Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூவிலை - 5 | தேடுது போலிஸ் & கண்டது போலிஸ் | கிருஷ்ணா பச்சமுத்து | திகில் நாவல்

Advertisement

writerkrishna

Member
Member

மூவிலை - 5

தேடுது போலிஸ்! & கண்டது போலிஸ்!
- கிருஷ்ணா பச்சமுத்து​
| தேடுது போலிஸ்! |

அக்டோபர் 27, 2018. எற்பாடு | ஈ4 கல்பாக்கம் காவல் நிலையம்.

ஆய்வாளர் பிரபு, டிரைவர் தங்கத்துடன் உள்ளே வந்து, டிரைவரை வெளியே அமர வைத்து, தன் அறைக்கு சென்று,

"ரமணன்..” என கத்தினார். டிரைவரின் வலக்கை மற்றும் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது.

துணைஆய்வாளர் ரமணன் வேகமாய் உள்ளே நுழைந்து,

“எஸ் சார்..” என்றார்.

“சுப்ரமணி கேஸ்ல மொபைல் நம்பர் செக் பண்ண சொன்னனே.. என்னாச்சு?”

“சார்.. செக் பண்ணியாச்சு சார். சுப்ரமணி நம்பர் வயலூர் பிரிட்ஜ்கிட்டயே சுவிட்ச் ஆப் ஆயிருக்கு. அவருக்கு கடைசியா பேசுன நம்பர் எஸ்டர்டே நைட் வயலூருக்கு பக்கத்து டவர்ல ஆக்டிவா இருந்து, சென்னை, ஹைதராபாத்னு ஹாப் என் அவர் முன்னாடி நாக்பூர்-கு 20 கிலோ மீட்டர் தூரத்துல அந்த நம்பர் ஆக்டிவா இருந்துருக்கு சார்..”

“இந்த ரெண்டு நம்பரும் ஒரே டவர் ல வரவே இல்லையா?”

“இருந்துருக்கு சார். நேத்து ஈவ்னிங் 7.30 வரைக்கும் ஒரு மணி நேரம் ஒரே டவர் ல மூவிங்க்ல இருந்துருக்கு சார்..”

“அப்போ.. பாலோ பண்ணிதான் பண்ணிருக்கனும்..”

“ஆமா சார்.”

“சுப்ரமணி மொபைல் ஆப் ஆகும் போது, அந்த நம்பர் வேற டவர்ல தான் இருந்துருக்கு. லாஸ்ட் கால் பேசுனதுக்கும் சுவிட்ச் ஆப் ஆனதுக்கும் எவ்ளோ டைம் கேப்?”

“25 மினிட்ஸ் சார்.."

“அப்போ மோர் தன் ஒன் பர்ஸன் இன்வால்வ் ஆயிருக்கனும்”

“இருக்கலாம் சார். டிரேஸ் பண்ணது ஒருத்தன் கிட்நேப் பண்ணது ஒருத்தனா கூட இருக்கலாம் சார்..”

“அப்போ ஏன் இன்னும் அந்த மொபைல் நம்பர் இன்னும் ஸ்விட்ச் ஆப் ஆகல?”

“கரக்ட் சார்.. அதுக்கு நாம பதில் தேடணும்”

“வெளிய கூட்டிட்டு வந்தேன்ல.. அவந்தான் டிரைவர் தங்கம்.. அவன டீ கடைல இறக்கி விட்டுட்டு சுப்ரமணி போயிருக்கார். அவன் ஒயிட் கலர் அம்பாசிடர் பாலோ பண்றத பாத்துருக்கான். பிரண்டோட பைக் எடுத்துட்டு பின்னாடியே போயிருக்கான். ஆனா பைக் ரெடி பண்ண டைம் ஆனதால இவனால கீனா பாலோ பண்ணமுடில. வயலூர் பிரிட்ஜ் ல அதே அம்பாசிடர் ஆபோஸிட்ல வர்றத நோட் பண்ணிருக்கான். பட் அவனால வண்டி நம்பர் நோட் பண்ண முடில. அதே நேரத்துல தான் அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருக்கு. ஸோ.. நீங்க அவன கூட்டிட்டு செங்கல்பட்டு ஜீஎஸ்டி ரோடு, ஓஎம்ஆர் நாவலூர், ஈசிஆர் உத்தாண்டி. இந்த டோல் கேட்ல இருக்க சிசிடிவி ல செக் பண்ணுங்க”

“கரக்ட் சார். செங்கல்பட்டுல செக் பண்ணிடுவோம். ஓஎம்ஆர் அண்ட் ஈசிஆர் ஓகே. பட் அவன் கேளம்பாக்கம் வழியா பெருங்களத்தூர் போயிருந்தா?”

