Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் பகுதி -1

Advertisement

Crazy Queen

Well-known member
Member
❣️ மின்னல் -1 ❣️


பூஞ்சாரல் அடிக்க ஆரம்பித்து . மலரின் வெண்மையுடன் அதன் பூமியே முத்தமிட்டு நகைக்க .... புழுதி அடங்கி புது வாசம் பிறந்தது.

காற்றின் கும்மென்று மிதந்து வந்த மூலிகையின் நறுமணம் நாசியை இதமாக ஸ்பரிசித்தது.

மேகங்கள் பஞ்சாய் போகும் பொதிகை மலை ஆசையுடன் ஆலிங்கனம் செய்து கிடந்தன.

ஜன்னலருகில் நின்று தூரத்தில் எங்கேயோ பார்வை பதித்தாள்
கனிஸ்ரீ

என்னதான் இயற்கை அழகில் ஒன்றிப்போய் இருந்தாலும் கவலை மனதை பாறாங்கல் போல அழுத்திக் கொண்டிருந்தது.

கனிஸ்ரீ .... ஒரு மலரைப் போன்ற கொள்ளை அழகுடன் நிற்பவள்.

தங்கத்தைக் அடைத்து எடுத்து போன்று பளிச்சென்ற நிறம்.... மானின் மருண்ட விழிகள் மயில் தோகை போன்ற அடர்ந்த நீண்ட கூந்தல்.

கைதேர்ந்த சிற்பி ஒருவன் சிறப்புடன் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கி வைத்த சிலை போல் நின்ற அதீத கலையுடன் கவிதை பாடலாம் போலிருந்தாள்.

இவன் உடல் அழகைப் பார்த்த மாத்திரத்திலேயே .... இவள் "நாட்டியத் தாரகை" யென்ற அனைவருக்கும் புரிந்து கொள்வார்.

பூம்பொழில் எஸ்டேட் எவ்வளவு அழகாய் இருக்கு பார்த்தியா?

அவள் முதுகுப் பக்கமாய் வந்து நின்று பேசினாள் துர்கா.

"ஆமா .... ரொம்ப ரம்மியமாக இருக்க வாழ்நாள் பூரா இந்த இயற்கை அழகை ரசித்து இங்கேயே இருந்துடலாம் போல இருக்கு பெரியம்மா !"

உன் ஆசைப்படியே நீ இப்ப எல்லாம் அது உன் கையில்தான் இருக்கு ஸ்ரீ....! என்றபடி அவள் கன்னத்தில் கை வைத்தாள்.

சட்டென்று திரும்பிப் பார்த்தாள்
கனிஸ்ரீ.

டான்ஸ் ப்ரோக்ராம் பணம் வந்து இருக்கோம் நம்ம தங்குவதற்காக இந்த கெஸ்ட் ஹவுஸ் கொடுத்து இருக்காங்க.

கெஸ்ட் ஹவுஸ் குட்டி பங்களா மாதிரி அமர்க்களமாக இருக்கு.

விதவிதமா சமைச்சு போடுவேன் ஆள் இருக்கு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து சேர்வதற்கு ஆட்களை நியமிச்சிருக்காங்க.

தேனிக்கு பெரிய படையை அனுப்பி ..... நம்மை இங்க வரவழைச்சாங்க.

இங்கே இருக்கிற வரைக்கும் தாராளமா இந்த படகுக்கார அதை உபயோகிக்க சொல்லிட்டாங்க.

தேனி நம்ம வீடு தேடி வந்து...... உனக்கு கச்சேரி புக் பண்றதுக்கு முன்னாடி ......

பெரிய வெள்ளித் தாம்பாளத்தில் பூ பழங்கள் மயில்கழுத்து வண்ண புடவை கட்டு கட்டாக பணத்தை அடுக்கி மகாலட்சுமி உருவம் பதித்த தங்க நாணயத்தை சேர்த்து தந்திரங்களை ?

? மயில்கழுத்து புடவை ?

398


? மகாலட்சுமி உருவம் பதித்த தங்க நாணயம் ?

399


எத்தனையோ இடங்கள் நீ டான்ஸ் கச்சேரி பண்ணியிருக்க?

எங்கேயாச்சும் இந்த மாதிரி மரியாதை பண்ணி இருக்காங்களா?

கெஸ்ட் ஹவுஸ் எவ்வளவோ அபாரமாக இருக்கிறது இளைய ஜமீன்தார் அகத்தியன் எஸ்டேட் பங்களா எவ்ளோ பெருசா இருக்கும் ?

ஸ்ரீ ...... உன்கிட்ட இருக்கிற கலைக்கு ரொம்ப ரொம்ப மரியாதை கிடைக்கிறது.

