரக்ஸ் வாங்கி கடத்துனவங்கள கோமால வச்சுருக்கீங்க. எல்லாரையும் ஒன்னா பொதைக்கனும்னு அப்படி பண்ணிருக்கீங்க. 13வது ஆள கடத்தின உடனே, அன்னைக்கு நைட்டே எல்லாரையும் கொன்னு, பொதச்சு செடிய நட்டுருக்கீங்க. இந்த புயல் வரலனா உங்க விசயம் வெளியவே வந்துருக்காது. எல்லாத்தையும் தெளிவா உங்க பிரண்ட் எழுதிருக்கார். அவருக்கு எழுத்தில் ஆர்வம் இருந்திருக்கு. ஆனா அவர் வேற எதையும் எழுதல. 14 அத்தியாயம் எழுதியிருக்கார். ஒவ்வொன்னையும் எப்படி பண்ணீங்கனு தெளிவா விளக்கி நாவலா எழுதிருக்கார். எழுதியவர் இத பதிப்பிக்கனும்னு நெனச்சு எழுதல. ஏன்னு தெர்ல, பேரும் வைக்கல. நாவலும் முடியல..!”

“முத்து…….” சத்தமாக கூப்பிட்டார் மயிலப்பன். முத்துசுவாமி படத்திலிருந்து எந்த அசைவையும் பதிலாய் கொடுக்கவில்லை.

மதன்ராஜிடம் திரும்பி அவர் முகத்தை பார்த்து சிரித்தார் மயிலப்பன்.

"அப்புறம் என்ன?” எனக்கேட்பது போலிருந்தது அந்த சிரிப்பு. அவரை அழைத்துகொண்டு வெளிவர முற்பட்டார் மதன்ராஜ். திடீரென நின்று கேட்டார் மயிலப்பன்.

“அந்த டைரி எங்க கிடச்சுது?”

மதன்ராஜ் நேரே புத்தக அலமாரிக்கு சென்று, பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்தார்.

“இதிலென்ன? அது அவன் கொண்டாடும் புத்தகம்..” ஆச்சர்யமாய் கேட்டார் மயிலப்பன்.

புத்தகத்தை மயிலப்பனிடம் கொடுத்துவிட்டு, விரிப்பை எடுத்தார். பொன்னியின் செல்வன் புத்தகமிருந்த இடத்தில், செவ்வக வடிவில் குழி உருவாக்கப்பட்டு இருந்தது.

“இங்க தான் அந்த நோட்புக் இருந்துச்சு..”

மயிலப்பன் இதற்கும் சிரித்தார். எப்போதோ நடக்குமென எதிர்பார்த்தது இப்போது நடக்கும் போது வெளிவரும் சிரிப்பு அது.

இருவரும் முத்துசுவாமியின் அறையிலிருந்து கூடத்திற்கு வந்தனர். சண்முகவேல் எதிர்பட்டார்.

“சார்.. என்னாச்சு..?” சண்முகவேல் கேட்டார்.

“தாங்ஸ்…” பதிலளித்தார் மதன்ராஜ். புரியாமல் சண்முகவேல் குழம்ப, வீட்டுவாசலில் மகிழுந்து வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அனைவரும் வாசலையே நோக்கினர்.

சில நிமிடங்களுக்கு பிறகு, ஆய்வாளர் பிரபு வாசல் வழியே அறைக்குள் நுழைந்தார்!



தொடரும்...
அடுத்த அத்தியாயம் ஜூலை 2, 2020 அன்று..!
`````````````````````````````````````````````````````````````````````
பகிருங்கள்! விமர்சியுங்கள்! மதிப்பீடளியுங்கள்!
ஆதரவிற்கு நன்றிகள்!!!
*வினை மட்டுமே உயிர்*
- கிருஷ்ணா பச்சமுத்து
 
Enakum thonum enga theruvula mann theriya irunthuchu...Ipa kasu kollai adika concrete potu sakkadai ya mala penja theruvil odum
 
Top