"அப்படி போனா.. அவனால பெங்களூரூ தான் போக முடியும். ஹைதராபாத் போக சிட்டிகுள்ள வந்து தான் ஆகனும். ஆனா நாம இப்போ செக் பண்றது சஸ்பெக்டோட நம்பர தேடி இல்ல. அம்பாசிடர தான் செக் பண்ண போறோம். இத மொதல்ல கன்பார்ம் பண்ணிப்போம்”

“எஸ் சார்.. ” சொல்லிவிட்டு வெளியே வந்து டிரைவரை அழைத்துக்கொண்டு நாவலூர் புறப்பட்டார் ரமணன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு,

அவர்கள் எதிர்பார்த்த சாலை வழியாக அமபாஸிடர் சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் கிடைக்கவில்லை. டிரேஸ் செய்த சஸ்பெக்டோட மொபைலும் கான்பூர் அருகில் சுவிட்ச் ஆப் ஆனது. நோக்கியா போன் என்பதால் செல்போன் டவர் மூலமாகவே ட்ரேஸ் செய்ய முடிந்தது. ஆனால் அதுவும் இப்போது முடியாமல் போனது. அடுத்த கட்டமாக அம்பாசிடரை தேட, பெங்களூர் செல்லும் சாலைகளை விசாரிக்க அதிலும் கிடைக்கவில்லை. இறுதியில் செங்கல்பட்டு - திருப்போரூர் - பெருங்களத்தூர் - வயலூர் எல்லைக்குள் தேட முடிவெடுத்தனர். அதற்குள் அமைச்சர் வீட்டில் கொள்ளை போக, அந்த கேஸை கவனிக்க சுப்பிரமணி கேஸ் கிடப்பில் போடப்பட்டது.

சில வாரங்களுக்கு பிறகு,

ஆய்வாளர் பிரபு, ஆணையரை சந்தித்துவிட்டு வெளியே வருகையில் செல்லிடப்பேசியில் அழைப்பு ஒன்று வந்தது. பேசினார். பேசிமுடித்துவிட்டு

"அம்பாசிடர்.. வரேன்டா.. " கத்தினார் ஆய்வாளர் பிரபு.

| கண்டது போலிஸ்! |

நவம்பர் 21, 2018. முன்னிரவு | கபிஸ்தலம் காவல் நிலையம்.

ஆய்வாளர் மதன்ராஜ் தன் இருக்கையில் அமர்ந்து கண் மூடி ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.

“எதிர்பார்த்த மாதிரி விழாத ரெண்டு மரங்களுக்கு அடியிலும் ரெண்டு எலும்பு கூடுங்க கெடச்சுருக்கு! இது எல்லாம் ஒரே சமயத்துல கொல்லப்பட்டு இருக்கு. ஒரே ஆள் 13 பேரையும் ஒரே சமயத்துல கொல்ல முடியுமா? கேங் பண்ணிருக்க மாதிரி தெரில. டிஸ்பொசல் வித்யாசமா இருக்கு.. பிணத்தை பொதச்சு அது மேல செடி வைக்கிறது சாதாரணமா இருந்தாலும், லீப் ஸேப்ல பொதச்சது? ஹ்ம்ம். இந்த கேஸ் புல்லா தாவரங்களுக்கு எதிரானவங்கள கொல்றதுதான் எய்மா? அப்டினா? முத்துசுவாமி ரூம்கு போற வழியில ஒரு இலை படம் இருந்துச்சு. அப்போ முத்துசுவாமி தானா? இல்ல சண்முகம் எல்லாத்தையும் பண்ணிட்டு நார்மலா இருக்காரா? இல்ல வேலைக்காரர் மயிலப்பனா? அப்படி மயிலப்பன் மட்டும் எப்படி இதை தனியாய் செய்திருக்க முடியும்? முடியாது. இது அவருடைய நிலமே இல்லை. அவரே பிணம் புதைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து தான் வந்து சேர்ந்திருக்கார். அவர் சொன்னது உண்மை தானா?”

யோசித்துக்கொண்டே மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த நாளேடைப் பார்த்தார். அதில் ஒரு விளம்பர பகுதியில் புத்தக வெளியீட்டிற்கான விளம்பர படத்தில் புத்தகத்தின் அட்டைப்படம் முன், பின் என இருபுறமும் அச்சிடப்பட்டிருந்தது. பின்புற அட்டைப்படத்தில் புத்தக ஆசிரியரின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அதைக்கண்டவுடன் மைக்ரோ மின்னோட்டம் நாவில் பட்டதுபோல் மூளையில் சுளீரென்றது. வேகமாக கிளம்பினார்.