பிடிச்சாலும் புளியங்கொம்பு பார்த்து பிடிக்கணும்னு சொல்லுவாங்க. உன்னோட அதிர்ஷ்டம் நீ எதுக்கும் மெனக்கெடாமல் இருந்தாலும் ... அந்த புளியங்கொம்பே வளைஞ்சு..... உன் கைக்கு ஏட்டற மாதிரி வந்து நிக்குதே ?

வர்ற சீதேவியை வேணாம் எட்டி உதைச்சுடதே.... ! அப்புறம் பின்னாடி நீ ரொம்ப வருத்தப்படுவே...!

எப்பவும் சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் நம்ப நழுவ விடக்கூடாது. சரியான சந்தர்ப்பத்தை பார்த்து இறுக்கமா பிடிச்சுக்கணும்.

இது தான் எங்க அம்மா எங்களுக்கு சொல்லிக் குடுத்தது. நான் புத்தி சொன்னது.... நீ கேட்டு நடந்துக்கிட்டா..... காலத்துக்கும் ஒரு மகாராணி மாதிரி நீ சந்தோஷமாக வாழலாம்.

அவளது தாடையை தொட்டு தடவினாள் துர்கா.

சட்டென்று அவளது கையை தட்டி விட்டாள் ஸ்ரீ.

சே....! ஆரம்பிச்சுட்டியா ? கொஞ்ச காலமாக அடக்கி வாசிச்சுட்டிருந்தே ? பரவாயில்லையே ... நம்ம பெரியம்மா திருந்திட்டாளே? என்று நெனச்சேன்.

அந்த நெனப்புல மண் அள்ளி போட்டுட்டியே? நீ தான் சேத்துல விழுந்து கிடந்தே..... நானும் ஏன் அதே சேத்துல கிடந்து அழியனும் நினைக்கிறே ?

மகாராணி மாதிரி அமோகமாக சந்தோஷமாக வாழலாம் தான். ஆனா..... கவுரவமாக வாழ முடியுமா ?

கூழோ கட்சியோ குடிச்சாலும்.... ஒரு குடிசையில் கிடந்தாலும் தன் மானத்தோடு வாழணும் நான் ஆசைப்படுகிறேன்.

எனக்கு பணம் காசு அந்தஸ்து பெருசு இல்லை. மானம் தான் பெருசு.

என் குணம் உனக்கு தெரியும்தானே ? அப்புறம் ஏன்... என்கிட்ட வந்து .... கண்டதையும் பேசறே ?

நான் இங்க வந்தது. டான்ஸ் புரோக்ராம் பண்ணத்தான்... அது முடிஞ்சதும் போயிட்டே இருப்பேன். ஜமீன்தாரரை வளைச்சு போடறதுக்காக நான் வரலை. புரிஞ்சுக்கோ !

அந்த மாதிரி வாழ்க்கை நான் வாழணும்.... ஆசைப்படறியே? ஊர் உலகம் என்ன சொல்லும்? சொல்லு.....! அதட்டினாள் கனிஸ்ரீ.

"என்ன சொல்லும் ?"

"உனக்கு தெரியாதாக்கும் ? ஜமீன்தார்ரோட 'கீப்புன்னு சொல் வாங்க....' அப்படி ஒரு கேவலப்பட்ட பிழைப்பு நமக்கு தேவையா ?"

"கஷ்டம் வந்த ஊர் உலகமா வந்து காப்பாத்த போகுது?"

மெல்ல முணுமுணுத்தாள் துர்கா.

"இதுக்கு மேல நீ பேசினா.... என்னை நீ உயிரோடு பார்க்க முடியாது."
அழகிய விழிகளில் தீப்பொறி பறக்காத குறைதான் !

அவளது குரலில் உறுதியையும் , கோபத்தையும் பார்த்த துர்கா... மெல்ல அந்த இடத்தை விட்டு அகன்றாள்‌

இவளுக்கு பேரு 'கனிஸ்ரீ'ன்னு வச்சிருக்க கூடாதுன்னு கண்ணகி ன்னோ.... இல்லை .... மாதவின்னோ வச்சிருக்கணும்.

பொழைக்கத் தெரியாதவளா இருக்காளே ? எத்தனை நாளைக்கு இருக்கும் இந்த அழகும் இளமையும் ?

நம்ம 'குலத்து' பெண்ணே...‌ எவன் குடிச்சு வந்து ஊர் அறிய தாலி கட்டப் போறான்?

துர்கா கடுப்புடன் முணுமுணுத்தாள்.

மனசு புரிஞ்சுக்கிட்டு.... எவனாவது ஒருவன் தாலி கட்ட வருவான்..... குரல் உயர்த்தி கூறினாள்.

ஆமா வைராக்கியமான நீ உத்தமியாக தான் இருக்க. ஆனா உன்னை உத்தமின்னு எவன் நம்ப போறான்? இந்த 'குலம்' னு தெரிஞ்சாலே..... எல்லாரும் வேறு கண்ணோட்டத்தில் தான் பார்ப்பாங்க. துணிந்து எவனும் தாலி கட்டி மனைவி என்ற அந்தஸ்தை தரமாட்டான் தெரிஞ்சுக்கோ.....!"

நான் பவித்ர மாடல்கள் பரிசுத்தமானவர் கற்புநெறி தவறாமல் தான் இருக்கு இது நாம் வழங்க சஷ்டி பாபாவுக்கு தெரியும். என்ன புரிஞ்சுகிட்டு எடுக்கக்கூடிய மனுஷனா பாபா கட்டாயமாக அனுப்பி வைப்பாரு.

உக்கும் ! இலவு காத்த கிளி மதம் கடந்து பிற்பாடு ஏமாந்து நிக்க போறே....‌!

இந்தப் பேச்சுல இதோட நிப்பாட்ட போறியா ? இல்லயா ? அப்பப்பா...! என் குணத்துக்கும் உன் குணத்துக்கும் ..... ஏணி வச்சாலும் எட்டாது?

சே ..‌‌.. ! நான் எப்படி தான் உன் தங்கை வயிற்றில் வந்து பிறந்தேனோ ?

தலையில் அடித்து கொண்டு நடந்தாள்.

"நீ என் தங்கை வயிற்றில் பிறந்த தானே? அவ வயித்துல வந்து பிறந்திருந்தால்..... நான் சொல்றபடி கேட்டிருப்பா. எங்க குலத்து ரத்தம் உன் உடம்பில ஓடலையே."

இரண்டு வயதுக் குழந்தையாய் இருந்தபோது. தங்க விக்கிரகம் மாதிரி அனாதையாக ஒரு திருவிழாக் கூட்டத்தில் நீ கிடைத்தாய்.

பிற்காலத்தில் ஒரு பேரழகி அழகாய் நீ வருவேன் என்று மனசுக்குப் பட்டது.

எடுத்து வளர்த்தா ..... பின்னாடி நீ அழகை மூலதனமா வச்சு ஓஹோன்னு சம்பாதிச்சுடலாம் நப்பாசையில் எடுத்து வளர்த்தேன்.

இந்த உண்மை தெரிஞ்சா.... நீ ஒண்ணு.... நீ அடுத்த நிமிஷம் என்கிட்ட இருக்க மாட்டா.

இப்பவே பல்லைக் கடிச்சுக்கிட்டு..... வளர்த்த தாயச்சே? விட்டு போக கூடாது? ஒரு பாசத்துலா பரிதாபத்துல கூட இருக்க.

ரெண்டு... கோபத்துல என்னை தூரத்தி விட்டாலும் விட்டுடுவே....! அதனால் தான் இந்த ரகசியத்தை பத்தி உன்கிட்ட நான் மூச்சை விடலை...

எறும்பு ஊற ஊற கல்லும் கரையும் சொல்வாங்க. இன்னிக்கு இல்லாட்டியும்.... என்னிக்காவது ஒரு நாள் நீ என் வழிக்கு வந்தே தீருவே.....

மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள் துர்கா.

தனக்கு பின்னால் அப்படியொரு மர்மம் மறைந்திருப்பதை உணராத கனிஸ்ரீ கெஸ்ட் ஹவுஸ் விட்டு வெளியேறினாள்.

சிறிது நேரம் காலார நடந்து எஸ்டேட்டின் அழகை விழிகளால் அள்ளி பருக ஆசைப்பட்ட படி நடந்தாள்.

விதி அவளை பின் தொடர்வது தெரியாமல் இயற்கை அழகை ரசித்தபடி சென்றாள்.

?கனிஸ்ரீ தான் பிறப்பு ரகசியத்தை அறிந்து கொள்ளா ??

?துர்கா நினைத்தா படி நடக்குமா??

? இந்த site இது என்னோட
முதல் கதை . உங்கள் ஆதரவு கேட்டு கொள்கிறேன்?
 
Last edited:
வாழ்த்துக்கள்...கிரேஸ்

முதல் பதிவு 1 கூட...கதையோட தலைப்பையும் சேர்த்து கொடுத்தால்
உங்க கதை என்று தெரியும்....நன்றி
 
வாழ்த்துக்கள்...கிரேஸ்

முதல் பதிவு 1 கூட...கதையோட தலைப்பையும் சேர்த்து கொடுத்தால்
உங்க கதை என்று தெரியும்....நன்றி


கதையோட தலைப்பு மின்னல்
 
Last edited:
உங்களுடைய "மின்னல்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
Top