“பசுந்தோகை” என்ற பெயர்ப்பலகை கொண்ட வேலியைக் கடந்து, மதன்ராஜின் வாகனம் முத்துசுவாமியின் பங்களாவின் முன்னே சென்று நின்றது.

ஷண்முகவேல் எதிர்பட்டார்.

"மயிலப்பன் எங்கே?” ஷண்முகவேலிடம் கேட்டுக்கொண்டே வேகமாக வீட்டினுள் சென்றார்.

“மயிலண்ணே..” ஷண்முகவேல் கூப்பிட்டார்.

“ஐயா..!" இரண்டு நிமிடத்தில் வீட்டின் பின்புறமிருந்து ஓடி வந்தார் மயிலப்பன்.

“முத்துசுவாமி ஐயாவோட ரூம் சாவி குடுங்க..!”

"இதோ ஐயா" உள் ரூமிலிருந்து எடுத்துவந்து கொடுத்தார் மயிலப்பன்.

மதன்ராஜ் மட்டும் பரபரப்புடன் சென்று முத்துசுவாமி அறைக்கதவைத் திறந்து, புத்தக அலமாரியில் எதையோ தேடி, இரண்டாம் வரிசையிலிருந்த பச்சை நிற புத்தகத்தை எடுத்து, பின்னே திருப்பி பின்பக்கத்தைப் பார்த்தார். மயிலப்பனின் படம் ஆசிரியரின் இடத்தில் இருந்தது. புத்தகம் "மனிதனும் தாவரங்களும்” என தன் பெயரைக் காட்டியது. மனிதர்கள் எந்தெந்த முறையில் தாவரங்களை அழிக்கிறார்கள் என்பது பற்றி அலசியதற்கான குறிப்புகள் அட்டைப்படத்தில் தெரிந்தது. கீழே ஆசிரியரின் பெயரிருக்க வேண்டிய இடத்தில் "இலை ரசிகன்" என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

மற்ற புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து நன்கு அலசினார். ஒரு புத்தகத்தை சோதனையிடுகையில் புத்தகம் விரிந்து தான் தனக்குள் வைத்திருந்த புகைப்படத்தை வெளிக்காட்டியது. மிக பழைய புகைப்படம். நாற்பது வருடத்திற்கு முந்தைய புகைப்படம். பார்த்தவுடன் தன் வயதை அதுவே ஒத்துக்கொள்ளும்படி பழையதாய் இருந்தது. அப்படத்தில் இளவயதில் முத்துசுவாமியும், மயிலப்பன் (எ) இலை ரசிகனும் தோள்மீது கை போட்டுக்கொண்டு, சிரித்துக்கொண்டிருந்தனர்.


தொடரும்...
அடுத்த அத்தியாயம் 29-June-2020 அன்று!
`````````````````````````````````````````````````````````````````````
இந்த அத்தியாயம் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
பகிருங்கள்! விமர்சியுங்கள்! மதிப்பீடளியுங்கள்!
ஆதரவிற்கு நன்றிகள்!!!
*வினை மட்டுமே உயிர்*
- கிருஷ்ணா பச்சமுத்து
 
என்ன மயிலப்பனும் முத்துசுவாமியும் ப்ரெண்ட்ஸ்ஸா?
"இலை ரசிகன்"?
அப்போ மயிலப்பன்தான் குற்றவாளியா?
ஆனால் ஷண்முகவேலும் அவன் பொண்டாட்டியும்தானே எல்லோரையும் கொன்று உரமாக்கினாங்க?
விவசாயத்திற்கு எதிராக 13 பதிமூன்று பேர் தப்பு செஞ்சிருக்காங்களா?
கொலை செய்து உரமாக்கும் அளவுக்கு இவங்கெல்லாம் அப்படி என்ன தப்பு செஞ்சாங்க?
பயிர்களை சரியாக கவனிக்காமல் வாடி வதங்க விட்டுட்டாங்களா?
மதன்ராஜ் சூப்பர் இன்ஸ்பெக்டர்
குற்றவாளியை நெருங்கிட்டார்
 
Last edited:
செம ட்விஸ்ட்,,
மயிலப்பன் @ இலை ரசிகன் தான் குற்றவாளியா ???
ஆன சண்முகம் தம்பதி தானே கொலை செய்து, திசுவுரம் ஆக்குனாங்க ???
 
சபாஷ் இன்ஸ்பெக்டர் பிரபு
அம்பாசிடர் காரை கண்டுபிடிச்சிட்டார்
அப்போ சண்முகவேல் இனி பிடிபட்டு விடுவானா?
 
Top